search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்சேதுபதி"

    மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் கதையில் நடிகர் கார்த்தி வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #PonniyinSelvan #Karthi
    மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘செக்கச்சிவந்த வானம்’. வசூல் ரீதியாக மட்டுமின்றி, விமர்சன ரீதியாகவும் இந்தப் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது. இதனைத் தொடர்ந்து தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்திருக்கிறார் மணிரத்னம்.

    கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து படத்தைத் தொடங்க முயற்சித்தார். ஆனால், பட்ஜெட் ஒத்து வராததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. இப்போது விக்ரம், சிம்பு மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை வைத்து எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.



    இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பல்வேறு படங்களில் நடித்து வருவதால் படக்குழுவினர் கேட்கும் தேதிகளை விஜய் சேதுபதியால் கொடுக்க முடியவில்லை. எனவே, அவருக்குப் பதிலாக கார்த்தி நடிக்கிறார். புகழ் பெற்ற கதாபாத்திரமான வந்தியத்தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கிறார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. #PonniyinSelvan #Karthi #Maniratnam #Vanthiyathevan

    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா கூட்டணியில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த 96 படத்திற்கு தெலுங்கில் விருது கிடைத்துள்ளது. #96TheMovie #VijaySethupathi #Trisha
    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த 96 திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பல விருதுகளையும் வென்று வணிக ரீதியான வெற்றியும் பெற்றது. 

    சமந்தா, சர்வானந்த் நடிக்க ‘96’ தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகன் அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் பெறவுள்ளார்.



    1992-ல் தனது முதல் படமான ‘பிரமேபுஸ்தகம்‘ என்னும் படத்தை இயக்கும்போது ஸ்ரீனிவாசன் காலமானார். அதைத் தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் இயக்கி முடித்தார். ஸ்ரீநிவாஸ் நினைவாக நடத்தப்படும் ‘கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ விழா கடந்த 21 வருடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. 2001-ம் ஆண்டுக்கு பிறகு இவ்விருதை வெல்லும் முதல் தமிழ் படம் 96 என்பது குறிப்பிடத்தக்கது. #96TheMovie #VijaySethupathi #Trisha #PremKumar

    மணிரத்னமின் கனவு படமான பொன்னியின் செல்வன் கதையில் இருந்து விஜய் சேதுபதி விலகியதாக வெளியான தகவல் வதந்தி என்றும், அவர் நடிப்பது உறுதி என்றும் படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. #VijaySethupathi
    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக தனது நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ நாவலை படமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

    கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தைத் தொடங்க முயற்சி செய்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    இந்த நிலையில், தேதி பிரச்சனையால் விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலகுவதாகவும், விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் கார்த்தி நடிக்கவிருப்பதாகவும் தகவல் பரவியது.



    இதுபற்றி படக்குழுவுக்கு நெருங்கி வட்டாரத்தில் விசாரித்த போது, இந்த படத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஆவலோடு இருப்பதாகவும், இந்த படத்துக்காக மொத்தமாக தேதிகளை ஒதுக்கிக் கொடுத்திருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

    ஒரு சில மாதங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது. #Maniratnam #PonniyinSelvan #VijaySethupathi

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான `96' படத்தின் 100 நாள் வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய பார்த்திபன், `96' படத்தின் அந்த ஒரு காட்சிக்காக காத்திருந்ததாக கூறினார். #96TheMovie #VijaySethupathi
    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான படம் ‘96’. இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி, திரிஷா, பிரேம் குமார் உட்பட `96’ படத்தின் பிரபலங்கள் பங்கு பெற்றனர். அவர்களுடன் திருமுருகன் காந்தி, சமுத்திரக்கனி, சேரன், பார்த்திபன், லெனின் பாரதி, பி.எஸ்.மித்ரன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். 

    விழாவில் பேசிய பார்த்திபன், 

    ‘காதலிக்கிறதுக்கு காதலியோ, காதலனோ தேவையில்லை. காதல் மட்டுமே போதும். ‘யமுனை ஆற்றிலே’ பாடலோட ஒரிஜினல் பதிப்பைவிட இந்த படத்துல அந்த பாட்டு எப்போ வரும் என்றுதான் காத்துக் கொண்டு இருந்தேன். அந்த காட்சியை பார்த்த பிறகு இயக்குனருடைய காலை தொட்டு கும்பிடணும் என்று நினைத்தேன். படம் முழுக்க நம்மளை ஏமாத்தி காக்க வெச்சு கடைசி வரைக்கும் ஒரு முறையாவது கட்டி பிடிக்கமாட்டாங்களானு ஆர்வமா இருந்தோம். அது இங்கே நடக்க இருக்கு” என்று விஜய் சேதுபதியையும் திரிஷாவையும் மேடைக்கு அழைத்து கட்டிப்பிடிக்கச் சொன்னார்.



    `காதலே காதலே’ பாடலின் பின்னணி இசையாக வர இருவரும் கட்டிப் பிடித்துக்கொண்டனர். “இதுதான் படத்துடைய கிளைமாக்ஸ்” என்றார் விஜய் சேதுபதி. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Parthiban

    பார்த்திபன் பேசிய வீடியோவை பார்க்க:

    விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தின் 100 நாள் கொண்டாட்டத்தின் போது விஜய் சேதுபதி தனது அடுத்த படத்தின் தலைப்பு மற்றும் இயக்குநர் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். #96TheMovie #VijaySethupathi
    மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்து, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித்குமார் வெளியிட்ட ‘96’ படத்தின் 100-வது நாள் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.

    இதில் விஜய் சேதுபதி, திரிஷா, இயக்குநர் பிரேம் குமார், கோவிந்த் வசந்தா உள்ளிட்ட படக்குழுவினர்களுடன் இயக்குநர்கள் சேரன், பார்த்திபன், சமுத்திரகனி, பாலாஜி தரணிதரன், பி.எஸ்.மித்ரன், லெனின் பாரதி மற்றும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.


    துக்ளக் படத்தை இயக்கும் டெல்லி பிரசாத்

    இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, 

    `இந்த படத்தை வெளியிட்ட செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘துக்ளக்’ என்ற படத்தில் அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாள் இயக்கத்தில் நடிக்கிறேன்.' என்றார்.



    இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் பார்த்திபன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, விஜய் சேதுபதியும், திரிஷாவும் ஒருவரையொருவர் ஆரத்தழுவியது வருகைத் தந்திருந்த அனைவரையும் கவர்ந்தது. #96TheMovie #96TheFilm #100thDayCelebrationOf96 #VijaySethupathi #Trisha #Thuglak

    விஜய்  சேதுபதி பேசிய வீடியோவை பார்க்க:

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி - திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படம் 100 நாட்களை கடந்த நிலையில், இதனை படக்குழு பிரம்மாண்ட விழாவாக எடுத்து கொண்டாடுகிறது. #96TheMovie #VijaySethupathy #Trisha
    கடந்த சில ஆண்டுகளாக வெற்றி பெறும் படங்களின் ஆயுளே அதிகபட்சம் 2 அல்லது 3 வாரங்கள் தான் என்ற நிலை உருவாகிவிட்டது. பைரசி, தியேட்டர் எண்ணிக்கை குறைவு, அதிக படங்கள் உருவாகுவது போன்ற காரணங்களால் பெரிய ஹீரோக்களின் படங்களே 50 நாட்களை தொடுவதில்லை.

    விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 96. பள்ளி பருவத்தில் உண்டாகும் முதல் காதலை நெகிழ்ச்சியுடன் கூறி இருந்த 96 படம் டிவியில் ஒளிபரப்பான பின்னரும் கூட ரசிகர்களிடையே வரவேற்பு குறையவில்லை. கடந்த ஜனவரி 10-ந் தேதி 96 படம் 100 நாட்களை தொட்டுவிட்டது.



    அதற்கான விழாவை பிரம்மாண்டமாக நடத்த உள்ளனர். தர்மதுரை, விக்ரம் வேதா வரிசையில், விஜய் சேதுபதிக்கு 3-வது 100 நாட்கள் படமாக 96 அமைந்துவிட்டது. #96TheMovie #VijaySethupathy #Trisha

    நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு சைரா நரசிம்ம ரெட்டி படக்குழுவினர் அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை அளித்துள்ளனர். #VijaySethupathi #SyeraaNarasimhareddy
    சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் புதிய படம் ‘சைரா நரசிம்ம ரெட்டி’. ஏற்கனவே 150 படங்களில் நடித்துள்ள சிரஞ்சீவிக்கு இது 151-வது படம். சுதந்திர போராட்ட வீரர் உய்யாலவாட நரசிம்ம ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.

    இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் விஜய் சேதுபதிக்கு ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படக்குழுவினர் விஜய் சேதுபதியின் தோற்றத்தை வெளியிட்டு பிறந்தநாள் வாழ்த்து கூறியிருக்கிறார்கள். இந்த தோற்றம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.



    சைரா நரசிம்ம ரெட்டி படத்தை ரூ.200 கோடி செலவில் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தயாரித்து வருகிறார். ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் பலர் இப்படத்தில் பணியாற்றி வருகிறார்கள். 
    செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து மணிரத்னம் அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில், அமிதாப், ஐஸ்வர்யாராய், விக்ரம், ஜெயம்ரவி, விஜய்சேதுபதி, சிம்பு உள்ளிட்டோர் நடிக்கவிருக்கிறார்களாம். #Maniratnam
    மணிரத்னம் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் செக்கச்சிவந்த வானம். பிரகாஷ்ராஜ், அரவிந்தசாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல முன்னணி நடிகர், நடிகைகளை படத்தில் நடிக்க வைத்து இருந்தார்.

    படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு படத்தில் நடித்த அனைவருக்கும் பெயர் வாங்கி கொடுத்தது. அடுத்து மணிரத்னம் தன்னுடைய நீண்ட நாள் கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ கதையைக் கையில் எடுத்து இருக்கிறார்.



    கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என மிகப்பெரிய நடிகர்களை வைத்து இந்த படத்தைத் தொடங்க முயற்சி செய்தார். ஆனால் பட்ஜெட் பிரச்சினையால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. தற்போது, விக்ரம், விஜய் சேதுபதி, சிம்பு மற்றும் ஜெயம் ரவியை வைத்து மறுபடியும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை எடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். ஜெயம் ரவி அல்லது விஜய் தேவரகொண்டா என்ற முடிவில் இருக்கிறார்.

    இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராயும் நடிக்கலாம் என்கிறார்கள். இருவரிடமும் கதை சொல்லிவிட்டாராம் மணிரத்னம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். #Maniratnam #PonniyinSelvan #AmitabhBachchan #Vikram #JayamRavi #VijaySethupathi #STR #AishwaryaRai

    சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் பா. ரஞ்சித் இதை கூறியுள்ளார். #pranjith

    சென்னையில், அமெரிக்க தூதரகம் மற்றும் நலண்டவே அறக்கட்டளை சார்பில் மாணவர்கள், இளைஞர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமெரிக்க துணை தூதர் ராபர்ட் புர்கெஸ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பா.ரஞ்சித் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

    “சாதியினை தவிர்ப்பதற்கு ஏற்கனவே பெரிய மருந்து இருக்கிறது. அது தான் பெரியாரும், அம்பேத்கரும். நாம் அந்த ஆர்ஜினில் இருந்துதான் வருகிறோம். குறிப்பாகத் தமிழகத்தில் பெரியார் இயக்கங்களின் வேலைகள் மிக முக்கியமானதாக இருந்தன. ஆனால், இப்போது பெரிய இடைவேளை உருவாகி உள்ளது.

    மக்கள் தங்கள் சாதி உணர்வை நோக்கி நகரும் போது கொஞ்சம் பயமாகத் தான் இருக்கிறது. திரும்பி இதை மாற்ற வேண்டும் என்றால், மக்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதை சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், ஓட்டு அரசியல் இங்கிருக்கும் எல்லா சமூகத்தையும் தனித்தனியாக பிரித்திருக்கிறது. குறிப்பாக எல்லா சாதிகளிலும் தனித் தனி பிரிவுகளை உண்டாக்கி இருக்கிறார்கள்.

    வெறுமனே தலித்தில் மட்டுமல்ல, பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என எல்லா சாதிகளிலும் தனி பிரிவுகள் உருவாக்கி, இந்த பிரிவுக்கு நீ இரு... என்று எல்லாவற்றையும் உடைத்துவிட்டார்கள். பெரியாரிய இயக்கங்கள் இங்கு எல்லோரையும் ஒன்றாக்கியது. அப்படி ஒன்றாக்கியதை தற்போது உடைப்பதற்கான நிறைய வேலைகள் இங்கு நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

    நடிகர்களுக்கு மக்கள் மீதுள்ள அக்கறை பற்றிய கேள்விக்கு ‘விஜய்சேதுபதி உள்ளிட்ட நிறைய நடிகர்கள் மக்களுக்காக உதவிசெய்து வருகிறார்கள், சில நடிகர்களுக்கு சமூகம் குறித்து அக்கறை இல்லை என்பது வருத்தமளிக்கிறது” என்றும் கூறி உள்ளார்.

    பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற 96 படத்தின் தெலுங்கு பதிப்பில் அல்லு அர்ஜுன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #96TheMovie #AlluArjun
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்க இருப்பதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அல்லு அர்ஜுனும் 96 படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்திருக்கிறாராம். எனவே 96 படத்தின் ரீமேக் குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 



    இதற்கிடையே 96 படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #96TheMovie #AlluArjun

    96 படத்தை தெலுங்கில் மறுஉருவாக்கம் செய்வதற்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், தான் அதில் நடிக்கவில்லை என்றும், ரீமேக் வேண்டாம் என்றும் சமந்தா கூறியிருக்கிறார். #96TheMovie #Samantha
    சி.பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 96 படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    தெலுங்கில் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் நானி நடிக்கிறார். திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ரசிகர் ஒருவர் சமந்தாவிடம் ட்விட்டர் பக்கத்தில் கேட்டதற்கு, பதில் அளித்த சமந்தா, கண்டிப்பாக மறுஉருவாக்கம் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார். 

    முன்னதாக 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை குறிப்பிட்டு “என்ன ஓர் அற்புதமான நடிப்பு. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    திரிஷா வேடத்தில் நடிக்க வேறு நடிகையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #96TheMovie #Trisha #Samantha

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்துள்ள திரிஷாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் நிலையில், நடிகை சமந்தாவும் திரிஷாவை பாராட்டியிருக்கிறார். #96TheMovie #Trisha #Samantha
    விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான 96 படம் ரசிகர்களின் வரவேற்போடு ஓடிக்கொண்டிருக்கிறது.

    தெலுங்கில் நானி நடிப்பில் ரீமேக்காக இருக்கும் படத்தில் திரிஷா வேடத்தில் நடிக்க சமந்தாவுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. இந்நிலையில் 96 படத்தை பார்த்த சமந்தா, திரிஷாவை பாராட்டி இருக்கிறார். அவர் பகிர்ந்து இருக்கும் ட்விட்டர் பதிவில் திரிஷாவை குறிப்பிட்டு சமந்தா கூறியிருப்பதாவது,

    “96 படம் பார்த்தேன். என்ன ஓர் அற்புதமான நடிப்பு. நீங்கள் இதில் எப்படி நடித்துள்ளீர்கள் என என்னால் எப்படி துவங்கி விவரிப்பது எனத் தெரியவில்லை. ரொம்பவே வித்தியாசமான கதாபாத்திரமான இதில் அற்புதமான தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். #96TheMovie #Trisha #Samantha

    ×