என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 121406
நீங்கள் தேடியது "குங்குமம்"
ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் வைக்கும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.
ஆன்மிக குறியீடுகளாக நெற்றியில் பூசும் சந்தனம் மற்றும் குங்குமம் ஆகியவற்றின் பின்னணியில் உடற்கூறு மற்றும் அறிவியல் பூர்வ உண்மைகள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பெண்கள் ‘நெற்றியில் பொட்டு’ அல்லது குங்குமம் வைப்பது மங்கல சின்னங்களாக கருதப் படுகிறது. இரு புருவங்களுக்கு மத்தியில் உள்ள இடம் நெற்றி பொட்டு என அழைக்கப்படுகிறது. மருத்துவ ஆராய்ச்சிகளின்படி நினைவாற்றலுக்கும், சிந்திக்கும் திறனுக்கும் உரிய இடமான அப் பகுதியை யோக முறையில், ஆக்ஞா சக்கரம் என்று சொல்லப்படும்.
மனித உடலில் உள்ள இயக்கங்கள் காரணமாக ‘எலக்ட்ரோ மேக்னடிக்’ என்ற மின் காந்த அலை வடிவத்தில் சக்தி வெளிப்படுகிறது. நெற்றி மற்றும் நெற்றிப் பொட்டு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க விதத்தில் மின் காந்த அலைகள் வெளிப்படுகின்றன. மன அமைதி பாதிக்கப்படும் சமயத்தில் அப்பகுதிகளில் வலி ஏற்படுவதை உணரலாம். சந்தனம் என்பது உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் பொருளாகும். குங்குமம் என்பது இயற்கை கிருமி நாசினியாக செயல்படும் தன்மை கொண்டது. அதன் அடிப்படையில் நெற்றியில் இடும் குங்குமம் அல்லது சந்தனம் மூலம் நெற்றிப்பகுதி குளிர்ச்சி அடைகிறது.
புருவ மத்திக்கு பின்புறம் ‘பினியல் கிளாண்ட்’ என்ற சுரப்பி அமைந்துள்ளது. ‘ஆக்ஞா சக்கரம்’ எனப்படும் அதை, ‘மூன்றாவது கண்’, ‘ஞானக்கண்’ என்று குறிப்பிடுவார்கள். சிவபெருமானுக்கு ஆக்ஞா சக்கரம் நெற்றிக் கண்ணாக இருப்பதை கவனித்திருப்போம். திபெத்தில் உள்ள லாமா புத்த துறவிகளுக்கு ஞானக்கண் திறப்பு என்ற சடங்கின் மூலம் புருவ மத்தி பகுதிக்கு நெருப்பால் சூடு வைக்கப்படுகிறது. சந்தனம், குங்குமம் போன்றவற்றை நெற்றியில் இடுவதால் உடல் மற்றும் மனோசக்தி ஆகியவை பாதுகாக்கப்படுகிறது. முகம் பிரகாசம் அடைகிறது. பொட்டு வைப்பதை ஆன்மிக ரீதியாகவும், உடல் ஆரோக்கியம் சார்ந்த பழக்கமாகவும் ஆன்மிக சான்றோர்கள் ஏற்படுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.
பாரம்பரிய முறைப்படி பெண்கள் முன் வகிடு, நடு நெற்றி மற்றும் புருவ மத்தி ஆகிய பகுதிகளில் குங்குமம் இட்டுக்கொள்வார்கள். ஆண்கள் பெரும்பாலும் புருவ மத்தியில் அவற்றை அணிவது வழக்கம். பொதுவாக, குங்குமம் என்பது மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு ஆகியவற்றை குறிப்பிட்ட விகிதத்தில் ஒன்றாக கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மூன்றும் கிருமி நாசினியாக செயல்படும் பொருட்களாகும். குறிப்பாக, பெண்களின் முன் வகிடு பகுதியில் மகாலட்சுமி குடியிருப்பதாக ஐதீகம்.
அதன் அடிப்படையில் பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களது கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் ஆன்றோர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்தனத்தை புருவ மத்தியில் வைக்கும்போது அப்பகுதியில் இயங்கிவரும், உடலை கட்டுப்படுத்தக்கூடிய பிட்யூட்டரி சுரப்பி குளிர்ச்சி அடைகிறது. அதன் மூலம் உடலின் தலைமை செயலகமான மூளையின் பின்பகுதியில் எண்ணங்களின் பதிவிடமாக உள்ள ‘ஹிப்போகேம்பஸ்’ என்ற இடத்திற்கு ஞாபகத்திற்கான தூண்டுதல்களை அனுப்புகிறது.
இரு புருவங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சிந்தனை நரம்புகள் ஒன்று கூடும் இடம் என்ற நிலையில் அங்கு மெதுவாக ஆட்காட்டி விரலால் தொட்டால், மனதில் உண்டாகும் ஒரு வித உணர்வு, தியான நிலைக்கு அடிப்படையாக அமைகிறது. மன ஒருமை மற்றும் சிந்தனையில் தெளிவு ஆகியவற்றின் அடிப்படையில், குளிர்ந்த சந்தனத்தை அங்கே அணிவதன் மூலம் குறிப்பிட்ட கால அளவு வரை மன ஒருமை ஏற்படுவதும் அறியப்பட்டுள்ளது.

மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதிகளில் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும்.
படிகாரம், சுண்ணாம்பு தண்ணீர், மஞ்சள் இவைகளின் கூட்டே குங்குமம் ஆகும். இவை தவிர கலர்பொடிகள் எதுவும் கலங்காத குங்குமத்தை ‘ஹரித்ரா குங்குமம்’ என்று சொல்வார்கள். குங்குமத்தில் சேர்க்கப்படும் மஞ்சள் நாளடைவில் இருப்பு சத்தாக மாற்றம் காண்கிறது. படிகாரம் கிருமிநாசினி என்பதால் தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்குகிறது. தொற்றுநோய்களும் அண்டாது. மூளைக்கு செல்லும் நரம்புகள், அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல் கட்டுப்படுத்தக்கூடிய பகுதி ெநற்றியாகும். குங்குமம் அணிவதால், நெற்றியில் சூடு தணிகிறது.
பெண்களின் தலை வகிட்டின் நுனியை, ‘சீமந்தபிரதேசம்’ என்பார்கள். பெண்கள் அணியும் மாங்கல்யம், பெண்களின் நெற்றி, தலை வகிட்டு பகுதி ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மகாலட்சுமி தேவி வாசம் செய்கிறாள். இந்த இடங்களில் பெண்கள் குங்குமத்தை வைத்துக் கொள்வதால், லட்சுமி தேவியின் அருளை முழுமையாகப் பெற முடியும். மேலும் வீட்டில் உள்ள தரித்திர நிலை விலகும்.
மகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார். அவை:- வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரிச்சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆலவிழுது, தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை, திரு நீற்றுபச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு, நெற் கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானைகொம்பு மண், ஆலஅடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல்இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, கெண்ட, வாசல் நிலை நெற்றி போன்ற இடங் களிலும் லட்சுமி வாசம் செய்கி றாள். ஆனாலும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடி பணிந் தவர்களுக்கே அவள் அருள் புரிகின்றாள்.
எனினும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடிகளை சரண டைந்தவர்களுக்கே நிரந்தரமாக அருள்புரிகின்றாள்.

நாம் செய்யும் சேமிப்பு எந்த நிலையிலும் கரையாது. வீட்டிற்கு வரும் சுமங்கலி களுக்கு குங்குமம் கொடுப்பதால், கொடுப்பவர்- பெறுபவர் இருவருக்குமே மாங்கல்ய பலத்தைப் பெருக்கும். பெண்கள் ஒருவருக்கு குங்குமத்தை கொடுக்கும் முன்பாக, தாங்கள் இட்டுக் கொண்டபிறகே கொடுக்க வேண்டும். ஆண்கள் இரு புருவங்களையும் இணைத்தார் போல் உள்ள இடத்தில், குங்குமத்தை அணிவது அவர்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
மகாலட்சுமி 108 இடங்களில் வாசம் செய்கிறார். அவை:- வெற்றிலை மேற்புறம், விபூதி, வில்வம், மஞ்சள், அட்சதை, பூரணகும்பம், தாமரை, தாமரைமணி, ஜெபமாலை, வலம்புரிச்சங்கு, மாவிலை, தர்ப்பை, குலை வாழை, துளசி, தாழம்பூ, ருத்ராட்சம், சந்தனம், தேவ தாரு, அகில், பஞ்சபாத்திரம், கொப்பரைக்காய், பாக்கு, பச்சைக்கற்பூரம், கலசம், சிருக்சுருவம், கமண்டலநீர், நிறைகுடம், காய்ச்சிய பால், காராம்பசு நெய், குங்கிலியப் புகை, கஸ்தூரி, புனுகு, பூணூல், சாளக்கிராமம், பாணலிங்கம், பஞ்ச கவ்யம், திருமாங்கல்யம், கிரீடம், பூலாங்கிழங்கு, ஆலவிழுது, தேங்காய்க்கண், தென்னம் பாளை, சங்கு புஷ்பம், இலந்தை, நெல்லி, எள், கடுக்காய், கொம்பரக்கு, பவளமல்லி, மாதுளை, திரு நீற்றுபச்சை, அத்திக் கட்டை, ஆகாசகருடன், வெட்டிவேர், அருகம்புல், விளாமிச்சுவேர், நன்னாரிவேர், களாக்காய், விளாம்பழம், வரகு, நெற் கதிர், மாவடு, புற்றுத்தேன், எலுமிச்சை, மணிநாக்கு, சோளக்கதிர், பாகற்காய், அகத்திக்கீரை, காசினிக்கீரை, பசலைக்கீரை, கூந்தல்பனை, மலைத்தேன், வெள்ளி, தங்கம், வைரம், உப்பு, யானை, மூங்கில், பசு நீர்த்தாரை, குளவிக்கூட்டு மண், நண்டுவளை மண், காளை கொம்பு மண், யானைகொம்பு மண், ஆலஅடி மண், வில்வ அடி மண், வெள்ளரிப்பழம், மோதகம், அவல், காதோலை, கடல்நுரை, கண்ணாடி, மோதிரம் (தந்தம்), பட்டு, தையல்இல்லாத புதுத் துணி, பெண்ணின் கழுத்து, ஆணின் நெற்றி, கோவில் நிலை மண், வெயிலுடன் கூடிய மழைநீர், கீரிப்பிள்ளை, நுனிமுடிந்த கூந்தல், படிகாரம், அரச சமித்து, பன்றிக்கொம்பு, சந்திர காந்தக்கல், பிரம்பு, நாயுருவி, கெண்ட, வாசல் நிலை நெற்றி போன்ற இடங் களிலும் லட்சுமி வாசம் செய்கி றாள். ஆனாலும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடி பணிந் தவர்களுக்கே அவள் அருள் புரிகின்றாள்.
எனினும் ஆணவம் அகற்றி, குருவின் திருவடிகளை சரண டைந்தவர்களுக்கே நிரந்தரமாக அருள்புரிகின்றாள்.
×

X