search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உம்மன்சாண்டி"

    கேரளாவில் மொத்த முள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதற்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. #parliamentelection #congress #oommenchandy

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் மொத்த முள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 2 தொகுதியும், பிரேமச்சந்திரன் கட்சிக்கு 1 தொகுதியும், மானி காங்கிரஸ் கட்சிக்கு 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்த கட்சிகளுக்கு தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. தொகுதி பங்கீடு முடிவடைந்ததை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் யார்? என்பதை கண்டறியும் கூட்டம் நடந்து வந்தது.

    கேரளாவில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பிடிக்க இப்போது பதவியில் இருக்கும் எம்.பி.க் களும், எம்.எல்.ஏ.க்களில் சிலரும் முயற்சி மேற்கொண்டனர்.

    வேட்பாளர் தேர்வு செய்யும் பணியில் மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி ஆகியோர் நேற்று விடிய விடிய ஆலோசனை நடத்தினர்.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியும், மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப் பள்ளி ராமச்சந்திரனும் இடம் பெறுவார்கள் என்று கூறப்பட்டது.


    இதுபற்றி உம்மன்சாண்டியிடம் கேட்டபோது, பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. நான் போட்டியிட வேண்டுமா? வேண்டாமா? என்பதை கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி முடிவு செய்வார், என்று கூறினார்.

    இதற்கிடையே கேரள காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து மாநில நிர்வாகிகள் எடுத்த முடிவுகள் மேலிட நிர்வாகிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாநில நிர்வாகிகள் இன்று பட்டியலுடன் டெல்லி செல்கிறார்கள். அங்கு ராகுல்காந்தியுடன் இறுதி ஆலோசனை நடக்கிறது. இன்று மாலை அல்லது இரவுக்குள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என தெரிகிறது.  #parliamentelection #congress #oommenchandy 

    சரிதாநாயர் பாலியல் புகாரை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என்று உம்மன்சாண்டி கூறியுள்ளார். #OommenChandy #SarithaNair

    திருவனந்தபுரம்:

    கேரளாவை சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயர் சோலார் பேனல் அமைத்து தருவதாக பலரிடமும் பணம் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டார்.

    உம்மன்சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்த போது இந்த மோசடி நடைபெற்றது. இது தொடர்பாக சரிதாநாயார் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரிடம் கூறும்போது, உம்மன்சாண்டி மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மோசடியில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினார்.

    இது தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை கமி‌ஷன் முன்பு ஆஜரான சரிதாநாயர், காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் உம்மன்சாண்டி ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறினார்.

    கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு ஆட்சி அமைந்த பின்னர் இந்த வழக்கு மீண்டும் வேகம் எடுத்தது.

     


    இப்போது இந்த வழக்கு தொடர்பாக சரிதாநாயர் மீண்டும் கேரள குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார்.

    அதில் முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி, காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். அதன்பேரில் இவர்கள் இருவர் மீதும் கேரள குற்றப்பிரிவு போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக உம்மன்சாண்டி கூறும்போது, சரிதா நாயர் புகாரை சட்டப்படி சந்திப்பேன். கேரளாவில் அய்யப்பன் கோவில் விவகாரத்தில் கம்யூனிஸ்டு அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். மக்களை திசை திருப்ப இந்த விவகாரத்தை அரசு கையில் எடுத்துள்ளது. இதற்கு நாங்கள் கோர்ட்டு மூலம் உரிய பதில் அளிப்போம், என்றார்.

    இதுபோல கேரள எதிர் கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலாவும், இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி சட்டரீதியாக எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார். #OommenChandy #SarithaNair

    சரிதாநாயர் பாலியல் புகாரின் பேரில் உம்மன்சாண்டி மற்றும் கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #OommenChandy #SarithaNair

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றபோது முதல்- மந்திரியாக உம்மன்சாண்டி இருந்தார்.

    அப்போது சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை 2013-ம் ஆண்டு மாநில அரசு நிறைவேற்றியது.

    இது தொடர்பான ஒப்பந்தம் பந்தளம் செங்கனூரைச் சேர்ந்த பெண் தொழில் அதிபர் சரிதாநாயரின் கம்பெனிக்கு வழங்கப்பட்டது. சரிதாநாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் தகடுகளை பெரிய நிறுவனங்கள், தனியார் கம்பெனிகளுக்கு பொருத்தி கொடுத்தனர்.

    அப்போது அவர்கள் பலரிடம் பணம் வசூல் செய்து விட்டு சோலார் பேனல் தகடுகளை பொருத்தி கொடுக்கவில்லை என்று புகார் எழுந்தது. கேரளா, கோவையைச் சேர்ந்தவர்கள் மற்றும் வெளிநாடு வாழ் கேரள தொழில் அதிபர்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    இது தொடர்பான புகாரின் பேரில், சரிதாநாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோரை கேரள போலீசார் கைது செய்தனர். பிறகு சரிதாநாயர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.

    ஜாமீனில் வெளி வந்த பிறகு சரிதாநாயர் பரபரப்பு குற்றச்சாட்டுகளை சுமத்த தொடங்கினார். சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் பொருத்தும் பணியை தனது கம்பெனிக்கு வழங்குவதற்கு பலருக்கும் பணம் லஞ்சமாக கொடுத்ததாகவும், பணத்திற்கு பதில் சிலர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறினார்.

    சோலார் பேனல் பொருத்தும் பணி தொடர்பாக தான் பலமுறை உம்மன்சாண்டியை சந்தித்து பேசி உள்ளதாகவும், அப்போது உம்மன்சாண்டியும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார்.

    அதேபோல முன்னாள் மத்திய மந்திரி கே.சி. வேணு கோபால் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் மீதும் சரிதாநாயர் பாலியல் புகார் கூறினார்.

    தன் மீதான பாலியல் குற்றச்சாட்டை உம்மன்சாண்டி மறுத்தார். முதல்- அமைச்சர் என்ற முறையில் பலரும் தன்னை சந்தித்து பேசுவது வழக்கம். அது போல தொழில் அதிபர் என்ற முறையில் சரிதாநாயரை சந்தித்ததாகவும், தவறாக எதுவும் நடக்க வில்லை என்றும் கூறினார். இதேபோல கே.சி.வேணுகோபாலும் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.

    ஆனால் எதிர்க்கட்சிகள் முதல்-மந்திரி பதவியில் இருந்து உம்மன்சாண்டி ராஜினாமா செய்யவேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இது தொடர்பாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டது. இந்த கமி‌ஷன் முன்பு உம்மன் சாண்டி ஆஜராகி விளக்கம் அளித்தார். சரிதாநாயரும் விசாரணை கமி‌ஷனில் இதே குற்றச்சாட்டை வலியுறுத்தினார்.

     


     

    சரிதாநாயர் புகார் தொடர்பாக திருவனந்தபுரம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஆஜரான சரிதாநாயர் தனது குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பரபரப்பு வாக்குமூலத்தையும் கோர்ட்டில் அளித்தார்.

    இந்த நிலையில் கேரள சட்டசபைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தலில் உம்மன்சாண்டி மீதான சோலார் பேனல் மோசடி, சரிதாநாயரின் பாலியல் புகார் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி கம்யூனிஸ்டு கட்சியினர் பிரசாரம் செய்தனர்.

    அந்த தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு கேரளாவில் அமைந்தது. பினராய் விஜயன் பதவியேற்றதும், உம்மன்சாண்டி மீதான சரிதாநாயர் புகார் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார். ஆனாலும் உம்மன்சாண்டி மீது உடனடியாக நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

    சமீபத்தில் கேரள குற்றப்பிரிவு போலீசிலும் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது சரிதாநாயர் புகார் கொடுத்திருந்தார். அந்த புகாரில் உம்மன் சாண்டி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

    அந்த புகாரின் பேரில் உம்மன்சாண்டி, கே.சி. வேணுகோபால் ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் உம்மன் சாண்டி கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

    வழக்குப்பதிவு செய்யப்பட்ட கே.சி. வேணு கோபால் தற்போது ஆலப்புழா தொகுதி எம்.பி.யாகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளராகவும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராகவும் உள்ளார்.

    முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி மீது கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    உம்மன் சாண்டி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் கூறும்போது, தற்போது கேரளாவில் சபரிமலை கோவில் பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளதால் அதை திசை திருப்ப மாநில அரசு இந்த நடவடிக்கையில் இறங்கி உள்ளதாக குற்றம் சாட்டினார்கள்.

    சரிதாநாயர் சில மலையாள சினிமாக்களிலும் நடித்துள்ளார். குமரி மாவட்டம் தக்கலை உள்பட சில இடங்களில் தொழில் நிறுவனங்களும் நடத்தி வருகிறார். அவரது ஆடை மாற்றும் நிர்வாணப் படம் செல்போன்களில் பரவி பரபரப்பு ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. #OommenChandy #SarithaNair

    சபரிமலையில் பெண்களை அனுமதித்து மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளதாக முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டி குற்றம்சாட்டி உள்ளார். #Sabarimala #OommenChandy
    திருவனந்தபுரம்:

    கேரள முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன்சாண்டி பத்தனம் திட்டாவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    கேரளா மத பிரச்சினைகள் இல்லாத மாநிலமாகும். இங்கு அனைத்து தரப்பு மக்களும் விழாக்களை இணைந்து கொண்டாடி வருகிறார்கள். சபரிமலை கோவிலுக்கும் மத வேறுபாடு இல்லாமல் அனைவரும் சென்று வருகிறார்கள். இது கேரளாவில் மட்டுமே பார்க்க முடியும்.



    கேரளாவில் கம்யூனிஸ்டு அரசு ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மத பிரச்சினைகளை தூண்டிவிட்டு மக்களை பிரித்தாள நினைக்கிறது. சபரிமலை சுவாமி ஐயப்பன் நித்திய பிரம்மச்சாரியாக கருதப்படுவதால் அங்கு காலம், காலமாக பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஏற்கனவே நடைமுறையில் உள்ள 10 வயதிற்குட்பட்ட 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களை அனுமதிக்கும் வழக்கத்தையே இனியும் பின்பற்றலாம்.

    கேரள மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க கம்யூனிஸ்டு அரசு சபரிமலை பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. தேவசம்போர்டு தற்போது கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகம் போல மாறிவிட்டது. சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் நடைமுறையில் ஏற்கனவே உள்ள ஐதீகத்தையே பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #Sabarimala #OommenChandy
    ×