search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 122125"

    மேல்மலையனூரில் குடிகொண்டுள்ள அங்காளம்மனை விரதம் இருந்த வழிபாடு செய்தால் நம் துன்பங்கள் பறந்தோடும். பில்லி, சூன்யம், ஏவல் விலக்கி நல்வாழ்வு தருவாள்..
    ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. இதையே ஆற்றலாக கருதும் போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல், இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி, இதையே வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று ஏற்கொள்கிறோம்.

    லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவ மற்ற சக்தி ஆகும். அங்காளம்மன் உருவ சக்தியே அங்காளம்மன்.

    அங்காளம்மன் கோயில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். இதுவே தலைமையிடமாகவும், இந்த கோயிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறோம். இதுவே வம்சாவழியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகள்.

    குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு தங்களின் வம்சாவழியினராக தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றறோருடன் ஆடி மாதம் ஒன்று சேர்ந்து வந்து மொட்டை அடிப்பது காதணி விழா செய்வது, அபிஷேகம் செய்வது, ஆராதணை செய்வது, அர்ச்சனை செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்யும் வழிபாட்டு தெய்வமாக அங்காளம்மன் விளங்குகின்றாள்.

    இந்த ஆற்றல் மிகு சக்தியின் துணைவர், கணவர், இறைவன் என்று போற்றப்படுபவர். முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார்.
    இந்த மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிரமஹக்தி தோசம் பிடித்துவிட்டதாகவும், இந்த பிரமஹத்தி தோஷத்தை அங்காளியான இந்த அங்காளம்மன் மாசிமாதம் விலக்கியதாகவும் நீங்கள் ஏற்கனவே படித்து இருப்பீர்கள்.

    சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரமஹத்தியை விலக்கியதைப் போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள்,பீடைகள், சகடைகள், தோஷம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள் போன்றவற்றை ஆடி மாத வழிபாடு மூலம் அங்காளம்மன் விலக்கி நல்வாழ்வு தருகிறார்.

    பிரம்மஹத்தியில் இருந்து சிவபெருமானை விடுவித்த அங்காளி மானிடங்களின் இந்த ஆன்ம பிணிகளைப் போக்கிடுவாள் என்று கருதியே மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து காணிக்கை பிராத்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.

    நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான ஸ்ரீ அங்காளம்மன் அந்த புற்றில் உறைந்து அமர்ந்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது.
    மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூரையை இறைக்கும்போது சிவனாரைப் பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்டது. அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி “தாண்டவஈஸ்வரனாகவும்” தாண்டிய இடமான மேல்மலையனூரில் “தாண்டேஸ்வரராகவும்” அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    சிவபெருமானவிட்டு கீழே இறங்கி சூரையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது. இதைக் கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள்.

    இந்நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மன் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைத்துவிட்டார்.

    சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது. அது சிவ சுயம்பு உருவமானது. அப்புற்றுக்குள் கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது.

    இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டி லிருக்கும் மிருக கணங்கள், வனத்திலிருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன. அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை. இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமாக ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர்.

    அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை. இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர். அப்போது கலியுகம் பிறந்தது.

    கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது. அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும். நாம் எல்லோருக்கும் அருளும் அருள் அம்பிகையான ஸ்ரீ அங்காளம்மன் அந்த புற்றில் உறைந்து அமர்ந்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது.

    மேல்மலையனூர் அங்காள பரமேசுவரியை பல்லாயிரக்கணக்கான குடும்பத்தினர் தங்களது குலதெய்வமாக போற்றி வழிபடுகிறார்கள்.
    1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூரில் வழிபட உரிய பலன் கிடைக்கும்.

    2. சில பெண்களை கணவன் அடிக்கடி துன்புறுத்துவது உண்டு. அப்படி பாதிக்கப்படும் பெண்கள் மலையனூர் வந்து அங்காளம்மனிடம் முறையிட பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    3.மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது.

    4. ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள்.

    5. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு.

    6. மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடிவரும் என்பது ஐதீகம்.

    7. மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    8. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.

    9. அங்காளம்மனை ஆடி மாதம் ஒரு தடவையாவது சென்று வழிபட்டால், பக்தர்களை பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும்.

    10. மேல்மலையனூருக்கு 3 அமாவாசை தொடர்ந்து வந்து அங்காளம்மனை வழிபட்டு ஊஞ்சல் ஊற்சவத்தை கண்டு வந்தால் குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, திருமண யோகம் ஆகியவை வந்து சேரும்.

    11. அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    12. மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

    13. மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் பெற்று, பிறகு மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திரு வண்ணா மலை செல்லும் பக்தர்கள் மலையனூர் வந்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது.

    14. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியவரும்.

    15. தக்கனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயினியன் அம்சமே அங்காளி என்பதால் மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத்தான் பிரசாதமாக தருகிறார்கள்.

    16. அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால் ராகு-கேது தோஷ பாதிப்பு உங்களை நெருங்கவே நெருங்காது.

    17. சென்னையில் சூளை, ராயபுரம், சாத்தங்காடு, மைலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஜார்ஜ்டவுன், நுங்கம்பாக்கம் என்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அங்காளம்மமன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    18. திருவள்ளூர் அருகே புட்லூர் அங்காளம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. அரக்கோணத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    19. திருச்சி மாவட்டம் துறையூர் அங்காளம்மன் சயன கோலத்தில் இருப்பதால் அந்த கோவில் மிகவும் விசேஷமானது.

    20. திருப்பூர் அருகே முத்தளம் பாளையம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் அங்காளம்மன் சுயம்புவாகத் தோன்றியவர் என்று கூறப்படுகிறது.

    21. அங்காளம்மன் ஆலயங் களில் மயானக்கொள்ளை நடக்கும் தினத்தில் அம்மனுக்கு பொங்க லிட்டு பூஜைகள் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

    22. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல் மலையனூர் வந்து அங்காளம் மனை தரிசித்து செல்கிறார்கள்.

    23. சமீப காலமாக மேல் மலையனூருக்கு ஆந்திரா, கர் நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

    24. சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவா சைக்கும் மேல் மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    25. மேல்மலையனூருக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மற்றும் தங்கள்  குடும்பத்தினர் மீதான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே வருகிறார்கள்.



    26. மேல்மலையனூர் தலத்தில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். அவர்களை தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    27. ஆலயத்தின் பின்புறம் அம்மன் பாதம் உள்ளது. நிறைய பக்தர்களுக்கு அதன் விவரம் தெரியாமல் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் அம்மனின் கருணை பார்வை உடனடியாக கிடைக்கும் என்கிறார்கள்.

    28. ஆலயத்தின் முன் பகுதியில் அம்மனின் படுத்துக் கிடக்கும் சிலை உள்ளது-. அந்த அம்மனுக்கு பெரியாயி என்று பெயர். தட்சனின் யாகத்துக்குள் விழுந்து பார்வதிதேவி கலைத் தாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த அமைப்பு அமைந்துள்ளது.

    29. பெரியாயி மல்லாந்து படுத்து இருக்கும் மண்டபத்தை சுற்றி 108 விநாயகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    30. ஆலயத்தின் ஒரு பகுதியில் காவல் தெய்வமான பாவாடை ராயன் சன்னதி உள்ளது. அங்கு இன்னமும் அசைவ படையல் போட்டு வணங்குகிறார்கள்.

    31. மேல்மலையனூர் தலத்தில் தினமும் 2 கால பூஜை நடத்தப் படுகிறது. காலை 5.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் அபிஷேக ஆராதனையுடன் இந்த பூஜை நடைபெறும்.

    32. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

    33. மேல்மலையனூர் தலத்தில் மதியம் நடை மூடப்படுவதில்லை. காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பக்தர்கள் வழிபடலாம்.

    34. அமாவாசை தினத்தன்று இரவிலும் நடை திறந்திருக்கும். விடிய விடிய பக்தர்கள் அங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்யலாம்.

    35. மேல்மலையனூர் தலத்தில் திருஷ்டி கழிக்கும் பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தது கிடையாது. கடந்த 25 ஆண்டுகளுக்குள்தான் இந்த பழக்கம் உருவாகி இருக்கிறது.

    36. எலுமிச்சை பழத்தை இத்தலத்தில் நிறைய பக்தர்கள் காலில் மிதித்து அவமரியாதை செய்கிறார்கள். அது புண்ணியத்தை சேர்ப்பதில்லை. பாவத்தைத்தான் தரும்.

    37. எலுமிச்சை பழத்தை கோவில் வாசலில் வைத்து தலையை சுற்றி போட வேண்டும் என்று எந்தவித ஐதீகமும் கிடையாது. ஆனால் பக்தர்கள் ஒருவரை பார்த்து ஒருவர் செய்கிறார்கள். கோவிலுக்கும் இந்த பழக்கத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

    38. அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின்போது சிலர் எலுமிச்சை பழத்தை அம்மன் சிலையை நோக்கி வீசு கிறார்கள். இதை தவிர்க்கும்படி பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    39. இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட உள்ளன.

    40. பக்தர்கள் எளிதாக வழிபடுவதற்காக இத்தலத்தில் 5 வகை வரிசைகளை ஏற்படுத்தி உள்ளனர். அதில் இலவச தரிசன வகை ஒன்று. மற்றப்படி ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய 4 விதமான கட்டணம் செலுத்தியும் அம்மனை வழிபடலாம்.

    41. சிவபெருமானுக்கும், சக்தி தேவிக்கும் பித்தம் தெளிந்ததால் அந்த ஐதீக அடிப்படையில் இத்தலத்துக்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நலம் பெறுகிறார்கள்.

    42. மேல் மலையனூரில் மலையே கிடையாது. என்றாலும் மலையரசியான பார்வதி இத்தலத்தில் உறைந்ததால் மலையனூர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

    43. அங்காள பரமேஸ்வரி என்ற பெயர் உருவானதற்கு பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன. பரமேசுவரனின் அங்கத்தின் இடது பாகத்தை ஆள வரம் கேட்டதால் பரமேஸ்வரிக்கு அங்காளபரமேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.

    44. அன்னையின் அருள் பெற்ற வால்மீகி முனிவர் மலையனூரில் மோட்ச பதவி அடைந்தார்.

    45. ஆதி காலத்தில் மலை யனூர் பகுதி ருத்ர ஆரண்யம் என்றழைக் கப்பட்டது. அது சக்தி பீடமானதும், ருத்ர சக்தி பீடம் என்று மாறியது. அதனால் அங்காளம்மனுக்கு பூங்கா வனத்தாள் என்ற பெயரும் உண்டு.

    46.அம் + காளம் + அம்மன் = அங்காளம்மன் எனப்படுகிறது. அம் என்றால் உள்ளே, காளம் என்றால் விஷம் என்று அர்த்தமாகும். உள்ளே விஷம் கொண்ட நாகம். நாக வடிவில் அம்மன் புற்றுக்குள் இருப்பதால் இத்தலத்து அம்மன் அங்காளம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

    47. விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு என்னும் இடத்திலும் அங்காளம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    48. இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

    49. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.

    50. அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் முகவரி: மேல்மலையனூர்-604 204, விழுப்புரம் மாவட்டம். 
    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
    மேல்மலையனூரில் புற்றுக்கும் அங்காளம்மனுக்கும் அபிஷேகம் செய்து வழிபாடு செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. ஆடி மாதம் இந்த அபிஷேகத்தை செய்தால் மிகவும் நல்லது. அங்காளம்மனுக்கு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் அபிஷேகம் செய்ய இயலாது. மற்ற சாதாரண நாட்களில்தான் இந்த வழிபாட்டை நடத்த முடியும்.

    அம்மனுக்கு அபிஷேகம் சாதாரண நாட்களில் எந்த நேரத்திலும் நீங்கள் விரும்பும் நேரத்திலே அமைத்து கொள்ள முடியும். இந்த வழிபாடு செய்வதால் கடன் பிரச்சினைகள் தீரும் என்பது ஐதீகம்.

    அதுபோல அங்காளம்மன் தலத்தில் உள்ள புற்றுக்கும் அபிஷேக வழிபாடுகள் செய்யலாம். புதிய புற்று மண் தூவி அதன் மேல் மஞ்சள் தண்ணீர் தெளித்து குங்குமம் பூசுவார்கள். இதுவும் அம்மனை குளிர வைக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புற்றுக்கு அபிஷேகம் செய்வதால் குழந்தை பாக்கியம், திருமண யோகம் கைகூடும் என்பது ஐதீகமாகும். மலையனூரில் உள்ள புற்றை சுற்றி வந்து வணங்கினால் பித்து நீங்கும் என்பது பழிமொழியாக பேசப்பட்டு வருகிறது. எனவே மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த புற்று மண்ணை பூசி விட்டால் குணமாகும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்களை மேல்மலையனூர் தலத்துக்கு அழைத்து சென்று ஓர் இரவு தங்க வைத்தாலே போதும் குணம் அடைந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது. இப்படி பலம் அடைந்தவர்கள் ஏராளமானவர்கள்.
    மேல்மலையனூர் அங்காளம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.
    மேல்மலையனூர் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்ற (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.

    அம்மனுக்கு 4 திருக்கரங்கள் இருக்கின்றன. வலக்கரங்களில் உடுக்கை, கத்தி, இடக்கையில் கபாலம், திரிசூலம் ஏந்தி இடக்காலை மடித்து, வலக்காலால் பிரம்மனின் தலையை மிதித்தவாறு காட்சி தருகிறார்.

    பீடத்தின் கீழே பிரம்மனின் 4 முகங்களும் உள்ளன. அருகில் சிவபெருமான் சிறிய உருவத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார். அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது. (அம்மன் முதலில் புற்றுருவாக இருந்தார் என்பதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது).

    அம்மன் நாக வடிவில் உள்ளார் என்று இன்றளவும் பக்தர்களாலும், பூசாரிகளாலும் நம்பப்பட்டு வருகிறது. நம்பியவர்களுக்கு மட்டுமே அம்மன் பாம்பு உருவில் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்த புற்றின் வடிவம் அம்மன் காலை நீட்டி உட்காரந்திருப்பது போல் உள்ளது. இந்த இடத்தில் இருந்து எடுக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாமாகவும், அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து வழங்கப்படுகின்றன.

    இக்கோவில் புற்றின் இடது புறத்தில் வீரன், சூரன், உக்கிரன், ரணவீரன், அதி வீரன், வீரபத்திரன், பாவாடை ராயன், சங்கிலி கருப்பன், கருப்பன், முத்து கருப்பன், வேதாளம் போன்ற காவல் தெய்வங்களும், வெளியில் நடராஜர், மாரியம்மன் சிலைகளும் பிரிதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

    கோவிலின் உட்பிரகாரத்தில் வரசித்தி விநாயகர் அன்னபூரணி, கோபால விநாயகர், தலவிருட்சம் (மயில் கொன்றை) ஆகியவைகளும், வெளிப் பிரகாரத்தில் பாவாடை ராயன், மயானக் காளி, அம்மனின் பாதங்கள், கங்கை யம்மன், படுத்த நிலையில் உள்ள பெரியாயி அம்மன் ஆகியவையும் உள்ளன.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
    ஒரு சமயம் சிவபெருமான் தனது சக்தியைப் பயன்படுத்தி பிரம்மாவின் தலைகளில் ஒன்றைக் கிள்ளி எறிந்தார். இதன் காரணமாக, ஐந்து தலைகள் கொண்ட பிரம்மா நான்கு தலைகள் உடையவராக ஆனார்.

    பிரம்மாவின் தலையைக் கொய்த காரணத்தால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் உண்டாயிற்று. தோஷத்தை நீக்க என்ன செய்வது, பராசக்தியின் உள்ளத்தில் வேதனை ரேகைகள் ஓடி, ஒரு முடிவு கிடைத்தது. அதற்கு ஒரேவழி, தான் மற்றொரு அவதாரம் எடுப்பது என்று தீர்மானித்தாள் பார்வதி தேவி.

    சிவசுயம்பு வடிவில் அங்காள பரமேஸ்வரியாக மாறினாள். வடக்கு நோக்கி தியானத்தில் அமர்ந்தாள். அவள் அப்படி அமர்ந்த அற்புத இடம் தான் மேல்மலையனூர். இன்றும் மேல்மலையனூரில் வடக்கு நோக்கி இருந்து அங்காள பரமேஸ்வரி பக்தர்களை காத்தருள்கிறாள்.

    தன் கணவனைத் தேடி மலையனூர் வந்து அங்குள்ள மலர்வனத்தில் பரமேஸ்வரி புற்றாக அமர்ந்தாள். மேல்மலையனூர் அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் உட்கார்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அம்மனின் முகம், யார் என்ன நினைத்துக் கொண்டு அம்மனை பார்க்கிறார்களோ அந்த வடிவத்தில் காட்சி தருவது போன்று (சாந்தம், கோபம், அபயம் அளிப்பது) அமைக்கப்பட்டுள்ளது.

    அம்மனுக்கு 4 திருக்கரங்கள் இருக்கின்றன. வலக்கரங்களில் உடுக்கை, கத்தி, இடக்கையில் கபாலம், திரிசூலம் ஏந்தி இடக்காலை மடித்து, வலக்காலால் பிரம்மனின் தலையை மிதித்த வாறு காட்சி தருகிறார். பீடத்தின் கீழே பிரம்மனின் 4 முகங்களும் உள்ளன. அருகில் சிவபெருமான் சிறிய உருவத்தில் ரிஷப வாகனத்தில் காட்சி தருகிறார். அம்மனுக்கு முன்பாக புற்று உள்ளது. (அம்மன் முதலில் புற்றுருவாக இருந்தார் என்பதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது) அம்மன் நாக வடிவில் உள்ளார் என்று இன்றளவும் பக்தர்களாலும், பூசாரிகளாலும் நம்பப்பட்டு வருகிறது. நம்பியவர்களுக்கு மட்டுமே அம்மன் பாம்பு உருவில் காட்சி தருகிறார் என்று கூறப்படுகிறது.

    இந்த புற்றின் வடிவம் அம்மன் காலை நீட்டி உட்கார்ந்திருப்பது போல் உள்ளது. இந்த இடத்தில் இருந்து எடுக்கும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாகவும், அத்துடன் மஞ்சள், குங்குமம் வைத்து வழங்கப்படுகின்றன.

    இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது என்றும், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் வரும் அமாவாசைகளில் சித்திரை, மாசி மாதங்களைத் தவிர மற்ற மாதங்களில் இரவு 11.30 மணியிலிருந்து 1 மணி வரை ஊஞ்சல் உற்சவம் நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஆண்டுதோறும் மாசிமாதம் வரும் மகாசிவராத்திரியிலிருந்து 13 நாட்கள் மாசிப்பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

    ஆடி அமாவாசை நாள் மறைந்த முன்னோர்களான பித்ருகளை நினைத்து வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாள். அன்று காலை புண்ணிய தீர்த்தங்கள், நதிகள், கடலோர பகுதிகளில் பித்ரு களுக்கு தர்ப் பணம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு வீடுகளிலும் முன்னோர்களுக்கு சிலர் படையல் செய்து வழிபடுவது உண்டு.

    ஆனால் பித்ரு தர்ப்பணம் செய்த பிறகு வீட்டிற்கு வராமல் நேரடியாக மேல்மலையனூர் அங்காளம்மன் தலத்துக்கு சென்று அம்மனை வழிபட்டால் பித்ரு தர்ப்பணத்தை மேம்படுத்தும் பலன் கிடைக்கும். அதாவது நாம் பித்ருக்களுக்கு செய்த தர்ப்பணங்கள் முழுமையாக அவர்களை சென்று சேர அங்காளம்மன் உதவுவாள் என்பது ஐதீகம். ஆதிகாலத்தில் அங்காளம்மன் இத்தலத்தில் அவதாரம் எடுத்தபோது பல்வேறு ஆத்மாக்களுக்கு ஞானம் வழங்கி உயர்வு கொடுத்தாள்.

    எனவேதான் பித்ரு தர்ப்பணத்திற்கு பிறகு அங்காளம்மனை வழிபடுவது நல்லது என்று சொல்கிறார்கள். இத்தலத்தில் அங்காள பரமேஸ்வரியின் சிறப்பு என்னவென்றால் கணவனை பிரிந்து வாழும் பெண்களுக்கு அருள் வழங்குவது ஆகும். அப்படிப்பட்ட பெண்கள் அன்னையை மனமுருகி வழிபட்டால் மீண்டும் சந்தோஷமாக கூடி வாழும் பாக்கியம் அவர்களுக்கு கிடைக்கப்பெறும் என்பது நம்பிக்கை.

    மேலும் கணவனின் தொந்தரவுகளுக்கு ஆளான பெண்களுக்கு அதிலிருந்து விடுதலை கிடைத்து நல்வாழ்வு அமையும். இதுபோன்ற காரணங்களால் மேல்மலையனூர் தலத்தில் பெண்கள் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது.

    மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல் கோளாறுகள் ஏற்பட்டவர்கள், பயஉணர்ச்சி உடையவர்கள், இதுபோன்று பல்வேறு வகைப்பட்ட தெரியாத பிரச்சினைகளை கொண்டவர்கள் பலரும் இந்த வகை பூஜைகளைச் செய்து நலமடைவதாக நம்பப்படுகிறது.

    இதுபோலவே திருஷ்டிக் கழிப்பு, அலகு குத்தல் ஆட்டம், சாமியாட்டம் போன்றவைகளும் மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் வெகு பிரசித்தம்.
    ×