search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆர்சிபி"

    போட்டிகள் அனைத்தும் நெருக்கடியான சூழ்நிலையை நோக்கிச் செல்லும் என்பதால், உலகக்கோப்பைக்கு தயார்படுத்தும் மிகவும் சிறப்பான தொடர் ஐபிஎல் என கேரி கிர்ஸ்டன் தெரிவித்துள்ளார். #IPL2019
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற மே மாதம் 30-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கு முன் மிகவும் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி தொடங்குகிறது. மே மாதம் 2-வது வாரத்தில்தான் ஐபிஎல் தொடர் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஐபிஎல் தொடருக்கும் உலகக்கோப்பை தொடருக்கும் இடையில் சுமார் 10 நாட்கள் மட்டுமே இடைவெளி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து அணிகளும் வீரர்களின் வேலைப்பளு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    இந்திய வீரர்கள் 14 போட்டிகளில் விளையாட வேண்டும். அவர்கள் அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார்களா? என்பது சந்தேகமே.

    இந்நிலையில் பரபரப்பு, நெருக்கடி சூழ்நிலையிலேயே செல்லும் ஐபிஎல் தொடர், உலகக்கோப்பைக்கு மிகச் சிறந்த தயார்படுத்துதல் என ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிரிஸ்டன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கேரி கிர்ஸ்டன் கூறுகையில் ‘‘விராட் கோலி ஐபிஎல் தொடரில் விளையாடமாட்டார். நேராக ஐபிஎல் தொடருக்கு புத்துணர்வுடன் செல்வார் என யாராவது கூறினால், அது சரியென்று நான் கூறமாட்டேன். அதிக போட்டிகளில் விளையாடினால், சிறப்பான ஆட்டத்தை பெறலாம். விராட் கோலி பயிற்சி ஆட்டத்தில் பட்டுமே விளையாடினால், அது மாறுபட்டது.

    சர்வதேச கிரிக்கெட் போன்று ஐபிஎல் நெருக்கடியான சூழ்நிலையை கொண்ட தொடர். அதனால்தான் ஒவ்வொருவரும் ஐபிஎல் தொடரில் விளையாட விரும்புகிறார்கள். ஆகவே, ஐபிஎல் தொடரில் பரபரப்பான, நெருக்கடியான சூழ்நிலையில் விளையாடிய பிறகு, உலகக்கோப்பை தொடருக்குச் செல்லலாம்’’ என்றார்.
    15 வயதே ஆன ஆல்ரவுண்டர் சிறுவனை 1.5 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது. #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் எதிர்பார்த்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்கள். சில வீரர்கள் எதிர்பார்த்த விலைக்கு ஏலம் போகவில்லை. அனுபவ வீரரகள் எந்த அணியும் சீண்டவில்லை.

    இதற்கிடையில் சில சுவாரஸ்யமான போட்டியும் நடந்தது. பஞ்சாப்-ஐ சேர்ந்த 17 வயதே ஆன பிரப்சிங் சிங்கை ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆர்வம் காட்டியது. பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்வந்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் குதித்தது. இதனால் அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கோடிகளை தாண்டியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    அதேபோல் 15 வயதே ஆன ஆல்ரவுண்ர் சிறுவனான பிரயாஸ் ராய் பர்மானை எடுக்க போட்டி நிலவியது. இறுதியில் 1.5 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞசர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்தது.
    ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் தலைமை பயிற்சியாளராக பணிபுரிய உள்ளேன் என்று ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஆஷிஷ் நெஹ்ரா. இவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகள் உள்பட அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

    அதன்பின் ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் பந்து வீச்சு ஆலோசகராக செயல்பட்டார். 2018 சீசனில் ஆர்சிபி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் தலைமை பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி உள்பட அனைவரும் அதிரடியாக நீக்கப்பட்டனர்.



    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் தொடக்க பேட்ஸ்மேன் ஆன கேரி கிர்ஸ்டனை தலைமை பயிற்சியாளராக நியமித்தது. இந்நிலையில் ஆர்சிபி அணியில் தான் பந்து வீச்சு பயிற்சியாளராகவும், கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து தலைமை பயிற்சியாளராகவும் செயல்பட போவதாக ஆஷிஷ் நெஹ்ரா  தெரிவித்துள்ளார்.

    ஆஷிஷ் நெஹ்ரா ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், புனே வாரியர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஐதராபாத் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
    ×