search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்லைப்பகுதி"

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் உயிரிழந்தார். #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire
    ஜம்மு:

    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அவ்வப்போது துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது.

    இந்த தாக்குதல்களில் இந்திய ராணுவத்தை சேர்ந்த வீரர்கள் உயிரிழப்பதுடன் எல்லையோர கிராமங்களில் வாழும் இந்திய மக்களும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

    அவ்வகையில், கடந்த 15 ஆண்டுகால வரலாற்றில் மிக அதிகமான அளவில் கடந்த 2018-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் படைகள் 2936 முறை எல்லையோரத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளது.



    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் ராணுவம்  துப்பாக்கிகளால் சுட்டும், மோர்ட்டார் குண்டுகளை வீசியும் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

    இந்நிலையில், இன்றும் இதே ரஜோரி மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ள சுந்தர்பானி செக்டார் பகுதியில் உள்ள கெரி என்ற இடத்தில் உள்ள இந்திய நிலைகளின்மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு இந்திய வீரர் உயிரிழந்தார்.

    இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து இன்றுவரை பாகிஸ்தான் ராணுவம் 110 முறை இந்திய நிலைகளின்மீது தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. #Soldierkilled #Pakistanarmy #ceasefire #Rajouriceasefire
    காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய நிலைகளின் மீது தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. #LoC #ceasefire #PoonchLoC
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மற்றும் ரஜோரி மாவட்ட எல்லைக்கோட்டுப் பகுதியில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் படையினர் கடந்த பத்து நாட்களாக துப்பாக்கிகளால் சுட்டும், கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்தனர்.

    இந்நிலையில், பூஞ்ச் மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் குல்பூர் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிகளால் சுட்டதாக இந்திய ராணுவ உயரதிகாரி குறிப்பிட்டார்.

    மேலும், ஜம்மு மாவட்டத்துக்குட்பட்ட ராம்கர் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றதை நமது எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் முறியடித்ததாகவும் அவர் தெரிவித்தார். #LoC #ceasefire #PoonchLoC
    குடியேறிகளை தடுப்பதாக கூறி எல்லைப்பகுதியில் 5 ஆயிரம் ராணுவத்தினரை குவித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் 'அரசியல் ஸ்டன்ட்’ அடிப்பதாக முன்னாள் அதிபர் ஒபாமா குற்றம்சாட்டியுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபராக பொறுப்பு வகிக்கும் டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் குடியுரிமை விவகாரங்களில் மிகவும் கறாராக உள்ளார். சட்டவிரோதமான குடியேற்றங்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார்.

    எல் சவடோர், ஹோன்டுராஸ், குவட்டெமலா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து சுமார் 7 ஆயிரம் குடியேறிகள் அமெரிக்காவுக்குள் குடியேறுவதற்காக மெக்சிகோ நாட்டின் வழியாக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்த டிரம்ப், அவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்கும் வகையில் அமெரிக்கா - மெக்சிகோ எல்லப்பகுதியில் சுமார் 5 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்களை அனுப்பி வைத்துள்ளார்.

    இந்நிலையில், டிரம்ப்பின் இந்த நடவடிக்கையை  'அரசியல் ஸ்டன்ட்’ என அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார்.

    ஜார்ஜியா மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய ஒபாமா, ‘அமெரிக்காவை நோக்கி அடைக்கலத்துக்காக வரும் ஏழை அகதிகளால் நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டு விட்டதாக தற்போது அரசு கூறுகிறது.

    கைகளில் குழந்தைகளுடன் பலநூறு மைல்கள் நடந்துவரும் அவர்களை தடுத்து நிறுத்துவதற்காக நமது வீரம்மிக்க ராணுவத்தை அனுப்பி வைத்துள்ளனர். தங்கள் குடும்பத்தினருடன் இருக்க வேண்டிய நேரத்தில் நமது ராணுவத்தை சேர்ந்த வீரர்-வீராங்கணைகள் இவர்களின் அரசியல் ஸ்டன்ட்டுக்காக எல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவா நாட்டுப்பற்று? இது நாட்டுப்பற்றில்லை. வெறும் அரசியல் ஸ்டன்ட் மட்டும்தான்.

    தேர்தல்கள் வரும் காலத்தில் இதுபோல் பேசுவதும், தேர்தலுக்கு பின்னர் இதை எல்லாம் மறந்து விடுவதும் இவர்களுக்கு சகஜமாகி விட்டது என்று ஒபாமா குறிப்பிட்டுள்ளார். #Obama #Mexicanborder #Trump #Trumppoliticalstunt #politicalstunt
    எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியில் உள்ள மோடி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார். #JammuBorderResidents #JKCeasefire
    ஜம்மு:

    ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதன் காரணமாக எல்லையோரம் வசிக்கும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று  பர்க்வால் செக்டாரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டதால், ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் துணை முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான தாரா சந்த் சென்று பார்வையிட்டார். 

    அப்போது அவர் கூறுகையில், “பொதுமக்களை பாகிஸ்தான் குறிவைத்து தாக்குவது வெட்கக்கேடானது, கண்டிக்கத்தக்கது. ஜம்மு காஷ்மீரின் எல்லையோரம் வசிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மோடி அரசு முழுமையாக தவறிவிட்டது. பாகிஸ்தானுடனான மோதலை கையாள்வதில் மோடி அரசு தோல்வி அடைந்துள்ளதால், கடந்த 4 ஆண்டுகளில் அதிக உயிரிழப்பும் பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது” என்றார். #JammuBorderResidents #JKCeasefire
    போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று அடிக்கடி கூறும் பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளதாக எல்லைப் பாதுக்காப்பு படை ஐ.ஜி. குறிப்பிட்டுள்ளார். #PakCeasefireviolation
    ஜம்மு:

    இந்தியா-பாகிஸ்தான் இடையே உருவாக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் அவ்வப்போது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்திய வீரர்களும் உரிய பதிலடி தந்து வருகின்றனர்.

    இந்நிலையில், எல்லைப்பகுதி துப்பாக்கிச் சூட்டை முடிவுக்கு கொண்டு வருவதற்காக இருநாடுகளை சேர்ந்த ராணுவ செயல்பாட்டு பிரிவு டைரக்டர் ஜெனரல்கள் சமீபத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சில முடிவுகள் எட்டப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அக்னூர் மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இன்று நடத்திய அத்துமீறிய துப்பாக்கிச் சூட்டில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த இரு வீரர்கள் உயிரிழந்தனர். 

    பாகிஸ்தானின் இந்த அத்துமீறல் தொடர்பாக ஜம்மு நகரில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இந்திய எல்லைப் பாதுக்காப்பு படையின் ஜம்மு பகுதி ஐ.ஜி. ராம் அவ்தார், ‘போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று அடிக்கடி கூறும் பாகிஸ்தானை நம்பவே முடியாது என்பதை இன்றைய துப்பாக்கிச் சூடு நிரூபித்துள்ளது’ என குறிப்பிட்டுள்ளார்.

    இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூடு நிச்சயமாக போர் நிறுத்த மீறலாகும். இதற்கு நாமும் தக்க பதிலடி கொடுத்துள்ளோம். இதில் எதிர்தரப்பினருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன? என்பதை யூகிக்க இயலவில்லை. எனினும், பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளை பாதிக்காத வகையில் இன்றைய பதில் தாக்குதல் நடத்தப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். #PakCeasefireviolation 
    ×