search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை"

    நாகையில் தேர்தல் பறக்கும் படை நடத்திய வாகன சோதனையில் ரூ.2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. #LSPolls

    நாகப்பட்டினம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் நேற்று தமிழக எல்லையான நாகையை அடுத்த வாஞ்சூர் சோதனைச்சாவடி அருகே தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை மறித்து சோதனை செய்தனர். காரில் ரூ. 2½ லட்சம் மதிப்பிலான கவரிங் நகைகள் இருந்தது தெரியவந்தது.

    அந்த நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அந்த கவரிங் நகைகளை பறிமுதல் செய்து, நாகை சப்-கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும், உரிய ஆவணங்கள் இல்லாமல் கவரிங் நகைகளை கொண்டு வந்த சிதம்பரத்தை சேர்ந்த கணேசன், சரவணன் ஆகிய 2 பேரிடம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் ராஜாமடம் சோதனை சாவடியில் மண்டல துணை தாசில்தார் கண்ணகி தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது வேதாரண்யத்தில் இருந்து வந்த ஒரு காரை வழிமறித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது காரில் 2 துப்பாக்கிகள் இருந்தன. அதில் ஒன்று இத்தாலி நாட்டில் தயாரிக்கப்பட்ட இரட்டைக்குழல் துப்பாக்கி ஆகும். மற்றொன்று இங்கிலாந்து நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒற்றைக்குழல் துப்பாக்கி ஆகும்.

    இந்த 2 துப்பாக்கிகளுக்கு உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பதும், இவை நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கருப்பம்புலம் கிராமத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவருக்கு சொந்தமானது என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து 2 துப்பாக்கிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து பட்டுக்கோட்டை தாசில்தார் அருள்பிரகாசம் முன்னிலையில் பட்டுக்கோட்டை கருவூலத்தில் ஒப்படைத்தனர். #LSPolls

    நாகை மாவட்டத்தில் மாற்று முறை மருத்துவம் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வந்த பல்கலைக்கழகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். #NagaiFakeUniversity #UniversitySealed
    குத்தாலம்:

    நாகை மாவட்டம் குத்தாலத்தை அடுத்த திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை மருத்துவ பல்கலைக்கழகம் என்ற பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை கடந்த 9 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

    தொலைதூர பல்கலைக்கழகம் என்ற பெயரில் இவர் நாடு முழுவதும் ஆயுர்வேதா, சித்தா ஆகிய மருத்துவ துறைகளின் கீழ் சான்றிதழ்கள் அளித்துள்ளார்.

    இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் இருந்து இவரிடம் பணம் கட்டி ஆயிரக்கணக்கானோர் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மருத்துவ பட்டங்களை பெற்றுள்ளனர். இவரிடம் சான்றிதழ் வாங்கிய ஆயிரக்கணக்கானோர், இந்தியா முழுவதும் மாற்றுமுறை மருத்துவராக மருத்துவம் பார்த்து வருகின்றனர்.

    இந்தநிலையில் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர விண்ணப்பங்கள் வரவேற்பதாக இவர் அளித்த விளம்பரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அவர்களுக்கு பல்கலைக்கழகம் குறித்து சந்தேகம் எழுந்தது.

    இதைத்தொடர்ந்து குத்தாலம் மேலசெட்டித்தெருவில் ஒரு வீட்டில் செயல்பட்ட அந்த பல்கலைக்கழகத்துக்கு அதிகாரிகள் வந்தனர்.

    சென்னையில் உள்ள மருத்துவ விழிப்புணர்வு பணி துணை போலீஸ் சூப்பிரண்டு தாமஸ்பிரபாகர் தலைமையில், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை இயக்குனரக அதிகாரிகள் மற்றும் நாகை மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் திறந்தவெளி மாற்றுமுறை பல்கலைக்கழகத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் அந்த பல்கலைக்கழகம் போலியாக செயல்பட்டது தெரியவந்தது.



    இதைத்தொடர்ந்து அங்கு இருந்த போலி சான்றிதழ்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் குத்தாலம் தாசில்தார் சபீதாதேவி முன்னிலையில் மருத்துவ அதிகாரிகள் போலி பல்கலைக்கழகத்தை மூடி சீல் வைத்தனர்.

    இதுபற்றி சுகாதாரத்துறை இணை இயக்குனர் மகேந்திரன் கூறியதாவது:-

    இந்த போலி மருத்துவ பல்கலைக்கழகம், மாற்றுமுறை மருத்துவம் என்பதை பதிவு செய்யப்படவில்லை. தமிழகத்தில் வேறு எந்த பல்கலைக்கழகத்திலும் பதிவு செய்யப்படவில்லை. இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் போலி சான்றிதழ்களை பெற்று மருத்துவம் பார்த்து வருவதாக தெரிகிறது. இதில் அதிகமாக கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள், சென்னை, மதுரை, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்றுள்ளனர். அவர்களது விவரங்களை அந்தந்த மாவட்டங்களில் உள்ள சுகாதார துறை இணை இயக்குனர்களுக்கு அனுப்பி போலி டாக்டர்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #NagaiFakeUniversity #UniversitySealed


    நாகை அருகே குடும்பத்தகராறில் மனைவியை கல்லால் கணவன் அடித்துக்கொலை செய்த சம்பவம், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே எட்டுக்குடி பகுதியை சேர்ந்தவர் ரவி. விவசாயி. இவருடைய மனைவி சித்ரா (வயது 45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று ரவிக்கும், மனைவி சித்ராவிற்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த ரவி, அருகில் கிடந்த கல்லை எடுத்து சித்ராவை தலையில் தாக்கினார். இதனால் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சித்ரா பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் திருக்குவளை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய ரவியை வலைவீசி தேடி வருகின்றனர்.

    நாகை மாவட்டத்தில் சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
    நாகப்பட்டினம்:

    தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை சென்னைக்கு தென்கிழக்கே பெயிட்டி புயல் நிலைக்கொண்டு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா இடையே இன்று (17-ந் தேதி) பிற்பகலில் கரையை கடக்கிறது.

    இதன் காரணமாக கடலோர மாவட்டங்களான நாகை, தஞ்சையில் சில இடங்களில் பலத்த காற்று வீசி வருகிறது. நாகையில் கடல் அலைகளின் சீற்றம் ஆக்ரோ‌ஷத்துடன் உள்ளது. கடல் அலை சுமார் 3 மீட்டர் வரை உயரே எழும்புகிறது. கடலோர பகுதிகளில் காற்றும் வீசி வருவதால் நாகை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.

    இன்று 4-வது நாளாக நாகை, நாகூர், நம்பியார் நகர், அக்கரைபேட்டை, கீச்சாங்குப்பம், வேளாங்கண்ணி, செருதூர், விழுந்தமாவடி, வேதாரண்யம், கோடியக்கரை, வெள்ளப்பள்ளம், புஷ்பவனம், பழையாறு துறைமுகம், புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள 4-வது நாளாக 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வருமானத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் சேதமான படகுகளால் பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு செல்வது இல்லை. சேது பாவாசத்திரம், மல்லிப்பட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் மீனவர்கள் இன்று 4-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை.
    நாகையில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகை கடுவையாற்று பகுதியில் மீன்பிடி படகுகளுக்கான கட்டுமான தளம் அமைந்துள்ளது.

    இங்கு நாகை அக்கரைப்பேட்டையை சேர்ந்த சந்திரன் என்பவருக்கு சொந்தமான புதிய விசைப்படகு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த படகு நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது.

    அப்போது அந்த வழியாக சென்ற மீனவர்கள் சிலர் படகு ஒன்று தீப்பிடித்து எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக நாகை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற தீயணைப்பு படை வீரர்கள் படகில் பற்றிய தீயை அணைத்தனர்.

    ஆனால் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகின் மேற்கூரை, படகில் இருந்த வலைகள் உள்ளிட்ட மீன்பிடி தளவாடங்கள், ஐஸ் பெட்டி என அனைத்தும் தீயில் கருகி நாசமானது. இதன் சேத மதிப்பு ரூ.30 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், மீன்பிடி படகிற்கு மர்ம நபர்கள் தீ வைத்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து படகிற்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக தீ வைத்தார்கள்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கஜா புயலால் ஏற்கனவே படகுகள் சேதமான நிலையில் மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர். இந்த நிலையில் விசைப்படகை மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்திய சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கனமழை காரணமாக புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. #TNRains #IMD #SchoolsHoliday
    புதுக்கோட்டை:

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நீடித்து வருவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று மாலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. இன்று காலையும் சென்னையின் பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

    நாகை, நாகூர், வேளாங்கண்ணி, கீழையூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் மழை பெய்து வருகிறது. மழை நீடிப்பதால் புயல் நிவாரணப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.



    கனமழை காரணமாக காரைக்காலில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். #TNRains #IMD #SchoolsHoliday
    கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்கள், சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், நாகை மாவட்டத்தில் புயல் நிவாரண முகாம்கள், சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். #GajaCyclone #Nagai
    கஜா புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்கள், சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், நாகை மாவட்டத்தில் புயல் நிவாரண முகாம்கள், சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். #GajaCyclone #Nagai
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்குப் பதில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என நாகையில் ஆய்வு செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #GajaCyclone #EdappadiPalaniswami
    நாகை:

    நாகையில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி ஆறுதல் கூறினர். பின்னர் நாகப்பட்டினத்தில் இன்று பிற்பகல் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாகையில் புயல் பாதிப்பு மற்றும் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து அவர் கூறியதாவது:-

    கஜா புயல் காரணமாக நாகை மாவட்டம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளது. கஜா புயலுக்கு நாகையில் மட்டும் 15 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இதுவரை 341 மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டுள்ளன.



    அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளுக்கு பதில் ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

    புயல் நிவாரணப் பணிகளுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி கேட்டுள்ளோம். மத்திய அரசு மனசாட்சிப்படி நிதி வழங்கும் என நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #EdappadiPalaniswami


    நாகப்பட்டினம் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறி, முதற்கட்ட நிவாரண உதவிகளை வழங்கினார். #EdappadiPalaniswami #GajaCyclone
    நாகை:

    கஜா புயலின் கோரத் தாண்டவத்தால் தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கடந்த 20-ந்தேதி ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். மோசமான வானிலை காரணமாக திருவாரூர், நாகை மாவட்டங்களுக்கு செல்ல இருந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பயண திட்டம் திடீரென பாதியில் ரத்தானது.

    இதற்கிடையே விடுபட்ட பகுதிகளை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நேற்று (செவ்வாய்க்கிழமை) ரெயில் மூலம் நாகைக்கு புறப்பட்டார். காரைக்கால் விரைவு ரெயில் மூலமாக நாகைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று (புதன்கிழமை) காலை வந்தடைந்தார்.



    பின்னர் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் முதற்கட்டமாக நிவாரணப் பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகையை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் வழங்கினர். தென்னை மரங்களை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு அரசு சார்பில் தென்னங்கன்றுகளையும் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, ஓஎஸ் மணியன் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    அதன்பின்னர் நாகையில் பல்வேறு இடங்களுக்கு சென்று புயல் பாதிப்பை பார்வையிட்டு, அங்கு மேற்கொள்ளப்படும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்கிறார். இதேபோல் திருவாரூரிலும் இன்று ஆய்வுப் பணிகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்கிறார். #EdappadiPalaniswami #GajaCyclone

    கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் வேதாரண்யத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், பள்ளிகள் புயல் நிவாரண முகாம்களாக செயல்படுவதால் வேதாரண்யம் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.

    மேலும் முத்துப்பேட்டை, கோட்டூர், திருத்துறைப்பூண்டி ஒன்றியங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    புயல் நிவாரண பணிகள் காரணமாக வேதாரண்யம், திருக்குவளை, கீழ்வேளூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக நாகை ஆட்சியர் அறிவித்துள்ளார்.  #GajaCyclone #Nagai
    கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    ×