search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121142"

    சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசு முறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. #SyriaPresident #Assad #NorthKorea
    பியாங்காங்:

    அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் ஆகிய இருவரும் வருகிற 12-ந் தேதி சிங்கப்பூரில் சந்தித்து பேச இருப்பதை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

    இந்த நிலையில், சிரியா அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசு முறை பயணமாக வடகொரியா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பஷர் அல்-ஆசாத், ‘நான் வடகொரியா சென்று அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன்னை சந்தித்து பேச இருக்கிறேன்’ என கடந்த 30-ந் தேதி கூறியதாக வடகொரியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே சமயம் பஷர் அல்-ஆசாத், எந்த தேதியில் வடகொரியா செல்கிறார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.



    கிம், வடகொரியாவின் தலைவராக பதவியேற்றுக்கொண்டது முதல் இதுவரை எந்த ஒரு அதிபரும் வடகொரியாவுக்கு சென்று அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியது கிடையாது. அந்தவகையில், வடகொரியாவில் கிம் ஜாங் அன்னை சந்திக்கும் முதல் அதிபர் என்கிற பெயரை பஷர் அல்-ஆசாத் பெறுகிறார்.  #SyriaPresident #Assad #NorthKorea 
    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, தனது உடல் பரிசோதனைக்காக நேற்று இரவு வெளிநாடு சென்றார்.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி, தனது உடல் பரிசோதனைக்காக நேற்று இரவு வெளிநாடு சென்றார். அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் சென்றுள்ளார்.

    இந்தநிலையில் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி, மந்திரிசபை அமைப்பது தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) சோனியாகாந்தி மற்றும் ராகுல்காந்தியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டு இருந்தார். ஆனால் இருவரும் வெளிநாடு சென்றிருப்பதால் இந்த சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது. 
    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நாளை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். அவருடன் மனைவி பிரேமலதா உடன் செல்கிறார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், தொண்டையில் ஏற்பட்ட பாதிப்பால் அவதிப்பட்டார். இதற்காக அவர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் விஜயகாந்த் நாளை மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார். அவருடன் மனைவி பிரேமலதா உடன் செல்கிறார்.
    பிரதமர் நரேந்திர மோடி 21-ந் தேதி ரஷியா சென்று நட்புரீதியாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். #Modi #Russia #VladimirPutin
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி வருகிற 21-ந் தேதி ரஷியா செல்கிறார். அங்குள்ள சோச்சி நகரில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை நட்புரீதியில் மோடி சந்தித்து பேசுகிறார் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.



    நமது சிறப்பு வாய்ந்த மற்றும் பெருமைக்குரிய நட்பு நாடான ரஷியாவுடனான நல்லுறவை மேலும் வலுப்படுத்த இந்த சந்திப்பு உதவும். இரு தலைவர்களும் சர்வதேச பிரச்சினைகள் பற்றிய தங்களது கருத்துகளை விரிவாகவும், நீண்டகால முன்னேற்ற அடிப்படையிலும் பரிமாறிக்கொள்வார்கள். இது இரு தலைவர்களுக்கும் முக்கிய நிகழ்வாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    அதோடு இரு தலைவர்களும் தங்கள் நாட்டு வளர்ச்சிக்கான முன்னுரிமை, இருநாடுகள் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும் பேசுவார்கள். பிரதமர் மோடி, ரஷிய அதிபர் புதின் இடையிலான இந்த நட்புரீதியிலான சந்திப்பு இந்தியா-ரஷியா இடையிலான பாரம்பரிய அரசியல் உறவுகளை உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்லும் என்றும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.

    ரஷிய அதிபர் புதின் சமீபத்தில் தான் மீண்டும் அந்நாட்டு புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடி சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த மாதம் மோடி, சீனா சென்று அந்நாட்டு அதிபர் ஜின்பிங்கை நட்புரீதியில் சந்தித்து பேசினார்.  #Modi #Russia #VladimirPutin
    ரெயில் பயணத்தின் போதோ, இறங்கும்போதோ பயணிகள் இறந்தால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ரெயில்களில் பயணத்தின் போது இறக்கும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    நீதிபதிகள் ஏ.கே.கோயல், ஆர்.எப்.நாரிமன் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது. அப்போது ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக பல்வேறு மாநில ஐகோர்ட்டுகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது பற்றியும் விசாரித்தனர்.

    1984-ம் ஆண்டு ரெயில்வே சட்டம் 124ஏ பிரிவின்படி ரெயில் முன் பாய்ந்து உயிர் இழந்தாலோ அல்லது தற்கொலை முயற்சியில் காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது கிடையாது. ஆனால் சில ஐகோர்ட்டுகள் இதற்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டன.

    இந்த முரண்பாடுகள் பற்றி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்தது. 124-வது பிரிவின் படியும், 124-ஏ பிரிவின் படியும் உயிரிழக்கும் ரெயில் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவது ரெயில்வேயின் கடமையாகும்.



    எனவே ரெயில் பயணத்தின்போதோ அல்லது ரெயிலில் இருந்து இறங்கும் போதோ தவறி விழுந்து இறந்தாலோ, காயம் அடைந்தாலோ இழப்பீடு வழங்குவது ரெயில்வேயின் கடமை என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

    தற்போது ரெயில்வே சார்பில் இழப்பீடு தொகையாக ஆண்டுதோறும் ரூ.350 கோடி வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீடு கேட்டு 38,000 மனுக்கள் நடுவர் மன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    ×