search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தரையிறக்கம்"

    எத்தியோப்பியா மற்றும் இந்தோனேசியாவில் நிகழ்ந்த கோர விபத்தைத் தொடர்ந்து, அழுத்தம் அதிகரித்த நிலையில், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை தரையிறக்க அமெரிக்காவும் உத்தரவிட்டுள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    வாஷிங்டன்:

    எத்தியோப்பியாவில் ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர்.
     
    இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், இந்தியா, சீனா, எத்தியோப்பியா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், கனடா உள்ளிட்ட நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்துள்ளன. மேலும் சில நாடுகளும் விமான பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றன. எனவே, போயிங் நிறுவனத்துக்கும், அமெரிக்க அரசுக்கும் அழுத்தம் அதிகரித்தது.

    ஆனால், உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதற்கட்ட ஆய்வில், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானத்தில் செயல்திறன் குறைபாடுகள் கண்டறியப்படவில்லை என்றும், விமானங்களை தரையிறக்குவதற்கு எந்த அடிப்படை முகாந்தரமும் இல்லை என்றும் அமெரிக்க விமான போக்குவரத்து கழகம் விளக்கம் அளித்தது.

    ஆனால், பாதுகாப்பு குறைபாடு தொடர்பான சந்தேகங்களும், அச்சமும் விமான நிறுவனங்களிடம் எழுந்தது. எனவே கடும் அழுத்தங்களைத் தொடர்ந்து, போயிங் 737 மேக்ஸ் 8 மற்றும் போயிங் 737 மேக்ஸ் 9 ரக விமானங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இந்த அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ளார்.

    இந்தோனேசியாவில் நடைபெற்ற விமான விபத்துக்கும், எத்தியோப்பியா விமான விபத்துக்கும் ஒற்றுமைகள் தென்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போயிங்737 மேக்ஸ் ரக விமானங்கள் வாங்குவதற்கான உத்தரவையும் அமெரிக்க விமான போக்குவரத்து நிர்வாகம் ரத்து செய்துள்ளது.

    அமெரிக்காவில் மொத்தம் 74 ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்கள் பயன்பாட்டில் உள்ளன. பெரும்பாலும் யுனைட்டெட் ஏர்லைன்ஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் மற்றும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்த விமானங்களை இயக்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #Boeing #FAA
    போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தரையிறக்கிய பின்னர், இன்று 35 விமானங்களை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ரத்து செய்ய உள்ளது. #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
    புதுடெல்லி:

    எத்தியோப்பியா ஏர்லைன்சுக்கு சொந்தமான ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்துக்குள்ளானதில் இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் இந்தோனேசியாவில் கடந்த அக்டோபரில் விபத்துக்குள்ளானதில் 189 பேர் பலியாகினர். இதனால், ‘போயிங் 737 மேக்ஸ் 8’ ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்ததால் சீனா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அந்த ரக விமானங்களை இயக்க தற்காலிக தடை விதித்தன.



    இந்தியாவிலும் போயிங் 737 மேக்ஸ்-8 விமானங்களை தரையிறக்க சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) முடிவு செய்தது. அதன்படி போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

    அதன்பின்னர், ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்கள் நேற்று 20 விமானங்களின் சேவையை ரத்து செய்தன. இதனால் சுமார் 300 பயணிகள் பாதிக்கப்பட்டனர். இன்று 35 விமானங்களின் சேவையை ஸ்பைஸ்ஜெட் ரத்து செய்ய உள்ளது.

    முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு எந்தவித கூடுதல் கட்டணமும் பெறாமல் அவர்களுக்கு தேவையான தங்கும் வசதியை செய்துகொடுக்க வேண்டும் என்றும் ஸ்பைஸ்ஜெட் மற்றும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  #Boeing737MAX8 #EthiopiaPlaneCrash #DGCA
    தொழில்நுட்ப கோளாறு காரணமாக அசாம் மாநிலத்தின் லக்கிம்பூர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. #ArmyHelicopter
    தேஸ்பூர்:

    அசாம் மாநிலம் தேஸ்பூர் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அதில் பைலட் உள்பட் மூன்று ராணுவ அதிகாரிகள் பயணித்தனர்.

    இந்நிலையில், ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதையறிந்த பைலட், லக்கிம்பூர் பகுதியில் உள்ள கல்லூரி மைதானத்தில் ஹெலிகாப்டரை அவசரமாக தரையிறக்கினார்.

    இதுகுறித்து ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து சென்று ராணுவ அதிகாரிகளையும், பைலட்டையும் பத்திரமாக மீட்டனர். #ArmyHelicopter
    ×