search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல்வர்"

    சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜின் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #SulurMLA #MLAKanagaraj
    கோவை:

    கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கனகராஜ் (வயது 64) இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.



    எம்எல்ஏ கனகராஜ் உடல்  காமநாயக்கன்பாளையம், வி.மேட்டூர் சேர்மன் தோட்டத்தில் அவரது வீட்டில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

    அமைச்சர் வேலுமணி மற்றும் எம்.பி., எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் உறவினர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. #SulurMLA #MLAKanagaraj
    ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை, ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைக்க உள்ளார். #SpecialAssistance #NarendraModi #Farmers
    சென்னை:

    கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    இதையடுத்து, பயனாளிகளை கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த மாத இறுதிக்குள் உதவித் தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை ஐகோர்ட் தள்ளுபடி செய்ததையடுத்து, 2000 உதவித் தொகை வழங்குவதற்கான பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.



    இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24-ம் தேதி இந்த திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின்மூலம் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்துள்ள சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமும் வரும் 24-ம் தேதி தொடங்க உள்ளது. ரூ.6 ஆயிரம் உதவித் தொகையானது 3 தவணையாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பட உள்ளது. உதவித் தொகை வழங்கும் பணியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். #SpecialAssistance  #NarendraModi #Farmers
    டெல்லியில் யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்பது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி உள்ளனர். #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி மற்றும் புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கும், மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்ட துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட், துணை நிலை ஆளுநருக்கே அதிகாரம் அதிகம் என்று தீர்ப்பளித்தது.



    இந்த தீர்ப்பை எதிர்த்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது என்றும் அவர் அமைச்சரவையுடன் இணக்கமாக செயல்படவேண்டும் என்று கூறினர். நிர்வாக அதிகாரம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிடமே உள்ளது என்றும் அந்த தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த தீர்ப்பு மிக முக்கியமானது என்பதால் அதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகளும், தனித்தனியாக தீர்ப்பை வாசித்தனர்.  

    நீதிபதி சிக்ரி தனது தீர்ப்பில், காவல்துறையை துணை நிலை ஆளுநரே கவனிப்பார் என்றும் லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர்கள் மற்றும் செயலாளர்கள் நியமனம் மற்றும் இடமாற்றம் அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும் தெரிவித்தார். 

    ‘விசாரணைக் கமிஷன் அமைப்பது மத்திய அரசின் வரம்பிற்கு உட்பட்டது என்பதால் முதல்வரால் அமைக்க முடியாது. இணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் அதிகாரம் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கே உள்ளது. இணை செயலாளர் அந்தஸ்துக்கு கீழ் உள்ள அதிகாரிகளை மாநில அரசு நியமிக்கலாம். மின்சாரத்துறை டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்’ என்றும் நீதிபதி சிக்ரி தெரிவித்தார்.

    மற்றொரு நீதிபதி அசோக் பூஷன் தனது தீர்ப்பில், சேவைகள் பிரிவில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மத்திய அரசின் வரம்பிற்குள் தான் வருவார்கள் என்றும், அவர்களை நியமிக்கவோ மாற்றவோ துணைநிலை ஆளுநருக்கே அதிகாரம் இருப்பதாகவும் கூறினார்.

    சேவைகள் பிரிவில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியதால், அந்த பிரிவு மட்டும் 3 நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. #DelhiGovt #LieutenantGovernor #ArvindKejriwal

    தம்பிதுரைக்கு முதல்-அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். #ThambiDurai #TTVDhinakaran

    திருச்சி:

    திருச்சி வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகம் திறப்பு விழா திருவானைக்காவலில் நடைபெற்றது. புதிய அலுவலகத்தை கட்சியின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் திறந்து வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். அவை எந்தெந்த கட்சிகள் என்பதை இப்போது கூற மாட்டேன். பா.ஜ.க.வுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் காங்கிரசுடன் நாங்கள் சேருவோம் என்று கூற முடியாது. நான் ஏற்கனவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கமாட்டேன் என்று கூறி இருக்கிறேன். அதில் உறுதியாக இருக்கிறேன்.

    தி.மு.க., மெகா கூட்டணி என எதை அமைத்தாலும் மக்களிடம் எடுபடாது. தி.மு.க. இப்போது உள்ள கூட்டணியை கூட மாற்றலாம். இதை அவர்கள் ஏற்கனவே செய்திருக்கிறார்கள். தி.மு.க. பயப்படுகிறது.

    திருவாரூர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தவுடன் நாங்கள் களத்தில் உடனே குதித்து விட்டோம். ஆனால் மு.க. ஸ்டாலின் தேர்தலை ரத்து செய்தவுடன் போட்டி போட்டு வரவேற்று அறிக்கை விட்டார். பாராளுமன்ற தேர்தலில் உறுதியாக நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

    ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது நான் உறுதியாக வெற்றி பெறுவேன் என்று கூறினேன். அதே போன்று மிகப்பெரிய வெற்றி பெற்றேன். இப்போதும் பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க. மிகப்பெரிய வெற்றி பெறும்.

    கொடநாடு விவகாரத்தில் உண்மையை சி.பி.ஐ. கண்டுபிடிக்க வேண்டும். இதில் மர்மம் உள்ளது. இந்த வி‌ஷயத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்தால் டெபா சிட் கூட கிடைக்காது.தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்கு பிறகு அனைத்து கட்சிகளுமே புதிய கட்சிகள் போல் தான் உள்ளது.

     


    பாராளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைக்க மு.க.ஸ்டாலின் வெளி மாநிலம் சென்று உள்ளார். உள்ளூரில் விலை போகாததால் வெளி மாநிலத்தில் மார்க்கெட்டிங் செய்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி எப்படியாவது நாற்காலியை காப்பாற்றினால் போதும் என்ற நிலையில் உள்ளார்.

    கொடநாடு விவகாரத்தில் அவர் பயப்படுவதற்கான காரணம் என்ன? இந்த ஆட்சி ஏஜெண்ட் ஆட்சி. பாரதிய ஜனதா கட்சியின் ஏஜெண்டாக செயல்படுகிறது. இதை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பின்னர் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பா.ஜ.க.வை பற்றி விமர்சனம் செய்வது தொடர்பாக நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு தினகரன் பதில் அளித்து கூறியதா வது:-

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தம்பிதுரைக்கு அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராக வேண்டும், முதல்- அமைச்சராக வேண்டும் என்ற ஆசை இருந்தது. முதலில் பன்னீர்செல்வத்தை முதல்- அமைச்சர் ஆக்கியதும் ஏமாற்றம் அடைந்தார். பிறகு சசிகலாவை பொதுச் செயலாளராக்கி எடப்பாடி பழனிச்சாமியை முதல்- அமைச்சர் ஆக்கியதும் மீண்டும் ஏமாற்றம் அடைந்தார்.

    எனவே இனியும் முதல்வர் ஆக முடியாத விரக்தியில் தம்பிதுரை உளறி வருகிறார். இதனால் பா.ஜ.க. மீது குற்றச்சாட்டுக்களை கூறி விமர்சித்து வருகிறார்.தமிழகத்தில் அவர் ஒரு பேச்சு பேசுகிறார். பா.ஜனதாவை விமர்சிக்கிறார். ஆனால் டெல்லி சென்றால் அங்கே பா.ஜனதா மந்திரிகளுடன், எம்.பி.க்களுடன் இணக்கமாக இருக்கிறார். இதன் மூலம் அவர் நாடகம் ஆடுகிறார் என்றார். #ThambiDurai #TTVDhinakaran

    கொடநாடு பிரச்சினையில் முதல்-அமைச்சர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர் என்று மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #KodanadEstate

    பழனி:

    பழனியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிடும். தமிழகத்தில் 80 சதவீத இடங்களை கைப்பற்றுவோம். கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எதிர்கட்சிகள் கூறி வருகின்றனர்.

    சமீப காலமாகவே மக்கள் திட்டங்களுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு அதிகரித்து வருவது துரதிர்ஷ்டவசமானது. நீண்ட கால தொழிற்சாலைகள் மூடப்படுவதால் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். இதற்கு எல்லாம் மக்கள் பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் என்று செயல்படும் சில தீய சக்திகள்தான் காரணம்.

    தமிழகத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உரிய வசதிகள் செய்து கொடுத்து அவர் நேர்மையாக செயல்பட அதிகாரங்கள் வழங்க வேண்டும்.

    பிரதமர் மோடி குறித்து கெஜிரிவால் விமர்சனம் செய்வது கண்டனத்திற்குறியது. ஒரு மாநிலத்தில் கூட ஒழுங்காக ஆட்சி செய்ய முடியாத அரவிந்த்கெஜிரிவால் ஒரு நாட்டையே வழிநடத்தி செல்லும் பிரதமரையே தரம் தாழ்த்தி விமர்சனம் செய்கிறார். வரும் தேர்தலோடு அவர் காணாமல் போய்விடுவார்.

    இவ்வாறு அவர் கூறினார். #KodanadEstate

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஊர்வலமாக வந்து அஞ்சலி செலுத்தினர். #Jayalalithaa #JayaMemorial #JayaDeathAnniversary
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    இன்று காலை வாலாஜா சாலையில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அதிமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. முதலமைச்சர், துணை முதலமைச்சர் தலைமையில், கட்சியின் அனைத்து எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் என  ஏராளமானோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.



    இந்த ஊர்வலம் மெரினா கடற்கரையில் நிறைவடைந்ததும், ஜெயலலிதா நினைவிடத்தில் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட அனைவரும் அஞ்சலி செலுத்தினர். இது தவிர ஏராளமான பொதுமக்களும் ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

    ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் வருகை தந்ததால், மெரினா சாலை மற்றும் ஜெயலலிதா நினைவிடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. #Jayalalithaa #JayaMemorial #JayaDeathAnniversary
    தீபாவளி பண்டிகை மிகவும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வரும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Diwali #TNCM #EdappadiPalaniswami #BanwarilalPurohit #TNGovernor
    சென்னை:

    இந்து மதத்தின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி இந்துக்கள் மட்டுமின்றி, இந்தியாவின் அனைத்து மதங்களும் கொண்டாடும் பொதுவான பண்டிகையாக திகழ்கிறது. இந்த தீபாவளி திருநாளில் புத்தாடை உடுத்தி, வெடி வெடித்து உறவினர்களிடமும், பெற்றோரிடமும் ஆசி பெறுவது வழக்கம்.

    இந்த வருடம் தீபாவளியில் வெடி வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 2 மணி நேரம் மட்டுமே வெடி வெடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.



    அதனை மறுபரிசீலனைக்கு கோரிய தமிழக அரசின் மனு நிராகரிக்கப்பட்டு, அதற்கு பதிலாக 2 மணி நேரம் என்பதை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசுக்கு உச்சநீதிமன்றம் அளித்தது. இதையடுத்து, காலை 6 முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரையிலும் வெடி வெடிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.



    உத்தரவை மீறி வெடி வெடிப்பவர்களுக்கு, 6 மாதம் வரை சிறை தண்டனை அளிக்கப்படும் என தமிழக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் பட்டாசு விற்பனை சில இடங்களில் மந்தமடைந்தது.

    இருப்பினும், இன்று தீபாவளி திருநாள் அனைவராலும் கோலாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வெடி வெடித்தும், பலகாரங்களை மத வேறுபாடு இன்றி பகிர்ந்தும் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

    இந்த தீபாவளி திருநாளுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், ஒளியின் திருநாள் இந்த தீபாவளி நாள் என்றும், நாடு முழுவதும் உள்ள மக்கள் மேல தாளத்துடன் கோலாகலமாக இந்த பண்டிகையை கொண்டாட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



    இதே போல்,  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், நரகாசுரனை வதம் செய்த நாளை கொண்டாடும் தீபாவளி அன்று, மகிழ்ச்சியும், செழிப்பும் வந்து சேரட்டும் என குறிப்பிட்டுள்ளார். இதேபோல், துணை முதல்வர் ஓ.பி.எஸ், டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். #Diwali #TNCM #EdappadiPalaniswami #BanwarilalPurohit #TNGovernor
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர், முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
    சென்னை:

    இருள் நீக்கி ஒளி தரும் தீபத் திருநாளாம் தீபாவளித் திருநாள் நாளை கொண்டாடப்படுகிறது. மக்களை வதம் செய்த கொடிய அசுரனான நரகாசுரனை வதம் செய்த தினத்தையே தென் மாநிலங்களில் தீபாவளி பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. ராவணனை அழித்து வனவாசம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பியதும் அவருக்கு பட்டாபிஷேகம் செய்த தினமாக வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது.



    இந்நிலையில் தீபாவளி கொண்டாடும் தமிழக மக்களுக்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் பல்வேறு தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர். #DiwaliWishes #TNGovernor #TamilNaduCM
    முக்கொம்பு அணைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறிய எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கிண்டலடிக்கும் வகையில் கூறினார். #MukkombuDam #AnbumaniRamadoss #EdappadiPalaniswami
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவையில் பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் உள்ள கல்லூரிகள், விடுதிகளில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அவற்றை தடுக்க கடுமையான தண்டனைகளை வழங்க வேண்டும். நான் மரண தண்டனைக்கு எதிரானவன். பா.ம.க.வும் மரண தண்டனையை ஒருபோதும் ஆதரிக்காது.

    அதே நேரத்தில் பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க மரண தண்டனை வழங்கலாம் என்பது என் கருத்து. மே-17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை கைது செய்தது கண்டிக்கத்தக்கது.



    மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வந்தது போல் முக்கொம்பு அணை மதகுகள் திடீரென உடைந்துவிட்டதாக கூறி மருத்துவம் பார்த்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர் பட்டம்’ தான் வழங்க வேண்டும். முக்கொம்பு அணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளை முக்கிய காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார். #MukkombuDam #AnbumaniRamadoss #EdappadiPalaniswami

    முக்கொம்பு மேலணை உடைந்த விதம் குறித்து தமிழக முதல்வரிடம் திருச்சி மண்டல பொதுப்பணித்துறை சார்பில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. #MukkombuDam
    திருச்சி:

    பொதுப்பணித்துறையினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் வருமாறு:-

    வரலாறு காணாத வகையில் வெள்ளம் வந்த சூழலிலும், 1924-ம் ஆண்டு, 1977, 2005, 2013-ம் ஆண்டுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட காலங்களிலும் கொள்ளிடத்தில் 1.75 கனஅடியும், காவிரியில் 67ஆயிரம் கனஅடியும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    மேலும் கர்நாடக அணைகளில் இப்போது வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உபரி நீர் திறந்து விடப்பட்ட சூழலில் கொள்ளிடத்தில் 2.70 லட்சம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலைகளிலும் மேட்டூர் அணையில் இருந்து 177 கி. மீ. தொலைவில் அமைந்துள்ள முக்கொம்பு மேலணை ஸ்திரத்தன்மையுடனேயே இருந்து வந்துள்ளது.

    6 அடி உயரம், 40 அடி அகலம் கொண்ட தூண்களுடன் 45 மதகுகுள் கொண்ட இந்த அணை வழியாகவே கொள்ளிடத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.



    காவிரியில் அதிகமாக வெள்ளம் வந்தாலும் முக்கொம்பு வந்தவுடன் மேலணை, கீழணை என இரு பகுதியாக இருப்பதால், இயல்பாகவே காவிரியில் தான் அதிக அளவு தண்ணீர் செல்லும். ஏனெனில் கொள்ளிடத்தை விட 2 அடிக்கு மேல் கீழே உள்ளது காவிரி. எனவே முதலில் காவிரியில் தண்ணீர் பெருக்கெடுக்கும்.

    மேலணையில் மேல் பகுதியில் 1846-ல்தான் பாதை அமைத்து போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. அதிகளவு தண்ணீர் வந்த சூழலிலும் உடையாத மதகுகள் 22-ந்தேதி இரவு கொள்ளிடத்தில் 8 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்த நிலையிலும், அதன் தொடர்ச்சியாக 33 ஆயிரம் என அதிகரித்த நிலையிலும் உடைந்துள்ளது. 630 மீட்டர் நீளமுள்ள ரெகுலேட்டரில் 110 மீட்டர் தொலைவுக்கு உடைந்து விழுந்துள்ளது. மதகில் ஏற்பட்ட பழுது காரணமாக உடைந்திருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

    இருப்பினும் பாதிப்புக்கான காரணம் குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள், பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின் இறுதியிலேயே பாலம் விழுந்தமைக்கான காரணங்கள் தெரியவரும். உடைந்த மதகுகளை புனரமைக்கும் வகையில் தற்காலிக தடுப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    கடந்த 2015-ம் ஆண்டு கொள்ளிடம் அணையை உலக வங்கி நிதியுதவியுடன் ரூ.10 கோடியில் புனரமைப்பு செய்யும் பணி நடைபெற்றது. அப்போது மதகின் கீழ் பகுதியில் இருந்த ஓட்டைகள் மற்றும் மணல் அடைப்புகள் போன்றவை பழுதுபார்த்து சீரமைக்கப்பட்டது. இந்த பணியின் ஒரு பகுதியாக 45 மதகுகளிலும் தலா 1.5 குதிரை சக்தி திறன் கொண்ட மின்மோட்டார்கள் பொருத்தப்பட்டன. இந்த மோட்டார்கள் பொருத்தப்பட்ட பின்னர் மனித ஆற்றல் மூலம் மதகுகள் ஏற்றி இறக்கப்படவில்லை. மாறாக மின்சார மோட்டார் மூலமாக மட்டுமே தானியங்கி முறையில் இயக்கப்பட்டன.

    மின்சார மோட்டாரை ‘ஆன்’ செய்யும் போது ஒருவித அதிர்வு ஏற்படும். அந்த அதிர்வின் காரணமாக கூட மதகின் அடிப்பகுதி நாளடைவில் பலவீனமாகி சேதம் அடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. #MukkombuDam
    மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடலுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமரும், பா.ஜனதாவை தோற்றுவித்தவருமான  அடல் பிகாரி வாஜ்பாய் தனது 93-வது வயதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மிகச்சிறந்த பேச்சாளரும், கவிஞரும், மாபெரும் அரசியல் தலைவருமான இவரது மறைவுக்கு இந்திய நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டுள்ளது.

    வீட்டில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாய் உடலுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநில முதல்வர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.



    இந்நிலையில், கேரள ஆளுநர் சதாசிவம், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று மலர்வளையம் வைத்து வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தினர். இதேபோல் வைகோ உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வாஜ்பாய்க்கு மலரஞ்சலி செலுத்தினர். #AtalBihariVajpayee #RIPVajpayee 
    முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தமிழக கவர்னர், முதல்வர், துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin
    சென்னை:

    முன்னாள் பிரதமர் வாஜ்பாய் (93) உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஜூன் மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை அவ்வப்போது, பிரதமர் மோடி, மூத்த மந்திரிகள் நேரில் சென்று விசாரித்து வந்தனர்.

    இன்று காலை முதல் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இதை
    தொடர்ந்து சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5.05 மணிக்கு அவர் மரணமடைந்ததாக எய்ம்ஸ் மருத்துவமனை தெரிவித்தது.



    இதற்கிடையே, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மரணமடைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபன்னீர்செல்வம் மற்றும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் ஆகியோர் டெல்லி செல்கின்றனர். #AtalBihariVajpayee #AIIMS #RIPVajpayee #BanwarilalPurohit #EdappadiPalanisamy #OPanneerselvam #MKStalin
    ×