என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 121941
நீங்கள் தேடியது "பெரு"
தென்னமெரிக்கா கண்டத்தில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த பெரு நாட்டின் புதிய பிரதமராக பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார் பதவியேற்றார். #SalvadordelSolar #Peruprimeminister
லிமா:
தென்னமெரிக்கா கண்டத்தில் அமைந்துள்ள அழகிய நாடுகளில் ஒன்றான பெரு, அமேசான் மழைக்காடுகள் மற்றும் பசுமை நிறைந்த மச்சுபிச்சு மலைத்தொடர்களால் சுற்றுலாவாசிகளின் சொர்க்கப்புரியாக தோற்றமளிக்கிறது. பெரு நாட்டின் அதிபராக மார்ட்டின் விஸ்காரா பதவி வகித்து வருகிறார்.
கடந்த 2016-ம் ஆண்டில் பெரு நாட்டு பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் அதிகமான எம்.பி.க்களின் ஆதரவை பெற்ற சீசர் வில்லனுயேவா பிரதமராக பதவியேற்றார்.
இவரது மந்திரிசபையில் கலாச்சாரத்துறை மந்திரியாக பதவி வகித்த சால்வடார் டெல் சோலார், மனித உரிமை மீறலில் ஈடுபட்ட முன்னாள் அதிபர் ஆல்பர்ட்டோ பியூஜிமோரி-க்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை 2017-ம் ஆண்டில் ராஜினாமா செய்தார்.
பெரு நாட்டின் பிரபல வழக்கறிஞரும், நடிகரும் திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலாரின் கோரிக்கைக்கு ஏற்ப முன்னாள் அதிபருக்கு அளிக்கப்பட்ட பொதுமன்னிப்பு ரத்து செய்யப்பட்டது.
இதற்கிடையில், அந்நாட்டின் அதிபர் பதவிக்கு கடந்த 2018-ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற மார்ட்டின் விஸ்காரா 23-3-2018 அன்று பதவியேற்றார். நாட்டில் அதிபர் மாற்றம் ஏற்பட்டதுடன் தனது பதவிக்காலத்தில் மனநிறைவு கொள்வதாக அறிவித்த பிரதமர் சீசர் வில்லனுயேவா கடந்த வாரம் ராஜினாமா செய்தார்.
இதைதொடர்ந்து, பிரபல நடிகரும், திரைப்பட இயக்குனருமான சால்வடார் டெல் சோலார்(48) புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார். #SalvadordelSolar #Peruprimeminister
பெருநாட்டில் ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் திருமண கோஷ்டியினர் 15 பேர் பலியானார்கள். #Peru #Mudslide #Hotel
லீமா:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது.
இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. திருமண கோஷ்டியினர் இதில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Peru #Mudslide #Hotel
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெருவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அப்ரிமாக் பிராந்தியத்தின் அன்டியன் நகரில் மலை அடிவாரத்தில் ஒரு ஓட்டல் அமைந்துள்ளது.
இந்த ஓட்டலில் ஒரு திருமண நிகழ்ச்சிக்காக விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமக்களின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர்.
அவர்கள் ஆடல், பாடலுடன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாரத விதமாக அந்த பகுதியில் திடீர் மண் சரிவு ஏற்பட்டது. ஓட்டலின் மீது மண் சரிந்து விழுந்ததில் அதன் மேற்கூரை இடிந்து விழுந்தது. திருமண கோஷ்டியினர் இதில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து, அங்கு மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும் 15 பேரை பிணமாகத்தான் மீட்க முடிந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 29 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். #Peru #Mudslide #Hotel
பெரு நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #PeruAccident
லிமா:
பெரு நாட்டில் புனோ பகுதியில் டிடிகாகா ஏரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த லாரி பேருந்து மீது வேகமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் ஒரு குழந்தை மற்றும் 12 பெண்களும் அடங்குவர். மேலும் 39 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் போக்குவரத்தை சரிசெய்தனர். விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். பயணிகள் பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 18 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #PeruAccident
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘சி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் பெரு அணியை வீழ்த்தியது. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN
உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாலை 9.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘சி’ பிரிவில் இடம்பிடித்துள்ள டென்மார்க், பெரு அணிகள் மோதின. பெரு அணி 36 ஆண்டுகளுக்கு பின் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் களமிறங்கியுள்ளது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் அதிக அளவில் மைதானத்துக்கு வந்திருந்தனர்.
முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்காததால் ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 59-வது நிமிடம் டென்மார்க் அணியின் யூசுப் யுராரி கோல் அடித்தார். இதனால் டென்மார்க் அணி 1-0 என முன்னிலை பெற்றது.
இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், டென்மார்க் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அடுத்ததாக நடைபெற உள்ள இன்றைய நான்காவது ஆட்டத்தில் குரோசியா - நைஜீரியா அணிகள் பலப்பரிட்சை செய்கின்றன. #FIFA2018 #WolrdCup2018 #PERDEN
பெரு நாட்டின் திருஜிலோ என்ற நகரில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் பலிகொடுக்கப்பட்ட 56 குழந்தைகளின் எலும்புகூடுகளை கண்டறிந்துள்ளனர். #Perumasschildsacrifice #masschildsacrifice
லிமா:
தென் அமெரிக்க நாடான பெரு நாட்டில், கடந்த ஏப்ரல் மாதம் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் 140 குழந்தைகள் நரபலி கொடுக்கப்பட்டதையும், அவர்களது உடல்கள் புதைக்கப்பட்டு இருந்ததையும் கண்டுபிடித்தனர்.
பெரு நாட்டின் வட பகுதியில் அமைந்து உள்ள கடலோரப் பகுதியில் இந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. நரபலி கொடுக்கப்பட்ட குழந்தைகள், 5-14 வயதுக்கு இடைப்பட்டவர்கள். இவர்கள் 550 ஆண்டுகளுக்கு முன்பு நரபலி கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
முற்கால சிமு பேரரசு காலத்தில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. ஒரே நேரத்தில் இத்தனை பேர் நரபலி கொடுக்கப்பட்டு இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும் என கூறப்பட்டது.
இந்நிலையில், அந்த இடத்திற்கு அருகில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் மேலும் 56 குழந்தைகள் மற்றுமின்றி 200 ஓட்டக இன மிருகங்கள் பலி கொடுக்கபட்டு புதைக்கபட்டு இருந்தது தெரியவந்துள்ளது. அந்த சமயத்தில், அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளபெருக்கால், அந்த ஊரே அழியும் நிலை ஏற்பட்டது. இதனால் வெள்ளப்பெருக்கை தடுக்க கடவுள் நம்பிக்கை என்ற பெயரில், குழந்தைகள் பலி கொடுக்கப்பட்டு கடல் இருக்கும் திசை அருகில் மண்ணில் புதைப்பட்டுள்ளனர். அதோடு 200 ஓட்டக இன மிருகங்களும் புதைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட குழந்தைகளின் வயது 6-ல் இருந்து 14 வரை இருக்கும் என தெரியவந்துள்ளது. இந்த சமபவ அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #Perumasschildsacrifice #masschildsacrifice
பெரு நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Peru
லிமா:
துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் வெங்கையா நாயுடு முதல் முறையாக கவுதமாலா, பனாமா, பெரு ஆகிய மூன்று வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார்.
முதல் கட்டமாக கவுதமாலா நாட்டுக்கு சென்ற நாயுடு, கவுதமாலா ஜனாதிபதி ஜிம்மி மொரலெஸ், துணை ஜனாதிபதி ஜாபத் கேப்ரெரா மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் அல்வரோ அர்சு எஸ்கோபார் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக பனாமா நாட்டுக்கு சென்ற வெங்கையா நாயுடு, பனாமா ஜனாதிபதி ஜுவான் கார்லோஸ் வரேலா, துணை ஜனாதிபதி மற்றும் வெளியுறவு மந்திரி இசபெல் செயிண்ட் மாலோ ஆகியோரை சந்தித்தார். அப்போது பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்நிலையில், துணை ஜனாதிபதி மூன்றாவது கட்ட பயணமாக பெரு நாட்டுக்கு சென்றார். தலைநகர் லிமாவில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பின்னர், அங்குள்ள தேசிய அருங்காட்சியகத்துக்கு சென்று சுற்றிப் பார்த்தார். #VenkaiahNaidu #VicePresidentofIndia #Peru
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X