search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 121435"

    பல்வேறு வகையான ஊத்தப்பம் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று மாலை நேரத்தில் சாப்பிட, எளிய முறையில் செய்யக்கூடிய தக்காளி ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    தக்காளிப்பழம் - 2,
    மிளகு சீரகத்தூள் - 1 டீஸ்பூன்,
    உப்பு - கால் டீஸ்பூன்,
    எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்.



    செய்முறை :

    தக்காளிப்பழத் துண்டுகளை வட்ட வட்டமாக நறுக்கி கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை ஊத்தப்பமாக ஊற்றி தக்காளிப்பழத் துண்டுகளை அதன் மேல் பரப்பவும்.

    அடுத்து இதில் உப்பு, மிளகு சீரகத்தூள் தூவி சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிடவும்.

    நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டுப் பொன்னிறமானதும் எடுத்து சட்னிகளுடன் பரிமாறவும்.

    சூப்பரான தக்காளிப்பழ ஊத்தப்பம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கேழ்வரகில் தயாரிக்கப்பட்ட உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிப்பதோடு, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவுகின்றன.
    தேவையான பொருட்கள் :

    கேழ்வரகு மாவு - தேவையான அளவு,
    கேரட் - 3,
    வெங்காயம் - 2,
    பச்சை மிளகாய் - 2,
    கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு,
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போட்டு உப்பு சேர்த்து கலந்து தோசை மாவை விட சற்று திக்காக கரைத்து புளிக்க விடவும்.

    மற்றொரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, துருவிய கேரட் போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அது சூடானதும், மாவை கல்லில் ஊற்றி சுற்றி எண்ணெய் ஊற்றவும்.

    ஊத்தப்பத்தின் மீது, கலந்து வைத்துள்ள கேரட், வெங்காய, மிளகாய் கலவையை தேவையான அளவு தூவி, நன்கு வேக விடவும்.

    தோசை ஒரு பக்கம் வெந்ததும், அதை மறுபக்கம் திருப்பி போட்டு வேகவைக்கவும்.

    இருபுறமும் நன்கு வெந்ததும் எடுத்து சூடாக பரிமாறவும்.

    சத்தான கேழ்வரகு - கேரட் ஊத்தப்பம் ரெடி!

    கேழ்வரகு - கேரட் ஊத்தப்பத்தை தேங்காய் மற்றும் தக்காளி சட்னிகளுடன் பரிமாறவும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் சிறுதானியங்களை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பு, கேரட் சேர்த்து ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கம்பு மாவு - 1 கப்
    இட்லிமாவு - 1/4 கப்
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    கேரட் - 2
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, இட்லிமாவு, சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துக்கொள்ளவும்..

    அத்துடன் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கேரட் துருவல் போட்டு நன்கு கலந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சுவையான கம்பு - கேரட் ஊத்தப்பம் ரெடி..

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீரையில் செய்த பல்வேறு உணவுகளை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கீரையை வைத்து சூப்பரான ஊத்தப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முளைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    அரைக்கீரை  - ஒரு கைப்பிடி அளவு,
    பொன்னாங்கண்ணிக்கீரை - ஒரு கைப்பிடி அளவு,
    இட்லி அரிசி - 250 கிராம்,
    உளுத்தம்பருப்பு - 100 கிராம்,
    வெங்காயம் - ஒரு கப்,
    இஞ்சி - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - ஒன்று
    எண்ணெய் - 100 மில்லி,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கீரைகளை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரிசியையும் உளுத்தம்பருப்பையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை சேர்த்து வதக்கிய பின்னர் முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரையை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி அரைத்து வைத்த மாவுடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் மாவை ஊத்தப்பங்களாக வார்த்து, சுற்றிலும் எண்ணெய் விட்டு சுட்டு எடுத்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த கீரை ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    காய்கறிகள், வேர்க்கடலை பொடி தூவி ஊத்தப்பம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊத்தப்பத்தை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோசை மாவு - 1 கப்,
    வேர்க்கடலைப் பொடி - தேவையான அளவு,
    வெங்காயம், தக்காளி - தலா 1,
    கொத்தமல்லி -  சிறிது,
    தோல் சீவிய இஞ்சித்துருவல் - 1 டீஸ்பூன்,
    கேரட் துருவல் - 5 டீஸ்பூன்,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    தோசை மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, கேரட் துருவல், உப்பு, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    தோசைக் கல்லை அடுப்பில் வைத்து மாவை சிறிய ஊத்தப்பங்களாக ஊற்றி, அதன் மீது தேவையான அளவு வேர்க்கடலைப் பொடியை தூவவும்.

    பிறகு சுற்றிலும் எண்ணெய் விட்டு மூடி போட்டு வேகவிட்டு எடுத்து சூடாக பரிமாறவும்.

    சூப்பரான வேர்க்கடலைப் பொடி மசாலா ஊத்தப்பம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×