search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சி.பி.எஸ்.இ."

    சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண், கல்வி என இரண்டுக்கும் ஒரே சான்றிதழாக வழங்க சி.பி.எஸ்.இ. முடிவு செய்துள்ளது. #CBSE #SSLC #Marksheet
    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழும், தேர்ச்சியா, இல்லையா என்பதைக் குறிக்கும் கல்வி சான்றிதழும் தனித்தனி சான்றிதழ்களாக வழங்கப்படுகின்றன.

    இந்நிலையில், இந்த ஆண்டில் இருந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு மதிப்பெண், கல்வி என இரண்டுக்கும் ஒரே சான்றிதழாக வழங்கப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வுக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு நிர்வாக குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.

    இருப்பினும், 12-ம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு வழக்கம்போல் தனித்தனியாக 2 சான்றிதழ்கள் வழங்கப்படும். #CBSE #SSLC #Marksheet 
    இந்தியாவில் X மற்றும் XII வகுப்பு கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் உடன் கைகோர்த்திருப்பதாக சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. #cbse #MicrosoftEdu


    இந்திய பள்ளிகளில் நடத்தப்படும் X மற்றும் XII வகுப்பு தேர்வுகளுக்கான கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் செய்ய மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் சி.பி.எஸ்.இ. இணைந்திருக்கிறது. இதன் மூலம் கேள்வித்தாள்கள் கசியாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

    இந்த திட்டம் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வுக்கான கேள்வித்தாள்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது. இந்த தேர்வு 847 மையங்களில் மொத்தம் 4000 மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. விண்டோஸ் 10 இயங்குதளத்தில் ஆஃபீஸ் 365 மென்பொருள் மூலம் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி முழு நடவடிக்கைகளையும் டிராக் செய்ய முடியும்.

    முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருப்பதோடு அனைத்து வழிமுறைகளும் தானாக நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. தேர்வு துவங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் கேள்வித்தாள்களை டவுன்லோடு செய்ய முடியும் என்பதோடு இவை இரண்டடுக்கு கடவுச்சொல் மூலம் பாதுகாக்கப்படுகிறது. 



    கேள்வித்தாள்களை என்க்ரிப்ட் மற்றும் வாட்டர்மார்க் செய்து ஆஃபீஸ் 365 அம்சங்களை பயன்படுத்துகிறது. வாட்டர்மார்க்-இல் ஒவ்வொரு தேர்வு மையத்தின் குறியீடு இடம்பெற்றிருக்கும் என்பதால் எளிமையாக டிராக் செய்ய முடியும். ஒருவேளை அனைத்தையும் கடந்து கேள்வித்தாள் லீக் ஆகும் பட்சதித்ல் அதனை எளிதில் டிராக் செய்துவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சி.பி.எஸ்.இ. தேர்வு கண்காணிப்பாளர் கேள்வித்தாள் விநியோகத்தை துவக்குவார். இவ்வாறு செய்ததும், குறிப்பிட்ட தேர்வு மையங்களுக்கு ஒன்டிரைவ் லின்க்-க்கு கேள்வித்தாள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும், இதனை குறிப்பிட்ட தேர்வு மையங்கள் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.

    இதுமட்டுமின்றி தனியார் மற்றும் பொது கல்வி நிறுவனங்களுடன் இணைந்து கல்வி முறையை நவீனத்துவமாக்கி, மாணவர்களுக்கு குறைந்த கட்டத்தில் பயிற்சி மற்றும் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்ய பணியாற்றி வருவதாக மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
    ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்கள் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளதால், இதுகுறித்து சி.பி.எஸ்.இ.க்கு கடிதம் எழுத வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. #NeetExam #TamilnaduGovernment #CBSE
    சென்னை:

    சென்னையில் அனைவருக்கும் தொழில் நுட்பம் (டெக் பார் ஆல்) இயக்க நிறுவனர் ஜி.பி.ராம்பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ‘நீட்’ தேர்வு சி.பி.எஸ்.இ. சார்பில் கடந்த மாதம் (மே) 6-ந் தேதி நடத்தப்பட்டது. மாணவ-மாணவிகள் அவர்கள் விரும்பிய 12 மொழிகளில் தேர்வு எழுதினார்கள். தமிழ் வினாத்தாளில் 49 பிழைகள் இருந்தன.

    அந்த பிழைகளுக்கு சரியாக கணக்கிட்டால் 196 கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.

    ‘நீட்’ தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் விழுப்புரம் மாவட்ட மாணவி பிரதீபா தற்கொலை செய்து கொண்டார். இதேபோல எந்த மாணவரும் தவறான முடிவை எடுக்க வேண்டாம். எனவே தமிழில் ‘நீட்’ தேர்வு எழுதிய மாணவர்களுக்கு அதில் வந்த 49 பிழைக்காக கருணை மதிப்பெண் வழங்க வேண்டும்.

    ‘நீட்’ தேர்வு நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதுகிறார்கள்? என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டது. கடந்த 4-ந் தேதி தேர்வு முடிவு வெளியானபோது எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் என்ற புள்ளிவிவரம் வெளியிடப்பட்டது. இந்த 2 புள்ளிவிவரத்திலும் மாணவர்கள் எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் உள்ளது. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

    தமிழகத்தில் 170 மையங்களில் 1 லட்சத்து 7 ஆயிரத்து 288 பேர் தேர்வு எழுதுவார்கள் என்று முதலில் புள்ளிவிவரம் வெளியானது. ஆனால் முடிவு வெளியானபோது தமிழகத்தில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதாக கூறப்பட்டுள்ளது. இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. தமிழகத்திலாவது குறைந்த அளவில் வித்தியாசம். பீகார் மாநிலத்தில் 35 ஆயிரத்து 642 பேர் தேர்வு எழுத உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் முடிவு வெளியானபோது 66 ஆயிரத்து 71 பேர் தேர்வு எழுதியதாக கூறப்பட்டுள்ளது.



    இப்படி அனைத்து மாநிலங்களிலும் தேர்வு எழுதிய மாணவர்களின் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இது குறித்து சி.பி.எஸ்.இ.க்கு கடிதம் எழுத வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #NeetExam #TamilnaduGovernment #CBSE
    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. #CBSEresults
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தியா முழுவதும் மார்ச் 5–ம் தேதி தொடங்கியது. இந்த தேர்வு ஏப்ரல் 4–ம் தேதி வரை நடைபெற்றது. தேர்வை 16 லட்சத்து 38 ஆயிரத்து 428 மாணவ, மாணவிகள் எழுதினார்கள்.

    இந்நிலையில், சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. தேர்வு முடிவை மாணவ–மாணவிகள் www.results.nic.in, www.cbseresults.nic.in, www.cbse.nic.in ஆகிய இணைய தளங்களில் பார்க்கலாம். இந்த ஆண்டு கேள்வித்தாள் லீக் உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் தேர்வுகள் நடைபெற்று முடிந்தன. அரியானா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டது. 



    இந்த தேர்வில் 10-ம் வகுப்பு வினாத்தாள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது போல், 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-அப்பில் வெளியாகி சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது. #CBSEresults
    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின்றன. #CBSEresults
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். 

    இந்த தேர்வில் 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்தின் கேள்வித்தாளும் வாட்ஸ்-ஆப்பில் வெளியானதாக கூறப்பட்டது. இதனால் மறுதேர்வு நடத்த சி.பி.எஸ்.இ. தீர்மானித்தது. 12-ம் வகுப்பிற்கான பொருளாதாரவியல் பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது. அதேபோல் 10-ம் வகுப்பு வினாத்தாள்களும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையில் தேர்வு நடைபெற்று முடிந்தது.



    இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது. இதுகுறித்து சி.பி.எஸ்.இ. கல்வித்துறை செயலாளர் அனில் சுவரப் கூறுகையில், மாணவ-மாணவியர் கூகுளில் தங்களின் தேர்வு முடிவுகளை காணலாம். மேலும், சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களிலும் முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவித்தார்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்படவில்லை. #CBSEresults
    ×