என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கொச்சி"
திருவனந்தபுரம்:
கேரளாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது போதை பொருட்களை விற்பனை செய்ய ஒரு கும்பல் முயற்சிப்பதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
போதை பொருள் விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வெளி மாநிலங்களில் இருந்து கொச்சி உள்பட மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு வருவோரும் ரகசியமாக கண்காணிக்கப்பட்டனர்.
இதுபோல வியாபார நிமித்தம் கேரளா வருவோரையும், அவர்களின் வாகனங்களையும் போலீசார் சோதனை செய்தனர்.
கொச்சி போதை பொருள் தடுப்புப்பிரிவு உதவி கமிஷனர் விஜி ஜோர்ஜ், சப்-இன்ஸ்பெக்டர் விபின் தலைமையிலான போலீசார் கொச்சி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அந்த வழியாக வந்த சொகுசு காரை தடுத்து சோதனை நடத்தினர்.
அந்த காரில் ஹாசிஸ் ஆயில் மற்றும் போதை பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.
போதை பொருள் கடத்தி வந்த காரில் இருந்த இப்ராகிம் ஷெரீப் (வயது 59) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கைதான இப்ராகிம் ஷெரீப், சென்னை அண்ணா சாலை பகுதியைச் சேர்ந்தவர் தெரிய வந்தது.
அங்கு துணி வியாபாரம் செய்து வருகிறார். துணிகளை வெளிமாநிலங்களில் விற்பனைக்கு கொண்டு செல்வதுபோல் போதை பொருட்களை மறைத்து எடுத்துச் சென்று விற்பனை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இப்ராகிம் ஷெரிப்பிடம் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து கடல்மார்க்கமாக கடத்தி வரப்பட்டுள்ளது.
சென்னை, தூத்துக்குடி துறைமுகங்களுக்கு வந்து சேரும் போதை பொருட்களை ஏஜெண்டுகள் மூலம் வாங்கி அதனை பெங்களூர், ஐதராபாத், கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கார்களில் கடத்திச் சென்று இக்கும்பல் விற்பனை செய்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
இந்தியாவுக்கு போதை பொருட்களை அனுப்பி வைக்கும் வெளிநாட்டு கும்பல் யார்? இவர்களுக்கு உதவி செய்யும் உள்ளூர் நபர்கள் யார்? யார்? என்பதை கண்டுபிடிக்க கொச்சி தனிப்படை போலீசார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு கும்பல் பற்றிய விவரம் தெரிய வரும் போது மேலும் பல முக்கிய புள்ளிகள் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று கேரள போலீசார் தெரிவித்தனர். #Drugsseized
கேரள மாநிலம் கொச்சி மாவட்டம் மரடு பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீஜித் நாயர் (வயது 42). இவரது மனைவி பிரியா (38). இவர்களது மகன் ஆதித்தியன் (4½).
இதே பகுதியை சேர்ந்த சனல்குமார் மற்றும் ஸ்மிதா மகள் வித்யலட்சுமி (5). இவர்கள் 2 பேரும் அருகில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் யூ.கே.ஜி. படித்து வந்தனர்.
நேற்று பள்ளி வேனில் ஆதித்தியனும், வித்யலட்சுமியும் அழைத்துச் செல்லப்பட்டனர். பள்ளி முடிந்ததும் மீண்டும் குழந்தைகளை அவரவர் வீட்டில் விட வேனில் ஏற்றப்பட்டனர்.
வேனை அனில்குமார் (45) ஓட்டினார். ஆதித்தியன், வித்யலட்சுமி உள்பட மேலும் 6 குழந்தைகள் மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் இருந்தனர். வேன் சுமார் அரை கி.மீட்டர் தூரம் வந்ததும் வேன் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
வேனில் இருந்த குழந்தைகள் அலறி சத்தம்போட்டனர். அங்குள்ள பகவதியம்மன் கோவில் குளத்தில் வேன் பாய்ந்தது. இந்த குளம் சேறு நிறைந்த குளமாகும். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனை பார்த்தபோது வேன் சேற்றில் மூழ்க தொடங்கியது.
இதில் குழந்தைகள் ஆதித்தியன், வித்யலட்சுமி மற்றும் பள்ளி ஆயா லதா உன்னி ஆகியோர் குளத்தில் மூழ்கி பலியானார்கள். பலியான 3 பேரின் உடல்கள் எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டிரைவர் அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாட்டிற்கு எதிராக சிமி என்ற இயக்கம் கடந்த 2007-ம் ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா, மத்திய பிரேதசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பயிற்சி முகாம்களை நடத்தியது. இதைதொடர்ந்து, கேரளா மாநிலம் கோட்டயம் என்ற பகுதியிலும் சிமி இயக்கம் ரகசிய முகாம் நடத்தியது.
இந்த முகாமில், ஆயுத பயிற்சி, வெடி குண்டு தயாரித்தல், கயிறு ஏறும் பயிற்சி, மோட்டார் சைக்கிள் ரேஸ் பயிற்சி போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது. மேலும், பயங்கரவாத தாக்குதல்களை நடத்த தேவையான அனைத்து பயிற்சிகளும் வழங்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி, குற்றம்சாடப்பட்ட 35 பேர்களில், 18 பேரை குற்றவாளிகளாக அறிவித்தார். 17 பேரை இந்த வழக்கில் இருந்து விடுவித்தார்.
இந்நிலையில், குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டது. 18 குற்றவாளிகளுக்கும் 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். #WagamonSIMIcampcase #KochiSpecialNIAcourt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்