search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமதுரம்"

    அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
    அதிமதுரம் வேரை வாயிலிட்டுச் சவைக்க, வித்தியாசமான இனிப்புச் சுவை தொண்டையினூடே ஆவியாய்க் கீழிறங்குவதை உணர முடியும். அதிமதுரத்தின் இனிப்பு நீண்ட நேரம் நாவிலும் தொண்டையிலும் நிலைத்திருந்து, எச்சில் சுரப்பை அதிகரித்து, நாவறட்சியை அகற்றும்.

    அதிமதுரத்தை நீரிலிட்டுக் கொதிக்கவைத்து, கொஞ்சம் பனங்கற்கண்டு, மிளகுத் தூள் சேர்த்து காலையில் பானமாகப் பருக, உங்கள் குரலுக்குக் குயிலும் அடிமையாகும். நன்னாரியைத் தண்ணீரில் ஊறவைத்து சர்பத் தயாரிக்கும்போது, அதிமதுர வேரையும் சேர்த்துக்கொள்ள பலன்கள் இரட்டிப்பாகும். இதன் வேர்க்குச்சிகள் இனிப்பு மிட்டாயாக வெளிநாடுகளில் பிரபலமடையத் தொடங்கியிருக்கின்றன.

    சர்க்கரை நோயாளர்கள், செயற்கை இனிப்பூட்டிகளுக்குப் பதிலாக, இயற்கை இனிப்பூட்டியான அதிமதுரத்தைப் பயன்படுத்தலாம். சைனஸ் பிரச்சனை, ஒற்றைத் தலைவலி, தலைபாரம் ஏற்படும்போது சோம்பு கொதிக்க வைத்த நீரில், அதிமதுரத் தூளைக் கலந்து பருகலாம். இனிப்புச் சுவையுடன் உடலை வளமையாக்கும் தன்மை இருப்பதால், இனிப்பு வகைகளில் சர்க்கரைக்கு மாற்றாக அதிமதுரத்தைச் சிறிதளவு முயலலாம்.

    அதிமதுரத்தின் சாரங்கள் வயிற்று மென்படலத்தின் எதிர்ப்புச் சக்தியை அதிகரித்து, வயிற்றுப் புண்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாக உறுதிப்படுத்துகிறது

    புகைப்பிடிக்கும் பழக்கம் உடையவர்கள், அந்த உணர்வை மறக்கடிக்க, சிறிது அதிமதுரத் துண்டை மெல்லலாம். வறட்டு இருமல் இடைவிடாமல் ஒலி எழுப்பிக் கொண்டிருக்கும்போது, அதிமதுரம், மிளகு, கடுக்காய்த் தோல் ஆகியவற்றைப் பொடி செய்து, சிறிதளவு எடுத்து வாயில் அடக்கிக்கொள்ள வறட்சி காணாமல் போகும்.

    பொதுவாக அதிமதுரம் ஒரு 'நிதானமான' மலமிளக்கி. வழவழப்பானதால் எரிச்சலை தணிக்கும். சுவாச குழாய்களில் கபம் முதலியவற்றை விலக்கும். தொண்டை கரகரப்பு, உலர்ந்த தொண்டை, உலர் இருமல்களை போக்கி, நுரையீரலை ஈரப்படுத்தும். ஜலதோஷம், ப்ளூ, ஆஸ்துமா இவற்றுக்கு மருந்து. நுரையீரலுக்கு சிறந்த டானிக். அதிமதுர வேருடன் வால்மிளகு, பனங்கற்கண்டு, பால் சேர்த்து தயாரித்த கஷாயத்தை குடிப்பதால் தொண்டைப்புண் குணமாகும். அதிமதுர கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தாலே வாய்ப்புண்கள் ஆறும்.

    தொண்டை, வாய்ப்புண்களுக்கு அதிமதுரம் தொன்று தொட்டு பயன்படுத்தப்படுகிறது. ஒரு துண்டு அதிமதுரத்தை அப்படியே வாயில் வைத்து மென்றாலே தொண்டைக்கு இதமாகும்.

    வயிற்றுப்புண்களுக்கு - அதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும் - காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண்  குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

    குளிர்ச்சித்தன்மை கொண்ட அதிமதுர வேரை தைலங்களில் சேர்க்க, கூந்தல் வளர்ச்சியை அதிகரிப்பதோடு, இளநரையையும் கட்டுப்படுத்தும் என்பதை ‘அதிமதுரம் அவுரி ஆலம்விழுது அறுகு அடர்ந்த முடி ஆக்கும்’ எனும் மூலிகைக் குறள் தெரிவிக்கிறது. இதன் இலையை அரைத்து உடலில் பூசிக்குளிக்க வியர்வை நாற்றம் மறையும். சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், விளக்கெண்ணெய்யைத் தடவி, அதன் மீது இதன் இலையை வைக்க விறுவிறுப்புத் தன்மை ஏற்பட்டு தசை இளகுவதை உணர முடியும்.
    சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.
    இருமல்: கடந்த ஒரு மாத காலமாக பலருக்கும் சளி, இருமல் பிரச்சனைதான். மருந்து சாப்பிட்டு சளி கூட நீங்கி விட்டது. இருமல் தான் நிற்கவே இல்லை என பலரும் கூறுகின்றனர். பல இருமல் மருந்துகளை சாப்பிட்டும் குறையவில்லை என்பதும் தொடர் இருமல் என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. ஆனால் சளி, இருமல் என சீதோஷ்ண நிலை மாறுதல் காரணமாக ஏற்படும் தாக்குதல்களுக்கு மருந்தோடு இயற்கை முறைகளையும் மருத்துவம் அறிவுறுத்துகின்றது.

    * தேன் மிகச் சிறந்தது வறட்டு இருமலுக்கு என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 1-2 டீஸ்பூன் தேனினை வெதுவெதுப்பான நீரில் 2-3 முறை அன்றாடம் குடித்து வர இருமல் கட்டுப்படும். இதனை சர்க்கரை நோயாளிகள் செய்ய வேண்டாம். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது.

    * பைன் ஆப்பிள்: அன்னாசி பழமானது மூக்கு, சைனஸ் பகுதிகளில் உள்ள வீக்கத்தினை குறைக்க வெகுவாய் உதவுகின்றது. இருமல் இருக்கும் பொழுது அன்னாசி பழ ஜூஸ் சிறிதளவு அவ்வப்போது குடிப்பது சளியினை வெளியேற்றி இருமலைக் குறைக்கும்.

    * அதிமதுரம்: இதற்கு பல நாடுகளில் இன்று வரவேற்பு வெகுவாய் கிடைத்துள்ளது. அதிமதுர பொடி வாங்கி 2 கப் நீரில் 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின் இறக்கி 15-20 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பின் இதனை வடிகட்டி காலை-மாலை இரு வேளை அருந்துங்கள். இருமல் வெகுவாய் கட்டுப்படும்.

    * வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு கொப்பளியுங்கள்.

    நெஞ்செரிச்சல்: அசிடிடி-நெஞ்செரிச்சல் என்ற இந்த இரு வார்த்தைகளை கேட்காதவர், அனுபவிக்காதவர் மிகக் குறைவு எனலாம். இதற்கு தானே மருந்து கடையில் மருந்து வாங்கி எடுத்துக் கொள்பவர்கள் ஏராளம். ஆனால் இது அடிக்கடி அவர்களை தாக்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

    மிக அதிகமாகவும், அடிக்கடியும் இந்த ஆசிட் கட்டுப்படுத்தும் மருந்தினை எடுத்துக் கொள்ள வேண்டாம் என ஆய்வுகள் கூறுகின்றன.

    விடாமல் அசிடிடி நிவாரண மருந்தினை பாக்கெட்டிலேயே வைத்து உணவு போல் அடிக்கடி எடுத்துக் கொள்பவர்களுக்கு

    * நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது

    * தேவையான சத்துக்களான பி12, கால்ஷியம், இரும்பு மற்றும் மக்னீஷிய சத்துக்கள் உறிஞ்சப்படுவது வெகுவாய் குறைகின்றது.

    * உடல் நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.



    இயற்கை முறையில் அசிடிடி பாதிப்பினை தடுக்க சில முறைகள் இருக்கின்றன.

    * குளிர்ந்த பால் அருந்துவது அசிடிடி பாதிப்பினை வெகுவாய் குறைக்கும். நீக்கும். உங்களுக்கு சளி பாதிப்பு ஏற்படாது எனில் ஐஸ்கிரீம் கூட எடுத்துக் கொள்ளலாம்.

    * மோர் குடிக்கலாம். இதனை அன்றாடம் அடிக்கடி கூட குடிக்கலாம்.

    * சிகரெட், மது இரண்டினையும் அடியோடு தவிர்த்து விடவேண்டும்.

    * பாதாம் வயிற்றிலுள்ள ஆசிட் சக்தியினை குறைத்து விடும். சாப்பிட்ட பிறகு 3-4 பாதாம் மென்று சாப்பிடுங்கள்.

    * மசாலா, எண்ணெய், காரம் இவைகளை கண்டிப்பாய் தவிர்க்க வேண்டும்.

    * போதுவான தூக்கமின்மை நெஞ்செரிச்சல், ஆசிட் எதிர்ப்பு ஆகியவற்றினை உருவாக்கும். எனவே குறைந்தது 7 மணி நேர ஆழ்ந்த உறக்கம் இரவில் தேவை.

    * ஆப்பிள், வாழைப்பழம் உண்ணலாம்.

    * சோற்றுக்கற்றாழை ஜூஸ் மிக நல்ல சிகிச்சை ஆகும்.

    * அரிசி உணவும் நெஞ்செரிச்சல், ஆசிட் இவற்றுக்கு நல்ல தீர்வாகும்.

    இன்னும் ஒரு 30 நாட்கள் லேசான குளிர் இருக்கலாம்.

    ஆனால் பலருக்கு இந்த குளிர் நாட்கள் சளி, ஜீரம், ஆஸ்துமா என பல பாதிப்புகளை ஏற்படுத்தி விடுகின்றன. இதற்கு ஒரு முக்கிய காரணம், தோய்க்கும் துணிகளை வீட்டுக்குள்ளேயே அதுவும் சூரிய ஒளி இல்லாத இடத்தில் ஈரத் துணிகளை காயப் போடுவது தான். நம்மில் அநேகருக்கு பல கிருமி, பூஞ்ஞைகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உண்டு. சிலருக்கு இந்த ஈர துணிகளை உள்ளே காயப்போடும் பொழுது அந்த ஈரம் அவரைத் தாக்குவதால் சளி, ஆஸ்த்மா பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிலருக்கு மிக அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்கான தகுந்த பாதுகாப்பினை இவர்கள் மேற்கொண்டால் ஆரோக்கியமாக வாழ முடியும்.
    ×