என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 122512
நீங்கள் தேடியது "விடுவிப்பு"
வடகொரிய அதிபரின் சகோதரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்தோனேசிய பெண்ணை, மலேசிய நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது. #NorthKoreanLeader #KimJongNamMurder #IndonesianWomanFreed
கோலாலம்பூர்:
இந்த கொலை தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி ஆயுஷா, வியட்நாமைச் சேர்ந்த தோன் தி ஹுவாங் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வடகொரியாவைச் சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொலை சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற யூகங்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தோனேசிய பெண் சித்தி ஆயுஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்காக காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து சித்தி ஆயுஷா மீதான கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார். தீர்ப்பு வெளியானதும் கோர்ட் வளாகத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார் சித்தி ஆயுஷா.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் விடுதலை செய்யப்போகும் தகவல் இன்று காலையில் தான் எனக்கு தெரிந்தது. இது எனக்கு ஆச்சரியமாகவும், அதேசமயம் மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என்றார். இந்த வழக்கை சிறப்பாக நடத்தியதற்காக மலேசிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக, இந்தோனேசிய தூதர் கூறினார். #NorthKoreanLeader #KimJongNamMurder #IndonesianWomanFreed
வடகொரிய அதிபர் கிம் ஜாங்-யங்கின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜாங் நாம், 2017-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூர் விமான நிலையத்தில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். விமான நிலையத்தில் அமர்ந்திருந்த அவரது முகத்தில் 2 பெண்கள் தடை செய்யப்பட்ட ‘வி எக்ஸ்’ என்ற கொடுமையான ரசாயன விஷப்பவுடரை வீசி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த கொலை தொடர்பாக இந்தோனேசியாவைச் சேர்ந்த சித்தி ஆயுஷா, வியட்நாமைச் சேர்ந்த தோன் தி ஹுவாங் ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர். வடகொரியாவைச் சேர்ந்த 4 பேரை தேடி வருகின்றனர். குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது மலேசிய நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணையின்போது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கொலை சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற யூகங்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்தோனேசிய பெண் சித்தி ஆயுஷாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். ஆனால் அதற்காக காரணத்தை தெரிவிக்கவில்லை. இதையடுத்து சித்தி ஆயுஷா மீதான கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்வதாக நீதிபதி அறிவித்தார். தீர்ப்பு வெளியானதும் கோர்ட் வளாகத்தில் இருந்து மகிழ்ச்சியுடன் புறப்பட்டுச் சென்றார் சித்தி ஆயுஷா.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘நான் விடுதலை செய்யப்போகும் தகவல் இன்று காலையில் தான் எனக்கு தெரிந்தது. இது எனக்கு ஆச்சரியமாகவும், அதேசமயம் மகிழ்ச்சியாகவும் உள்ளது’ என்றார். இந்த வழக்கை சிறப்பாக நடத்தியதற்காக மலேசிய அரசுக்கு நன்றி தெரிவிப்பதாக, இந்தோனேசிய தூதர் கூறினார். #NorthKoreanLeader #KimJongNamMurder #IndonesianWomanFreed
பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்க அவரது பெற்றோர் இன்று இரவு டெல்லி புறப்பட்டனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan
சென்னை:
பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப் படை விமானியான அபிநந்தனை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் பேசுகையில், இந்திய விமானப்படை விமானி அபிநந்தன் நாளை விடுதலை செய்யப்படுவார். அமைதிக்கான நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் அவர் விடுதலை செய்யப்பட்டு உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவார் என தெரிவித்தார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் ராணுவத்திடம் சிறைபிடிக்கப்பட்டுள்ள அபிநந்தன், லாகூரில் இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விமானத்தில் அழைத்து வரப்படுகிறார் என்றும், டெல்லி அல்லது மும்பை விமான நிலையத்திற்கு அழைத்து வரப்படுவார் எனவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், பாகிஸ்தானில் விடுதலை செய்யப்படும் இந்திய விமானி அபினந்தனை வரவேற்க அவரது தந்தை வர்தமான், தாயார் ஷோபனா ஆகியோர் இன்று இரவு டெல்லி புறப்பட்டனர். #Abhinandan #BringBackAbhinandan #ImranKhan
கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட பயணிகள் 36 பேரும் விடுவிக்கப்பட்டனர். #CameroonAdduction
யாவுண்டே:
மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில், பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் தடுத்து நிறுத்தியது. அதில் 36 பயணிகள் இருந்தனர். அவர்களின் அடையாள அட்டைகளை பறித்த அந்த கும்பல், அனைவரையும் கீழே இறக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. பேருந்து டிரைவரை, கும்பா பேருந்து நிலையத்திற்கு திரும்பி செல்லும்படி, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டி அனுப்பி உள்ளனர்.
பேருந்து டிரைவர் கொடுத்த தகலின் அடிப்படையில் கடத்தப்பட்ட பயணிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று, நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்து அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். ஆனால், கடத்தப்பட்டவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், கடத்தப்பட்ட 36 பேரும் மறுநாள், அதாவது நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்டதூரம் தங்களை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் இருந்த பணம், செல்போன்கள் மற்றும் பொருட்களை பறித்துக்கொண்டு பின்னர் விடுவித்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.
பயணிகள் விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பியதையடுத்து, கும்பாவில் உள்ளூர் மக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கடத்தல் சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தினர்.
ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.
இந்த பிராந்தியங்களில் ஆட்கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் தான் காரணம் என அரசு குற்றம்சாட்டுகிறது. ஆனால், தங்கள் சுதந்திரப் போராட்டத்தை சர்வதேச அளவில் களங்கப்படுத்தும் வகையில், அரசாங்கத்தால் இந்த கடத்தல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்படுவதாக பிரிவினைவாதிகள் கூறுகின்றனர். #CameroonAdduction

கொடநாடு விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சயான், மனோஜ் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டுள்ளார். #KodanadEstate #KodanadVideo
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து கொள்ளை சம்பவத்தையும் அரங்கேற்றினர்.
ஜெயலலிதா உயிரோடு இருந்த வரையில் யாருமே நெருங்க முடியாத அளவுக்கு பலத்த பாதுகாப்புடன் காணப்பட்ட கொடநாடு எஸ்டேட்டில் நடந்த இந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்சம்பவத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் மீதும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. அவரது தூண்டுதலின் பேரிலேயே கொலை-கொள்ளையில் ஈடுபட்டதாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
முக்கிய ஆவணங்களை கனகராஜ் எடுத்துச் சென்று விட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில் சம்பவம் நடந்த சில நாட்களிலேயே அவர் மர்மமான முறையில் கார் விபத்தில் பலியானார்.
இந்த கொள்ளை சம்பவத்தில் கைதான கேரளாவை சேர்ந்த கூலிப்படை கும்பல் தலைவன் சயனின் மனைவி, மகள் ஆகியோரும் விபத்தில் பலியானார்கள். ஷயான் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
கொடநாடு எஸ்டேட்டில் பணியாற்றிய கம்ப்யூட்டர் ஆப்ரேட்டரும் மர்மமான முறையில் உயிரிழந்தார். இப்படி 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொடநாடு சம்பவம் தொடர்பாக சயன், மனோஜ், வாழையார் ரவி உள்ளிட்ட 10 பேர் கைதானார்கள்.
இந்த வழக்கு விசாரணை ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கோத்தகிரி போலீசார் குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு, கொடநாடு விவகாரத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது. இது அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கடந்த 11-ந்தேதி தெகல்கா புலனாய்வு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான மேத்யூஸ் சாமுவேல், கொடநாடு வழக்கின் குற்றவாளியான சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோர் கூட்டாக டெல்லியில் பேட்டி அளித்தனர்.
அப்போது கொடநாடு கொலை தொடர்பாக பரபரப்பான வீடியோ ஒன்றையும் அவர்கள் வெளியிட்டனர். தன் மீதான இந்த குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மறுத்தார்.
இதனை தொடர்ந்து அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியான ராஜன் அளித்த புகாரின் பேரில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். உடனடியாக மேத்யூஸ் சாமுவேல், சயன், மனோஜ், வாழையார் ரவி ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. துணை கமிஷனர் செந்தில் குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். அங்கு தனியார் விடுதியில் தங்கி இருந்த சயன், மனோஜ் இருவரையும் நேற்று இரவு சுற்றி வளைத்து கைது செய்தனர்.
இரவோடு இரவாக இருவரையும் சென்னை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி இன்று அதிகாலை 4.15 மணியளவில் சென்னை வந்த விமானத்தில் சயன், மனோஜ் ஆகியோர் பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டனர்.
விமான நிலையத்தில் இருந்து 5 மணியளவில் வெளியில் வந்த போலீசார் அங்கு தயாராக இருந்த போலீஸ் வேனில் 2 பேரையும் ஏற்றி எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் சயன், மனோஜ் இருவரையும் சைதாப்பேட்டையில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் எழும்பூம் நீதிமன்ற நீதிபதி சரிதா முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். தொடர்ந்து சயன், மனோஜ் மீதான விசாரணை நீதிபதி முன்பு 4 மணிநேரம் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் இருவரையும் விடுவிக்க நீதிபதி சரிதா உத்தரவிட்டார்.
விடுவிக்கப்பட்ட சயன், மனோஜ் வரும் 18ம் தேதி ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் விசாரணையின் போது வழக்கறிஞருடன் வரும் 18ம் தேதி 10 ஆயிரம் ரூபாய் பிணையுடன் வருமாறு நீதிபதி சரிதா உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KodanadEstate #KodanadVideo
எத்தியோப்பியாவில் இந்திய பிணைக்கைதிகள் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதின் காரணமாக அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். #Ethiopia #IndianEmployees #Released
மும்பை:
ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவில் ‘இன்பிராஸ்டிரக்சர் லீசிங் அண்ட் பினான்சியல் சர்வீசஸ்’ என்ற இந்திய நிறுவனம் அந்நாட்டில் பல்வேறு கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்நிறுவனம் திடீரென நலிந்து போனதால் அதன் துணை நிறுவனங்களில் பணிபுரியும் எத்தியோப்பிய தொழிலாளர்களுக்கு கடந்த சில மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஒரோமியா மற்றும் அம்ஹாரா ஆகிய மாகாணங்களில் அந்த நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்கள் 7 பேரை உள்ளூர் தொழிலாளர்கள் பிணைக் கைதியாக பிடித்துக் கொண்டனர். தங்களுக்கு சம்பளம் கிடைத்தால் மட்டுமே அவர்களை விடுவோம் என்றும் கூறி வருகின்றனர்.
இதனிடையே இந்திய தொழிலாளர்கள் 7 பேரும் போதிய உணவு வழங்கப்படாததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியானது. இதில் ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டி என்னும் இருவரின் உடல் நிலையும் மிக கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் அவர்கள் இருவரையும் உள்ளூர் தொழிலாளர்கள் நேற்று விடுவித்தனர். இருவரும் சிகிச்சைக்காக தலைநகர் அடிஸ் அபாபா நகர ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுபற்றி எத்தியோப்பியாவில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இ-மெயில் மூலம் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக ஹரிஷ் பாந்தி, பாஸ்கர் ரெட்டிக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் மற்ற 5 பேரும் தொடர்ந்து பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டு உள்ளனர்.

சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு ரோகித் சர்மாவை ‘ஏ’ அணியில் இருந்து விடுவித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #RohitSharma
மும்பை:
ரஹானே தலைமையிலான இந்திய ‘ஏ’ கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சென்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடர் நிறைவடைந்ததும் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மாவும் இந்திய ‘ஏ’ அணியுடன் இணைந்து 16-ந்தேதி மவுன்ட் மாங்கானுவில் தொடங்கும் முதலாவது 4 நாள் போட்டியில் ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தொடர்ந்து சர்வதேச போட்டிகளில் பங்கேற்றதால் பணிச்சுமையை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவ குழு அறிவுறுத்தியது. இதை ஏற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை ‘ஏ’ அணியில் இருந்து நேற்று விடுவித்தது.
20 ஓவர் போட்டித் தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி நாளை மறுதினம் மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு புறப்படுகிறது. அந்த அணியுடன் இணைந்து ரோகித் சர்மாவும் கிளம்புவார்.

ஜெயலலிதாவிடம் கைரேகை பெற்ற டாக்டர் பாலாஜியை உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் பொறுப்பில் இருந்து தமிழக அரசு விடுவித்தது.
சென்னை:
தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக சென்னை மருத்துவக்கல்லூரியில் நுண்துளை அறுவை சிகிச்சை துறையின் பேராசிரியராக பணியாற்றி வரும் டாக்டர் பி.பாலாஜி கடந்த 2016-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார்.
இவருடைய பதவி நியமனத்துக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் தன்னை அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு டாக்டர் பி.பாலாஜி தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தார்.
அதன்பேரில் அவரை அந்த பொறுப்பில் இருந்து தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் விடுவித்து உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து டாக்டர் பாலாஜி வகித்து வந்த பொறுப்பு சென்னை மருத்துவக்கல்லூரி மயக்கவியல் துறை மூத்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காந்திமதிக்கு வழங்கப்பட்டது.
அவர் வெளிநாடு சென்றிருந்ததால் உடனடியாக அந்த பதவியில் அமரவில்லை. இந்த நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பிய டாக்டர் காந்திமதி தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக நேற்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது, திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் குறித்த ஆவணத்தில் அவருடைய கை ரேகையை டாக்டர் பி.பாலாஜி தான் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெரினா கடற்கரையில் இன்று தடையை மீறி நினைவேந்தல் பேரணி செல்ல முயன்று கைதான வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். #MarinaProtest #TNPolice #May18TamilGenocide
சென்னை:
இலங்கையில் நடந்த இனப்படுகொலை சம்பவத்தை நினைவுகூரும் வகையில் மெரினா கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்ச்சியில் 13 இயக்கங்கள் இன்று பங்கேற்கப் போவதாக அறிவித்திருந்தன.
ஆனால், சென்னை மெரினா கடற்கரை பகுதியில் போராட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்துவதற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி போலீசார் அனுமதி கொடுப்பது கிடையாது. இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நினைவேந்தல் நிகழ்ச்சி எனும் பெயரில் தடையை மீறி ஒன்று கூடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
இதற்கிடையே, மெரினா மற்றும் சேப்பாக்கம் பகுதிகளில் 1,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மெரினாவில் பல்வேறு அமைப்பினர் நுழையாமல் இருக்க போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு மத்தியில் பாரதி சாலை முதல் கண்ணகி சாலை வரை பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்கள் பேரணியாக செல்ல வந்தனர். இந்த பேரணியில் வைகோ, திருமுருகன் காந்தி மற்றும் தெலகான் பாகவி ஆகியோரும் பங்கேற்றனர்.
நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர்களை கைதாகுமாறு போலீசார் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தடையை மீறி மெரினா செல்ல முயன்றவர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், தடையை மீறி நினைவேந்தல் பேரணி செல்ல முயன்று கைதான வைகோ, திருமுருகன் காந்தி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் விடுவித்துள்ளனர். #MarinaProtest #TNPolice #May18TamilGenocide
×

X