search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கம்ப்யூட்டர்"

    ஆப்பிள் நிறுவனம் தனது ஐமேக் கம்ப்யூட்டர்களில் சக்திவாய்ந்த பிராசஸர்களுடன் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறது. #iMac



    ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு பின் தனது ஐமேக் கம்ப்யூட்டர்களை சக்திவாய்ந்த பிராசஸர் மற்றும் கிராஃபிக்ஸ் உடன் அப்டேட் செய்திருக்கிறது. 

    21.5 இன்ச் ஐமேக் மாடலில் 8-ம் தலைமுறை குவாட்-கோர் 6-கோர் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஐமேக் மாடல்களை விட 60 சதவிகிதம் வேகமாக இயங்கும். 27 இன்ச் ஐமேக் மாடலில் 9-ம் தலைமுறை 6-கோர் மற்றும் 8-கோர் இன்டெல் கோர் ஐ9 பிராசஸர் வழங்கப்பட்டிருக்கிறது.

    இத்துடன் 21.5 இன்ச் ஐமேக் மாடலில் ரேடியான் ப்ரோ வீகா 48 கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது 80 சதவிகிதம் வேகமான கிராஃபிக்ஸ் வழங்குகிறது. 27-இன்ச் ஐமேக் மற்றும் ரேடியான் ப்ரோ வீகா கிராஃபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களை விட 50% வேகமாக இயங்குகிறது.



    27-இன்ச் ரெட்டினா 5K ஐமேக் மற்றும் 21.5 இன்ச் ரெட்டினா 4K ஐமேக் மாடல்களில் 500 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் வைடு கலர் (P3) வழங்கப்பட்டுள்ளது. 

    இந்தியாவில் 21.5 இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 4K டிஸ்ப்ளே மாடல் விலை ரூ.1,19,900 என்றும் புதிய 27-இன்ச் ஐமேக் மற்றும் ரெட்டினா 5K டிஸ்ப்ளே மாடல் விலை ரூ.1,69,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. #SupremeCourt #ManoharLalSharma #CentralGovernment
    புதுடெல்லி:

    அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க 10 விசாரணை அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கிய மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 6 வாரங்களுக்குள் மத்திய அரசு பதில் அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

    மத்திய அரசு கடந்த மாதம் 20-ந் தேதி ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில், அனைத்து கம்ப்யூட்டர்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும், ஆய்வு செய்யவும் சி.பி.ஐ., நுண்ணறிவு பிரிவு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு, அமலாக்கத்துறை, வருவாய் புலனாய்வு பிரிவு உள்பட 10 அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டு இருந்தது.



    தகவல் தொழில்நுட்ப சட்டப்படி இந்த அதிகாரம் வழங்கப்படுவதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்த அறிவிப்புக்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்தியாவை கண்காணிப்பு நாடாக மாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றம்சாட்டின.

    ஆனால் மத்திய அரசு, அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களையும் இடைமறிக்கவும், கண்காணிக்கவும் தேவையான விதிகள் 2009-ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கையில் யாரெல்லாம் ஈடுபடலாம் என்பதற்கான அறிவிப்பு தான் இந்த புதிய உத்தரவு என்று கூறியது.

    கம்ப்யூட்டர்களை கண்காணிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை எதிர்த்து மனோகர்லால் சர்மா என்ற வக்கீல் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, அரசியல்சாசனத்துக்கு முரணானது, சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டது. தற்போது ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி தனது லாபத்துக்காக இதனை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது. இந்த அறிவிப்பின்படி தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்கீழ் யார் மீதும் விசாரணை நடத்தவும், குற்ற நடவடிக்கை எடுக்கவும் அந்த 10 அமைப்புகளுக்கும் தடைவிதிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனு மீது விசாரணை நடத்திய நீதிபதிகள், இந்த மனுவுக்கு 6 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். #SupremeCourt #ManoharLalSharma #CentralGovernment
    கம்ப்யூட்டர்களில் ஊடுருவி கண்காணிக்க 10 உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதற்கு எதிரான மனுவை விசாரிப்பது குறித்து சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்துள்ளது. #SupremeCourt
    புதுடெல்லி:

    நாட்டில் உள்ள எல்லா கம்ப்யூட்டர்களிலும் ஊடுருவி கண்காணிக்க 10 உளவு மற்றும் விசாரணை அமைப்புகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனோகர் லால் சர்மா என்ற வக்கீல் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார்.


    அதில், இந்த அறிவிப்பாணை சட்ட விரோதமானது என்றும், இதன்படி செயல்பட விசாரணை அமைப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கோரி இருந்தார்.



    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த விவகாரத்தை மனோகர் லால் சர்மா முறையிட்டார். அவசர மனுவாக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டார். அதற்கு நீதிபதிகள், “பார்க்கிறோம். எப்போது தேவையோ அப்போது விசாரிப்போம்” என்று கூறினர். #SupremeCourt
    ஜி.எஸ்.டி. வரி விகிதம் சீரமைப்பு மூலம் விலை குறைக்கப்பட்ட டி.வி., கம்ப்யூட்டர், கேமரா உள்பட 23 பொருட்களை இன்று முதல் பொதுமக்கள் வாங்கி பயன்பெறலாம். #GST
    புதுடெல்லி:

    டெல்லியில் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதத்தில் பல்வேறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி சினிமா டிக்கெட் கட்டணம், டி.வி., கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் உள்பட 23 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டது.

    அதிகபட்சமாக விதிக்கப்படும் 28 சதவீத வரி விகிதத்துக்குள் ஆடம்பர பொருட்கள், உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள், சிமெண்ட், பெரிய திரையுடன் கூடிய தொலைக்காட்சி பெட்டி, ஏ.சி., பாத்திரம் கழுவும் எந்திரம் ஆகியவை மட்டும் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


    பதப்படுத்தப்பட்ட காய்கறிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டது. டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ், பயன்படுத்தப்பட்ட டயர்கள் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    மாற்றுத் திறனாளிகளின் வாகன பொருட்கள் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. சரக்கு வாகன 3-ம் நபர் காப்பீட்டுத் தொகை மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.

    32 அங்குலம் வரை கொண்ட டி.வி. பெட்டி, கம்ப்யூட்டர் திரை, பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.

    இந்த வரி சீரமைப்பு குறித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் முடிவை நாட்டு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் மத்திய அரசு அறிவிக்கையாக வெளியிட்டுள்ளது.

    இதையடுத்து இன்று முதல் மேற்கண்ட 23 வகையான பொருட்கள் விலை குறைப்பு அமலுக்கு வந்தது. #GST
    கம்ப்யூட்டர்களை கண்காணிக்க அதிகாரம் வழங்கப்பட்ட 10 அமைப்புகளும் தாங்கள் நினைத்தபடி செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க சி.பி.ஐ., உளவு அமைப்பு (ஐ.பி.), போதைப்பொருள் தடுப்பு அமைப்பு, அமலாக்க இயக்குனரகம், மத்திய நேரடி வரிகள் வாரியம் உள்பட 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு கடந்த 20-ந் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடின. கண்காணிப்பு நிலையை மத்திய அரசு பிரகடனம் செய்திருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

    ஆனால், இந்த 10 அமைப்புகளும் தாங்கள் நினைத்தபடி செயல்படுவதற்கு அதிகாரம் அளிக்கப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், “கம்ப்யூட்டர்களை கண்காணிக்க, அதில் நடத்தப்படுகிற தகவல் பரிமாற்றத்தை இடைமறிக்க 10 அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் இதில் புதிய சட்டம் இயற்றவில்லை. புதிய விதிகளை உருவாக்கவில்லை. புதிய நடைமுறைகள் கிடையாது. நினைத்தபடி செயல்பட அதிகாரம் வழங்கவில்லை. தற்போது நடைமுறையில் உள்ள சட்டதிட்டங்களில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை” என்று குறிப்பிட்டார்.

    10 அமைப்புகளும், முறைப்படி முன்கூட்டியே அனுமதி பெற்றுத்தான் செயல்பட முடியும். மேலும், மத்திய அரசு வெளியிட்ட ‘கெசட்’ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 10 அமைப்புகளும், மின்னணு தகவல் தொடர்புகளை இடைமறிப்பதற்கு 2011-ம் ஆண்டு முதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 
    சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.
    நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்...?

    சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையை பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படி செய்கிறோம். அதே நேரம் கம்ப்யூட்டரையோ, செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளை கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம்? என்று நினைக்கலாம்.

    ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரி பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும், செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன. கம்ப்யூட்டர் கீ போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணை கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில் தானே வேலை பார்க்கிறோம் என்று அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

    லண்டனில் ஒரு அலுவலகத்தில் இருந்த கீ போர்டுகளை பரிசோதனைக்கு உட்படுத்தினார்கள். அதில் ஒரு கம்ப்யூட்டரில் அதிகமான கிருமிகள் இருந்திருக்கின்றன. பெரும்பாலான கீ போர்டுகள் பயன்பாட்டுக்குத் தகுதி இல்லாத அளவில் கிருமிகளின் கூடாரமாக இருந்திருக்கின்றன. தனிநபர் சுத்தமாக இருக்கும் பழக்கத்தைப் பொறுத்தே, கம்ப்யூட்டரில் கிருமிகள் சேர்வதும் அமைகிறது.



    பலர் கழிப்பறையை பயன்படுத்திய பிறகு கைகளைச் சரியாகச் சுத்தம் செய்வதே இல்லை. இன்னும் சிலர் கம்ப்யூட்டரின் முன்னால் அமர்ந்துகொண்டு கைக்குட்டையால் முகத்தை மூடாமல் இருமுவதும், தும்முவதும் சகஜம். இதுபோன்ற பழக்கங்களாலும் கீ போர்டில் கிருமிகள் பெருகும். அலுவலகத்தில் யாருக்காவது சளியோ, இரைப்பை குடல் அழற்சியோ இருந்தால், அவர் பயன்படுத்திய கீ போர்டையோ மவுஸையோ நாமும் பயன்படுத்தினால் போதும். அவருடைய நோய்கள் நமக்கும் எளிதாக தொற்ற வாய்ப்பாகிவிடும்.

    நம்மில் எத்தனை பேர் கம்ப்யூட்டரையும், மவுசையும் அடிக்கடி சுத்தம் செய்கிறோம்? கீ போர்டில் தூசுப்படலம் பரவினாலும் சுத்தம் செய்யாமல், அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலைதான் பலருக்கும் இருக்கிறது. அப்படி இல்லையென்றால் இது அலுவலக கம்ப்யூட்டர்தானே, அவர்கள் சுத்தம் செய்துகொள்வார்கள் என்ற நினைப்புடன் வேலை செய்பவர்களும் உள்ளனர்.

    குறிப்பிட்ட கால இடைவெளியில் கீ போர்டு, மவுஸ், செல்போன் ஆகியவற்றை சுத்தப்படுத்த வேண்டும். கீ போர்டைத் தலைகீழாகக் கவிழ்த்து மெதுவாகத் தட்டுவதன் மூலம் அதனுள்ளே சிக்கியிருக்கும் உணவுத் துணுக்கு களையோ, சிறிய குப்பையையோ அகற்றலாம். மெல்லிய துணியின் மூலம் இவற்றை துடைத்தெடுக்கலாம்.
    அசுஸ் நிறுவனத்தின் புதிய டியூரபிள் கேமிங் நோட்புக்-கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. #ASUS #gaming #Laptop



    அசுஸ் நிறுவனம் இந்தியாவில் புதிய TUF கேமிங் நோட்புக்களை அறிமுகம் செய்துள்ளது. புதிய TUF நோட்புக்-கள் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர் மற்றும் Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கொண்டிருக்கிறது. இவற்றில் 144 ஹெர்ட்ஸ் ரிஃப்ரெஷ் ரேட் நானோஎட்ஜ் டிஸ்ப்ளேக்கள் மற்றும் டி.டி.எஸ். சரவுன்ட் சவுன்ட் தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

    புதிய அசுஸ் TUF FX505 மற்றும் TUF FX705 நோட்புக்-களில் MIL-STD-810G தர உறுதித் தன்மை கொண்டிருக்கிறது. இவற்றுடன் அசுஸ் நிறுவனம் TUF டெஸ்க்டாப் FX10CP மாடலையும் அறிமுகம் செய்துள்ளது. இந்த டெஸ்க்டாப் மாடலில் இன்டெல் கோர் i7 பிராசஸர் மற்றும் ஐசோலேட் செய்யப்பட்ட ஏர் சேம்பர்கள் வழங்கப்பட்டுள்ளன.

    அசுஸ் TUF FX505, FX705, TUF டெஸ்க்டாப் FX10CP சிறப்பம்சங்கள்:

    அசுஸ் TUF FX505 மாடலில் 15.6 இன்ச் LED-பேக்லிட் ஃபுல் ஹெச்.டி. 1920x1080 பிக்சல் ஆன்டி-கிளேர் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 1000 ஜி.பி. மெமரி, 256 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மற்றும் Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 6 ஜி.பி. வி.ரேம் வழங்கப்பட்டுள்ளது.

    அசுஸ் TUF FX505 போன்று இல்லாமல், TUF FX705 மாடலில் 17.3 இன்ச் எல்.இ.டி. பேக்லிட் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1920x1080 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் i7-8750H பிராசஸர், 8 ஜி.பி. ரேம், Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு மற்றும் 6 ஜி.பி. வி.ரேம் கொண்டிருக்கிறது.



    புதிய TUF நோட்புக் மாடல்களை அசுஸ் நிறுவனம் MIL-810G மிலிட்டரி தரத்தில் உருவாக்கியிருக்கிறது. விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய லேப்டாப்களில் பேக்லிட் கீபோர்டு, WASD கீகேப் டிசைன் கொண்டிருக்கிறது. 

    அசுஸ் TUF FX507 மற்றும் TUF FX705 நோட்புக்-களில் 2T2R MU-MIMO 802.11ac வைபை வசதி, ப்ளூடூத் 5.0, யு.எஸ்.பி. டைப்-ஏ 2.0 மற்றும் 3.1, ஹெச்.டி.எம்.ஐ. போர்ட் கொண்டிருக்கிறது. 

    இத்துடன் 2 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், அரே மைக்ரோபோன், டி.டி.எஸ். ஹெட்போன்: X மற்றும் 7.1 சேனல் விர்ச்சுவல் சரவுன்ட் சவுன்ட் அனுபவம் வழங்குகிறது. மேலும் அசுஸ் ஹைப்பர்கூல் தெர்மல் தொழில்நுட்பம், ஆன்டி-டஸ்ட் கூலிங் சிஸ்டம், ஃபேன் ஓவர்பூஸ்ட் தொழில்நுட்பம், டூயல்-ஃபேன் கூலிங் சி.பி.யு. மற்றும் ஜி.பி.யு. உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.



    அசுஸ் TUF டெஸ்க்டாப் FX10CP  மாடலில் இன்டெல் கோர் i7 8700 பிராசஸர், Nvidia GeForce GTX 1060 கிராஃபிக்ஸ் கார்டு, 32 ஜி.பி. ரேம், 1000 ஜி.பி. ஹார்டு டிரைவ், 128 ஜி.பி. எஸ்.எஸ்.டி. கொண்டிருக்கிறது. இந்த டெஸ்க்டாப் மாடலிலும் தெர்மல் வடிவமைப்பு 802.11ac Wave 2 வைபை 2x2 ஆன்டெனாக்களை கொண்டுள்ளது.

    அசுஸ் TUF FX505, FX705, TUF டெஸ்க்டாப் FX10CP இந்திய விலை:

    அசுஸ் TUF FX505 விலை இந்தியாவில் ரூ.79,990 என்றும், FX705 மாடலின் துவக்க விலை ரூ.1,24,990 என்றும் TUF டெஸ்க்டாப் FX10CP துவக்க விலை ரூ.91,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோட்புக் மற்றும் டெஸ்க்டாப் மாடல்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் அசத்தி இருக்கின்றனர். #microprocessor



    ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவின் முதல் மைக்ரோ பிராசசர் உருவாக்கியுள்ளனர். சக்தி என அழைக்கப்படும் இந்த மைக்ரோ பிராசசரை கம்ப்யூட்டிங் மற்றும் இதர சாதனங்களில் பயன்படுத்த முடியும்.

    இந்த மைக்ரோ பிராசசர் குறைந்த திறன் கொண்ட வயர்லெஸ் சிஸ்டம் மற்றும் நெட்வொர்க்கிங் சிஸ்டங்களில் பயன்படுத்த முடியும். இதனால் வெளிநாட்டு மைக்ரோ பிராசசர்களை நாடவேண்டிய அவசியம் இனி ஏற்படாது. இந்த மைக்ரோ பிராசசரை சர்வதேச தரத்துக்கு இணையாக பயன்படுத்த முடியும்.

    சக்தி மைக்ரோ பிராசசர் சண்டிகரில் உள்ள செமிகண்டக்டர் ஆய்வகம் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஃபேப்ரிகேட் செய்யப்பட்டது. அந்த வகையில் முற்றிலும் இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்ட முதல் மைக்ரோ பிராசசர் என்ற பெருமையை சக்தி பெற்றுள்ளது என ஐஐடி மெட்ராஸ் தெரிவித்துள்ளது.



    முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, உற்பத்தி செய்யப்பட்டு இருப்பதால் வழக்கமான ஹார்டுவேர் பிராசசர்களில் ஏற்படும் ட்ரோஜன், மால்வேர் மற்றும் இதர பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு தான்.

    சக்தி பிராசஸர்களை மிகமுக்கிய துறைகளான பாதுகாப்பு, அணு ஆயுத கட்டமைப்பு, அரசு அலுவலகம் மற்றும் துறைகளில் பயன்படுத்தும்போது குறிப்பிடத்தக்க பயன்களை பெற முடியும் என எதிர்பார்க்கலாம். இந்தத் திட்டம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியால் சாத்தியமாகியுள்ளது.

    "டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடர்பாக பல்வேறு அமைப்புகளில் பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யக்கூடிய பிராசஸர் கோர்களுக்கான தேவை அதிகமாகி இருக்கிறது. சண்டிகரில் உள்ள எஸ்.சி.எல். 180 என்.எம். ஃபேப்ரிகேஷன் அமைப்பில் மிகமுக்கிய கோர்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்," என ஐஐடி மெட்ராஸ் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர் காமகோடி வீழிநாதன் தெரிவித்தார்.
    ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக் மினி கம்ப்யூட்டர் ஆப்பிள் அக்டோபர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. #AppleEvent #MacMini
    ஆப்பிள் அக்டோபர் நிகழ்வில் அந்நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போர்டபிள் கம்ப்யூட்டரில் 8ம் தலைமுறை பிராசஸர்கள் அதிகபட்சம் 8 கோர்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் அதிகபட்சம் 64 ஜி.பி. ரேம் மற்றும் 2000 ஜி.பி. எஸ்.எஸ்.டி. மெமரி வழங்கப்பட்டுள்ளது. புதிய மேக் மினி மாடலிலும் ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப்செட் வழங்கப்பட்டுள்ளது.

    புதிய மேக் மினி மாடலில் ஜிகாபிட் ஈத்தர்நெட் போர்ட் மற்றும் தன்டர்போல்ட் 3 கனெக்டிவிட்டி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புதிய மேக் மினி பேஸ் வேரியன்ட் மாடலில் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.



    மேக் மினி சிறப்பம்சங்கள்:

    - 8ம் தலைமுறை பிராசஸர்
    - 4, 6 மற்றும் 8 கோர்
    - 64 ஜி.பி. ரேம்
    - 2000 ஜி.பி. எஸ்.எஸ்.டி.
    - ஆப்பிள் டி2 செக்யூரிட்டி சிப்செட்
    - ஈத்தர்நெட், தன்டர்போல்ட் 3

    ஸ்பேஸ் கிரே நிறத்தில் கிடைக்கும் புதிய மேக் மினி மாடலில் 4, 6 மற்றும் 8 கோர் பிராசஸர் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் புதிய மேக் மினி விலை 799 டாலர்கள் முதல் துவங்குகிறது. இதன் விற்பனையும் புதிய மேக்புக் ஏர் போன்றே நவம்பர் 7ம் தேதி துவங்குகிறது.#AppleEvent #MacMini
    சாம்சங் நிறுவனத்தின் புதிய லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே கொண்டிருக்கும் புதிய லேப்டாப் ஃபிளாஷ் என அழைக்கப்படுகிறது. #Samsung #laptop



    சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாஷ் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய லேப்டாப்பில் இன்டெல் 802.11 ac 2X2 ஜிகாபிட் வயர்லெஸ் LAN கார்டு கொண்டுள்ளது. இதனால் புதிய லேப்டாப்பில் நொடிக்கு 1.7 ஜிகாபைட் வேகம் வரை சீராக இயங்கும்.

    இத்துடன் புதிய ஃபிளாஷ் லேப்டாப் 13.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி. டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. மேலும் KT கார்ப் மொபைல் நெட்வொர்க்கிற்காக சேவைகளுக்கென பிரத்யேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. 

    பாதுகாப்பு வசதியை மேம்படுத்தும் வகையில் சாம்சங் தனது ஃபிளாஷ் லேப்டாப்பில் அந்நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய பாதுகாப்பு அமைப்பை வழங்கியிருக்கிறது. புதிய லேப்டாப் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் இயங்குகிறது. 



    கைரேகை சென்சார், சாம்சங் ரகசிய ஃபோல்டர் கொண்டிருக்கும் சாம்சங் ஃபிளாஷ் லேப்டாப்பில் பயனர்கள் தங்களது தரவுகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளலாம். 

    சர்வதேச ஃபிளாஷ் ஸ்டோரேஜ் கார்டுகளை சப்போர்ட் செய்யும் ஃபிளாஷ் லேப்டாப் வழக்கமான மைக்ரோ எஸ்.டி. கார்டுகளை விட ஐந்து மடங்கு வேகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாம்சங் புகிய ஃபிளாஷ் லேப்டாப் மாடல்கள் வைட், சார்கோல் மற்றும் கோரல் உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 8,20,000 வொன் அதாவது இந்திய மதிப்பில் ரூ.52,360 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. #Samsung #laptop
    ஸ்மார்ட்போன் கொண்டு வீடு அல்லது அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரை இயக்குவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம். #technology



    ஸ்மார்ட்போன் இருந்தால் உலகமே நம் கைக்குள் அடங்கிவிடும் உணர்வு ஏற்படும். ஸ்மார்ட்போன் இல்லாமல் சில நிமிடம் கூட இருக்க முடியாது என்ற நிலைக்கு நம்மில் பலரும் சிக்கியிருக்கிறோம். ஸ்மார்ட்போன் கொண்டு தகவல் பரிமாற்றம் மட்டுமின்றி, பொழுதுபோக்கு, கல்வி என பல்வேறு அம்சங்களை பயன்படுத்த முடியும். 

    இதேபோன்று ஸ்மார்ட்போன் கொண்டு கம்ப்யூட்டரையும் இயக்க முடியும். கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தை ஸ்மார்ட்போன் மூலம் இயக்கவோ அல்லது அவற்றில் உள்ள தரவுகளையோ இயக்க வேண்டுமா. இவற்றை செய்ய ரிமோட் டெஸ்க்டாப் கனெக்ஷன் அம்சம் இருக்கிறது. 

    இந்த அம்சம் ஆர்.டி.பி. (RTP) அதாவது ரிமோட் டெஸ்க்டாப் ப்ரோடோகால் மூலம் பயனர்கள் தங்களது சாதனங்களை இயக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ வழி செய்கிறது. இதை எப்படி செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

    க்ரோம் எக்ஸ்டென்ஷன் மூலம் இயக்கலாம்:

    1. ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்தில் அதற்கு உரிய ஆப் ஸ்டோரை திறக்க வேண்டும் 

    2. க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் 

    3. இனி, கம்ப்யூட்டர் அல்லது மேக் சாதனத்தில் கூகுள் க்ரோமை திறக்க வேண்டும் 

    4. க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் எக்ஸ்டென்ஷனை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய வேண்டும் 

    5. இனி அட்ரஸ் பாரில் 'chrome://apps' என டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

    6. இனி க்ரோம் ரிமோட் டெஸ்க்டாப் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும் 

    7. அடுத்து, 'My Computers' பகுதியில் உள்ள 'Get started' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

    8. இந்த எக்ஸ்டென்ஷன் தானாக டவுன்லோடு ஆகி, இன்ஸ்டால் ஆகும் 

    9. இன்ஸ்டால் ஆகி முடிந்ததும், எக்ஸ்டென்ஷன் பகுதிக்கு சென்று 'Enable Remote Connections' ஆப்ஷனை செயல்படுத்த வேண்டும் 

    10. உங்களது இணைப்புக்கு புதிய கடவுச்சொல் பதிவு செய்து 'OK' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

    11. ஸ்மார்ட்போனில் செயலியை திறந்து, 'PC' பெயரை க்ளிக் செய்ய வேண்டும் 

    12. நீங்கள் பதிவிட்ட கடவுச்சொல் பதிவு செய்து, பயன்படுத்த துவங்கலாம்

    ரிமோட் டெஸ்க்டாப் வலைத்தளம் பயன்படுத்தலாம்:

    1. முதலில் கூகுள் க்ரோம் சென்று 'remotedesktop.google.com' வலைத்தளம் செல்ல வேண்டும் 

    2. அடுத்து 'Remote Access' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் 

    3. இனி, 'Turn On' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும் 

    4. உங்களது கம்ப்யூட்டருக்கு புதிய பெயர் அல்லது ஏற்கனவே இருக்கும் பெயரை பயன்படுத்தலாம் 

    5. இனி 'Next' ஆப்ஷனை க்ளிக் செய்து புததாக கடவுச்சொல் பதிவிட வேண்டும் 

    6. அடுத்து 'Start' பட்டனை க்ளிக் செய்யவும் 

    7. குறிப்பிட்ட ஆப் ஸ்டோர்களில் இருந்து 'Chrome Remote Desktop' செயலியை டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்யவும் 

    8. செயலியை திறந்து, கம்ப்யூட்டர் பெயரை க்ளிக் செய்ய வேண்டும் 

    9. இறுதியில் கடவுச்சொல் பதிவிட்டு பயன்படுத்த துவங்கலாம்
    டெல் நிறுவனத்தின் ஏலியன்வேர் 15 மற்றும் 17, டெல் ஜி சீரிஸ் ஜி3, ஜி7 மற்றும் இன்ஸ்பிரான் 24 5000 மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.



    டெல் நிறுவனத்தின் புதிய லேப்டாப்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. டெல் ஏலியன்வேர் 15 மற்றும் 17, டெல் ஜி சீரிஸ் ஜி3, ஜி7 மற்றும் இன்ஸ்பிரான் 24 5000 மாடல்களில் ஏலியன்வேர் லேப்டாப்களில் இன்டெல் கோர் i9 பிராசஸர்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

    டெல் ஏலியன்வேர் 8th ஜென் இன்டெல் கோர் i5, i7 மற்றும் i9 பிராசஸர் என வெவ்வேறு வேரியன்ட்களில் கிடைக்கிறது. இவை ஏலியன்வேர் க்ரியோ-டெக் வெர்ஷன் 2.0 மூலம் இன்ஜினியரிங் செய்யப்பட்டுள்ளது. இதன் கூலிங் சிஸ்டம் 50% மெல்லியதாகவும், சிபியு-வில் வேப்பர் சேம்பர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் கூடுதலாக ஏலியன்வேர் கிராஃபிக்ஸ் ஆம்ப்ளிஃபையரை சேர்த்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் Nvidia GeForce GTX 1080 கிராஃபிக்ஸ் மற்றும் 8 ஜிபி DDR5 GPU ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது. புதிய ஏலியன்வேர் 15 மற்றும் 17 மாடல்களில் 80 குவாட்ரிலான் லைட்டிங் 13 விதங்களில் பிரத்யேகமாக லைட்டிஙஅ சோன்கள் 20 நிறங்களில் கிடைக்கிறது.



    டெல் ஜி3 15 மற்றும் ஜி7 15 மாடல்களில் 15 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு இருக்கிறது. இவை Nvidia GeForce GTX 10 சீரிஸ் GPU-க்கள், 8th ஜென் இன்டெல் கோர் பிராசஸர்கள், தெர்மல் மேனேஜ்மென்ட் சொல்யூஷன்கள், இன்டெலிஜென்ட் கன்டென்ட் ப்ரியாரிடைசேஷன் மென்பொருள், ஆன்டி-கிளேர் ஐ.பி.எஸ். உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    டெல் ஜி3 15 மாடலில் 8th ஜென் இன்டெல் கோர் i7 சிபியு-க்கள், NVIDIA GeForce GTX 1050 Max-Q டிஸ்க்ரீட் ஜிபியுக்கள், டூயல் ஃபேன்கள் மற்றும் டூயல் டிரைவ்களுடன் எஸ்எஸ்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. புதிய ஜி3 15 மாடல்கள் டெல் சீரிஸ் மாடல்களின் மிகவும் மெல்லிய மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 



    இந்த லேப்டாப்களில் ஸ்மார்ட்பைட் மென்பொருள் வழங்கப்பட்டுள்ளது. இகு கேமிங் மற்றும் வீடியோ தரவுகள், பெரிய ஃபைல்களை டவுன்லோடு செய்யும் போது சீராக இயங்குவதை உறுதி செய்யும். ஜி7 15 மாடல்கள் புத்தம் புதிய கோர் i9 பிராசஸர்கள், NVIDIA GeForce GTX 1060 Max-Q வடிவமைப்பு கொண்டுள்ளது.

    டெல் இன்ஸ்பிரான் 24 5000 ஆல்-இன்-ஒன் டிரைவர்கள் மல்டி-என்டெர்டெயின்மென்ட் வழங்க ஏதுவாக ஆப்டிமைஸ் செய்யப்பட்டுள்ளது. இவை இன்டெர் 8th கோர் பிராசஸர்கள், அதிகபட்சம் 32 ஜிபி DDR4 மெமரி, 4 ஜிபி GDDR5 NVIDIA GeForce GTX 1050, இன்டெல் ஆப்டேன் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 23.8 இன்ச் இன்ஃபினிட்டி எட்ஜ் IPS டிஸ்ப்ளே, ஆன்டி-கிளேர் மற்றும் FHD ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

    விலை:

    டெல் ஜி3 15 கேமிங் லேப்டாப் விலை ரூ.80,990
    டெல் ஜி7 15 கேமிங் லேப்டாப் விலை ரூ.1,24,690
    ஏலியன்வேர் 15 லேப்டாப் விலை ரூ.1,46,890 முதல் துவங்குகிறது
    ஏலியன்வேர் 17 லேப்டாப் விலை ரூ.2,08,790
    இன்ஸ்பிரான் 24 5000 ஆல்-இன்-ஒன் விலை ரூ.91,690 

    டெல் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் புதிய லேப்டாப் மாடல்களின் விற்பனை ஜூலை 6-ம் தேதி முதல் ஆன்லைனிலும், ஜூலை 13-ம் தேதி முதல் ஆஃப்லைன் தளங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
    ×