search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 119759"

    மாற்று திறனாளிகளுக்கு அரசு பஸ்களில் சலுகை கட்டண வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
    பழனி:

    தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் அரசு பேருந்து பணிமனை முன்பாக தமிழக அரசின் 2010-ம் ஆண்டு உத்தரவை நிறைவேற்ற கோரி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது.

    அதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையின் பலனாக தற்போது அனைத்து அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு, தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது.

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசால் வழங்கப்பட்டுள்ள 4-ல் 1 பங்கு கட்டணத்தில் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகைகளுடன் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இச்சலுகை இடைநில்லா பேருந்துகளுக்கும் பொருந்தும். உள்ளூர் மற்றும் குளிர்சாதன பேருந்துகளில் இக்கட்டணத்தில் பயணம் செய்ய அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு சுமை கட்டணம் வசூலிக்க கூடாது.

    குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மாற்றுத்திறனாளிகள் பேருந்தில் ஏற வேண்டும் என்று தெரிவிக்காமல் அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் பயணம் செய்ய ஓட்டுனர் மற்றும் நடத்துனர் அனுமதிக்க வேண்டும்.

    கட்டண சலுகையில் பயணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளிடம் கண்ணியாமாக நடந்து கொள்ளவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருமணமான 2 மாதத்தில் மாற்றுத்திறனாளி பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை சாமிபிள்ளை தோட்டம் விஷ்ணுநகர் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் சித்தாள் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை.

    இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த திருமணம் ஆகாத மாற்றுத்திறனாளி பெண்ணான செல்வி (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் 2 வருடத்துக்கு முன்பு மயிலம் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.

    சமீப நாட்களாக கந்தசாமி வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். வீட்டு செலவுக்கு பணம் இல்லாமல் செல்வி சுயஉதவி குழுவில் பணம் கடன் பெற்று செலவு செய்துள்ளார். இதனால் கடனும் அதிகமானது. இதுகுறித்து செல்வி கந்தசாமியிடம் கேட்கும் போது, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் நேற்று கந்தசாமி வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த செல்வி ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    அப்போது பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஜன்னல் கம்பியில் செல்வி தூக்குபோட்டு தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவரது அண்ணன் கண்ணனுக்கு தகவல் கொடுத்தார். பின்னர் இதை அறிந்த லாஸ்பேட்டை போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் பிணத்தை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி லாஸ்பேட்டை போலீஸ் ஏட்டு ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். செல்விக்கு திருமணம் ஆகி 2 ஆண்டுகளே ஆவதால் தாசில்தார் விசாரணையும் நடந்து வருகிறது.
    பாளையங்கோட்டையில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 289 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார். #IASShilpa
    நெல்லை:

    பாளையங்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நேற்று நடந்தது. இதில் 70-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவன பணியிடங்களுக்கு மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்தனர். இதில் தேர்வு செய்யப்பட்ட 289 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணைகளை மாவட்ட கலெக்டர் ஷில்பா வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதனை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று கூறினார்.

    தொடர்ந்து கூட்டுறவு துறை சார்பில், 25 மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை உதவி கலெக்டர் மைதிலி, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 
    மூன்று சக்கர சைக்கிள் கேட்டு தனக்கு கடிதம் எழுதிய மாற்றுத்திறனாளிக்கு உதயநிதி ஸ்டாலின் அவரது வீட்டிற்கு நேரில் சென்று ரூ.10 ஆயிரம் நிதிஉதவி வழங்கினார்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை டவுன் கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் அருள் சகாயராஜ் (வயது 47). மாற்றுத்திறனாளியான இவர் அதே பகுதியில் சிறியதாக பெட்டி கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இவருக்கு சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் மூன்று சக்கர வாகனம் வாங்க நிதியுதவி செய்யும்படி உதயநிதி ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

    இதைதொடர்ந்து நேற்று தஞ்சையில் நடந்த திருமண விழாவிற்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் தனக்கு பொருளுதவி செய்ய கடிதம் எழுதியிருந்த அருள் சகாய ராஜ் வீட்டிற்கு சென்றார். அங்கு அருள் சகாயராஜை நேரில் சந்தித்து உதயநிதி ஸ்டாலின் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கினார். மேலும் அவரின் உடல் நலம் குறித்து விசாரித்தார்.

    மாற்றுத்திறனாளியான நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மேலும் கடைக்கு சென்று வரமுடியாமல் தொடர்ந்து சிரமப்பட்டு வந்தேன்.

    இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினால் அவர் உதவி செய்வார் என்று நினைத்தேன். அதன்படி அவரது நற்பணி மன்ற நிர்வாகிகள் மூலம் கடிதம் அனுப்பினேன்.

    ஆனால் உதயநிதி ஸ்டாலின் எனது வீட்டிற்கே நேரில் வந்து உதவி செய்தது மகிழ்ச்சியை அளிக்கிறது. அவர் செய்த உதவியால் 3 சக்கர சைக்கிளில் இனிமேல் கடைக்கு செல்ல எளிதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Tamilnews
    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார்.  கூட்டத்தில் கலந்து கொண்ட 260 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவிகளை நேரில் பார்வையிட்டு, தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான ஆணைகளை வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். அப்போது கலெக்டர் கூறியதாவது:- 

    260 மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடத்தியதில் 40 சதவிகிதம் ஊனமுற்ற குழந்தைகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதில் தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கப்பட உள்ளது. மேலும் செவித்திறன் குறைவாக கொண்ட குழந்தைகளை அடையாளம் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு செவித்திறன் மற்றும் கேட்கும் பயிற்சி கொண்ட அறுவை சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று பார்வை குறைபாடு கொண்ட படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறிய எழுத்தை பெரியதாக காண்பிக்கும் கருவி வழங்கப்பட்டுள்ளது. 

    இவ்வாறு அவர் கூறினார். 

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சந்தியா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு மற்றும் தனி தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
    ×