search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 119246"

    சேலத்தில் ரூ.22½ லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாகன டிரைவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சூரமங்கலம்:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து கோவைக்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் சரக்கு வாகனங்களில் கடத்தப்படுவதாக சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கருப்பூர் பெரியார் பல்கலைக்கழகம் அருகே சுங்கச்சாவடியில் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதிகாலையில் ஒரு சரக்கு வாகனம் கருப்பூர் சுங்கச்சாவடியை நோக்கி வந்தது. அதனை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அந்த வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அடுத்தடுத்து வந்த 2 வாகனங்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை நடத்தியதில் அதிலும் குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களை ஓட்டி வந்த 3 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், அவர்கள் சேலம் குஞ்சுகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சின்னு மகன் கார்த்திக் (வயது 25), தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியை சேர்ந்த பெருமாள் மகன் சக்திவேல் (23), பென்னாகரம் அருகே பழையூர் கே.புதூர் பகுதியை சேர்ந்த செல்வகுமார் (33) என்பதும், ஒவ்வொரு வாகனத்திலும் 50 கிலோ என மொத்தம் 150 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவற்றை கோவை மற்றும் ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கடத்தி செல்வதற்காக கொண்டு வந்ததும், இதை கடத்தி வரச்சொல்லி சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த மாதேஸ் (35) என்பவர் அனுப்பி வைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து 3 பேரும் கடத்தி கொண்டு வந்த ரூ.22½ லட்சம் மதிப்புள்ள 150 கிலோ குட்கா பொருட்கள், 3 சரக்கு வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் மாதேஸ் என்பவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்த குட்கா பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்படுகிறது, இதற்கு யாருக்கு எல்லாம் தொடர்பு இருக்கிறது என பல்வேறு கோணங்களில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். மேலும் குட்கா கடத்தல் தொடர்பாக மாதேஸ் மீது ஏற்கனவே சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட 2 சரக்கு வாகனங்கள் மாதேசுக்கும், ஒரு வாகனம் கார்த்திக்கும் சொந்தமானது. ஒரு வாகனத்தில் கூரியர் என எழுதி அதில் குட்காவை கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

    முத்துப்பேட்டை அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த லாரியை பறிமுதல் செய்த போலீசார் டிரைவரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர். #SandSmuggling
    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டையை அடுத்த பேட்டை அங்காளம்மன் கோவில் தெருவில் முத்துப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மறித்து சோதனை செய்தனர். இதில் தம்பிக்கோட்டை பகுதியில் இருந்து அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

    இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் பேட்டையை சேர்ந்த வீரசேகரன் (வயது 32) என்பவரை கைது செய்தனர்.மேலும், லாரியை பறிமுதல் செய்தனர்.  #SandSmuggling #tamilnews 
    கர்நாடக மாநிலத்தில் போதிய வாகன வசதி இல்லாததால் மாணவர்களை ஆசிரியரே தனது சொந்த காரில் பள்ளிக்கு அழைத்து செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
    மங்களூர்:

    கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் ராகி கக்லு கிராமத்தில் அரசு பள்ளிக் கூடத்தில் மகாதேவா மஞ்ஜா என்பவர் ஆசிரியராக பணிபுரிகிறார்.

    இவர் அங்கு ஆசிரியராக மட்டும் செயல்படவில்லை, பிள்ளைகளை பள்ளிக்கு அழைத்துச் சென்று விடும் டிரைவராகவும் செயல்படுகிறார்.

    பள்ளிக்கு தலைமை ஆசிரியர் இல்லாததால் அவரே பொறுப்பு தலைமை ஆசிரியராக செயல்பட்டு வருகிறார். பள்ளியில் மாணவர்களின் வருகை குறைவாகவே இருந்தது.

    பக்கத்து கிராமங்களுக்கு சென்று சிறுவர்களை பள்ளியில் சேருமாறு அழைத்தார். 4 கி.மீ. தொலைவில் பள்ளி இருப்பதாலும், மழை நேரத்தில் பாலத்தை கடந்து செல்வது ஆபத்தானது என்பதாலும் போதிய வாகன வசதி இல்லாததாலும் தங்களால் பள்ளிக்கு வர இயலாது என்று தெரிவித்தனர்.

    இதை அறிந்த மகாதேவா பிள்ளைகளை தானே வந்து தனது காரில் அழைத்துச் செல்வதாக உறுதி அளித்தார். அதன்படி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 20 பிள்ளைகள் பள்ளியில் சேர்ந்தனர்.

    அவர்களை ஆசிரியர் மகாதேவா தினமும் காலையில் அவர்களது வீட்டுக்கு சென்று தனது காரில் ஏற்றி வந்து பள்ளியில் விடுவார். இரண்டு மூன்று முறை சென்று அழைத்து வருகிறார்.

    மாலையில் பள்ளி முடிந்ததும் அதேபோல் அழைத்துச் சென்று வீட்டில் போய் விட்டு விடுகிறார். அவரது முயற்சியால் தற்போது மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. பல பெற்றோர்கள் தாங்களாகவே வாகன ஏற்பாடு செய்து பிள்ளைகளை அனுப்பி வருகிறார்கள்.

    8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளிக்கூடத்தில் ஆரம்பத்தில் 20 மாணவர்களே படித்து வந்தனர். தற்போது 74 மாணவர்கள் வரை சேர்ந்து படிக்கிறார்கள். #Tamilnews
    நியூயார்க் நகரில் ஓடும் காரில் 2 பெண்கள் அடிக்கடி முத்தம் கொடுத்து எல்லை மீறி நடந்து கொண்டதால் அந்த ஜோடியை காரில் இருந்து டிரைவர் கீழே இறக்கி விட்டார்.

    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ‘உபர்’ கால் டாக்ஸியில் டிரைவராக பணிபுரிபவர் அகமத்- இல்- பவுதாரி. இவரது டாக்ஸியில் நேற்று 2 பெண்கள் பயணம் செய்தனர்.

    ஓடும் காரில் 2 பெண்களும் அடிக்கடி முத்தம் கொடுத்து வந்தனர். அதன் பிறகு இருவரும் காரிலேயே அத்து மீறலில் ஈடுபட்டனர்.

    இதனை டிரைவர் கவனித்து எச்சரித்தார். தொடர்ந்து இருவரும் எல்லை மீறி நடந்து கொண்டனர். அந்த பெண்கள் லெஸ்பியன் என தெரிய வந்தது. இதையடுத்து டிரைவர் இருவரையும் காரில் இருந்து கீழே இறக்கிவிட்டார்.

    ஒரு பெண்ணின் பெயர் அலெக்ஸ் லோவின் (26) மற்றொரு பெண் எம்மா பிச்ல் (24) இருவரும் 2 ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். தற்போது மின்கட்டன் நகரில் தங்களது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றபோது இவ்வாறு நடந்து கொண்டனர்.

    ஆனால் இருபெண்களும் உபர் டாக்ஸி நிறுவனத்திடம் டிரைவர் மீது புகார் செய்தனர். கால் டாக்ஸி விதியை மீறி தங்களை வலுக்கட்டாயமாக காரில் இருந்து வெளியேற்றியதாக கூறினார்கள். இதையடுத்து டிரைவரின் லைசென்ஸ் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. #tamilnews

    ஊத்துக்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் இருக்கையிலேயே சரிந்து விழுந்து இறந்தார். பஸ்சை பாதுகாப்பாக நிறுத்தி 50 பயணிகளை காப்பாற்றினார்.
    ஊத்துக்கோட்டை:

    பள்ளிப்பட்டு அருகே உள்ள கரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 45). ஆந்திர மாநிலம் போக்குவரத்து துறையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று இரவு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி நோக்கி பஸ்சை ஓட்டிச் சென்றார். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    ஊத்துக்கோட்டை அருகே பூச்சாட்டூரில் வந்த போது திடீரென அருணாச்சலத்துக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் பஸ்சை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்தினார்.

    சிறிது நேரத்தில் அருணாச்சலம் டிரைவர் இருக்கையிலேயே சரிந்து விழுந்து இறந்தார். அவர் மாரடைப்பால் இறந்து இருப்பது தெரிந்தது.

    மரணம் ஏற்படும் நேரத்திலும் அவர் பாதுகாப்பாக பஸ்சை நிறுத்தியதால் அதில் இருந்த 50-க்கும் மேற்பட்ட பயணிகள் உயிர் தப்பினர்.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருணாச்சலத்துக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நெஞ்சுவலி அதிகமானதால் செங்குன்றம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மருந்து கடையில் மாத்திரை வாங்கி சாப்பிட்டு இருக்கிறார்.

    இதேபோல் பிச்சாட்டூர் அருகே வந்தபோது மீண்டும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அங்கு கடையில் மாத்திரை வாங்கி இருக்கிறார். இதன் பின்னர் அருணாச்சலம் தொடர்ந்து பஸ்சை ஓட்டியபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இதுகுறித்து பிச்சாட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
    புதுவையில் இருந்து சென்னைக்கு காரில் மது பாட்டிலகள் கடத்தப்பட்டது தொடர்பாக டிரைவரை கைது செய்த போலீசார் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள பெரும்பாக்கம் சோதனை சாவடியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த காரை தடுத்து நிறுத்தி கார் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதற்கு அவர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை கூறியதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    உடனே அவர்கள் காரில் சோதனை நடத்தினர். அந்த காரில் 192 மது பாட்டில்களும், 44 பீர் பாட்டில்களும் இருப்பதை கண்டு பிடித்தனர். உடனே அந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

    இதைத்தொடர்ந்து டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சென்னை அண்ணா நகரை சேர்ந்த தியாகராஜன் (வயது 35) என்பதும், புதுவையில் இருந்து சென்னைக்கு மதுப்பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து டிரைவர் தியாகராஜனையும், பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் மதுப்பாட்டில்களை திண்டிவனம் மது விலக்குப் பிரிவு போலீசாரிடம் ஒப் படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.#tamilnews
    பழனியில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழில் அதிபரை கழுத்தை அறுத்து கொன்ற டிரைவர் கைது செய்யப்பட்டார்.
    பழனி:

    பழனி டவுன் சண்முகபுரத்தை சேர்ந்தவர் ரவிராஜா (வயது54). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் பழனியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    நேற்று ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் கத்தியுடன் நுழைந்த ஒருவர் அறையில் சிகிச்சை பெற்று வந்த ரவிராஜாவின் கழுத்தை அறுத்தார். அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை தடுக்க முயன்றனர்.

    ஆனால் அவர்களையும் கத்தியை காட்டி மிரட்டியதால் அவர்கள் அச்சம் அடைந்து அங்கிருந்து சென்று விட்டனர். அதன் பிறகு அந்த நபர் ரவிராஜாவின் மார்பு, கால் என பல இடங்களில் கத்தியால் குத்தி விட்டு ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து பழனி நகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஆஸ்பத்திரி சி.சி.டி.வி. கேமராவில் பதிவான அவரது படங்களை ஆய்வு செய்தனர். விசாரணையில் அவர் சென்னையை சேர்ந்த சந்துரு என தெரிய வந்தது.

    கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவர் ரவிராஜாவிடம் டிரைவராக வேலை பார்த்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் சந்துருவை வேலையில் இருந்து நிறுத்தி விட்டார். இதில் ஏற்பட்ட பகை காரணமாகவே இச்சம்பவம் நடந்துள்ளது.

    இதனிடையே படுகாயம் அடைந்த ரவிராஜா மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தப்பி ஓடிய சந்துருவை தாராபுரம் சோதனைச் சாவடியில் காருடன் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை பழனி போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



    பொள்ளாச்சி அருகே குடிபோதையில் தனியார் பஸ் ஓட்டிய டிரைவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
    பொள்ளாச்சி:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் பஸ் நிலையத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று பொள்ளாச்சி வந்துகொண்டிருந்தது.

    பஸ்சில் 70-க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பஸ்சை விஜய் என்பவர் ஓட்டினார். பஸ் காங்கயத்தில் கிளம்பியது முதலே டிரைவர் தாறுமாறாக இயக்கியுள்ளார். பல இடங்களில் எதிரே சென்ற வாகனங்கள், முன்னாள் சென்ற வாகனங்கள் மீது மோதுவது போல் ஓட்டினார்.

    இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் ஓட்டுனரை எச்சரித்துள்ளனர். ஆனால், அவர் அதை பொருட்படுத்தாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இயக்கியுள்ளார்.

    இந்நிலையில், பொள்ளாச்சி அருகே வந்த பஸ் ராஜேஸ்வரி திடல் பகுதியில் சாலையோரத்தில் நடந்து சென்ற அங்கலக்குறிச்சியை சேர்ந்த தனபாக்கியம்(50) என்ற பெண் மீது மோதியது.

    இதில் பலத்த காயமடைந்த தனபாக்கியம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.

    பஸ்சில் வந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் குடிபோதையில் தள்ளாடிய நிலையில் இருந்த பஸ் டிரைவர் விஜய்க்கு தர்ம அடி கொடுத்து மகாலிங்கபுரம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.#tamilnews
    மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் டிரைவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
    ஈரோடு:

    கரூர் கிருஷ்ணராயபுரம் சிந்தலவாடி வீரணாம்பட்டியை சேர்ந்தவர் கருப்பணன். இவருடைய மகன் திருப்பதி (வயது 23). பொக்லைன் டிரைவராக உள்ளார். இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைக்காக சென்றபோது அங்குள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த சிவசங்கிரி (21) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    அவர்கள் 2 பேரும் கடந்த 4-6-2014 அன்று ஈரோடு மாவட்டம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின்னர் ஈரோடு திண்டல் மாருதி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

    திருப்பதிக்கு குடிப்பழக்கம் உண்டு. இதனால் அடிக்கடி அவர் மது குடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதால் அவருக்கும், சிவசங்கிரிக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. கடந்த 7-1-2015 அன்று வழக்கம்போல் திருப்பதி மதுஅருந்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அப்போது மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் மனவேதனை அடைந்த சிவசங்கிரி தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும், ஈரோடு ஆர்.டி.ஓ. நர்மதாதேவியும் மேல்விசாரணை நடத்தினார். அதைத்தொடர்ந்து சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டியதாக திருப்பதியை போலீசார் கைது செய்தனர்.

    திருப்பதியின் மீது ஈரோடு மகளிர் கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி (பொறுப்பு) ராமகிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். அந்த தீர்ப்பில், சிவசங்கிரியை தற்கொலைக்கு தூண்டிய குற்றத்துக்காக திருப்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் கூடுதலாக ஒரு ஆண்டு சிறை தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் அரசு வக்கீல் ஜி.டி.ஆர்.சுமதி ஆஜரானார். 
    ×