search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முகநூல்"

    ஆண்மை குறைபாடு சிகிச்சைக்கு பணம் கொடுக்க மறுத்ததால் பெண்ணின் ஆபாச வீடியோவை, கணவர் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து முகநூலில் பதிவிட்டுள்ளார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பெங்களூரு:

    பெங்களூரு பி.டி.எம். லே-அவுட்டில் வசித்து வருபவர் பிரஜா(வயது 32, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் 26 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் பிரஜாவுக்கு ஆண்மை குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த அவருடைய மனைவி தன்னை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டதாக கூறி கணவர் பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக பிரஜாவின் சகோதரர் மற்றும் நண்பருடன் உடலுறவில் ஈடுபடும்படி அவர்கள் அந்த பெண்ணிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. இதற்கு அந்த பெண் மறுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் கோபமடைந்த பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் உணவில் மயக்க மருந்து கலந்து அந்த பெண்ணுக்கு கொடுத்தனர். அதை சாப்பிட்ட அந்த பெண் மயங்கினார். இந்த வேளையில் அவர்கள் இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

    இதன் தொடர்ச்சியாக பிரஜாவின் ஆண்மை குறைபாட்டை சரிசெய்வதற்கான சிகிச்சைக்கு தந்தையிடம் இருந்து பணம் வாங்கி வரும்படி கூறி அவர்கள் அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்தனர். இதனால் மனம் உடைந்த அந்த பெண் தனது தாய் வீட்டுக்கு வந்தார்.

    இதனால் ஆத்திரமடைந்த பிரஜா மற்றும் அவருடைய குடும்பத்தினர் அந்த பெண்ணின் முகநூல்(பேஸ்புக்) பக்கத்தை முடக்கி, ஆபாச வீடியோ, படங்களை பதிவேற்றம் செய்துள்ளனர். அத்துடன் அந்த பெண் விபசார தொழிலில் இருப்பதாக கூறி முகநூல் வழியாக பிறருக்கு அவர்கள் குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிகிறது. இதுபற்றி அறிந்து மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளான அந்த பெண் சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்டமாக முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆபாச வீடியோ, படங்களை அழிக்கும் முயற்சியில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    விஷம் குடிப்பதை முகநூலில் நேரலையாக பதிவேற்றிய பெண் சமூக ஆர்வலரை, நண்பர்கள் துரிதமாக செயல்பட்டு போலீசார் உதவியுடன் மீட்டனர். #Maharashtra #CommitSuicide #Live #SocialMedia
    மும்பை:

    மராட்டிய மாநிலம் லாத்தூர் பகுதியை சேர்ந்த விருசாலி காம்லே (வயது 30) என்ற பெண், ‘பதான் சேனா’ என்ற அமைப்பில் இணைந்து சமூக ஆர்வலராக பணியாற்றி வந்தார். இந்த அமைப்பில் அவருடன் பணியாற்றி வந்த சிலர், விருசாலிக்கு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

    இதனால் விரக்தி அடைந்த அவர் சமீபத்தில் அந்த அமைப்பில் இருந்து விலகினார். ஆனாலும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்த அவர் தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவை எடுத்தார். மேலும் அதை முகநூலில் நேரலையாக பதிவிடவும் எண்ணினார்.

    அதன்படி நேற்று முன்தினம் தனது முகநூல் மூலமாக நேரலையில் பேசினார். அதில், தான் வாழ்க்கையில் விரக்தி அடைந்ததால் கொசு மருந்தை குடித்து தற்கொலை செய்துகொள்ள போவதாக தெரிவித்தார். பின்னர் திடீரென நேரலையிலேயே அதை குடிக்கவும் செய்தார்.

    அப்போது அவரது முகநூல் கணக்கில் இருந்த நண்பர்கள் பலர் இதைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அதில் சிலர் துரிதமாக செயல்பட்டு அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்து, விருசாலியை மீட்குமாறு வேண்டிக்கொண்டனர்.

    அதன்பேரில் உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார் விருசாலியின் வீட்டை கண்டறிந்து அங்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் போலீசார் சேர்ந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தற்கொலைக்கு முயன்ற பெண் சமூக ஆர்வலர் முகநூல் நேரலை பதிவு காரணமாக காப்பாற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள் என முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு தலைமை தேர்தல் கமிஷன் அவசர உத்தரவை பிறப்பித்துள்ளது. #ElectionCommission #Twitter #Facebook
    புதுடெல்லி:

    மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநில சட்டசபைகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. 2 நாட்களுக்கு முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் முடிந்த நிலையில் வாக்குப்பதிவு நாளான நேற்று பா.ஜனதாவும், காங்கிரசும் இணையதள சமூக ஊடகங்கள் மூலம் விளம்பரம் செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.



    இதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் கமிஷன் டுவிட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு ஒரு அவசர உத்தரவை பிறப்பித்தது. அதில், ‘தேர்தல் பிரசாரம் முடிந்த பிறகு எந்த விதத்திலும் தேர்தல் தொடர்பான விளம்பரங்களும், பிரசாரங்களும் இடம்பெறக்கூடாது. எனவே தேர்தல் விதிமுறைகளை மீறாமல் நடந்து கொள்ளுங்கள்’ என்று கூறப்பட்டு உள்ளது. #ElectionCommission #Twitter #Facebook 
    முகநூல் மூலம் காதலித்து பட்டதாரி பெண்ணிடம் ரூ.2½ லட்சம் மற்றும் 25 பவுன் நகைகளை மோசடி செய்த நடனக்கலைஞரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    கோயம்புத்தூர் சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த எம்.எஸ்.சி. பட்டதாரி இளம்பெண் ஒருவர், சென்னை போரூர் பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி உள்ளார். அங்கிருந்தவாறே அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும் வடபழனி சாலிகிராமம், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம் பகுதியை சேர்ந்த விக்னேஸ்வர் (வயது 25) என்ற வாலிபருக்கும் இடையே கடந்த 2017-ம் ஆண்டு முகநூல் வழியாக நட்பு ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 10-ம் வகுப்பு வரை படித்துள்ள விக்னேஸ்வர் நடனக்கலைஞர் ஆவார். சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

    இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இளம்பெண்ணிடம் அவர் நெருங்கிப்பழகினார். மேலும் திருமணம் செய்வதாகவும் கூறி அந்த இளம்பெண்ணிடம் இருந்து ரூ.2½ லட்சம் மற்றும் 25 பவுன் நகையையும் பெற்று உள்ளார். இதைத்தொடர்ந்து, தன்னை திருமணம் செய்யுமாறு அந்த இளம்பெண் விக்னேஸ்வரிடம் கூறினார். ஆனால் பல்வேறு சாக்குப்போக்குகளை சொல்லி விக்னேஸ்வர் காலம் கடத்தி வந்தார். ஒரு கட்டத்தில் விக்னேஸ்வர் தன்னை ஏமாற்றுவதை புரிந்து கொண்ட அந்த இளம்பெண், அவரிடம் முறையிட்டார்.

    அப்போது, ‘உன்னை நான் திருமணம் செய்வும் மாட்டேன், வாங்கிய பணம் மற்றும் நகையையும் திருப்பி தரமுடியாது’ என விக்னேஸ்வர் கூறினார். மேலும் பணம் மற்றும் நகையை கேட்டாலோ, வெளியில் கூறினாலோ, இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படம் மற்றும் வீடியோவை முகநூலில் வெளியிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், இது குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விக்னேஸ்வரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேறு யாரையும் இதைப்போல் அவர் ஏமாற்றி பணம் பறித்துள்ளரா? எனவும் விசாரித்து வரும் போலீசார், விக்னேஸ்வரின் முகநூல் கணக்குகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    பட்டதாரி பெண்ணை முகநூல் மூலம் காதலித்து 25 பவுன் நகை மற்றும் ரூ.2½ லட்சத்தை மோசடி செய்த நடனக்கலைஞர் கைது செய்யப்பட்ட விவகாரம் அம்பத்தூர் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #Facebook #JewelTheft 
    அரியானா மாநிலம் குர்கான் பகுதியில் பேஸ்புக் நண்பர் மூலம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #facebookabuse
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் குர்கான் பகுதியியைச் சேர்ந்த ஒரு பெண், கடந்த 1 வருடமாக பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் ராகுல் என்பவருடன் நட்புடன் பழகி வந்துள்ளார்.

    தற்போது தனது பேஸ்புக் நண்பர் ராகுல் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ள அந்த பெண், ராகுல் தன்னை பலமுறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளதாகவும், அதனை வீடியோ பதிவு செய்து மிரட்டுவதாகவும் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

    அந்த பெண்ணின் புகாரின் அடிப்படையில், ராகுல் மீது வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் அவரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.



    பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பெண்கள் பாதிக்கப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதுபோன்ற சமூக வலைதளங்கள் மீதான மோகமும் அதிகரித்து வருவது வருந்தத்தக்க உண்மையாகும். #facebookabuse
    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து பதில் மனு தாக்கல் செய்யாத யாகூ, முகநூல் வலைத்தளங்களுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Google #Facebook #Fine
    புதுடெல்லி:

    சமூக வலைத்தளங்களில் வெளியாகும் ஆபாச வீடியோ குறித்து ஐதராபாத்தை சேர்ந்த பிரஜாவாலா என்ற தொண்டு நிறுவனம் 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி எச்.எல்.தத்துவுக்கு 2 வீடியோ ஆதாரங்களுடன் ஒரு கடிதம் எழுதியது. அதில் ஆபாச வீடியோ காட்சிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில் சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.



    இந்த வழக்கு நீதிபதிகள் மதன் பி.லோகுர், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. முன்னதாக இந்த வழக்கு கடந்த மாதம் 16-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது அனைத்து சமூக வலைத்தளங்களும் தாங்கள் இதுபற்றி எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்த பதிலை அடுத்த விசாரணையின்போது தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். ஆனால் முக்கிய வலைத்தளங்கள் இதுபற்றி எந்த பதில் மனுவையும் நேற்று தாக்கல் செய்யவில்லை.

    இதையடுத்து நீதிபதிகள் அமர்வு சமூக வலைத்தளங்கள் பதில் மனுதாக்கல் செய்யாததை சுட்டிக் காண்பித்து யாகூ, முகநூல் (பேஸ்புக்) இந்தியா, முகநூல் அயர்லாந்து, கூகுள் இந்தியா, கூகுள், மைக்ரோ சாப்ட் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றுக்கு தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.  #Google #Facebook #Fine 
    ×