search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிராகரிப்பு"

    பொள்ளாச்சி பாலியல் வழக்கின் விசாரணையை நீதிபதி கண்காணிக்க வேண்டும் என்ற பெண் வக்கீல்களின் கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு நிராகரித்தது. #PollachiAbuseCase #PollachiCase #MadrasHC
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹில் ரமானி ரோகிணி நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது பெண் வக்கீல்கள் சிலர் ஆஜராகி, பொள்ளாச்சியில் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணையை ஐகோர்ட்டு மேற்பார்வையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    அதற்கு தலைமை நீதிபதி ஏற்கனவே இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது எனவே அந்த வழக்கு விசாரணையை இந்த ஐகோர்ட்டு கண்காணிக்க வேண்டிய அவசியமில்லை என்று பெண் வக்கீல்களின் கோரிக்கைகளை நிராகரித்தனர். #PollachiAbuseCase #PollachiCase #MadrasHC

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று காங்கிரஸ் எழுப்பிய கோரிக்கையை அரசு நிராகரித்ததால் மக்களவையில் அமளி ஏற்பட்டது. #WinterSession #CongDemandsJPC
    புதுடெல்லி:

    பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், ரபேல் விவகாரம், மேகதாது விவகாரம் மற்றும் மாநிலம் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்களும் வழங்கப்படுகின்றன. கூட்டத்தொடரின் 7-வது நாளான இன்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்களவையில் காங்கிரஸ் உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.



    மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்பிக்களும், ஆந்திராவுக்கு சிறப்பு மாநில அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி எம்பிக்களும் முழக்கங்கள் எழுப்பினர். இதுஒருபுறமிருக்க ஆளும் பாஜக எம்பிக்கள் சிலர், தங்கள் இருக்கைகளில் இருந்தபடியே சில பிரச்சினைகளை எழுப்பினர். இதன் காரணமாக அவையில் கடும்  கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

    இதனால் அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 12 மணிக்கு அவை கூடியபோதும் எதிர்க்கட்சிகளின் அமளி நீடித்தது. ரபேல் ஒப்பந்தத்தால் அரசுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மக்களவை காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தினார்.

    இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமர், ரபேல் விவகாரம் தொடர்பாக அரசு விவாதிக்க தயாராக உள்ளது என்றார். ஆனால், பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்தார்.

    கோரிக்கை ஏற்கப்படாததால் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பினர். அவையின் மையப்பகுதிக்கு சென்று கோஷமிட்டனர். மற்ற கட்சிகளின் எம்பிக்களும் அங்கு சென்று அமளியில் ஈடுபட்டதால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு அவை கூடியபோது வாடகைத்தாய் ஒழுங்குமுறை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. #WinterSession #CongDemandsJPC
    பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார். #Saarc #Pakistan #Modi #Indiaboycotts #SAARCsummit
    புதுடெல்லி:

    சார்க் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தெற்காசிய கூட்டமைப்பு மாநாட்டை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு உறுப்பு நாடு பொறுப்பேற்று நடத்தும். அதன்படி இந்த ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற உள்ள சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளும்படி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவு செய்தி தொடர்பாளர் முகம்மது பைசல் நேற்று தெரிவித்திருந்தார்.
     
    இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என்று வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    பாகிஸ்தானின் அழைப்பை நாங்கள் ஏற்கப்போவதில்லை. நான் ஏற்கனவே தெரிவித்திருந்ததைப்போல் இந்தியாவில் பயங்கரவாத செயல்பாடுகளை பாகிஸ்தான் நிறுத்தும்வரை அந்நாட்டுடன் எந்தப் பேச்சுக்கும் இடமில்லை. எனவே, பாகிஸ்தானில் நடைபெறும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என சுஷ்மா குறிப்பிட்டுள்ளார்.

    கடைசியாக 2014-ம் ஆண்டு காத்மாண்டுவில் நடைபெற்ற சார்க் மாநாட்டில் மோடி பங்கேற்றார். 2016-ம் ஆண்டு பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் மாநாடு நடைபெற இருந்தது. அந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உரி பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 19 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.



    இதனால் இந்தியா மாநாட்டில் பங்கேற்க முடியாத நிலையை விளக்கியது. இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இந்த அமைப்பில் பங்கேற்றுள்ள வங்காளதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் ஆகிய உறுப்பு நாடுகளும் பங்கேற்க மறுத்துவிட்டதால் கடந்த சார்க் மாநாடு நிறுத்திவைக்கப்பட்டது நினைவிருக்கலாம். #Saarc #Pakistan #Modi #Indiaboycotts #SAARCsummit 
    அதிமுகவின் சட்டவிதிகளில் செய்யப்பட்ட திருத்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்ற வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. #ADMK #DelhiHighCourt
    புதுடெல்லி:

    அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா இறந்த பிறகு, அக்கட்சியில் இனி பொதுச்செயலாளர் பதவி இல்லை எனவும், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவி மட்டுமே உள்ளது எனவும் கட்சி முடிவு செய்தது. மேலும், அதிமுக சட்டதிட்டங்களில் சில திருத்தங்களும் செய்யப்பட்டன.

    இதை எதிர்த்து கே.சி. பழனிசாமி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கை விசாரிக்கும் பொறுப்பு தலைமை தேர்தல் ஆணையத்துக்கு மாற்றப்பட்டது. இந்த மாற்றத்தை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி, பன்னீர் செல்வம் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு அளித்து இருந்தனர்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, அதிமுகவில் சட்டவிதிகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்ற மனுவுக்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம், மற்றும் சசிகலா உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் 3 வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    மேலும், 3 வாரத்துக்குள் பதில் அளிக்கப்பட்டவுடன், அடுத்த 4 வார காலத்துக்குள் அதனை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்,  ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ்., மனுவை நிராகரித்து தீர்ப்பளித்தனர். #ADMK #DelhiHighCourt
    ஷீனா போரா கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு இந்திராணி முகர்ஜி சிபிஐ நீதிமன்றத்தில் அளித்திருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. #SheenaBoraMurderCase #IndraniMukerjea #CBICourt
    மும்பை:

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி முகர்ஜி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாஸ் உள்ளிட்டோருக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜியுடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

    இதையடுத்து, கடந்த மாதம் இந்திராணி முகர்ஜி ஜாமீன் கேட்டு சி.பி.ஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு சிபிஐ நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

    இந்நிலையில், தனது மகள் ஷீனா போராவை கொலை செய்த வழக்கில் இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனுவை சிபிஐ நீதிமன்றம் நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.  #SheenaBoraMurderCase #IndraniMukerjea #CBICourt
    மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் தனது காதலை ஏற்க மறுத்ததால் சிறுவனின் முகத்தை பிளேடால் கிழித்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    மும்பை:

    காதல் விவகாரங்களில் பெண்கள் மட்டுமன்றி ஆண்களும் சமீபகாலங்களில் தாக்கப்படுவது நடந்துகொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாக, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், தனது காதலை ஏற்க மறுத்ததால் சிறுவனின் முகத்தை பிளேடால் கிழித்து அந்த பெண் தனது ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    இதுதொடர்பான விசாரணையில், அந்த பெண் சிறுவனை தனது வீட்டுக்கு அழைத்து காதலை சொன்னபோது அதனை அவன் ஏற்க மறுத்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த பெண், பிளேடால் அவனது முகத்தில் மிக ஆழமாக கிழித்து ரத்த வெள்ளத்தில் அவனை அங்கேயே விட்டுவிட்டார்.

    இந்த வழக்கில் அந்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திய போது, போலீசார் முன்னிலையில் தனது கையை கிழித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து, அந்த பெண்ணை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
    வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை நீதிபதியாக்கும் விவகாரத்தில் கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு மீண்டும் நிராகரித்துள்ளது. #CollegiumJudges #SupremeCourt
    புதுடெல்லி:

    உத்தரபிரதேசத்தின் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குகளுக்காக தொடர்ந்து ஆஜராகி வரும் முகமது மன்சூர், பஷரத் அலிகான் ஆகிய 2 வக்கீல்களை அந்த கோர்ட்டின் நீதிபதிகளாக நியமிக்குமாறு மத்திய அரசுக்கு கொலிஜியம் அமைப்பு பரிந்துரைத்தது. ஆனால் அவர்கள் இருவர் மீதும் புகார்கள் இருப்பதாக கூறி அந்த பரிந்துரையை மத்திய அரசு ஏற்கனவே திருப்பி அனுப்பியது.

    எனினும் அந்த புகார்கள் அனைத்தும் அற்பமானவையே எனக்கூறி மீண்டும் அவர்களது பெயரை கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை 2½ ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் போட்டிருந்த மத்திய அரசு, தற்போது மீண்டும் நிராகரித்து உள்ளது. இதுதொடர்பாக மறு ஆய்வு செய்யுமாறு கூறி, கொலிஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு திருப்பி அனுப்பி உள்ளது.

    கொலிஜியத்தில் உறுப்பினராக இருந்த சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் கடந்த வாரம் ஓய்வு பெற்ற நிலையில், புதிய உறுப்பினரை நியமித்த பின்னரே இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

    இதற்கிடையே காஷ்மீர் ஐகோர்ட்டில் நீதிபதியாக நியமிக்கக்கோரி அனுப்பி வைக்கப்பட்ட வக்கீல் நஜிர் அகமது பெய்க்கின் பெயரையும் திருப்பி அனுப்ப மத்திய அரசு முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் கணவர் முஸ்லீம் என்பதால் பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    லக்னோ:

    உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த முஹம்மது சித்திக் என்பவருக்கும் இந்து மதத்தை சேர்ந்த தன்வி செத் என்பவருக்கும் கடந்த 2007-ல் கலப்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர் பாஸ்போர்ட் பெறுவதற்காக லக்னோவில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர்.

    இதையடுத்து ஜூன் 20-ம் தேதி நடைபெற்ற நேர்காணலின் போது 3 சுற்றில் தன்வி நிராகரிக்கப்பட்டார். கணவர் இஸ்லாமியராக இருக்கிறார் என அதிகாரி கேள்வி எழுப்பியதாகவும், அதற்கு தன்வி “எனது கணவர் முஸ்லிமாக இருப்பதில் எனது குடும்பத்திற்கே எந்த பிரச்சினையும் இல்லை” என பதிலளித்ததாகவும் கூறப்படுகிறது. தன்வியின் பதிலால் ஆத்திரமடைந்த அதிகாரி அவரை கடுமையான வார்த்தைகளால் திட்டி வெளியேறும் படி கூறியுள்ளார்.

    அதுமட்டுமின்றி, தன்வியின் கணவர் சித்திக்கை அழைத்து பேசிய அந்த அதிகாரி, நீங்கள் இந்து மதத்திற்கு மாறிவிட வேண்டும், இல்லையெனில் உங்கள் திருமணம் செல்லுபடி ஆகாது, என அவரையும் அவமானப்படுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக பாஸ்போர்ட் அலுவலத்தில் இருந்த ஆர்.பி.ஓ அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இருவரும் நடந்த சம்பவம் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை டேக் செய்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.  அந்த பதிவில் “ஆதங்கத்துடன் இதை பதிவிடுகிறேன், கணவர் முஸ்லிம் என்பதால் எனது பாஸ்போர்ட் நிராகரிக்கப்பட்டுள்ளது, 12 வருட திருமண வாழ்க்கையில், இதுபோன்று ஒரு அவமானத்தை வேறு எங்கும் சந்தித்ததில்லை, பாஸ்போர்ட் அலுவலகத்தில் இதுபோன்று நிகழும் என எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.



    இதைத்தொடர்ந்து, குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரி விகாஸ் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டு, இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

    மேலும், வெளிவிவகாரத்துறை செயலாளர் டி.எம்.முலாய் உத்தரவின் அடிப்படையில் அந்த தம்பதியினருக்கு தற்போது பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. 
    பாகிஸ்தானில் ஜூலை 25-ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் அதிபர் முஷரப் தாக்கல் செய்திருந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. #Pakistan #PervezMusharraf
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் நாட்டில் ஜூலை 25-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டின் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப் தேர்தலில் போட்டியிட அனுமதி அளிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,  ஜூன் 13-ம் தேதி அன்று நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன், தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்திருந்தனர்.

    ஆனால் குறிப்பிட்ட தேதியில் முஷரப் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என முஷரப்பின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

    இதையடுத்து வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நீதிமன்றம், முஷரப் தேர்தலில் போட்டியிடுவதற்கு அளிக்கப்பட்ட அனுமதியையும் அதிரடியாக திரும்ப பெற்றது.

    இந்நிலையில், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக முஷரப் அளித்திருந்த வேட்பு மனுவை அதிகாரிகள் நிராகரித்தனர். நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து வரும் 22-ம்  தேதி மேல்முறையீடு செய்ய இருப்பதாக முஷரப் தரப்பு தெரிவித்துள்ளது. #Pakistan #PervezMusharraf
    ஜூன் 22-ந் தேதி பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள ஓய்வு பெறும் நீதிபதி செல்லமேஸ்வரரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். #Justice #Chelameswar
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதி ஜே.செல்லமேஸ்வர், ஜூன் 22-ந் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால், கோடை விடுமுறைக்கு முந்தைய கடைசி வேலைநாளான மே 18-ந் தேதி, அவருக்கு பிரிவு உபசார விழா நடத்த சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் முன்வந்துள்ளது.

    இதுதொடர்பாக, கடந்த வாரம், நீதிபதி செல்லமேஸ்வரை பார் அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்து அழைப்பு விடுத்தபோது, அவர் அதை ஏற்க மறுத்து விட்டார். பார் அசோசியேஷன் செயற்குழு உறுப்பினர்கள், நேற்று நீதிபதியை அவரது இல்லத்தில் சந்தித்து அவரது மனதை மாற்ற முயன்றனர். ஆயினும், அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக வர இயலாது என்று கூறி விட்டார்.

    இத்தகவல்களை சுப்ரீம் கோர்ட்டு பார் அசோசியேஷன் தலைவர் விகாஸ் சிங் கூறினார். நீதிபதி செல்லமேஸ்வர், தொடர்ந்து 3-வது புதன்கிழமையாக நேற்று சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்லவில்லை. வழக்குகள் ஒதுக்கீடு தொடர்பாக, தலைமை நீதிபதிக்கு எதிராக பேட்டி அளித்தவர் நீதிபதி செல்லமேஸ்வர் என்பது குறிப்பிடத்தக்கது.  #Justice #Chelameswar 
    ×