search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆதித்யநாத்"

    பிரியங்காவின் வருகை பா.ஜனதாவை பாதிக் காது என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி ஆதித்யநாத் கூறினார். #YogiAdityanath #BJP #Priyanka
    லக்னோ:

    காங்கிரஸ் கட்சி பிரியங்காவை இந்த முறை பொதுச்செயலாளராகவும், கிழக்கு உத்தரபிரதேச பொறுப்பாளராகவும் நியமித்துள்ளது. அவரது சேவையை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது என்பது தொடர்பான இது ஒரு உட்கட்சி பிரச்சினை. காங்கிரஸ் கட்சிக்காக அவர் இதற்கு முன்னரும் பிரசாரம் செய்திருக்கிறார், இந்த முறையும் பிரசாரம் செய்கிறார். அவரது வருகை தேர்தலில் பா.ஜனதாவை எந்தவகையிலும் பாதிக்காது.

    சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஏற்கனவே ஒரு பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. குறிப்பிட்ட தொகுதிகளுக்காக இரண்டு கட்சிகளும் போட்டிபோடுகிறது. இந்த கூட்டணி முயற்சி தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு ‘பொய் அலாரம்’ தவிர வேறு ஒன்றுமில்லை.

    நாடு யாருடைய கைகளில் இருந்தால் பாதுகாப்பாகவும், வளமாகவும் இருக்குமோ அவருக்கே, அந்த கட்சிக்கே மக்கள் ஓட்டு போடுவார்கள். பாகிஸ்தான் பாலகோட் தாக்குதலுக்கு பின்னர் பிரதமர் மோடியின் வலிமையான தலைமையின் கீழ் இந்தியா உலகில் சக்திமிக்க நாடாக உருவாகியுள்ளது.

    ராமர் பற்றி ஒவ்வொரு குழந்தைக்கும் தெரியும். அவரை தங்கள் முன்மாதிரியாகவும் கருதுகிறார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியும், பாதுகாப்பும் தேவை. முன்பு எதிர்க்கட்சிகளால் சாத்தியம் இல்லாதது, இப்போது மோடியின் தலைமையில் பா.ஜனதாவால் சாத்தியமாகி உள்ளது. இந்த மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகளில் 74 இடங்களில் பா.ஜனதா வெற்றிபெறும்.
    மோடி தலைமையிலான மத்திய அரசின் நான்காண்டு சாதனையை விளக்கி, பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் நோக்கில் உத்தரப்பிரதேச முதல்மந்திரி யோகி ஆதித்யநாத் இன்று நடிகர் சஞ்சை தத்தை சந்தித்தார். #BJP #samparkforsamarthan
    லக்னோ:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு கடந்த மாதம் 26-ம் தேதியோடு 4 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்தது. இதையடுத்து, அடுத்த பாராளுமன்ற தேர்தல் வெற்றியை குறிவைத்து “ஆதரவுக்கான தொடர்பு” எனும் பிரச்சாரத்தை பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது.

    இந்த பிரச்சாரத்தின் முக்கிய நோக்கமாக, கட்சியின் 4 ஆயிரம் நிர்வாகிகள், சுமார் ஒரு லட்சம் பேரை தொடர்புகொண்டு சந்தித்து மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை விளக்கி கூறவேண்டும் என பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா திட்டமிட்டுள்ளார்.

    அவ்வகையில், மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி டெல்லி பிஷப் வாரிஸ் கே.மஸிஹ்-ஐ அவரது இல்லத்தில் சந்தித்தார். இதையடுத்து இன்று பிரபல இந்தி நடிகரும் தயாரிப்பாளருமான சஞ்சை தத்தை உத்தரப்பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் நேரில் சந்தித்தார். அவரிடம் பா.ஜ.க அரசின் சாதனைகளை விளக்கி கூறி அவரின் ஆதரவை கோரியுள்ளார்.

    முதல்வரின் வீட்டில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது மோடியின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் புத்தகத்தை சஞ்சய் தத்துக்கு வழங்கினார். #BJP #samparkforsamarthan
    ×