search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாகை"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் 8-வது நாளாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
    திருவாரூர்:

    கஜா புயல் தாக்கி ஒருவாரமாகியும் இதுவரை மின்சாரம், குடிநீர் இல்லை. சாப்பாட்டுக்கே வழியில்லாமல் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதிகாரிகளும் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் பெய்துவரும் கனமழையால் நிவாரண பணிகளும் பாதிப்பு அடைந்துள்ளது.

    முத்துப்பேட்டை பகுதியில் விரைவில் மின்சாரம் வழங்க துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் நிவாரண பொருட்கள் செல்லாத பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்க வேண்டும். கட்டிடங்கள் பள்ளி சேதமாகி இருப்பதால் பள்ளிகளை திறக்கக்கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர்.

    மறியலில் ஏராளமானோர் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டனர். இதனால் திருத்துறைப்பூண்டி பட்டுக்கோட்டை சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மற்றும் திருவாருர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. கஜா புயல் சீரமைப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதனால் தொடர் மழை காரணமாக நாகை மற்றும் திருவாரூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை  அளிக்கப்பட்டு உள்ளது என  மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #HeavyRain #Nagai #Thiruvarur
    கஜா புயல் பாதிப்பு காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. #GajaCyclone #AnnaUniversity
    சென்னை:

    வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல் திருவாரூர், தஞ்சை, நாகை, புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்புகள் காரணமாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை நடைபெற இருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

    புயல் பாதிப்பை தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் தெரிவித்துள்ளார். #GajaCyclone #AnnaUniversity
    கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #Nagai
    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்ததற்கு மேல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் மறுசீரமைப்பு பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை.

    இந்நிலையில், கஜா புயல் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை கோட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை  அளிக்கப்பட்டு உள்ளது என  மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    #GajaCyclone #Nagai
    தமிழகத்தில் கஜா புயல் பதம்பார்த்த நிலையில், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    சென்னை:

    கஜா புயல் காரணமாக புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை, புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்திரவிடப்பட்டுள்ளது.

    மேலும் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் வீரராகவ ராக் தெரிவித்துள்ளார்.

    புயல் பாதிப்பு சீரமைப்பு முடியாத நிலையில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் மேற்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

    #GajaCyclone #Gajastorm 
    நாகை மாவட்டத்தில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதி செய்யாததால் 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #Gajastorm #Storm

    நாகப்பட்டினம்:

    கஜா புயலால் நாகை மாவட்டம் கடும் பேரழிவை சந்தித்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மரங்கள், வீடுகள் சேதம் அடைந்துள்ளன. மீனவர்களின் படகுகளும் சேதம் அடைந்துள்ளன. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

    பல கிராமங்களில் மக்கள் அடிப்படை வசதி செய்து கொடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். சாலையில் விழுந்த மரங்களை கூட அதிகாரிகள் வெட்டி அப்புறப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகிறார்கள். பல கிராமங்களில் கிராம மக்களே வெட்டி அப்புறப்படுத்தி உள்ளனர்.

    மேலும் புயல் பாதிப்பினால் மின்சாரமும் கடந்த 4 நாட்களாக இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. இதனால் உணவு, குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். மேலும் வீடுகள் சேதம் அடைந்துள்ளதாலும் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் மக்கள் நிர்கதியாக உள்ளனர்.

    இதனால் பல கிராமங்களில் மக்கள் உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதி இல்லாதால் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று ஒரே நாளில் நாகை மாவட்டத்தில் 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை அருகே உள்ள பூவைத்தேடி, கண்ணித்தோப்பு, காமேஸ்வரம், ஈசனூர், ஆலங்குடி, ஓடாச்சேரி, மணக்குடி, முதலியப்பன்கண்டி, தாதன்திருவாசல், வேட்டைக்காரனிருப்பு, கரியாப்பட்டினம் உள்ளிட்ட 26 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை போலீசார் மற்றும் அதிகாரிகள் சமரசம் செய்தனர்.

    இதேபோல் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத் துறைப்பூண்டி பகுதிகளிலும் மக்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். #Gajastorm #Storm

    தமிழகத்தில் கஜா புயல் பதம்பார்த்த நிலையில், திருவாரூர், நாகை, கொடைக்கானல், புதுக்கோட்டை, தஞ்சை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm #GajaCycloneAlert
    சென்னை:

    கஜா புயல் காரணமாக புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    நாகை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மறுசீரமைப்பு நிறைவடையாத பகுதிகளில் அந்தந்த பள்ளி நிர்வாகமே விடுமுறை அறிவித்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் ஆசிரியர்கள் இன்று கண்டிப்பாக பள்ளிகளுக்கு வந்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

    கொடைக்கானல் வட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து திண்டுக்கல் ஆட்சியர் வினய் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் கஜா புயல் காரணமாக புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் பாலிடெக்னிக் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.  மேலும் இன்று நடைபெற இருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் நவ.26ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #GajaCyclone #Gajastorm 
    கஜா புயலால் பாதிப்பு அடைந்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவிட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    சென்னை:

    கஜா புயல் நேற்று முன்தினம் அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் பாதிக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடந்து வருகிறது.



    இந்நிலையில், கஜா புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுபான கடைகளை மூடும்படி அரசு உத்தரவிட்டு உள்ளது.

    இதுதொடர்பாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மேலாண் இயக்குனர் கிர்லோஷ் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட வேண்டும். மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. #GajaCyclone #TASMACLiquorOutlets
    கஜா புயல் காரணமாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். #GajaStorm
    நாகப்பட்டினம்:

    வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. அதன்பின்னர் புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்பட்டுள்ளது.  
     
    இந்நிலையில் கஜா புயல் இன்று இரவு கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

    புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர்.

    கஜா புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். 

    ஏற்கனவே, கஜா புயல் காரணமாக கடலூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, காரைக்கால், தஞ்சை உள்ளிட்ட 7  மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #GajaStorm
    நாகை அருகே டாக்டர் தம்பதி வீட்டில் 10 பவுன் நகை திருடிய 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை ராமநாயக்கன் குளத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி. இவர்கள் இருவரும் டாக்டர்கள்.

    ராமசாமி வீடு பழுது ஏற்பட்டுள்ளதால் அதனை பூட்டிவிட்டு சுப்பையா முதலியார் தெருவில் வாடகை வீட்டில் கடந்த 4 மாதங்களாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ராமநாயக்கன் குளத்தெருவில் உள்ள தனது வீட்டிற்கு தமிழ்ச்செல்வி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வீட்டிற்குள் சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போயிருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த வெளிப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீடு பூட்டி கிடப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு வந்து திருட்டு நடந்த வீட்டில் இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

    இதுதொடர்பாக தமிழ்ச்செல்வி வெளிப்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் நகைகளை

    திருடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வந்தனர்.

    தொடர்ந்து திருட்டு நடந்த வீட்டில் அருகே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் தமிழ்ச்செல்வின் வீட்டின் கதவை உடைத்து 7 பேர் உள்ளே புகுந்தது கேமராவில் பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து நகைகளை திருடியது தொடர்பாக வெளிப்பாளையம் காடம்பாடி சவேரியார் கோவில் தெருவை சேர்ந்த லூர்துசாமி மகன் எடிசன் (வயது22) மற்றும் 6 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் தமிழ்ச்செல்வி வீட்டில் நகைகளை திருடியதை அவர்கள் ஒப்புக்கொண்டனர். மேலும், அவர்களிடம் இருந்து நகைகளை பறிமுதல் செய்தனர்.

    நாகையில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்த மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக மீனவர்களின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
    நாகப்பட்டினம்:

    இலங்கை கடற்கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், டீசல் விலை உயர்வை கண்டித்தும் வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் வழங்க வலியுறுத்தியும் கடந்த 3-ந்தேதியில் இருந்து நாகையில் விசைப்படகு மீனவர்கள் 10 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். மேலும், கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் நாகையில் பல்வேறு இடங்களில் மீனவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அக்கரைப்பேட்டை மீனவ கிராமத்தில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் மீனவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாகவும், 10 நாட்களுக்குள் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை பேச்சுவார்த்தைக்கு அளிக்கவில்லை என்றால் வருகிற 25-ந்தேதி நாகையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று காலை மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
    நாகையில் மீனவர்கள் 6-வது நாளாக நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    நாகப்பட்டினம்:

    இலங்கை கடற் கொள்ளையர்களால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்தும், விசைப்படகு ஒன்றுக்கு 3 ஆயிரம் லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும், சிறிய படகுகளுக்கு 420 லிட்டர் மானிய டீசல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 6-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நீடித்தது.

    இதனால் நாகை மாவட்டத்தில் 3 ஆயிரத்து 500 விசைப்படகுகளும், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும் துறைமுக பகுதிகளிலும், கடுவையாற்று கரையிலும் பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். தொடர் வேலை நிறுத்தத்தால் மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் வேலை நிறுத்தத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அக்கரைப்பேட்டை மீன் இறங்கு தளம் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது. மேலும் பல கோடி ரூபாய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. 
    ×