search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஸ்லாந்து"

    உலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து நாடுகள் முதலிடத்தை பிடித்துள்ளன.
    லண்டன்:

    சர்வதேச நாடுகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் குறித்த ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. அதில் டென்மார்க், பின்லாந்து, நார்வே, ஐஸ்லாந்து, சுவிட்சர்லாந்து ஆகிய 5 நாடுகளில் மக்களின் வாழ்க்கை தரம் அமோகமாக இருப்பது தெரியவந்தது.

    அதன்மூலம் உலகில் மிக மகிழ்ச்சிகரமான நாடுகள் பட்டியலில் மேற்கண்ட டென்மார்க் உள்ளிட்ட 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவை 10-க்கு தலா 7.5 புள்ளிகள் பெற்றுள்ளன.

    இதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் இடம் பிடித்துள்ளன. அமெரிக்காவுக்கு 6.9 புள்ளிகளும், இங்கிலாந்துக்கு 6.7 புள்ளிகளும் கிடைத்துள்ளன.

    வடக்கு ஐரோப்பிய நாடுகளில் வாழும் மக்கள் மிக அதிக அளவில் பணம் சம்பாதிக்கின்றனர். நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ்கின்றனர். அரசும் நல்ல திட்டங்களை கொண்டுவந்து நிறைவேற்றுகிறது. அதன்மூலமே அந்த நாடுகளில் வாழும் மக்கள் மகிழ்ச்சிகரமான வாழ்க்கையை நடத்துகின்றனர் என்றும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
    ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் நேற்று நடந்த லீக் போட்டியில் குரோசியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தியது #ISLCRO #WorldCup2018 #FIFA2018

    மாஸ்கோ:

    உலகக்கோப்பை கால்பந்து தொடர் போட்டிகள் ரஷியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது. முதல் லீக் ஆட்டத்தில் பெரு, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. டென்மார்க், பிரான்ஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது லீக் போட்டி டிராவில் முடிந்தது.
     இதையடுத்து நான்காவது லீக் ‘டி’ பிரிவில் இடம்பிடித்துள்ள 
    ஐஸ்லாந்து, குரோசியா அணிகள் பலப்பரீட்சை செய்தன.

    குரோசியா அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் ஏற்கனவே நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. ஐஸ்லாந்து அணி இந்த போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துடன் களமிறங்கியது. 

    இப்போட்டி தொடங்கியதில் இருந்தே இரு அணி வீரர்கள் தொடர்ந்து கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தது. முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கோல் அடிக்கவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோசியா வீரர் மிலான் படேல்ஜ் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி 1-0 என முன்னிலை பெற்றது. அதன்பின் 76-வது நிமிடத்தில் ஐஸ்லாந்து அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதில் அந்த அணியின் கைல்பி சிகுர்ட்சன் கோல் அடித்தார். இதனால் ஆட்டம் 1-1 என சமனானது. 



    அதைத்தொடர்ந்து 90-வது நிமிடத்தில் குரோசியா அணியின் இவான் பெரிசிக் கோல் அடித்தார். இதனால் குரோசியா அணி மீண்டும் முன்னிலை பெற்றது. 



    அதன்பின் எந்த அணியிம் கோலும் அடிக்காததால் குரோசியா அணி 2-1 என வெற்றி பெற்றது. இதனால் ஐஸ்லாந்து அணி தொடரைவிட்டு வெளியேறியது. #ISLCRO #WorldCup2018 #FIFA2018
    உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. #WorldCup2018 #NIGICE
    உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரவு 8.30 மணிக்கு டி பிரிவில் இடம் பிடித்துள்ள நைஜீரியா மற்றும் ஐஸ்லாந்து அணிகள் மோதின.

    போட்டி தொடங்கியதில் இருந்து நைஜீரியா அணி வீரர்கள் சிறப்பாக ஆடினர். அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐஸ்லாந்து அணியினரின் ஆட்டம் அமைந்தது. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.



    ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 49-வது நிமிடத்தில் நைஜீரியா அணியின் அகமது மூசா ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார்.

    தொடர்ந்து, ஆட்டத்தின் 75-வது நிமிடத்திலும் அகமது மூசா மற்றொரு கோல் அடித்தார். இதனால் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. நைஜீரியா அணியின் ஆட்டத்துக்கு ஐஸ்லாந்து அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை.

    இறுதியில், ஆட்டத்தின் முடிவில் நைஜீரியா அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஐஸ்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
    அர்ஜென்டினா அணி ஐஸ்லாந்திடம் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன் என அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கூறியுள்ளார். #DiegoMarodona #Argentina
    மாஸ்கோ:

    உலக கோப்பை கால்பந்து போட்டியில் தனது முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா அணி 1-1 என்ற கோல் கணக்கில் குட்டி தேசமான ஐஸ்லாந்துடன் டிரா கண்டது. இந்த ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்சி பெனால்டி வாய்ப்பை கோட்டை விட்டார்.



    இந்த ஆட்டம் குறித்து அர்ஜென்டினா அணியின் முன்னாள் ஜாம்பவான் மரடோனா கருத்து தெரிவிக்கையில்,

    ‘ஐஸ்லாந்து அணியுடன் டிரா கண்டது அவமானமாகும். இந்த ஆட்டத்தில் நான் எந்த வீரரையும் குறை சொல்ல மாட்டேன். மெஸ்சி பெனால்டி வாய்ப்பை தவறவிட்டது தான் வெற்றி கிடைக்காமல் போனதற்கு காரணம் என்று நினைக்கவில்லை. எதிரணிக்கு தகுந்த படி ஆட்ட யுக்தியை அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் அமல்படுத்தவில்லை. இந்த மாதிரி தொடர்ந்து விளையாடினால் அர்ஜென்டினா அணி நாடு திரும்ப முடியாது’ என்றார்.  #DiegoMarodona #Argentina
    உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ‘டி’ பிரிவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. #FIFA2018 #WolrdCup2018 #ARGvsICE
    உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் ‘டி’ பிரிவில் உள்ள அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து மோதின.

    ஆட்டத்தின் 19-வது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் செர்ஜியோ அகிரோ ஒரு கோல் அடித்தார். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே ஐஸ்லாந்து அணியின் ஆல்பிரட் பின்பகாசன் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் சமனிலை அடைந்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமனிலையில் இருந்தன.

    இதையடுத்து, ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இறுதியில், அர்ஜென்டினா மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி 1-1 என்ற கணக்கில் சமனிலை அடைந்தது.

    ஐஸ்லாந்து அணி முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #FIFA2018 #WolrdCup2018 #ARGvsICE
    ×