என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 120941
நீங்கள் தேடியது "சசிதரூர்"
கேரளா மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் உறவினர்கள் கொச்சியில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர். #Congress #ShashiTharoor #relativesjoinBJP
திருவனந்தபுரம்:
பாராளுமன்ற தேர்தல் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் வரும் ஏப்ரல் மாதம் துவங்கி பல்வேறு கட்டமாக நடக்கவிருப்பதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பான பணிகளில் தேர்தல் கமிஷனும் ஈடுபட்டு வருகிறது. பல்வேறு கட்சிகளில் உள்ளோர் வெவ்வேறு கட்சிகளுக்கு மாறியும் வருகின்றனர்.
இந்நிலையில், கேரள மாநிலத்தின் காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூருக்கு நெருங்கிய உறவினர்கள் கொச்சியில் இன்று பா.ஜ.க.வில் இணைந்தனர்.
பாலக்காட்டை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூரின் உறவினர்களான சோபனா சசிகுமார் மற்றும் அவரது கணவர் சசிகுமார் ஆகியோர் பாஜக ஆதரவாக இருந்து வந்த நிலையில், அவர்கள் இன்று கொச்சியில் உள்ள அலுவலகத்தில் மாநில பாஜக தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை முன்னர் அக்கட்சியில் இணைந்தனர்.
டெல்லி காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், சோனியா காந்தியின் நெருங்கிய உதவியாளருமான டாம் வடக்கண் நேற்று பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. #Congress #ShashiTharoor #relativesjoinBJP
பாரதிய ஜனதாவில் தனி மனித ஆதிக்கத்தை எதிர்ப்பதாக நடிகர் சத்ருகன்சின்கா பேசினார். #ShatrughanSinha #Modi #BJP
திருவனந்தபுரம்:
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், பிரதமர் மோடியை பற்றி தனியாக புத்தகம் ஒன்று எழுதி இருந்தார்.
‘முரண்பாடான பிரதமர். மோடியும் அவரது இந்தியாவும்’ என்ற தலைப்பில் இந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டு விழா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இதில், பாரதிய ஜனதா எம்.பி.யும், அதிருப்தி தலைவருமான நடிகர் சத்ருகன்சின்கா கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.
நான் சுயநலத்துக்காக செயல்படுபவன் அல்ல. நான் என் சார்பிலோ அல்லது எனது நலனுக்காகவோ யாரிடமும் எதுவும் கேட்பதுமில்லை. விரும்புவதுமில்லை.
என்னை பொறுத்த வரை தனிப்பட்ட நபரை விட கட்சி முக்கியம். கட்சியின் நலனை விட நாட்டின் நலன் முக்கியம்.
பாரதிய ஜனதாவை பொறுத்த வரை இப்போது தனி மனித ஆதிக்கம் நடந்து கொண்டு இருக்கிறது. 2 பேர் கொண்ட படை மட்டும் செயல்படுகிறது. அங்கு ஜனநாயகம் செயல்படவில்லை.
தனி மனிதரின் ஆதிக்கமும், 2 பேர் படையும்தான் நாட்டை நடத்தி கொண்டு இருக்கிறது. இது, என்ன வகையான காட்சி என்று தெரியவில்லை.
தனிப்பட்ட முறையில் நான் மோடியை எதிர்க்கவில்லை. இந்த செயல்பாட்டைத்தான் எதிர்க்கிறேன்.
மோடி ரூ.15 லட்சம் தருவதாக வாக்குறுதி அளித்ததை பற்றி மட்டும் நான் பேசவில்லை. மக்கள் வெற்று வாக்குறுதிகளை விரும்பவில்லை. வேலை வாய்ப்பு, இப்போது இருப்பதை விட சிறப்பான வசதி வாய்ப்புகள் ஆகியவற்றைத்தான் விரும்புகிறார்கள்.
இவ்வாறு சத்ருகன்சின்கா பேசினார்.
விழாவில் பேசிய சசிதரூர், சத்ருகன்சின்கா போன்ற ஹீரோக்கள் காங்கிரசுக்கு வர வேண்டும். அவர்களுக்கு நல்ல இடம் காத்திருக்கிறது என்று கூறினார். #ShatrughanSinha #Modi #BJP

உண்மையில் ராம பிரானை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள் என்று முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் தெரிவித்துள்ளார். #BuildRam #Heart #ShashiTharoor
புதுடெல்லி:
அயோத்தி விவகாரம் மீண்டும் தற்போது சூடுபிடித்து உள்ளது. இது குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மந்திரியும், திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர், எந்த ஒரு நல்ல இந்துவும் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியில் ராமர் கோவில் கட்டுவதை விரும்பமாட்டார் என தெரிவித்தார்.
இது குறித்து பா.ஜனதாவினர் அதிருப்தி வெளியிட்டு இருந்த நிலையில், செய்தி நிறுவனத்துக்கு நேற்று அளித்த பேட்டியின்போது அது குறித்து சசிதரூர் விளக்கம் அளித்தார். அவர் கூறுகையில், ‘உண்மையில், ராம பிரானை உங்கள் இதயத்தில் வைத்திருங்கள் என்றுதான் இந்து உரைகளும், இலக்கியங்களும் கூறுகின்றன. அவரை இதயத்தில் வைத்துவிட்டால், வேறு எங்கும் அவர் இருந்தாலோ, இல்லாவிட்டாலோ பிரச்சினையில்லை. ஏனெனில் அவர் எங்கும் நிறைந்து இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.
வன்முறையின் மூலம் ராமர் கோவில் அமைப்பதை எந்த ஒரு இந்துவும் விரும்பமாட்டார் என மீண்டும் வலியுறுத்தி கூறிய சசிதரூர், நல்ல இந்து என்பவர் சட்டத்தை மதிப்பவராகவே இருப்பார் எனவும், இந்து இலக்கியங்கள் வன்முறையை அனுமதிப்பது இல்லை என்றும் குறிப்பிட்டார்.
பா.ஜனதா தலைவர்களான அத்வானி, வாஜ்பாய் ஆகியோரும், தனது கருத்தை ஏற்கனவே வலியுறுத்தி இருந்ததாகவும் சசிதரூர் கூறினார். #BuildRam #Heart #ShashiTharoor

அயோத்தி ராமர்கோவில் விவகாரத்தில் சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் விளக்கம் அளித்துள்ளார். #RamTemple #ShashiTharoor #Congress
புதுடெல்லி:
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முன்னாள் மத்திய மந்திரி சசிதரூர் பேசினார். அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “ராமர் பிறந்த இடம் அயோத்தி என்று பெரும்பாலானோர் நம்புகிறார்கள். ஆனால் யாரும் ஒருவருடைய வழிபாட்டு தளத்தை இடித்து தள்ளிவிட்டு கோவில் கட்ட விரும்பமாட்டார்கள்” என்று அவர் குறிப்பிட்டார்.
சசிதரூரின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜனதா, இதுபற்றி காங்கிரஸ் விளக்கம் அளிக்கவேண்டும் என்று கோரியது.
இதையடுத்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆர்.பி.என். சிங் டெல்லியில் நிருபர்களிடம் கூறுகையில், “சசிதரூர் கூறியது அவருடைய தனிப்பட்ட கருத்து. கோவில் கட்டும் விவகாரத்தை பொறுத்தவரை சுப்ரீம் கோர்ட்டு எந்த முடிவை எடுத்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். இதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று குறிப்பிட்டார்.
இதுபற்றி சசிதரூர் வெளியிட்ட அறிக்கையில், “எனது வார்த்தைகள் சில ஊடகங்களில் திரித்து கூறப்பட்டு உள்ளது. ராமர்கோவில் பற்றி என்னுடைய தனிப்பட்ட கருத்தை கேட்டதற்கு பதில் சொன்னேன். காங்கிரஸ் சார்பாகவும் இதை நான் பேசவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார். #RamTemple #ShashiTharoor #Congress

சுனந்தா புஷ்கர் மர்மச்சாவில் சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். #SunandaPushkar #ShashiTharoor #DelhiHC
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த 2014-ம் ஆண்டு, ஜனவரி 17-ந் தேதி டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில், சசிதரூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், அவர் சம்மன் பிறப்பித்த டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகவில்லை. மாறாக, டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று விட்டார்.
இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி தீபக் ஆனந்த் என்ற வக்கீல், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.கே. காபா, நேற்று விசாரித்தார். அவர் சசிதரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். #SunandaPushkar #ShashiTharoor #DelhiHC

சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது கணவர் சசிதரூர் வெளிநாடு செல்வதற்கு டெல்லி பாட்டியாலா கோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #ShashiTharoor #SunandaPushkar
புதுடெல்லி:
முன்னாள் மத்திய மந்திரியான சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் மர்மமான முறையில் விடுதி அறையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை கைப்பற்றிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சசிதரூர் மீதும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, குற்றம் சாட்டப்பட்ட சசிதரூர் வெளிநாடு செல்ல அனுமதி கோரி மனுதாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், சசிதரூர் வெளிநாடு செல்ல அனுமதி அளித்தனர். பிணைத்தொகையாக ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். #ShashiTharoor #SunandaPushkar
சசி தரூரின் இந்து பாகிஸ்தான் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவனந்தபுரத்தில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தை பா.ஜ.க.வினர் முற்றுகையிட்டு, ஆதரவாளர்களை விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #ShashiTharoor #BJP
திருவனந்தபுரம்:
திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி.யான சசிதரூர் தனது பேச்சுக்கள் மூலம் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார். மத்தியில் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை அந்த கட்சி இந்து பாகிஸ்தானாக மாற்றிவிடும் என்று சசிதரூர் சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சசிதரூரின் இந்த கருத்துக்கு பாரதிய ஜனதா கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகத்தை பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த அலுவலகம் மீது கறுப்பு நிற மையும் வீசப்பட்டது.
அந்த அலுவலகத்திற்கு சசிதரூர் எம்.பி.யை சந்திப்பதற்காக காத்திருந்த பொது மக்களையும் அவர்கள் விரட்டி அடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி திருவனந்தபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார், பாரதிய ஜனதா கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையில் தங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்ததும் பாரதிய ஜனதா இளைஞர் அணியினர் 5 பேர் திருவனந்தபுரம் போலீஸ் நிலையத்திற்கு சென்றனர். தங்களுக்கு எதிராக போலீசார் வழக்குப்பதிவு செய்தது பற்றி கேட்டு அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதைதொடர்ந்து பாரதிய ஜனதா இளைஞர் அணியை சேர்ந்த 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சசிதரூர் சென்றபோது அவருக்கு பாரதிய ஜனதா தொண்டர்கள் கருப்பு கொடி காட்டினார்கள். அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டியடித்தனர். சசிதரூருக்கு எதிரான தங்களது போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதனால் திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. #ShashiTharoor #BJP

திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
திருவனந்தபுரம்:
மத்தியில் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனம் திருத்தி எழுதப்படும் என்றும், இந்தியா ‘இந்து பாகிஸ்தான்’ஆகிவிடும் என்றும் திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது கருத்துக்கு பாரதீய ஜனதா கண்டனம் தெரிவித்தது.
இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் உள்ள சசிதரூரின் அலுவலகம் நேற்று தாக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சியின் இளைஞர் அணியினர் இந்த தாக்குதலை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.
இதுபற்றி தனது டுவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள சசிதரூர், “பாரதீய ஜனதாவின் இளைஞர் அணியைச் சேர்ந்தவர்கள் திருவனந்தபுரத்தில் உள்ள எனது தொகுதி அலுவலகத்துக்கு வந்து பெயர் பலகை, நுழைவாயில் கதவு, சுவர் உள்ளிட்ட இடங்களில் கருப்பு நிற என்ஜின் எண்ணெயை ஊற்றி தாக்குதல் நடத்தியதோடு, நான் பாகிஸ்தானுக்கு போகவேண்டும் என்று கோஷம் எழுப்பிவிட்டு சென்று இருக்கிறார்கள். இந்த சம்பவம் பாரதீய ஜனதாவின் உண்மையான முகத்தை காட்டுகிறது” என்று அதில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்து தேசம் அமைப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கருத்தைத் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசிதரூர் பிரதிபலித்துள்ளார் என்று சிவசேனா தெரிவித்துள்ளது. #ShivSena #ShashiTharoor #RSS
மும்பை:
பா.ஜனதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் சமீபத்தில் கூறி இருந்தார்.
இது அரசியலமைப்பு சட்டம் மற்றும் இந்துக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. சசிதரூரின் கருத்துக்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
இந்த நிலையில் இந்து தேசம் அமைப்பது தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் கருத்தைத் தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு சசிதரூர் பிரதிபலித்துள்ளார் என்று பா.ஜனதா கூட்டணியில் உள்ள சிவசேனா தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த கட்சி தனது பத்திரிகையான ‘சாம்னாவில்’ கூறி இருப்பதாவது:-
இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துதான். அதையே காங்கிரசில் இருந்து கொண்டு சசிதரூர் வெளிப்படுத்தி இருக்கிறார். பா.ஜனதாவின் மொழியில் தான் அவர் பேசி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.
ராமரே வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர நாராயணன்சிங் பேசியுள்ளார். இது இந்துக்களை புண்படுத்தும் கருத்தாகும். இதற்காக அக்கட்சி தலைவர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டாமா?
இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க 2019 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மோடி அதை இப்போதே செய்யலாம். அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ShivSena #ShashiTharoor #RSS #BJP

அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெறுமானால் இந்தியா இந்து பாகிஸ்தான் நாடாக மாறி விடும் என்று சசிதரூர் கூறி இருக்கிறார். இதை சுருக்கமாக பார்த்தோம் எனில் மோடி மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா இந்து தேசம் என்று அறிவிக்கப்படும் என பொருள் கொள்ளலாம்.
இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்துதான். அதையே காங்கிரசில் இருந்து கொண்டு சசிதரூர் வெளிப்படுத்தி இருக்கிறார். பா.ஜனதாவின் மொழியில் தான் அவர் பேசி இருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்காக ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்துவது வேடிக்கையாக இருக்கிறது.
ராமரே வந்தாலும் பாலியல் வன்கொடுமைகளை தடுத்து விட முடியாது என்று பா.ஜனதா எம்.எல்.ஏ. சுரேந்திர நாராயணன்சிங் பேசியுள்ளார். இது இந்துக்களை புண்படுத்தும் கருத்தாகும். இதற்காக அக்கட்சி தலைவர் அமித்ஷா மன்னிப்பு கேட்டு இருக்க வேண்டாமா?
இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க 2019 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. மோடி அதை இப்போதே செய்யலாம். அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #ShivSena #ShashiTharoor #RSS #BJP
இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறும் என்று மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சசிதரூர் பேசுகிறார் என சுப்பிரமணியன்சுவாமி கண்டனம் தெரிவித்துள்ளார். #ShashiTharoor #HinduPakistan
புதுடெல்லி:
திருவனந்தபுரம் பாராளு மன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூர், 2 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து விடும். பாகிஸ்தானை போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத புதிய நாடாக இந்தியா உருவாகும்.
காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் எதற்காக போராடி சுதந்திரம் பெற்றார்களோ, அது இல்லாமல் போய் விடும். மொத்தத்தில் இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறி விடும் என்றார்.
சசிதரூரின் பேச்சு ஊடகங்களில் வெளியானதும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பிட்ரா கூறும்போது, இந்திய ஜனநாயகத்தின் மீதும், இந்துக்கள் மீதும் சசிதரூர் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி உள்ளார். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் மதிப்பை குறைத்து விட்டார். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது வெறுப்புணர்வு அதிகமானதால் காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு பேசி வருகிறார்கள். இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமியும், சசிதரூர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததால் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, சசிதரூருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சசிதரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
பாரதிய ஜனதா தலைவர்களின் கண்டன பேச்சுக்கு சசிதரூர் டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என சசிதரூர் கூறி உள்ளார். இந்து ராஜ்ஜியம் உருவாக்குவோம் என்று பாரதிய ஜனதா கட்சி கூறி வருகிறது. அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ கொள்கையும் அதுதான் என்று கூறுகிறது.
ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளில் ஒருவரான தீன்தயாள் உபாத்தியாயா இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காதவர். இப்படிப்பட்ட தீன்தயாள் உபாத்தியாயாவின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி வருகிறார்.
இவர்கள் இந்து மக்களுக்காகவே அரசியல் சட்டமும், நாடும் உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள். இப்படிப்பட்டவர்களின் செயல்பாட்டை நான், சுட்டிக்காட்டியதில் என்ன தவறு இருக்கிறது? இதற்காகத்தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சசிதரூரின் இந்து பாகிஸ்தான் பேச்சு குறித்து காங்கிரசும் கருத்து தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலா கூறும் போது, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பும், நெறிமுறைகளும் எந்தவித சவால்களுக்கும் இடம் அளிக்காத வகையில் உறுதியாக உள்ளது.
நமது கொள்கைகள் பாகிஸ்தானின் பிரிவினைவாத போக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வரலாற்று ரீதியாக நமக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பு உணர்வு கொள்கைகளை எதிர்த்து பேசும்போது, வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதுபோல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷீர்ஜில் கூறும் போது, மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாகிஸ்தானை போல மோசமான நிலைக்கு செல்ல இந்திய ஜனநாயகம் அனுமதிக்காது.
காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது யோசித்து கவனமாக வார்த்தைகளை தேர்வு செய்து பேச வேண்டும் என்று கூறினார். #ShashiTharoor #HinduPakistan
திருவனந்தபுரம் பாராளு மன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், முன்னாள் மத்திய மந்திரியுமான சசிதரூர், 2 நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்று பேசினார்.
அவர் பேசுகையில், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்றால் நமது நாட்டின் ஜனநாயகம் சிதைந்து விடும். பாகிஸ்தானை போல சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதிக்காத புதிய நாடாக இந்தியா உருவாகும்.
காந்தி, நேரு, சர்தார் வல்லபாய் படேல், மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் எதற்காக போராடி சுதந்திரம் பெற்றார்களோ, அது இல்லாமல் போய் விடும். மொத்தத்தில் இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறி விடும் என்றார்.
சசிதரூரின் பேச்சு ஊடகங்களில் வெளியானதும் பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பிட் பிட்ரா கூறும்போது, இந்திய ஜனநாயகத்தின் மீதும், இந்துக்கள் மீதும் சசிதரூர் மிகப்பெரும் தாக்குதலை நடத்தி உள்ளார். நமது அரசியல் அமைப்பு சட்டத்தின் மதிப்பை குறைத்து விட்டார். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் மீது வெறுப்புணர்வு அதிகமானதால் காங்கிரஸ் தலைவர்கள் இவ்வாறு பேசி வருகிறார்கள். இதற்கு பொறுப்பேற்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன்சுவாமியும், சசிதரூர் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மரணமடைந்ததால் தொடரப்பட்ட வழக்கு காரணமாக, சசிதரூருக்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சசிதரூர் மீது பிரதமர் மோடி இரக்கம் காட்ட வேண்டும். அவருக்கு மருத்துவ உதவி தேவைப்படுகிறதா? என்று பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் அவரை மனநல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகளில் ஒருவரான தீன்தயாள் உபாத்தியாயா இந்திய அரசியல் சட்டத்தை மதிக்காதவர். இப்படிப்பட்ட தீன்தயாள் உபாத்தியாயாவின் கொள்கைகளையும், சித்தாந்தங்களையும் படிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி வருகிறார்.
இவர்கள் இந்து மக்களுக்காகவே அரசியல் சட்டமும், நாடும் உருவாக்கப்பட வேண்டும் என்று சொல்பவர்கள். இப்படிப்பட்டவர்களின் செயல்பாட்டை நான், சுட்டிக்காட்டியதில் என்ன தவறு இருக்கிறது? இதற்காகத்தான் மன்னிப்பு கேட்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சசிதரூரின் இந்து பாகிஸ்தான் பேச்சு குறித்து காங்கிரசும் கருத்து தெரிவித்துள்ளது. கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ரண்தீப் கர்ஜேவாலா கூறும் போது, இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பும், நெறிமுறைகளும் எந்தவித சவால்களுக்கும் இடம் அளிக்காத வகையில் உறுதியாக உள்ளது.
நமது கொள்கைகள் பாகிஸ்தானின் பிரிவினைவாத போக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டவை. காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் வரலாற்று ரீதியாக நமக்கு இருக்கும் பொறுப்புகளை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
பாரதிய ஜனதா கட்சியின் வெறுப்பு உணர்வு கொள்கைகளை எதிர்த்து பேசும்போது, வார்த்தைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்று கூறி உள்ளார்.
இதுபோல காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷீர்ஜில் கூறும் போது, மத்தியில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பாகிஸ்தானை போல மோசமான நிலைக்கு செல்ல இந்திய ஜனநாயகம் அனுமதிக்காது.
காங்கிரஸ் கட்சியில் தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை அனைவரும் பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டும் போது யோசித்து கவனமாக வார்த்தைகளை தேர்வு செய்து பேச வேண்டும் என்று கூறினார். #ShashiTharoor #HinduPakistan
பா.ஜ.க மீண்டும் வெற்றி பெற்றால் இந்தியா இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என்ற கருத்தை தெரிவித்த சசிதரூரை காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது. #ShashiTharoor
புதுடெல்லி :
இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் சந்திக்கும் மிரட்டல்கள் என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் கருத்தரங்கம் நடந்தது.
இக்கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் கலந்து கொண்டு பேசுகையில்,
இந்தியாவில் விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்.
இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. இப்போது பாராளுமன்ற மேல் சபையில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த நடவடிக்கையை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.
இதை அவர்கள் நடைமுறை படுத்தினால் மகாத்மா காந்தி, நேரு, சர்தார் படேல், மெளலானா ஆசாத் போன்ற இந்திய விடுதலைப் போராட்ட தலைவர்கள் எதற்காக போராடினார்களோ? அது இல்லாமல் போய் விடும் என்றார்.
பா.ஜ.க.வை சீண்டிப்பார்க்கும் விதமாக அமைந்த சசிதரூரின் இந்த கருத்துக்கு பா.ஜ.க கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், சசிதரூரின் சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் கட்சி மண்ணிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.
ஆனால், தன்னுடைய கருத்தை நியாயப்படுத்தும் விதமாக மீண்டும் கருத்து தெரிவித்த சசிதரூர், பா.ஜ.க.விற்கு உண்மையிலே இந்து ராஷ்டிரா என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லை என்றால், மதசார்பற்ற குடியரசான இந்தியாவில் இந்து ராஷ்டிரம் அமைப்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை என பாரதிய ஜனதா கட்சி பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அப்படி அவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில் இப்போது ஏற்பட்டுள்ள விவாதம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி, சசிதரூரை எச்சரித்துள்ளதாகவும், அவரை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. #ShashiTharoor

பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும் என காங்கிரஸ் எம்.பி.சசிதரூர் பேசினார். #HinduPakistan
திருவனந்தபுரம்:
இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் சந்திக்கும் மிரட்டல்கள் என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் கருத்தரங்கம் நடந்தது.
இக்கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அதில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்.
இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. இப்போது பாராளுமன்ற மேல் சபையில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த நடவடிக்கையை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முன்னோடிகள் சாவர்கர் என்பவர் தான் இந்துத்துவா என்ற கோஷத்தை எழுப்பியவர். பிரதமர் நரேந்திரமோடி பெரிதும் மதிக்கும் இன்னொரு தலைவர் தீன்தயாள்உபாத்தியாயா என்பவர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை விமர்சித்தவர்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முழுக்க முழுக்க மேற்கத்திய கருத்துகளால் ஆனது என்கிறார்கள்.
2-வதாக அவர்கள் இந்த சட்டம் தேசத்தை பற்றிய தவறான கருத்துகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எல்லைகளை வரையறுத்து சட்டம் உள்ளது. இது தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தேசம் என்பது மக்களை குறிக்கிறது. மக்கள் என்றால் அவர்கள் இந்துக்கள். மற்றவர்கள் அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களை கொள்ளையர்களாகவும், திருடர்களாகவும் சித்தரிக்கிறார்கள். இது அவர்களின் நிலைப்பாடு.
இந்தியாவில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது வளைகுடா நாடுகளுக்கு ஐக்கிய நாட்டு சங்கத்தின் பிரதிநிதியாக நான் சென்றிருந்தேன்.
அப்போது அவர்கள் இந்தியாவில் நடந்த ஆட்சி பற்றி கேட்டனர். அந்த தேர்தலில் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணும், கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவருமான சோனியா தலைமையிலான கட்சி ஆட்சியை பிடித்தது. அவர் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங்கை பிரதமர் ஆக்கினார். அவருக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாங்கள் யாரையும் நிர்ப்பந்திப்பதில்லை. இது தான் இந்தியா என்று நான் அப்போது அவர்களிடம் தெரிவித்தேன். இந்தியாவில் மதசார்பின்மை என்பது மதங்களில் இருந்து விலகி இருப்பது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #ShashiTharoor #HinduPakistan
இந்திய ஜனநாயகமும், மதசார்பின்மையும் சந்திக்கும் மிரட்டல்கள் என்ற தலைப்பில் திருவனந்தபுரத்தில் கருத்தரங்கம் நடந்தது.
இக்கருத்தரங்கில் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரும், திருவனந்தபுரம் எம்.பி.யுமான சசிதரூர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அதில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் விரைவில் நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் இந்தியா, இந்து பாகிஸ்தானாக மாறிவிடும்.
இதற்கான நடவடிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி செய்து வருகிறது. இப்போது பாராளுமன்ற மேல் சபையில் 3-ல் 2 பங்கு மெஜாரிட்டி இல்லாததால் இந்த நடவடிக்கையை அவர்களால் செயல்படுத்த முடியவில்லை.
இதனை நடைமுறைபடுத்த அவர்கள் முயற்சி மேற்கொண்டு உள்ளனர். இப்போது அவர்கள் 20-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் ஆட்சி செய்து வருகிறார்கள். இதன் மூலம் மேல்சபையில் தங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சிக்கிறார்கள்.
இந்திய அரசியல் அமைப்பு சட்டம் முழுக்க முழுக்க மேற்கத்திய கருத்துகளால் ஆனது என்கிறார்கள்.
2-வதாக அவர்கள் இந்த சட்டம் தேசத்தை பற்றிய தவறான கருத்துகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய நாட்டின் எல்லைகளை வரையறுத்து சட்டம் உள்ளது. இது தவறு என்று அவர்கள் கூறுகிறார்கள்.
தேசம் என்பது மக்களை குறிக்கிறது. மக்கள் என்றால் அவர்கள் இந்துக்கள். மற்றவர்கள் அதாவது கிறிஸ்தவர்கள், முஸ்லீம்களை கொள்ளையர்களாகவும், திருடர்களாகவும் சித்தரிக்கிறார்கள். இது அவர்களின் நிலைப்பாடு.
இந்தியாவில் கடந்த 2004-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான போது வளைகுடா நாடுகளுக்கு ஐக்கிய நாட்டு சங்கத்தின் பிரதிநிதியாக நான் சென்றிருந்தேன்.
அப்போது அவர்கள் இந்தியாவில் நடந்த ஆட்சி பற்றி கேட்டனர். அந்த தேர்தலில் இத்தாலியைச் சேர்ந்த பெண்ணும், கத்தோலிக்க மதத்தைச் சார்ந்தவருமான சோனியா தலைமையிலான கட்சி ஆட்சியை பிடித்தது. அவர் சீக்கிய மதத்தைச் சேர்ந்த மன்மோகன்சிங்கை பிரதமர் ஆக்கினார். அவருக்கு முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த அப்துல்கலாம் பதவி பிரமாணம் செய்து வைத்தார். நாங்கள் யாரையும் நிர்ப்பந்திப்பதில்லை. இது தான் இந்தியா என்று நான் அப்போது அவர்களிடம் தெரிவித்தேன். இந்தியாவில் மதசார்பின்மை என்பது மதங்களில் இருந்து விலகி இருப்பது அல்ல.
இவ்வாறு அவர் கூறினார். #Congress #ShashiTharoor #HinduPakistan
×

X