search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121378"

    ஜம்முவில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வுக்காக நடத்தப்படும் மாரத்தானில் சுமார் 2000 குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். #JKChildrenMarathon
    ஸ்ரீநகர்:

    ஜம்மு மாவட்டத்தில்  பெற்றோர் மற்றும் குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பு, குழந்தைகள் பாலியல் வன்கொடுமை குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் நடத்தப்பட உள்ளது. ஜம்மு பல்கலைக்கழகத்தில் வரும் 24-ம் தேதி இந்த மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

    இது குறித்து ஜம்மு காஷ்மீரின்  இளைஞர் சேவை மற்றும் விளையாட்டுத் துறை கமிஷனர் சர்மத் ஹஃபீஸ் கூறியிருப்பதாவது:

    இந்த மாரத்தானில் எங்கள் குட்டி நட்சத்திரங்கள் பங்கேற்று, ஜம்மு பல்கலைக்கழக விளையாட்டுத் திடலில் ஓடுவார்கள். குழந்தைகள் வளரும்போது சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சனைகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவும், விளையாட்டுத் துறையில் பல்வேறு விளையாட்டுகளில் குழந்தைகள் பங்கு கொள்ள ஊக்குவிக்கப்பட வேண்டும் என்பதே இந்த மாரத்தானின் முக்கிய நோக்கம் ஆகும்.

    மேலும் இந்த மாரத்தானில், 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் ஜம்மு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், சுமார் 2000க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #JKChildrenMarathon
    நன்கொடை திரட்ட நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்துக் கொண்டிருக்கிறார். #KajalAggarwal #Kajal #Marathon
    காஜல் அகர்வால் நடிப்பில் பாரிஸ் பாரிஸ் திரைப்படம் வெளியீட்டை எதிர் பார்த்துள்ளது. கமல் ஹாசனுடன் இணைந்து அவர் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 18ந்தேதி தொடங்கியது. விரைவில் காஜல் படக்குழுவுடன் இணைய உள்ளார்.

    டாடா கண்சல்டன்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் இந்தி, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர்.

    16-வது முறையாக நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை காஜல் அகர்வால் கலந்து கொண்டு 10 கிமீ., தூரம் ஓடியுள்ளார். பழங்குடியினருக்கு விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், திறமைவாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக இந்த மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது.

    திங்க் பீஸ் அமைப்பு இதை ஒருங்கிணைத்திருந்தது. கடந்த ஆண்டு நடைபெற்ற மாரத்தான் போட்டியிலும் காஜல் அகர்வால் கலந்து கொண்டார்.



    மாரத்தானில் கலந்து கொண்டது குறித்து காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இது எனது இரண்டாவது மாரத்தான். பத்து கிலோ மீட்டர் தூரத்தை 70 நிமிடங்களில் கடந்துள்ளேன். கடந்த ஆண்டை விட 8 நிமிடங்கள் குறைவாகவே இலக்கை அடைந்துள்ளேன்.

    தற்போது இலக்கைக் குறிவைத்தல், உறுதியோடு இருத்தல், உடல்நிலையைச் சீராக வைத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த ஆண்டு 21 கிலோ மீட்டர் ஓட வேண்டும். திங்க் பீஸ் அமைப்பிற்கு ஆதரவளித்து நன்கொடைகளைத் திரட்ட வேண்டும். பழங்குடியின மக்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்க ஊக்கமளிக்க வேண்டும்” என்று பதிவிட்டு உள்ளார்.
    தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்துக் கொள்ள இருக்கிறார். #KajalAggarwal
    தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்துக்காக தற்காப்பு கலை பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார்.

    காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போன்ற போட்டிகளில் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதன் புகைப்படங்களையும் பகிர்ந்து இருந்தார்.

    டாடா கன்சல்டன்ஸி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் மும்பையில் பல்வேறு தலைப்புகளின் கீழ் மாரத்தான் போட்டியை நடத்தி வருகிறது. இதில் பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கலந்து கொள்கின்றனர். 16-வது முறையாக வரும் ஜனவரி 20-ந்தேதி மும்பையில் மாரத்தான் போட்டியை நடத்த உள்ளது.



    இந்த மாரத்தானில் அனைவரும் கலந்துகொள்ள காஜல் அகர்வால் அழைப்பு விடுத்துள்ளார். “இந்த முறை நான் பழங்குடியின விளையாட்டுத்துறை முன்னேற்றத்துக்காக 2019 டாடா மும்பை மாரத்தானில் கலந்துகொள்கிறேன். அரக்குவில் உள்ள பழங்குடியினருக்கு அவர்களது விளையாட்டுத்துறை உள்கட்டமைப்பு மேம்படவும், திறமை வாய்ந்த பழங்குடியின விளையாட்டு ஆளுமைகளுக்குச் சக்தி வாய்ந்த உணவு கிடைத்திடவும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
    காரைக்குடியில் இருதய பாதுகாப்பை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    காரைக்குடி:

    காரைக்குடி காவேரி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தையொட்டி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. மாரத்தான் போட்டியில் ஆண்களுக்கு 16 வயது முதல் 25 வயது வரையும், 26 முதல் 50 வயது வரையும், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக போட்டி நடத்தப்பட்டது. இதேபோல் 16 முதல் 30 வயது வரை உள்ள பெண்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் முன்னிலையில் ஆண்களுக்கான 16-25 வயது மற்றும் 26-50 வயது பிரிவுகளுக்கான போட்டியை காரைக்குடி சிக்ரி இயக்குனர் விஜயமோகனன் கே.பிள்ளை கொடியசைத்து தொடங்கிவைத்தார். ஆண்களுக்கான 50 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவு போட்டியை இலுப்பக்குடி துணை ராணுவ பட்டாலியன் சீனியர் கமாண்டர் அஜய் ஜோஷியும், பெண்களுக்கான பிரிவு மாரத்தான் போட்டியை சிவகங்கை அரசு மருத்துவமனை டீன் வனிதாவும் தொடங்கி வைத்தனர். 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் கலெக்டர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு ஓடினார்.

    இருதய பாதுகாப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் ஆண்களுக்கான 16-25 வயது பிரிவில் லிங்கேசுவரன் முதலிடத்தையும், வெங்கடேஷ் 2-ம் இடத்தையும், கஜேந்திரன் 3-ம் இடத்தையும் பிடித்தனர். 26-50 வயது பிரிவில் மணிகண்டன், குல்தீப்குமார், பட்டாணி ஆகியோர் முதல் 3 இடங்களையும், 50 வயதிற்கு மேற்பட்டோர் பிரிவில் முத்துவிநாயகம், வள்ளியப்பன், அஜய் ஜோஷி ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்தனர். பெண்களுக்கான பிரிவில் ஏன்சலின்ஸ், நீது, லட்சுமி ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்தனர்.

    முடிவில் போட்டியில் வென்றவர்களுக்கு கலெக்டர் ஜெயகாந்தன் பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கினார். இதில் காரைக்குடி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகன், காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் சலீம், டாக்டர் காமாட்சி சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
    பெர்லினில் நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் எலியாட் புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். #Marathon #WorldRecord #EliudKipchoges
    பெர்லின்:

    ஜெர்மனி தலைநகர் பெர்லினில் நேற்று நடந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கென்யாவின் எலியாட் கிப்சோஜ் 2 மணி ஒரு நிமிடம் 39 வினாடிகளில் இலக்கை கடந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார்.



    இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு இதே பெர்லினில் நடந்த போட்டியில் கென்யாவின் டென்னிஸ் கிமெட்டோ 2 மணி 2 நிமிடம் 57 வினாடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. அதை 33 வயதான கிப்சோஜ் முறியடித்துள்ளார். ‘சாதனைக்குரிய இந்த நாளை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. உலக சாதனை நிகழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கிப்சோஜ் குறிப்பிட்டார்.  #Marathon #WorldRecord #EliudKipchoges

    ×