search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொகைன்"

    அதிக சம்பளத்துக்கு ஆசைப்பட்டு போதை மாத்திரை விற்று டி.வி. ஊழியர் மாதம் ரூ.70 ஆயிரம் சம்பாதித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
    சென்னை:

    அந்நிய மோகம் என்பது நடை, உடை, பாவனை என்ற நிலையில் மட்டுமின்றி போதையிலும் நம்நாட்டு இளைஞர்களை அடிமைப்படுத்தி சீரழித்து வருகிறது என்ற அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.

    வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் கொகைன், கேட்டமைன் போன்ற போதை மாத்திரைகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு நைஜீரியாவை சேர்ந்த சுகுசிமோன் ஒபினா (30) என்ற வாலிபரை போதை பொருள் தடுப்பு போலீசார் சென்னையில் கைது செய்தனர். அவர் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை கடத்தி வந்து விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவரிடம் விசாரித்த போது பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களை குறிவைத்து போதை மாத்திரைகள் விற்கப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து போதை பொருள் தடுப்பு மற்றும் புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஆலந்தூர் வேதகிரி தெருவை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரது வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அப்போது போதை மாத்திரைகளை கைப்பற்றினார்கள். கார்த்திக்கையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது.

    கார்த்திக் சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் மாதம் ரூ.16 ஆயிரம் சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    போதை பழக்கம் கொண்ட கார்த்திக் முதலில் டாஸ்மாக் கடையில் சென்றுதான் சரக்கு வாங்குவாராம். திடீரென ஒரு நாள் இந்த புதிய போதை மாத்திரை பற்றி அறிந்துள்ளார். இந்த மாத்திரையை நாவில் போட்டதுமே போதை தலைக்கேறுமாம். போதை போட்ட அறிகுறியோ வாடையோ தெரியாதாம். ஆனால் எப்போதும் போதை கிறக்கத்தில் இருக்கலாமாம்.

    கார்த்திக்குக்கு இது புது அனுபவமாக இருந்தது. போக போக போதை மாத்திரைக்கே அடிமையாகி விட்டார். இதனால் வாங்கும் சம்பளம் போதை மாத்திரைக்கும், குடும்ப செலவுக்கும் போதவில்லை.

    அப்போது போதை மாத்திரை விற்கும் ஏஜெண்டின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதன் மூலம் மாத்திரைகளை வாங்கி மாணவர்கள், இளைஞர்களிடம் விற்பனை செய்துள்ளார். இந்த தொழிலில் மாதம் ரூ.70 ஆயிரம் வருமானம் கிடைத்துள்ளது.

    மாத்திரை வாங்குவதற்காக அடிக்கடி கோவா செல்வாராம். அங்கு வெளிநாட்டு ஏஜெண்டுகளிடம் மாத்திரையை வாங்கி வந்து விற்று வந்துள்ளார். இதேபோல் பலர் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அவர்களையும் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.

    தகவல் தொழில்நுட்பம் உள்பட பல தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்களும் இந்த போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    பணிச்சுமை, மன அழுத்தங்களில் இருக்கும் இளம் வயதினரை குறிவைத்து அவர்கள் மத்தியில் இந்த மாத்திரைகளை விற்று வருகிறார்கள்.

    மாத்திரைகளை சுவைத்து போதைக்கு அடிமையாகி வரும் இளைஞர்கள் பின்னர் அதில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறார்கள்.

    டெக்சாஸ் நாட்டில் சிறைக்கைதிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்ட வாழைப்பழ பெட்டிகளுக்குள் இருந்து 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. #Cocaine #Texas
    ஆஸ்டின்:

    டெக்சாஸில் உள்ள ஹோஸ்டான் நகரில் உள்ள சிறைச்சாலைக்கு வாழைப்பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. 50--க்கும் மேற்பட்ட பெட்டிகளில் வந்த வாழைப்பழங்களை சிறைக்காவலர்கள் வாங்கி பெட்டிக்குள் பரிசோதனை நடத்தியுள்ளனர்.

    அப்போது வாழைப்பழங்களுக்கு கீழே வெள்ளை நிற பொடி போன்ற பொட்டலங்களை கண்ட அதிகாரிகள், சுங்கவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து அனைத்து பெட்டிகளிலும் சோதனை நடத்தியபோது, சுமார் 45 பெட்டிகளில் இருந்து 540 கொகைன் எனும் போதைப்பொருள் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

    இதன் மதிப்பு சுமார் 18 மில்லியன் அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். #Cocaine #Texas
    ×