search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளம்பரம்"

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. #LokSabhaElection #Candidate #CriminalRecord
    புதுடெல்லி:

    தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் குற்ற ஆவணங்களை ஊடகங்களில் விளம்பரப்படுத்த வேண்டும் என கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த நடைமுறை வருகிற பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக அமலுக்கு வருகிறது.

    அதன்படி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்கள் மீது போலீசில் வழக்கு நிலுவையில் இருந்தால் அது பற்றிய விவரங்கள், தண்டிக்கப்பட்டு இருந்தால் அது குறித்த தகவல்கள் அனைத்தையும் முன்னணி நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் குறைந்தபட்சம் 3 நாட்களுக்காவது விளம்பரம் செய்ய வேண்டும்.

    குற்ற நடவடிக்கைகள் அல்லது வழக்குகள் இல்லாத வேட்பாளர்கள் என்றால், அது குறித்த தகவல்களையும் அந்த வேட்பாளர் விளம்பரம் செய்திருக்க வேண்டும். இதைப்போல தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்ற ஆவணங்களை சம்பந்தப்பட்ட கட்சித்தலைமையும் விளம்பரப்படுத்த வேண்டும். அது குறித்த தகவல்களை தங்கள் இணையதளத்தில் வெளியிட்டு இருக்க வேண்டும்.

    தவறும் கட்சிகள் மீது அங்கீகாரம் ரத்து, இடைநீக்கம் போன்ற நடவடிக்கைகள் பாயும் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. #LokSabhaElection #Candidate #CriminalRecord
    பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசு திட்டத்திற்கான விளம்பரம் பிரதமர் மோடியை காக்க உதவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

    கடந்த 2015-ல் அரியானாவில் தொடங்கிய இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் இருந்து விளம்பரத்துக்காக மட்டும் 56 சதவீதம் செலவழிக்கப்பட்டு உள்ளது என மத்திய அரசு தெரிவித்திருந்தது.



    இந்நிலையில், பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசு திட்டத்துக்கான விளம்பரம் பிரதமர் மோடியை காக்க உதவுகிறது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், பெண் குழந்தைகளைக் காப்போம் என்ற மத்திய அரசின் திட்டத்துக்கு செலவு செய்யப்படும் விளம்பரம் பிரதமர் மோடியை காப்பாற்ற உதவுகிறது என பதிவிட்டுள்ளார். #RahulGandhi #PMModi
    ரெயில்வே டெண்டர்கள் குறித்த விவரங்கள் இனி ஆன்லைன் மூலமே தெரிவிக்கப்படும் எனவும், செய்தித்தாள்களில் விளம்பரம் இல்லை எனவும் ரெயில்வே வாரியம் தெரிவித்துள்ளது. #RailwayBoards
    புதுடெல்லி:

    ரெயில்வே துறையில் விடப்படும் டெண்டர்களின் விவரங்களை செய்தித்தாள்களில் வெளியிடும் வழக்கத்தை கைவிட ரெயில்வே துறை தற்போது முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில்,  செய்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் மூலம் டெண்டர் விளம்பரங்கள் அளிப்பதனால் ஏற்படும் அதிகப்படியான செலவை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் டெண்டர் குறித்த விவரங்கள் வெளியிடப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #RailwayBoard
    இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது. அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. #sony #FIFA2018
    21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா வருகிற 17-ந்தேதி ரஷியாவில் தொடங்குகிறது. இதில் 32 அணிகள் பங்கேற்கின்றன.

    இப்போட்டி தொடரை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.

    இந்தியாவிலும் உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூரம் பரவி வருகிறது. கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும் உலக கோப்பை கால்பந்து போட்டியை இந்திய ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள்.

    இந்தியாவில் உலக கால்பந்து போட்டியை ஒளிபரப்பும் உரிமையை சோனி நிறுவனம் பெற்றுக் இருக்கிறது.

    அந்நிறுவனம் விளம்பரங்கள் மூலம் ரூ.200 கோடி சம்பாதிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட இரு மடங்கு உயர்வாகும். 2014-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் போது ரூ.120 கோடி வரை விளம்பரம் மூலம் வருவாய் கிடைத்தது.

    இந்தியாவில் நடந்துவரும் இந்தியன் சூப்பர் லீக் கால் பந்து தொடர் மூலம் அதிக ரசிகர்களை ஈர்த்துள்ளது. #sony #FIFA2018
    பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி. #ModiGovernment #Modi #Advertisement
    மும்பை:

    மும்பையை சேர்ந்த தகவல் அறியும் சமூக ஆர்வலர் அனில் கல்காலி என்பவர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு எவ்வளவு செலவு செய்துள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்தார். இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு அலுவலகம் பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்த பின்னர் இதுவரை விளம்பரத்துக்கு செலவு செய்தது ரூ.4,343.26 கோடி.

    இதில் தினசரி நாளிதழ்கள், பருவ இதழ்கள் உள்ளிட்ட அச்சு ஊடகங்களுக்கு ரூ.1,732.15 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2017 டிசம்பர் 7 வரை), டி.வி., இன்டர்நெட், ரேடியோ, டிஜிட்டல் சினிமா, எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட மின்னணு ஊடகங்களுக்கு ரூ.2,079.87 கோடியும் (2014 ஜூன் 1 முதல் 2018 மார்ச் 31 வரை), போஸ்டர், பேனர், ரெயில் டிக்கெட் உள்ளிட்ட வெளிப்புற விளம்பரங்களுக்கு ரூ.531.24 கோடியும் (2014 ஜூன் முதல் 2018 ஜனவரி வரை) செலவிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ModiGovernment #Modi #Advertisement #Publicity
    ×