search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேக்ஸ்வெல்"

    ஒருநாள் போட்டியில் 4-வது இடத்தில் களமிறங்கி விளையாட வேண்டும் என்று மேக்ஸ்வெல் கூறுவது தற்போது நிறைவேறாது என்று லாங்கர் தெரிவித்துள்ளார். #INDvAUS
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான இரண்டு போட்டிகளை கொண்ட டி20 தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இரண்டு போட்டியிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

    இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்ற மேக்ஸ்வெல் முக்கிய காரணமாக இருந்தார். முதல் ஆட்டத்தில் அரைசதம் அடித்த அவர், 2-வது போட்டியில் சதம் அடித்தார். இதனால் ஆட்ட நாயகன் விருதுடன் தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

    டி20 கிரிக்கெட் போட்டியில் நான்காவது இடத்தில் களம் இறங்கிய அவர், ஒருநாள் போட்டியில் 7-வது இடத்திற்குப் பிறகு களம் இறங்கி விளையாடுகிறார். டி20 கிரிக்கெட் போட்டியை போல் ஒருநாள் போட்டியிலும் நான்காவது இடத்தில் களமிறங்கி விளையாட விரும்புகிறேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் அவர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தட்டும். அதன்பின் பார்க்கலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் தலைமை பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ‘‘நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அணிக்கு எது சிறந்ததோ, அதை நாங்கள் செய்வோம். தற்போதுள்ள நிலை தொடர்ந்து எப்படி செல்கிறா? என்று பார்க்க வேண்டும்.

    நாங்கள் அவரிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறோம். அவரால் அதை செய்ய முடியும் என்பதை அவர் முதலில் சொல்ல வேண்டும். அந்த விஷயத்தை அவர் செய்தால், தானாகவே சிறந்த வீரராக உயர்வார். அவர் உலகத்தரம் வாய்ந்த வீரராகி இன்னும் அதிகமான வெற்றிகளை தேடித்தர வேண்டும் என்று அவரும் விரும்புகிறார். நாங்களும் விரும்புகிறோம். அப்படி அவர் செய்தால் சிறந்த வீரராக அங்கீகரிக்கப்படுவார்’’ என்றார்.
    டோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி நேரத்தில் ஒரு ரன் எடுக்க முயற்சி செய்யவில்லை என்பதே தோல்விக்குக் காரணம் என விமர்சிக்கப்படுகிறது #SAvSL
    இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தியா முதல் 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் சேர்த்திருந்தது. 3-வது விக்கெட்டாக ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் டோனி களம் இறங்கினார்.

    அதன்பின் இந்தியாவின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது. டோனி 37 பந்துகளை சந்தித்து 29 ரன்கள் மட்டுமே சேர்த்தார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் ஒரு சிக்சர் மட்டுமே அடித்தார். கடைசி நான்கு ஓவர்களில் பெரும்பாலும் ஒரு ரன்னிற்கு அவர் ஓடவில்லை.

    இதனால் அவர் மீது விமர்சனம் எழும்பியுள்ளது. இந்நிலையில் மேக்ஸ்வெல், பும்ரா ஆகியோர் டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

    டோனி ஆட்டம் குறித்து பும்ரா கூறுகையில் ‘‘நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்தோம்.  பாதாளத்திற்குச் சென்ற ஆட்டத்தை திரும்பவும் நல்ல நிலைமைக்கு எடுத்துச்செல்ல டோனி முயற்சி செய்தார்.



    நாங்கள் 15 முதல் 20 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம் என்று நினைக்கிறேன். ஆனால், நாங்கள் பந்து வீச்சில் அபாரமாக செயல்பட்டு கடும் நெருக்கடி கொடுத்தோம். ஆகவே, டோனி அவரது திட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்ததாக நினைக்கிறேன்’’ என்றார்.

    ‘‘டோனி 37 பந்தில் 29 ரன்கள் அடித்தது போதுமான ஸ்டிரைக்-தான். ஆடுகளத்தை பொறுத்த வரைக்கும் எந்தவொரு பேட்ஸ்மேன் ஆக இருந்தாலும் ரன் குவிக்க இயலாத வகையில் கடினமாக இருந்தது. டோனி உலகத்தரம் வாய்ந்த பினிஷர். நடு பேட்டில் பந்தை மீட் செய்வதற்காக டோனி கடினமாக முயற்சி செய்தார்.



    இறுதியாக கடைசி ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்தார். கடைசி 7 ஓவரில் அது மட்டும்தான் பவுண்டரி கோட்டை தாண்டியது. இதில் இருந்தே ஆடுகளம் எப்படி இருந்திருக்கும் என்பது தெரியவரும். கடைசி சில ஓவர்களுக்கு முன் டோனி இந்த சிக்ஸை அடித்திருந்தால், அது மிகப்பெரிய முயற்சியாக இருந்திருக்கும்’’ என்றார்.
    இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் மேக்ஸ்வெல்லை 7-வது இடத்தில் களம் இறக்குவது வேஸ்ட் என ஆரோன் பிஞ்ச் மீது பார்டர் குற்றம்சாட்டியுள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கடந்த 12-ந்தேதி சிட்னியில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்கள் குவித்தது. அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் 7-வது வீரராக களம் இறங்கினார். 5 பந்துகள் மட்டுமே சந்தித்த அவர் 11 ரன்கள் சேர்த்தார்.

    இந்நிலையில் அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல்லை 7-வது வீரராக களம் இறக்குவது வேஸ்ட் என்று ஆரோன் பிஞ்ச் மீது ஆலன் பார்டர் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘மேக்ஸ்வெல் 7-வது இடத்தில் களம் இறங்குவது வேஸ்ட் என நான் உணர்கிறேன். மேக்ஸ்வெலால் தொடர்ச்சியாக அதிரடி ஆட்டத்தில் ஈடுபட முடியாது என்றாலும், சிறப்பான தொடக்கம் கொடுத்தால், சூழ்நிலைக்கு ஏற்ப 3-வது இடத்தில் அவரை களம் இறக்கலாம்’’ என்றார்.
    இந்தியாவின் ‘லெஜண்ட்’ எம்எஸ் டோனி. அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை ஆடுவதற்கு முயற்சி செய்து வருகிறேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 12-ந்தேதி (சனிக்கிழமை) தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியில் இடம்பெறாத ஆஸ்திரேலியாவின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் அணியில் இடம்பிடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணியின் முக்கிய துருப்புச்சீட்டாக அவர் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய அணியில் எம்எஸ் டோனி இணைந்துள்ளார். டோனி குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘எம்எஸ் டோனி இந்தியாவின் லெஜண்ட், அவரது ஹெலிகாப்டர் ஷாட்டை காப்பியடிக்க முயற்சி செய்கிறேன்’’ என்றார்.



    மேலும், ‘‘ஒரு ஆட்டத்தில் டோனி கொடுத்த கேட்ச் வாய்ப்பை தவறவிட்டேன். பால்க்னெர் வீசிய அடுத்த பந்தில் சிக்ஸ் விளாசினார்’’ என்று மேக்ஸ்வெல் நினைவூட்டினார்.
    ரிஷப் பந்த் பேட்டிங் செய்ய வந்தாலே டிவி பக்கம் திரும்பி விடுவேன். அவரின் திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். 20 வயதே ஆகும் ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார். பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார்.

    7-வது நபராக களம் இறங்கும் ரிஷப் பந்த், கடைநிலை வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவில் அவுட்டாகும் நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில் ரிஷப் பந்த் அபாயகரமான பேட்ஸ்மேன். அவரது திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம் என்று மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ரிஷப் பந்த் குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் மிகவும் சிறப்பான கிரிக்கெட் திறமையை பெற்றுள்ளார். ஆடுளத்தின் மீது ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதை போன்றுதான், ரிஷப் பந்தின் திறமையில் சிறிய பகுதியை மட்டுமே நாம் பார்த்துள்ளோம்.



    ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போதெல்லாம் நான் எனது டிவி-யால் இழுக்கப்பட்டு விடுவேன். அவர் களத்தில் இறங்கிவிட்டால், அவரது ஆட்டத்தை பார்க்க சூப்பராக இருக்கும்.

    ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இருவரும் இணைந்து விளையாடிள்ளோம். அப்போது அபாரமான சில இன்னிங்ஸை எங்களுக்கு அளித்துள்ளார். மாறுபட்ட ஷாட் அடிப்பதற்கு ஏற்றபடி உடலை அவரால் எறிதாக மாற்றிக்கொள்ள முடியும்’’ என்றார்.
    தவான், தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இக்கட்டான நிலையில் விக்கெட் இழந்ததால் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது. மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    102 பந்தில் 174 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ரோகித் சர்மா, தவான் ஆகியோர் தொடக்க வீரராக களம் இறங்கினார்கள். தவான் தொடக்கம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் ரோகித் சர்மா சற்று தடுமாறினார்.

    5-வது ஓவரை பெரென்டோர்ப் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 13 ரன்னிலும், விராட் கோலி 4 ரன்னில் அடுத்தடுத்து ஆடம் ஜம்பா சுழற்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

    மறுமுனையில் தவான் 28 பந்தில் 8 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 42 பந்தில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    தவான் ஆட்டமிழக்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 32 பந்தில் 69 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியாவிற்கு வெற்றி வாய்ப்பு இருந்தது.

    கடைசி இரண்டு ஓவரில் 24 ரன்கள் தேவைப்பட்டது. அண்ட்ரிவ் டை 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் பவுண்டரிக்கு விரட்டினார். ஆனால் 3-வது பந்தில் ரிஷப் பந்த் ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார்.



    ரிஷப் பந்த் ஆட்டமிழ்ந்ததும் இந்தியாவிற்கு நெருக்கடி ஏற்பட்டது. இருந்தாலும் கடைசி பந்தை தினேஷ் கார்த்திக் அபாரமான வகையில் பவுண்டரிக்கு விரட்டினார்.

    இதனால் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஸ்டாய்னிஸ் வீசினார். குருணால் பாண்டியா எதிர்கொண்டார். முதல் பந்தில் குருணால் பாண்டியா இரண்டு ரன்கள் அடித்தார். 2-வது பந்தில் ரன்ஏதும் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஆட்டமிழந்தார்.

    இதனால் கடைசி மூன்று பந்தில் 11 ரன்கள் தேவைப்பட்டது. 4-வது பந்தில் தினேஷ் கார்த்திக் 13 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது. கடைசி பந்தில் குல்தீப் யாதவ் பவுண்டரி அடிக்க இந்தியா 17 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்தது.

    இதனால் ஆஸ்திரேலியா நான்கு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது ஆட்டம் மெல்போர்னில் 23-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 25-ந்தேதி சிட்னியிலும் நடக்கிறது. ஆடம் ஜம்பா, ஸ்டாய்னிஸ் தலா இரண்டு விக்கெட்டுக்கள் கைப்பற்றினர்.
    மழையால் ஆட்டம் 17 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இந்தியாவிற்கு 174 இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #AUSvIND
    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான முதல் டி20 போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நீண்ட நேரம் தடைப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் தொடங்கியது. ஆனால் போட்டி 17 ஓவராக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 17 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.



    மேக்ஸ்வெல் 24 பந்தில் 4 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 19 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 33 ரன்கள் சேர்த்து களத்தில் இருந்தார்.

    ஆஸ்திரேலியா 158 ரன்கள் எடுத்தாலும் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியாவின் வெற்றிக்கு 17 ஓவரில் 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    பிரிஸ்பேனில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND
    விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

    வீரர்கள் விவரம்:-

    இந்தியா:- விராட் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, தவான், லோகேஷ் ராகுல், ரிசப் பந்த், தினேஷ் கார்த்திக், குருணால் பாண்டியா, பும்ரா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது.

    ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), கிறிஸ் லின், மேக்ஸ்வெல், டி'ஆர்கி ஷார்ட், அலெக்ஸ் கேரி, பென்மெக்டர்மட், ஸ்டாய்னிஸ், ஆண்ட்ரிவ் டை, ஆடம் ஜம்பா, பெரென்டோர்ப், ஸ்டேன்லேக்.



    டி ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ஆர்கி ஷார்ட் 7 ரன் எடுத்த நிலையில் கலீல் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆரோன் பிஞ்ச் உடன் கிறிஸ் லின் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. ஆரோன் பிஞ்ச் 24 பந்தில் 27 ரன்கள் சேர்த்தார். கிறிஸ் லின் 20 பந்தில் 4 சிக்ஸ், 1 பவுண்டரியுடன் 37 ரன்கள் விளாசினார். இரண்டு பேரையும் குல்தீப் யாதவ் வெளியேற்றினார்.

    4-வது விக்கெட்டுக்கு மேக்ஸ்வெல் உடன் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஜோடி சேர்ந்தார். மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சை துவம்சம் செய்தார். குறிப்பாக குருணால் பாண்டியா பந்தில் சிக்சராக விளாசினார். இதனால் ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.



    10 ஓவரில் 75 ரன்கள் சேர்த்திருந்த ஆஸ்திரேலியா 15 ஓவரில் 135 ரன்கள் சேர்த்தது. 16-வது ஓவரை குருணால் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் ஆஸ்திரேலியா இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் குவித்தது. குருணால் பாண்டியா 4 ஓவரில் 55 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஆஸ்திரேலியா 16.1 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #AUSvIND #ViratKohli
    களத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மிகச்சிறந்த ஸ்டார் என்று மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். #AUSvIND
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்களும், டி20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளைமறுநாள் (21-ந்தேதி) பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தடுத்து நிறுத்த முடியாத ரோகித் சர்மா ஒயிட் பந்து போட்டியில் மிகப்பெரிய ஸ்டார் என்று ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ஒயிட் பால் கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) ரோகித் சர்மாதான் ஸ்டார். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் என்பது குறைத்து மதிப்பிடும் சாதனை கிடையாது. இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் விளாசிய இன்னிங்சை நினைத்து பார்த்தால், களத்தில் இறங்கிய விளாசிய பின்னர் அவரை தடுத்து நிறுத்த முடியாது.



    ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும்போது ஒரு நாள் கிரிக்கெட் ஈசியானது போன்று எண்ணத் தோன்றும். அவரது ஆட்டத்தை பார்க்க நான் விரும்புவேன். அவர் பந்தை எங்க அடிக்க விரும்புகிறாரோ? அங்கே பந்தை அடிக்கும் திறமை பெற்றவர். அது வேகப்பந்தாக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாக இருந்தாலும் சரி. அவர் விரும்பும்போது பந்தை வெகு தூரத்திற்கு விரட்டுவார்’’ என்றார்.
    துபாயில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் கடந்த 24-ந்தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் பாபர் ஆசம் (45), முகமகது ஹபீஷ் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.

    பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது, டிஆர்கி ஷார்ட் (2), ஆரோன் பிஞ்ச் (3), கிறிஸ் லின் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.



    இதனால் ஆஸ்திரேலியா ரன் குவிக்க திணறியது. மேக்ஸ்வெல் மட்டும் தாக்குப்பிடித்து 37 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 21 ரன்னும், கவுல்டர்-நைல் 27 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியாவால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடர 2-0 என கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நாளை நடக்கிறது.
    இங்கிலாந்து தொடருக்கான 2-வது பயிற்சி ஆட்டத்திலும் ஆஸ்திரேலியா அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. #ENGvAUS
    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. வரும் 24-ந்தேதியுடன் இந்த தொடர் முடிவடைகிறது. அதன்பின் 27-ந்தேதி ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது.

    இதற்கு முன் இரண்டு பயிற்சி ஆட்டத்தில் விளையாட முடிவு செய்தது. சசக்ஸ் அணிக்கெதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் ஸ்டாய்னிஸின சதத்தால் ஆஸ்திரேலியா 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேற்று நடைபெற்ற 2-வது பயிற்சி ஆட்டத்தில் மிடில்செக்ஸ் அணியை எதிர்கொண்டது.

    டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டின் (106) அபார சதத்தால் 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 283 ரன்கள் குவித்தது. ஷேன் மார்ஷ் 49 ரன்னும், ஆரோன் பிஞ்ச் 54 ரன்களும் சேர்த்தனர். அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் 6 பந்தில் 3 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். முதல் போட்டியிலும் சிறப்பாக விளையாடவில்லை. ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.



    ஸ்மித், வார்னர் இல்லாததால் மேக்ஸ்வெல் அணியின் முக்கிய வீரராக திகழ்வார் என்று எதிர்பார்த்த நிலையில் பயிற்சி ஆட்டத்தில் சிறப்பாக விளையாடாதது அந்த அணிக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர் 284 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மிடில்செக்ஸ் அணி களம் இறங்கியது. கேன் ரிச்சர்ட்சன், ஸ்டேன்லேக், நேசர் ஆகியோரின் அபார பந்து வீச்சல் மிடில்செக்ஸ் அணி 41 ஓவரில் 182 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 101 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    ×