search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீர்மட்டம்"

    கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
    ஈரோடு:

    கடந்த 5 நாட்களாக பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று அணைக்கு 1750 கனஅடி நீர் வந்த வண்ணம் இருந்தது. இன்று அது உயர்ந்து வினாடிக்கு அணைக்கு 5172 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 99.01 அடியாக இருந்தது.

    ஏற்கெனவே இந்தாண்டு பவானிசாகர் அணை 2 தடவை நிரம்பி உள்ள நிலையில் மீண்டும் அணை குழு கொள்ளவை எட்டும் நிலையில் உள்ளது. இது ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட விவசாயிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

    அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும் பவானி ஆற்றில் குடிநீருக்காக வினாடிக்கு 100 கன அடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு மீண்டும் தண்ணீர் வரத்து வரத்தொடங்கி உள்ளதால் இந்தாண்டு மட்டுமல்ல அடுத்த ஆண்டுக்கும் விவசாயத்துக்கு பஞ்சம் இருக்காது என விவசாயிகள் தெரிவித்தனர்.
    காவிரி ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று பிற்பகல் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளிலும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளிலும் கடந்த மாதம் பலத்த மழை கொட்டியதால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பி காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

    சுமார் 2 லட்சம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டு மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது.

    ஆனால் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக மழை இல்லாததால் கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து படிப்படியாக குறைந்து நீர்மட்டமும் குறையத் தொடங்கியது.

    இந்த நிலையில் காவிரி நீர்ப்படிப்பு பகுதிகளிலும் தமிழக எல்லையான கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ராம் பாளையம் ஆகிய பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் மீண்டும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.

    தமிழக - கர்நாடக எல்லைப்பகுதியான ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் நேற்று 7 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று இது 30 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    இதன் காரணமாக ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் சுமார் 1 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்து நீடிக்கிறது.

    மேட்டூர் அணைக்கு நேற்று 5 ஆயிரத்து 462 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இன்று இது குறைந்து 5 ஆயிரத்து 23 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கால்வாய் பாசனத்திற்கு 22 ஆயிரத்து 800 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    நீர்வரத்தை விட தண்ணீர் திறப்பு அதிகமாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் 105.62 அடியில் இருந்து 104.47 அடியாக குறைந்துள்ளது.

    காவிரியில் வரும் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் இன்று பிற்பகல் மேட்டூர் அணைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தண்ணீர் வரும்பட்சத்தில் அணையின் நீர்மட்டம் உயருவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
    நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 19 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து 20 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் கூடுதல் தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் ஒகேனக்கல் வழியாக நேராக மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் கடந்த 4 நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    நேற்று முன்தினம் 15 ஆயிரத்து 525 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று 21 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இன்று காலை இதே அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    இதனால் மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு 19 ஆயிரத்து 800 கன அடியில் இருந்து 20 ஆயிரத்து 800 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 120.19 அடியாக உள்ளது.

    கர்நாடக அணைகளில் இருந்து மீண்டும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அங்குள்ள அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுகிறது.

    இதையடுத்து அருவிகளில் குளிக்க இன்று 56-வது நாளாக தடை நீடித்து வருகிறது. இன்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். ஆனால் அவர்கள் அருவிகளில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை ஒகேனக்கல் பிலிகுண்டுலுவில் பொதுப் பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர்.
    நீலகிரியில் பலத்த மழை காரணமாக பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்ததால் இன்று காலை அணையின் நீர்மட்டம் 100 கனஅடியை எட்டியது. #BhavanisagarDam
    ஈரோடு:

    தென்மேற்கு பருவமழை மீண்டும் பெய்யத் தொடங்கி உள்ளது. இதனால் நீலகிரி மற்றும் கேரள மாநில வனப்பகுதி எல்லையில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது.

    நீலகிரியில் பெய்து வரும் கன மழையால் கடந்த 2 நாட்களாகவே பவானிசாகர் அணைக்கு தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது.

    இன்று (செவ்வாய்க்கி ழமை) காலை 10 மணியளவில் அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 928 கன அடி வீதம் தண்ணீர் பாய்ந்து வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டமும் உயர்ந்து இன்று 100 அடியை எட்டியது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியதையடுத்து ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்ட விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும், தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்காலுக்கு 850 கன அடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 450 கன அடியும், பவானி ஆற்றில் குடிநீருக்காக 200 கன அடியும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    பவானிசாகர் அணையில் மொத்த கொள்ளளவு 120 அடி ஆகும். இதில் 15 அடி சேறும் சகதியும் நிறைந்தது. மீதி 115 அடிக்கு தண்ணீரை சேமித்து வைக்க முடியும்.

    நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளது அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. #BhavanisagarDam
    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணைக்கு மழைக்காலங்களில் மேகமலை, வெள்ளிமலை, வரு‌ஷநாடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழையின் மூலமாக நீர் வரத்து ஏற்படும். கடந்த சில வருடங்களாக போதிய மழை பெய்யாததால் வரலாறு காணாத அளவில் குறைந்து வந்தது. 71 அடி உயரமுள்ள அணையின் நீர் மட்டம் 22 அடி வரை சரிந்தது.

    இந்நிலையில் கடந்த 1 மாதத்துக்கும் மேலாக கேரளாவில் கன மழை பெய்து வருவதால் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. எனவே அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வைகை அணையில் தேக்கப்பட்டது.

    இன்று காலை நிலவரப்படி பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.30 அடியாக உள்ளது. அணைக்கு 2,377 கன அடி வீதம் தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 2,200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    வைகை அணையின் நீர் மட்டம் 61.15 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 2,063 கன அடி தண்ணீர் வருகிறது. திண்டுக்கல் மற்றும் மதுரை பாசனத்துக்காகவும், மதுரை குடிநீருக்காகவும் 960 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த மாதம் 28-ந் தேதி அணையின் நீர் மட்டம் 49.41 அடியாக இருந்தது. அப்போது முதல் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பெரியாறு பிரதான கால்வாய் வழியாக வைகை அணையில் இருந்து 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது.

    அதன்படி அணையில் இருந்து 900 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் இந்த ஆண்டு முழு போக விளைச்சலை எடுக்க முடியும் என வைகை அணை பாசன விவசாயிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.
    கண்டலேறு அணையில் இருந்து வரும் நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் பூண்டி ஏரி தற்போது குட்டை போல் காட்சியளிக்கிறது.
    ஊத்துக்கோட்டை:

    சென்னைக்கு குடிநீர் வழங்கும் பிரதான ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த ஏரியில் மழை நீர் மற்றும் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீரை சேமித்து வைத்து தேவைப்படும் போது புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு திறந்து விடப்படுவது வழக்கம்.

    கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி ஆந்திர அரசு தமிழகத்துக்கு வருடந்தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும். ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டி.எம்.சி.யும் ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டி.எம்.சி.யும் தண்ணீரை பூண்டி ஏரிக்கு திறந்துவிட வேண்டும்.

    அதன்படி கடந்த டிசம்பர் 27-ந் தேதி கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் ஜனவரி 2-ந் தேதி பூண்டி ஏரிக்கு வந்தடைந்தது. அதிகபட்சமாக 2450 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீர் பூண்டி ஏரிக்கு அதிகபட்டசமாக 610 கனஅடி வீதம் வந்து சேர்ந்தது.

    இந்த நிலையில் கண்டலேறு அணையில் தண்ணீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு மார்ச் 26-ந் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    இந்த இடைபட்ட காலத்தில் 2.280 டி.எம்.சி. தண்ணீர் பூண்டி ஏரிக்கு கிடைத்தது. கிருஷ்ணா தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றுவிட்டதால் தற்போது பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

    இதன் காரணமாக புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு லிங்க் கால்வாயில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் மே 21-ந்தேதி நிறுத்தப்பட்டது.

    இதற்கிடையே கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின்படி இரண்டாம் தவணையாக ஜூலை முதல் தண்ணீர் திறந்துவிடும்படி தமிழக பொதுப் பணித்துறை அதிகாரிகள் ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகளுக்கு ஜூன் மாத இறுதியில் கடிதம் எழுதினர்.

    பருவ மழை பெய்தால் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட ஆந்திர அதிகாரிகள் எண்ணி இருந்தனர். ஆனால் பருவ மழை பொய்த்து போனதால் அது சாத்தியபடவில்லை.

    கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி. ஆகும். ஆனால் தற்போது வெறும் 4.50 டிஎம்சி தண்ணீர்தான் இருப்பு உள்ளது. இதன் காரணமாக கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என்று ஆந்திர பொதுப் பணித்துறை அதிகாரிகள் தமிழக அதிகரிகளிடம் போனில் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.

    நீர்வரத்து முற்றிலும் நின்று போனதால் பூண்டி ஏரி தற்போது குட்டை போல் காட்சியளிக்கிறது. பூண்டி ஏரியில் 3231 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். இன்று காலை நிலவரப்படி ஏரியில் வெறும் 48 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது.

    பூண்டி ஏரியில் இருந்து சென்னை குடிநீர் வாரியத்துக்கு பேபி கால்வாயில் வினாடிக்கு 22 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
    தெற்மேற்கு பருவமழையால் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.
    ஈரோடு:

    மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தெற்மேற்கு பருவமழை மேலும் தீவிரம் அடைந்திருப்பதால் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து கிடு...கிடுவென உயர்ந்துள்ளது.

    நேற்று அணைக்கு வினாடிக்கு 8 ஆயிரத்து 729 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையின் நீர்மட்டம் நேற்று 81.50 அடியாக இருந்தது.

    இன்று அதிகாலை நிலவரப்படி நேற்றை விட 2 மடங்காக அதிகரித்து வினாடிக்கு 15 ஆயிரத்து 865 கனஅடி வீதம் புதுவெள்ளம் பாய்ந்து வருவதுபோல் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் அணையின் நீர்மட்டமும் 2 அடி உயர்ந்தது.

    இன்று காலை 6 மணி நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 83.36 அடியாக உயர்ந்தது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அணைக்கு இதே வேகத்தில் நீர்வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருந்தால் முழு கொள்ளளவை வேகமாக எட்டும் என விவசாயிகள், பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

    பவானிசாகர் அணை நீர்தேக்கப்பகுதியில் அணையின் இருபுறமும் வாழைகள் பயிரிடப்பட்டிருந்தது. பவானிசாகர் அணையையொட்டி உள்ள சித்தன்குட்டை பகுதியில் விவசாயிகள் கதலி, நேந்திரம் வாழைகளை பயிரிட்டிருந்தனர்.

    தண்ணீர் பாய்ந்து வருவதையொட்டி இந்த வாழை தோட்டங்களுக்குள் தண்ணீர் புகுந்து ஏராளமான வாழைகள் மூழ்கியது. இதனால் அவை அழுகும் நிலையில் உள்ளது.

    இதனால் வாழை பயிரிட்டிருந்த விவசாயிகள் சேதமான வாழைகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று பவானிசாகரில் 4.2 மி.மீ மழையும், பெரும்பள்ளம் அணை பகுதியில் 4 மி.மீ மழையும் பெய்தது.
    ஒகேனக்கல்லில் இருந்து வரும் நீர்வரத்து குறைந்ததால் மேட்டூர் அணை நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 792 கன அடியாக குறைந்தது.
    சேலம்:

    கர்நாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்ததால் உபரி நீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

    இந்த தண்ணீர் தமிழகத்திற்கு வந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று 18 ஆயிரத்து 824 கன அடி தண்ணீர் வந்தது. இதனால் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.

    இந்த நிலையில் மழை குறைந்ததால் கபினி அணையில் இருந்து தண்ணீர் திறப்பும் மீண்டும் குறைக்கப்பட்டது. கபினி அணைக்கு இன்று காலை 4 ஆயிரத்து 681 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 5 ஆயிரம் கன அடி திறந்துவிடப்பட்டுள்ளது. 84 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட அணையின் நீர்மட்டம் 82.32 அடியாக இருந்தது.

    இதேபோல 124.8 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 108.76 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து கர்நாடக பாசனத்திற்காக 3 ஆயிரத்து 537 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. அணைக்கு 6 ஆயிரத்து 39 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்ததால் அந்த அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது.

    நேற்று 10 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று ஒகேனக்கல்லில் 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது. இந்த தண்ணீர் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து வருகிறார்கள்.

    ஒகேனக்கல்லில் வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூருக்கு நேற்று 18 ஆயிரத்து 824 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 10 ஆயிரத்து 792 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது.

    அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து குறைந்த அளவே தண்ணர் திறந்துவிடப்படுவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    நேற்று 60.3 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 61.4 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் 1 அடிக்கு மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இனிவரும் நாட்களில் மேலும் குறைய வாய்ப்பு உள்ளது.
    ஆத்தூர் காமராஜர் அணையின் நீர்மட்டம் 5½ அடியாக குறைந்ததால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
    செம்பட்டி:

    மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, ஆடலூர், பன்றிமலை, பண்ணைக்காடு, புல்லாவெளி, தடியன்குடிசை, மங்களம்கொம்பு, சோலைக்காடு ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீர் ஓடைகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள ஆத்தூர் காமராஜர் அணைக்குவருகிறது.

    இந்த அணையில் இருந்து திண்டுக்கல் மாநகராட்சி, சின்னாளபட்டி, சித்தையன்கோட்டை பேரூராட்சிகள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அணை நிரம்பி மறுகால் பாய்ந்தது.

    தற்போது பண்ணைக்காடு, தாண்டிக்குடி, ஆடலூர், பன்றிமலை பகுதிகளில் பருவமழை முறையாக பெய்யவில்லை. இதனால் ஆத்தூர் காமராஜர் அணைக்கு நீர்வரத்து இல்லை. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

    நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 5½ அடியாக காணப்பட்டது. இதனால் அணை குட்டைப்போல் காட்சியளிக்கிறது. இதனால் திண்டுக்கல் நகருக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. 
    நேற்று 48.47 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் 49.78 அடியாக உயர்ந்து இன்று இரவுக்குள் 50 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கியதால், அங்குள்ள கபினி அணை நிரம்பியது. கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 102 அடியை எட்டி உள்ளது.

    கபினி அணை நிரம்பியதால், பாதுகாப்பு கருதி கடந்த வாரம் அணையிலிருந்து 32ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்ததால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் மழை குறைந்ததால், கபினி அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது வெறும் 500 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரியில் திறந்து விடப்படுகிறது.

    இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை 32 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று 24 ஆயிரத்து 99 கனஅடியாக சரிந்தது. இன்று மேலும் குறைந்து 10 ஆயிரத்து 26 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 500 கனஅடி வீதம் திறந்து விடப்படுகிறது.

    நீர்திறப்பை விட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று 48.47 அடியாக இருந்த நீர்மட்டம் 49.78 அடியாக உயர்ந்து உள்ளது. இன்று இரவுக்குள் 50 அடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 10 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அணைக்கு வரும் நீர்வரத்து வெகுவாக குறைந்து வருவதால், கடந்த 3 நாட்களாக வேகமாக உயர்ந்து வந்த நீர்மட்டம், நாளை முதல் மெல்ல, மெல்ல உயர்வதற்கான சூழ்நிலை உருவாகி உள்ளது.

    பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் நீர் ஆதரமாக உள்ள பவானிசாகர் அணை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீர்மட்டம் அதிகமாக உள்ளது.

    கடந்தாண்டு இதே நாளில் 39 அடியில் இருந்தது. இந்தாண்டு தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் படிப்படியாக கூடி அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.

    இன்று (திங்கட்கிழமை) அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டது. அதே சமயம் நீர் பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை குறைந்தது. இதனால் அணைக்கு வரும் நீர்வரத்து குறைந்தது.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2316 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. குடிநீருக்காக வழக்கம் போல் பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், வாய்க்காலுக்கு 5 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

    அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்தாலும் அணையின் நீர்மட்டம் 73 அடியை தொட்டிருப்பது விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. அடுத்த மாதம் வாய்க்கால்களுக்கு பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.
    நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கன மழையினால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் கடந்த 3 நாட்களில் 8 அடி உயர்ந்துள்ளது.
    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை பகுதியில் கடந்த வியாழக்கிழமை முதல் தென்மேற்கு பருவமழை சாரல் மழையுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து இதுபலத்த மழையாக அதிகரித்தது.

    இதன் காரணமாக கடந்த 9-ந் தேதி 116.40 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் 10-ந் தேதி 118 அடியாக உயர்ந்தது. நேற்று இதுமேலும் அதிகரித்து 121.10 அடியாக உயர்ந்தது.

    கடந்த 2 நாட்களில் 5 அடி உயர்ந்த நிலையில் இன்று காலை மேலும் 3½ அடி உயர்ந்து நீர்மட்டம் 124.70 அடியை அடைந்தது. இதனால் மதுரை, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    எப்போதும் கம்பம் பள்ளத்தாக்கு முதல்போக சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். தற்போது அணையின் நீர்மட்டம் 125 அடியை நெருங்கி உள்ளதால் விவசாயிகள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் சார்பில் தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு வரும் 18-ந் தேதி முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தற்போது முல்லைப் பெரியாறு அணைக்கு 9479 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 1300 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 3589 மி. கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுவதால் முல்லைப் பெரியாறு ஆற்றின் கரையோரப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    எனவே கரையோரப் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் வைகை அணைக்கு 353 கன அடி தண்ணீர் வருகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 36.25 அடியாக உள்ளது. அணையில் இருந்து மதுரை குடிநீர் தேவைக்காக 60 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    தேக்கடியில் கேரள மாநில சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் 6 படகுகளும், வனத்துறை சார்பில் 5 படகுகளும் என மொத்தம் 11 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று காலை முதல் தேக்கடியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே இருந்ததால் படகு குழாம் வெறிச்சோடி காணப்பட்டது.

    லோயர்கேம்பில் மின் உற்பத்தி நிலையம் செயல்பட்டு வருகிறது. பெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறக்கப்படும் சமயங்களில் இங்கு மின் உற்பத்தி நடைபெறும். தற்போது 4 ஜெனரேட்டர்கள் மூலம் தலா 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம் 104 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தொடர்ந்து நீர் திறக்கும் வாய்ப்பு இருப்பதால் மின் உற்பத்தியும் அதிகரிக்கும் நிலை உள்ளது.

    நேற்று ஒரே நாளில் பெரியாறு அணையில் 805.8 மி.மீ., தேக்கடியில் 52.4 மி.மீ. மழை அளவு பதிவானது.
    ×