search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்கள்"

    இளம்பெண்களிடையே டப்ஸ்மாஷ் மோகம் அதிகரித்துள்ள நிலையில் அவர்களின் கவர்ச்சி நடனம், குத்தாட்டம் ஆடும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. #Dubsmash
    சென்னை:

    ஆன்ட்ராய்டு செல்போன்களின் ஆதிக்கம் அதிகரித்த பின்னர் இளம்பெண்கள் பலர் அதில் மூழ்கியே கிடக்கிறார்கள்.

    செல்போனில் ‘வாட்ஸ்அப்’ வசதி வந்த பின்னர் பிடித்தவர்களோடு பேசி பொழுதை கழித்தும் வருகிறார்கள். சமீப காலமாக ‘டப்ஸ்மாஷ் மோகம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது.

    தங்களுக்கு பிடித்த சினிமா கதாநாயகர்கள் மற்றும் கதாநாயகிகளை போல வசனம் பேசி... வீடியோக்களை உருவாக்கி அதனை சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு வருகிறார்கள். இது போன்ற வீடியோக்கள் ரசிக்கும் வகையில் சிரிக்க வைப்பதாகவே உள்ளது.

    ஆனால் இந்த டப்ஸ்மாஷ் மோகம் இளம்பெண்களை எல்லை மீறிப் போகச் செய்துள்ளது.

    தங்களை சினிமா கதாநாயகிகளாக நினைத்துக் கொண்டு அவர்களை போல அங்க அசைவுகளை வெளிப்படுத்தி கவர்ச்சி நடனம் ஆடி அதனை வீடியோவாக பதிவு செய்து பல பெண்கள் வெளியிட்டுள்ளனர். இது போன்ற வீடியோக்களை நடுத்தர குடும்ப பெண்களே நடித்துள்ளனர்.

    சினிமா நடிகைகள் போல சேலையை காற்றில் பறக்க விட்டும், இறுக்கமான உடைகளை அணிந்த படியும் இளம்பெண்கள் பலர் குத்தாட்டம் போடும் வீடியோக்களும் பரவி வருகிறது. மல... மல... பாடலுக்கு நைட்டி அணிந்தபடியே 2 பெண்கள் ஆடும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதே போல சன்யாசம் போனவனும் சமயம் வந்தா சாமி இல்ல... சக்தி இருந்தா... என்று தொடங்கும் கிளு கிளுப்பான பாடலுக்கு பெண் ஒருவர் காட்டும் கண் இசைவு கவர்ச்சி நடிகைகளையே மிஞ்சும் வகையில் அமைந்துள்ளது.

    இப்படி பெண்களின் கவர்ச்சி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வரிசை கட்டி நிற்கும் வேளையில், முரட்டு பெண்கள் பலர் தங்களை தாதாக்களாக நினைத்துக் கொண்டு மிரட்டும் வீடியோக்களும் வெளியாகி உள்ளன.

    அது போன்ற பெண்கள் தொடையை தட்டியபடி கூலிங்கிளாஸ் அணிந்த நிலையில் சவால் விடும் காட்சிகள் கொடூர வில்லன்களின் நடிப்பையே மிஞ்சும் வகையில் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு குன்றத்தூரில் 2 குழந்தைகளை கொன்ற அபிராமியின் டப்ஸ்மாஷ் வீடியோக்களும் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. #Dubsmash
    திண்டுக்கல் அருகே பிளஸ்-2 மாணவிகள் உள்பட 4 இளம்பெண்கள் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    வடமதுரை:

    திண்டுக்கல் அருகே உள்ள சிலுவத்தூர் ஆலம்பட்டியைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் கரந்தி (வயது 16). செங்குறிச்சியில் உள்ள பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். இவரை திருமணம் செய்யும் நோக்கத்தில் மாமரத்துப் பட்டியைச் சேர்ந்த ராமன் (22) தனது மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்றார். இது குறித்து அவரது தாய் மீனாட்சி வடமதுரை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    திண்டுக்கல் அருகே உள்ள சுக்காம்பட்டி பூசாரி பட்டியைச் சேர்ந்தவர் தீபா (18). பிளஸ்-2 மாணவி இவரை திருமணம் செய்யும் நோக்கத்தில் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (20) என்பவர் கடத்திச் சென்றுள்ளார்.

    அய்யலூர் அருகே உள்ள சம்பக்காட்டு பள்ளம் பகுதியைச் சேர்ந்த பழனி மகள் மஞ்சுளா (21). இவரை செங்குறிச்சி மாமரத்துப் பட்டியைச் சேர்ந்த சவுந்தரம் (24) என்பவர் கடத்திச் சென்றார்.

    அய்யலூர் அருகே உள்ள பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தேக்கமலை (20). இவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பழனியாண்டி மகள் காயத்திரி (19) என்பவரை கடத்திச் சென்றார். இது குறித்து அவர்களது பெற்றோர்கள் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள காதல் ஜோடிகள் மாயமாவதும் வெளியூரில் திருமணம் செய்து கொண்டு பின்னர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது முகூர்த்த நாள் இன்று வருவதை மனதில் வைத்து நேற்றே 4 பெண்கள் கடத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இவர்கள் திருமணம் செய்து கொண்டு போலீசில் விரைவில் தஞ்சமடைவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே நாளில் மாணவிகள் உள்பட 4 இளம்பெண்கள் கடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    ×