search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெஸ்சி"

    லா லிகா 2018-19 சீசனை மெஸ்சி, கவுட்டினோ ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பார்சிலோனா வெற்றியோடு தொடங்கியுள்ளது. #LaLiga #Messi
    ஐரோப்பா நாடுகளில் நடைபெறும் கிளப்புகளுக்கு இடையிலான கால்பந்து தொடரில் ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பங்கேற்கும் பார்சிலோனா அணியில் நட்சத்திர வீரர் மெஸ்சி இடம்பிடித்து விளையாடி வருகிறார்.

    2017-2018 சீசனினல் பார்சிலோனா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2018-19 சீசன் நேற்று முன்தினம் தொடங்கியது. பார்சிலோனா தனது முதல் ஆட்டத்தில் நேற்று டிபெர்ட்டிவோ அலெவ்ஸ் அணியை எதிர்கொண்டது.



    முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2-வது பாதி நேரத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 64-வது நிமிடத்தில் மெஸ்சி முதல் கோலை பதிவு செய்தார். 83-வது நிமிடத்தில் கவுட்டினோ ஒரு கோல் அடித்தார். இன்ஜூரி நேரத்தில் ஆட்டத்தின் 92-வது நிமிடத்தில் மெஸ்சி மேலும் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.



    மற்ற போட்டிகளில் ரியல் சோசியேடாட், லெவான்டே அணிகள் வெற்றி பெற்றன. செல்டா - எஸ்பான்யல், கிரோனா - வல்லாடோல்டு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.
    பார்சிலோனா மெஸ்சி அறிமுகம் ஆன பிறகு ரியல் மாட்ரிட் அணியை விட அதிக கோப்பைகளை வென்று சாதனைப் படைத்துள்ளது. #Messi
    அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் மெஸ்சி. 31 வயதாகும் இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப் அணிகளில் ஒன்றான பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். சிறுவயதில் இருந்தே பார்சிலோனா கிளப்பில் வளர்ந்த மெஸ்சி 2003 முதல் 2004 வரை சி அணிக்காகவும், 2004 முதல் 2005 வரை பார்சிலோனா பி அணிக்காகவும் விளையாடினார்.

    2004-ல் இருந்து பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார். இதுவரை 418 போட்டிகளில் விளையாடி 383 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா அணிக்கு பரம எதிரி ரியல் மாட்ரிட் கிளப்பாகும். யார் அதிக கோப்பைகள் வெல்வது என்பதில் இரு அணிகளுக்கும் பனிப்போர் நடக்கும்.



    மெஸ்சி பார்சிலோனா அணிக்கு விளையாட வருவதற்கு முன்பு ரியல் மாட்ரிட் 72 பதக்கங்களை வென்றிருந்தது. பார்சிலோனா 62 பதக்கங்களுடன் பின்தங்கியிருந்தது.

    மெஸ்சி பார்சிலோனா அணிக்கு வந்த பிறகு பல கோப்பைகளை வாங்கிக் கொடுத்தது. இதன்காரணமாக தற்போது பார்சிலோனா 95 சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ரியல் மாட்ரிட் 92 பதக்கத்துடன் பின்தங்கியுள்ளது.
    பார்சிலோனா அணிக்கு அதிக கோப்பையை வாங்கிக் கொடுத்தவர் பட்டியலில் 33 கோப்பையுடன் மெஸ்சி முதல் இடத்தை பிடித்துள்ளார். #Messi #Barcelona
    அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்சி. இவர் ஸ்பெயின் நாட்டின் முன்னணி கிளப்பான பார்சிலோனாவிற்காக விளையாடி வருகிறார். நேற்று நடைபெற்ற ஸ்பெயின் நாட்டின் சூப்பர் கோபா இறுதிப் போட்டியில் பார்சிலோனா 2-1 என செவியாவை வீழ்த்தி கோப்பை கைப்பற்றியது.



    மெஸ்சி பார்சிலோனாவிற்காக வாங்கிக் கொடுத்த 33-வது சாம்பியன் டிராபி இதுவாகும். இதன்மூலம் பார்சிலோனா அணிக்கு அதிக சாம்பியன் பட்டம் வாங்கிக் கொடுத்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் கேப்டனாக இருந்த இனியஸ்டா 32 கோப்பைகளை வாங்கிக் கொடுத்துள்ளார். பின்கள வீரர் ஜெர்ராடு பிக்காய் 28, பஸ்குயட்ஸ் 28, சேவி 25 ஆகியோர் அடுத்தடுத்து இடத்தை பிடித்துள்ளனர்.
    மால்கமை பார்சிலோனா அபகரித்து விட்டது. அவருக்குப் பதிலாக மெஸ்சியை அனுப்ப வேண்டும் என்று ரோமா அணி உரிமையாளர் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். #Barcelona
    பிரேசில் நாட்டின் இளம் கால்பந்து வீரர் மால்கம். 21 வயதே ஆன இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கிளப்பான போர்டியாக்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். இவரது சிறப்பான ஆட்டத்தை பார்த்த இத்தாலியின் முன்னணி கிளப்புகளில் ஒன்றான ரோமா மால்கமை வாங்க முயற்சி செய்தது.

    இதற்கு நல்ல பலன் கிடைக்கவே ஒப்பந்தத்தை நெருங்கியது. மால்கமும் மருத்துவ பரிசோதனைக்காக ரோமா செல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் ஸ்பெயினின் தலைசிறந்த அணியான பார்சிலோனா அவரை கொத்திக் கொண்டது. தலைசிறந்த அணி என்பதால் மால்கம் உடனடியாக ஒப்பந்தத்தை பூர்த்தி செய்தார்.



    இதை பொறுத்துக் கொள்ள முடியாத ரோமா அணியின் தலைவர், மால்கமை எங்களிடம் இருந்து பார்சிலோனா அபகரித்துக் கொண்டது. அதற்குப் பதிலாக மெஸ்சி அனுப்ப வேண்டும் என்று கடுமையாக சாடியுள்ளார்.
    நிதி கண்னோட்டத்தில் மெஸ்சி எங்களுக்கு முக்கியமானவர் என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேன்ஸ் தலைவர் கிளாடியோ தபியா தெரிவித்துள்ளார். #Messi
    உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. லீக் சுற்றில் குரோஷியாவிற்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்ததால், நாக்அவுட் சுற்றில் பிரான்ஸை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.

    இதில் 2-4 எனத் தோல்வியடைந்து காலிறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் வெளியேறியது. இதனால் நட்சத்திர வீரர் மெஸ்சி மீது கடும் விமர்சனம் எழுந்தது. இதனால் அவர் ஓய்வு பெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், உலகக்கோப்பை தோல்விக்குப் பின் மெஸ்சி ஏதும் பேசாமல் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் நிதி கண்ணோட்டத்தில் மெஸ்சி எங்களுக்கு முக்கியமானவர் என்று அர்ஜென்டினா கால்பந்து அசோசியேசன்ஸ் தலைவர் கிளாடியோ தபியா தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து கிளாடியோ தபியா கூறுகையில் ‘‘உணர்ச்சி ரீதியாக இந்த தோல்வி அவருக்கு மிகப்பெரிய அடியாகும். ஆனால், அர்ஜென்டினாவிற்கு அவர் தேவை. நிதி கண்ணோட்டத்தில் மெஸ்சி அர்ஜென்டினாவிற்கு முக்கியமானவர்.

    மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என்று நினைக்கிறேன். அவர் அர்ஜென்டினா தேசிய அணியை மிகவும் நேசிக்கிறார். நாங்கள் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளோம்’’ என்றார்.
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஜாம்பவான்களான மெஸ்சி, ரொனால்டோ 1270 நிமிங்கள் கோல் போட முடியாமல் தவித்துள்ளனர். #messi #Ronaldo #WorldCup2018
    கால்பந்து விளையாட்டில் இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக மெஸ்சி, கிறிஸ்டியானோ ரொனால்டோ ஆகியோர் கருதப்படுகிறார்கள். மெஸ்சி லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறது. ரொனால்டோ முதலில் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும், தற்போது ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடி வருகிறார்கள்.

    இருவரும் கால்பந்து விளையாட்டின் உயரிய விருதான பலோன் டி’ஆர் விருதை தலா ஐந்து முறை கைப்பற்றியுள்ளார்கள். கிளப் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இருவரும் சொந்த அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது கிடையாது. குறிப்பாக நாக்அவுட் சுற்றில் படுமோஷம்.

    நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-4 எனவும், போர்ச்சுக்கல் 1-2 எனவும் தோல்வியடைந்தது. ரொனால்டோ லீக் ஆட்டத்தில் நான்கு கோல்களும், மெஸ்சி ஒரு கோலும் அடித்தனர். நேற்றைய ஆட்டத்தில் கோல் அடிக்கவில்லை.



    இதன்மூலம் உலகக்கோப்பை கால்பந்து நாக்அவுட் போட்டியில் இருவரும் 1270 நிமிடங்கள் விளையாடி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இதில் மெஸ்சி முன்னணியில் உள்ளார். அவர் 756 நிமிடங்கள் விளையாடியுள்ளார். ரொனால்டோ 514 நிமிடங்கள் விளையாடியுள்ளார். ஜாம்பவான்கள் இந்த மோசமான சாதனைக்குள் சிக்கியுள்ளனர்.

    அடுத்த உலகக்கோப்பையில் இவர்கள் விளையாடுவார்களா? என்பது தெரியவில்லை. இதனால் மோசமான சாதனை அப்படி வைத்திவிட்டு செல்வார்கள் என்றுதான் தோன்றுகிறது.
    நைஜீரியாவிற்கு எதிராக எந்தவொரு நிலையிலும் தோல்வி குறித்து யோசிக்கவில்லை என்று அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி தெரிவித்துள்ளார். #WorldCup2018
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. தலைசிறந்த அணிகளில் ஒன்றான அர்ஜென்டினா இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கணிக்கப்பட்டது. ஆனால் கத்துக்குட்டி அணியான ஐஸ்லாந்திற்கு எதிராக டிரா ஆனதால், அந்த அணிக்கு பெரும் தலைவலி ஏற்பட்டது. அத்துடன் குரோசியாவிற்கு எதிராக தோல்வியை சந்தித்தது.

    இதனால் நேற்றைய நைஜீரியா போட்டியில் வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற நிலையில் களம் இறங்கியது. இரண்டு போட்டியில் கோல் அடிக்காமல் ஏமாற்றம் அளித்த மெஸ்சி, நேற்றைய போட்டியில் தனது முதல் கோலை அபாரமாக அடித்தார். ரோஜோ மேலும் ஒரு கோல் அடிக்க அர்ஜென்டினா 2-1 என வெற்றி பெற்றது.



    முதல் இரண்டு போட்டியில் கோல் அடிக்காத மெஸ்சி மீது விமர்சனம் எழும்பியது. இந்நிலையில் நைஜீரியா வெற்றிக்குப்பின் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது, நாங்கள் தோல்வி குறித்து யோசிக்கவே இல்லை என்றார். மேலும் மெஸ்சி கூறுகையில் ‘‘ நைஜீரியாவிற்கு எதிராக நாங்கள் கடுமையான பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தோம் என்பது எங்களுக்கு தெரியும். ஆனால், அதிர்ஷ்டவசமாக நாங்கள் எங்களுடைய இலக்கை எட்டினோம்.

    நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று நாங்கள் நினைக்கவில்லை. எங்கள் மீது அதிகப்படியான நம்பிக்கை இருந்தது. அதை நோக்கிச் சென்றோம். அதிர்ஷ்டவசமாக அது உண்மையான மாறியது.



    கடவுள் எங்களுடன் இருக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும். அவர் எங்களை விட்டு சென்றிடவிலலை. மைதானத்தில் கூடியிருந்த மற்றும் அர்ஜென்டினாவில் உள்ள அனைத்து ரசிகர்களுக்கும் அவர்களுடைய தியாகத்திற்காக நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் எப்போதும் எங்களுடன்தான் இருப்பார்கள். அர்ஜென்டினா அணியின் ஜெர்சி எப்போதுமே உயர்வுதான்’’ என்றார்.
    உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் நைஜீரியாவுக்கு எதிராக மெஸ்சி அடித்த கோல் இந்த உலக கோப்பையில் 100-வது கோல் ஆக பதிவாகி உள்ளது. #WorldCup #NGAARG #LionelMessi
    அர்ஜென்டினா கேப்டனும், உலகின் தலை சிறந்த வீரர்களில் ஒருவருமான லியோனஸ் மெஸ்சி நைஜீரியாவுக்கு எதிராக தனது திறமையை வெளிப்படுத்தினார்.

    அவர் 14-வது நிமிடத்தில் மிகவும் அபாரமாக செயல்பட்டு கோல் அடித்தார். இந்த உலக கோப்பையில் இது 100-வது கோலாகும். 40 ஆட்டங்கள் முடிவில் 105 கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன. சராசரி 2.63 ஆகும்.

    இங்கிலாந்து வீரர் ஹாரி கேன் 5 கோல்கள் அடித்து முன்னணியில் உள்ளார். அடுத்த இரண்டு இடத்தை பெல்ஜியம் வீரர் ரொமெலு லுகாகு 4, போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 கோல்களுடன் உள்ளனர். #WorldCup #NGAARG #LionelMessi
    உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடக்கும் முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. #FIFA2018 #Argentina #Messi #Nigeria

    ‘சி’ பிரிவில் முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் அணி 2 வெற்றிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விட்டது. இந்த பிரிவில் அடுத்த சுற்றை எட்டும் இன்னொரு அணி எது என்பது இன்று இரவு தெரிந்து விடும். 4 புள்ளிகளுடன் உள்ள டென்மார்க் அணி பிரான்சுடன் டிரா செய்தாலே நாக்-அவுட் சுற்றை அடைந்து விடலாம். அதே சமயம் ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அதிக கோல்கள் வித்தியாசத்தில் பெருவை வீழ்த்த வேண்டும், பிரான்ஸ் அணி, டென்மார்க்கை சாய்க்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் ஆஸ்திரேலியா, டென்மார்க் தலா 4 புள்ளிகளுடன் சமநிலை வகிக்கும். அப்போது கோல் விகிதாச்சாரம் அடிப்படையில் ஒரு அணிக்கு அதிர்ஷ்டம் கிட்டும்.

    ‘டி’ பிரிவில் முக்கியமான ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா அணி, ஆப்பிரிக்க அணியான நைஜீரியாவை எதிர்கொள்கிறது. ஐஸ்லாந்துடன் டிரா கண்டு, குரோஷியாவுடன் படுதோல்வி அடைந்த அர்ஜென்டினா (1 புள்ளி) இன்றைய தனது கடைசி லீக்கில் கட்டாயம் வென்றாக வேண்டிய உச்சக்கட்ட நெருக்கடியில் உள்ளது. அப்போது தான் அடுத்த சுற்று வாய்ப்பு பற்றி நினைத்து பார்க்க முடியும். முதல் இரு ஆட்டங்களிலும் சொதப்பிய அர்ஜென்டினாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயோனல் மெஸ்சி இந்த ஆட்டத்திலாவது ஜொலிப்பாரா? என்ற ஏக்கத்துடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். தங்கள் அணியை அவர் வெற்றிகரமாக கரைசேர்க்க தவறினால் இத்துடன் அவரது சர்வதேச கால்பந்து வாழ்க்கை முடிந்து போகும் ஆபத்து கூட இருக்கிறது. அதே சமயம் அர்ஜென்டினாவுக்கு ‘ஆப்பு’ வைத்து அடுத்த சுற்றுக்குள் நுழைவதில் நைஜீரியா இளம் படையினரும் கங்கணம் கட்டி நிற்பதால் இந்த ஆட்டத்தில் அனல்பறக்கும் என்று நம்பலாம்.

    ஏற்கனவே 2-வது சுற்றை உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணி, கடைசி லீக்கில் ஐஸ்லாந்துடன் மோதுகிறது. இதில் குரோஷியா எளிதில் வெற்றி காணும் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. ஒரு வேளை ஐஸ்லாந்து அதிர்ச்சி அளித்தால், அர்ஜென்டினாவுக்கு சிக்கல் உருவாகும். #FIFA2018 #Argentina #Messi #Nigeria
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மெஸ்சியின் அணி தோற்ற விரக்தியில் வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலை செய்துகொண்ட கேரள வாலிபரின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide

    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தின் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த தினு அலெக்ஸ் என்ற வாலிபர் அர்ஜெண்டினா அணியின் ஆதரவாளராக இருந்தார். குறிப்பாக அந்த அணியின் கேப்டன் மெஸ்சியின் தீவிர ரசிகராக இருந்தார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் அர்ஜெண்டினா அணி தோல்வியடைந்தது. 

    இதனால் மனமுடைந்த அலெக்ஸ் தற்கொலை கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அந்த தற்கொலை கடிதத்தில் மெஸ்சி தோற்தை என்னால் தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன் எனக் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. 


    தற்கொலை செய்துகொண்ட தினு அலெக்ஸ்

    இது குறித்து பேசிய அலெக்சின் தந்தை, அலெக்ஸ் மெஸ்சியின் தீவிர ரசிகன். அவன் அணி தோல்வியடைந்ததை அடுத்து மிகவும் மனமுடைந்து காணப்பட்டான் என கூறினார். இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுனர். அதற்காக மோப்ப நாய் பயன்படுத்தப்பட்டது. அந்த நாய் அலெக்ஸ் வீட்டின் அருகே உள்ள ஆறுவரை சென்று நின்றுவிட்டது. இதனால் அவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்பட்டது.

    இந்நிலையில், அவரது வீட்டின் அருகே உள்ள ஆற்றில் இருந்து அலெக்சின் உடல் இன்று கண்டெடுக்கப்பட்டது. அவர் குதித்ததாக கூறப்படும் இடத்தில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அவரது உடலை மீட்புப்படையினர் கண்டெடுத்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

    கால்பந்து போட்டியில் மெஸ்சி அணி தோற்ற விரக்தியில் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்திகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #FIFA2018 #LionelMessi #Argentina #KeralaFanSuicide
    அர்ஜென்டினா கேப்டன் மெஸ்சி GOAT அல்ல, Sheep என்று டுவிட்டர்வாசிகள் கிண்டல் செய்து வருகின்றனர். #WorldCup2018 #Messi
    உலகக்கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் அர்ஜென்டினா கோப்பையை வாங்கும் அணகளில் ஒன்றாக இருக்கும் என கணிக்கப்பட்டது. இதற்குக் காரணம் அந்த அணியில் மெஸ்சி இடம்பிடித்திருப்பது. இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படும் மெஸ்சி, பார்சிலோனா அணிக்காக அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    அர்ஜென்டினா என்றாலே கால்பந்து ரசிகர்களுக்கு ஞாபகம் வருவது டியகோ மரடோனா, மெஸ்சி ஆகியோர்தான். இந்த இருவர்களுக்கும் இடையில் யார் சிறந்தவர்கள் என்பதுதான் தற்போதைய விவாதம் உள்ளது. இதில் மெஸ்சி சற்றே பின்தங்கியிருக்கிறார். ஏனென்றால் முக்கியமான சர்வதேச தொடரில் அவர் ஜொலித்தது கிடையாது. கடந்த வருடம் பிரேசிலில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் ஜெர்மனியிடம் வீழ்ந்து கோப்பையை கைப்பற்றும் வாய்ப்பை இழந்தார். அதனோடு கோபா அமெரிக்கா கோப்பையை இரண்டு முறை சிலியிடம் இழந்தார்.



    இதனால் அர்ஜென்டினாவிற்கு சர்வதேச கோப்பையை வாங்கி தந்தது கிடையாது என்ற விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இந்த உலகக்கோப்பையில் மெஸ்சி களம் இறங்கினார். இந்த தொடரில் அர்ஜென்டினாவின் ஆட்டத்தை பொறுத்து ஓய்வு முடிவு இருக்கும் என்று அறிவித்தார்.

    ஆனால், ரசிகர்கள் எதிர்பார்த்தற்கு நேர் எதிராக அர்ஜென்டினாவின் விளையாட்டு அமைந்து வருகிறது. ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள அர்ஜென்டினா முதல் போட்டியில் சுவிட்சர்லாந்திற்கு எதிராக 1-1 என டிரா செய்தது. நேற்று நடைபெற்ற குரோசியாவிற்கு எதிராக 0-3 என படுதோல்வியடைந்தது. இந்த இரண்டு போட்டியிலும் மெஸ்சியால் ஒரு கோல் கூட அடிக்கமுடியவில்லை.



    அதேவேளையில் இவருக்கு போட்டியாக திகழும் போர்ச்சுக்கலின் கிறிஸ்டினோ ரொனால்டோ இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்து அசத்தியுள்ளார். இந்த தலைமுறையின் GOAT (Greatest Of All Time- எல்லா நேரத்திலும் சிறந்தவர்) யார் என்பதில் இருவருக்கும் இடையில் கடும் போட்டிய நிலவி வருகிறது. இந்நிலையில் மெஸ்சியின் சொதப்பல் ஆட்டத்தால் வெறுப்படைந்த ரசிகர்கள், அவர் GOAT அல்ல, Sheep  என்று டுவிட்டரில் கிண்டல் செய்து வருகின்றனர்.


    உலகக்கோப்பை கால்பந்து தொடரின் முதல் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெறாத அர்ஜென்டினா அணி தொடரில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளதால் மெஸ்சியின் உலகக்கோப்பை கனவு கேள்விகுறியாக உள்ளது. #FIFA2018 #Messi
    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்சியால் அர்ஜென்டினா அணிக்கு பெருமை சேர்க்க முடியவில்லை. ஐஸ்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் கோல் அடிக்காத அவர் நேற்றைய குரோஷியாவுக்கு எதிராகவும் கோல் அடிக்கவில்லை. 2 ஆட்டத்தில் விளையாடி வெற்றி பெறாத அர்ஜென்டினா போட்டியில் இருந்து வெளியேற்றப்படும் விளிம்பில் உள்ளது.

    30 வயதான மெஸ்சியின் உலககோப்பை கனவு கேள்விகுறியாகவும் இருக்கிறது. கடந்த உலககோப்பையில் அர்ஜென்டினாவை இறுதிப்போட்டி வரை கொண்டு வந்து அவர் மயிரிழையில் சாம்பியன் பட்டத்தை இழந்தார். இந்த முறை தொடக்கமே சரிவாக இருக்கிறது. மெஸ்சி சிறப்பாக ஆடினாலும் சக வீரர்களின் ஒத்துழைப்பு இல்லை. ஒருங்கிணைந்து விளையாட முடியாமல் அவர் தவிக்கிறார்.

    நேற்றைய ஆட்டத்தில் சக வீரர்கள் மெஸ்சியிடம் சரியான முறையில் பந்தை கொடுக்கவில்லை. மேலும் மெஸ்சி பந்தை கொண்டு செல்லும் போது அவருடன் நெருங்கி வரவில்லை. பார்சிலோனா கிளப்பில் மெஸ்சியால் சாதிக்க முடிந்ததுக்கு சக வீரர்களின் ஒத்துழைப்பு இருந்தது. ஆனால் அர்ஜென்டினா வீரர்கள் மெஸ்சியின் திறமைக்கு ஏற்ற வகையில் ஒத்துழைக்க முடியவில்லை.

    மெஸ்சியின் திறமையை பயிற்சியாளர் பாராட்டி இருக்கிறார். தோல்விக்காக அவரை குறை கூற முடியாது என்று விளக்கம் அளித்துள்ளார். #FIFA2018 #Messi #worldcup2018
    ×