search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாலாப்பேட்டை"

    லாலாப்பேட்டை அருகே கார்கள் மோதலில் டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    லாலாப்பேட்டை:

    திருச்சி நெ.1 டோல்கேட் பிச்சாண்டார்கோவிலை சேர்ந்தவர் பத்மநாபன் (வயது 60), கார் டிரைவர். இவர் நேற்றிரவு காரில் திருச்சி- கரூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    லாலாப்பேட்டை பகுதியில் நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது கார் கட்டுப்பாட்டினை இழந்தது. இதில் எதிரே அடுத்தடுத்து வந்த 2 கார்கள் மீது பத்மநாபன் சென்ற கார் மோதியது.

    இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பத்மநாபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அறிந்த லாலாப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் உயிரிழந்த பத்மநாபன் உடலைமீட்டு குளித்தலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் காயமடைந்த 3 பேரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தினால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    லாலாபேட்டை:

    லாலாப்பேட்டை மேட்டு மகாதானபுரம் வீரமலை என்பவரின் மகன் சந்திரசேகர் (55) கொத்தனார். இவர் கடந்த 3-ந் தேதி லாலாபேட்டையிலிருந்து மோட்டார் சைக்கிளில் மகாதான புரத்துக்கு சென்றார். அப்போது எதிரே அதே பகுதியை சேர்ந்த  பாலசுப்பிரமணியன் (30) என்பவர் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளில் எதிர் பாராத விதமாக சந்திரசேகர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 

    இதில் சந்திரசேகர் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சந்திரசேகர் பரிதாபமாக இறந்தார். 

    இது குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
    லாலாப்பேட்டை அருகே ஆட்டை காப்பாற்ற சென்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
    லாலாபேட்டை:

    லாலாபேட்டை அடுத்த வல்லம் பகுதியைச் சேர்ந்த துரை என்பவரின் மகன் கண்ணன்(வயது 33) , விவசாய கூலி தொழிலாளி. இவர் நேற்று மதியம் ஆடுகளை மேய்க்க செங்கமேடு என்ற பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மட்டும் வேகமாக ஓடி அங்கு கீழே கிடந்த மின் கம்பியில் சிக்கி துடித்து கொண்டிருந்தது. அதை பிடிக்க சென்ற கண்ணன் மின் கம்பியில் சிக்கி தூக்கி வீசப்பட்டு துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார். 

    இந்த சம்பவம் குறித்து கிருஸ்ணராயபுரம் தாசில்தார் சுரேஸ்குமார், குளித்தலை டி.எஸ்.பி. முத்துகருப்பன், லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கண்ணனுக்கு சுதா என்ற மனைவியும் கார்த்திகா(12) பிரசன்னா(8) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
    காரும் லாரியும் மோதிய விபத்தில் நிதி நிறுவன உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து லாலாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாலாபேட்டை:

    குளித்தலையில் இருந்து ஈரோட்டிற்கு மணல் லாரி சென்றது. அதனை குளித்தலை நாப்பாலையத்தை சேர்ந்த பத்மநாதன் (46) ஓட்டிச்சென்றார். அப்போது எதிரே அரவக்குறிச்சி தாலுகா சின்ன கேத்தம்பட்டியை சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் பாலசுப்ரமணி (50) ஓட்டி வந்த காரும், லாரியும் மோதின. இதில் பாலசுப்ரமணி(50) ,அவரது மனைவி முத்து லட்சுமி (41), மகன் தினேஸ்(21) , மகள் திவ்யா(18) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு கரூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி பாலசுப்பிரமணி இறந்தார். இது குறித்து லாலாபேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×