search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிபிஎஸ்இ"

    மாநில பாடத்திட்டத்தில் படித்து என்ஜினீயரிங் படிக்க விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு கட்-ஆப் மார்க் 2 வரை குறைய வாய்ப்பு உள்ளது. அதேசமயம் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு கட்-ஆப் உயரும் என தெரிகிறது. #CBSE
    சென்னை:

    என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்படுகிறது. இந்த ஆண்டு முதன் முதலாக ஆன்லைன் முறையில் கலந்தாய்வு நடத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டுள்ளது.

    ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அந்தந்த தேதியில் கலந்தாய்வு நடைபெறும்.

    இந்த வருடம் பொறியியல் கட்-ஆப் குறைகிறது. இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் 200-க்கு 200 பெற்றவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விட்டதால் கட்-ஆப் மார்க் 2 வரை குறைய வாய்ப்பு உள்ளது.

    கட்-ஆப் மதிப்பெண் குறைவதால் கடந்த ஆண்டு சிறந்த கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர்களுக்கு இப்போது கிடைக்க வாய்ப்பு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு இழந்தவர்களுக்கும் கட்-ஆப் குறைவதால் வாய்ப்பு உருவாகும்.

    கடந்த ஆண்டு இடம் கிடைக்காமல் இருந்த மாணவர்களுக்கு இந்த வருடம் கலந்தாய்வில் கல்லூரிகளில் சேர வாய்ப்பு கிடைக்கும்.

    சி.பி.எஸ்.இ. பிளஸ்-2 தேர்வைப் பொருத்தவரை, பொறியியல் பாடப்பிரிவுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றனர். அதனால் அவர்களுக்கு கட்-ஆப் மார்க் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

    ஆனால் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பொதுவாக என்.ஐ.டி., எம்.ஐ.டி. போன்ற கல்லூரிகளில் சேரவே ஆர்வம் காட்டுவார்கள். பொறியியல் கல்லூரிகளில் மிக குறைந்த அளவில்தான் சேருவது வழக்கம்.

    பொதுவாக ஜே.இ.இ. தேர்வு எழுதி தேசிய அளவிலான தொழில் நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கு தான் விரும்புவார்கள். அதனால் பொறியியல் கட்-ஆப் மார்க் உயர்ந்தாலும் அதனால் சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. #CBSE
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவி மேக்னா, தனது வெற்றியில் ரகசியம் எதுவும் இல்லை என்றும் கடினமாக உழைத்ததாகவும் கூறினார். #CBSEResult2018 #CBSE12thTopper
    புதுடெல்லி:

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அகில இந்திய அளவில் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்று அசத்தியுள்ளார். அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவி மேக்னாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இந்நிலையில் தனது சாதனை குறித்து மேக்னா கூறியதாவது:-

    நான் இப்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் முதலிடத்தைப் பிடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. இந்த அளவிற்கு மதிப்பெண் பெற்றதில் எந்த ரகசியமும் இல்லை. கடினமாக உழைக்க வேண்டும். ஆண்டு முழுவதும் படிக்க வேண்டும். நான் ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் படிப்பேன் என எண்ணிப் பார்த்தது கிடையாது.

    எனது ஆசிரியர்களும் பெற்றோரும் உண்மையில் எனக்கு உதவியாக இருந்தனர். படிக்கும் விஷயத்தில் ஒருபோதும் அவர்கள் எனக்கு அழுத்தம் கொடுத்தது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #CBSEResult2018 #CBSE12thTopper

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில், சென்னை மண்டலம் 93.87 சதவீத தேர்ச்சியுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult #CBSEChennaiRecord
    சென்னை:

    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். கூகுள் இணையதளம் மூலமாகவும், மாணவர்கள் தங்களது ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவி மேக்னா ஸ்ரீவஸ்தவா 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

    தேர்ச்சி விகிதத்தைப் பொருத்தவரை தென் மாநில மண்டலங்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. திருவனந்தபுரம் மண்டலம் 97.32 சதவீத தேர்ச்சியுடன் முதலிடத்தில் உள்ளது. 93.87 சதவீத தேர்ச்சியுடன் சென்னை இரண்டாம் இடத்தையும், டெல்லி 89 சதவீத தேர்ச்சியுடன் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.  #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult #CBSEChennaiRecord
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நொய்டா மாணவி மேக்னா 499 மதிப்பெண்களுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி வரை நடைபெற்றது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. கூகுள் இணையதளம் மூலமாகவும், மாணவர்கள் தங்களது ரோல் நம்பர், பள்ளி எண், தேர்வு மைய எண் ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இந்த பொதுத்தேர்வில் ஒட்டுமொத்தமாக 83.01 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 88.31 சதவீதமும், மாணவர்கள் 78.99 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

    அகில இந்திய அளவில் உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த மேக்னா ஸ்ரீவஸ்தவா என்ற மாணவி முதலிடம் பிடித்துள்ளார். இவர் 500-க்கு 499 மதிப்பெண்கள் (99.8 சதவீதம்) பெற்றுள்ளார்.

    காசியாபாத்தைச் சேர்ந்த மாணவி அனவ்ஷ்கா சந்திரா 2-வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 498 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 497 மதிப்பெண்களுடன் 7 பேர் மூன்றாமிடத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.  #CBSEResult2018 #CBSEResult #CBSE12thResult
    சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் அறிந்துகொள்ளலாம். #cbseresults #CBSE12thResults
    புதுடெல்லி:

    மத்திய அரசின் பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 25-ம் தேதி முடிவடைந்தது. 11.86 லட்சம் மாணவ-மாணவிகள் 12-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.  

    பொருளாதாரவியல் பாடத்திற்கான கேள்வித்தாள் வாட்ஸ்-அப்பில் வெளியானதாக சர்ச்சை எழுந்ததையடுத்து, அந்த பாடத்துக்கான மறுதேர்வு ஏப்ரல் 25-ம் தேதி நடத்தப்பட்டது.

    இந்நிலையில், 12-ம் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. சி.பி.எஸ்.இ.-யின் இணைய தளங்களில் (cbse.nic.in, cbseresults.nic.in) தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஹால் டிக்கெட்டில் உள்ள ரோல் நம்பர், பள்ளியின் எண் மற்றும் தேர்வு மைய எண் ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். #cbseresults #CBSE12thResults
    ×