search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரம்பலூர்"

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    பெரம்பலூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக அரசின் செயல்பாட்டை கண்டித்து, தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    பெரம்பலூர் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாநில தொண்டரணி துணைச் செயலர் சாகுல் ஹமீது தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூடவேண்டும். அமைதி பேரணியில்  பங்கேற்ற பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி படுகொலை செய்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். 

    இச்சம்பவத்திற்கு முழு பொறுப்பேற்று தமிழக முதல்வர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், நகரச் செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட அவைத்தலைவர் கணபதி, மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, ஒன்றிய செயலாளர்கள் அன்பழகன், துரை, சிவா ,ஐயப்பன், பொன். சாமிதுரை, மலர்மன்னன், மாவட்ட துணைச்செயலாளர்கள் சுடர்செல்வன், சங்கர், மேகலா ரெங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    பெரம்பலூர் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    குன்னம்:

    பெரம்பலூர் மாவட்டம் சங்கு பேட்டையை சேர்ந்தவர்கள் சிவா, திவான். இவர்கள் 2 பேரும் அதே பகுதியில் பிளக்ஸ் போர்டு தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இவர்களது நிறுவனத்தில் இருந்து பல்வேறு பொருட்கள் திருட்டு போனது.

    இந்தநிலையில் பெரம்பலூர் துறைமங்கலத்தை சேர்ந்த சரண்ராஜ், அமிழ்தன் ஆகிய 2 பேரும்தான் பொருட்களை திருடியதாக சிவா,திவான் எண்ணினர். இதையடுத்து அவர்கள் தங்களது நண்பர்கள் வல்லரசு, பிரபாகரன், மணி, சூரியா, தமிழ், யூவான் ஆகிய 8 பேருடன் கத்தி, அரிவாள், உருட்டு கட்டையுடன் பெரம்பலூர் துறைமங்கலம் சென்றனர். அப்போது அங்கு வந்த சரண் ராஜ், அமிழ்தன் ஆகியோரிடம் பொருட்கள் திருட்டு போனது குறித்து கேட்டனர். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனிடையே சரண்ராஜ்க்கு ஆதரவாக அவர்களது நண்பர்கள் 8 பேர் வந்தனர். இதனால் இரு தரப்பினரும் பயங்கர ஆயுதங்களால் மோதிக்கொண்டனர். இதில் சரண்ராஜ், அமிழ்தன் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

    இது குறித்த தகவல் அறிந்ததும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசார் வருவதை அறிந்ததும் அனைவரும் தப்பி ஓடிவிட்டனர். அரிவாள் வெட்டில் படுகாயம் அடைந்த சரண்ராஜ், அமிழ்தன் ஆகிய 2 பேரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இருதரப்பினரை சேர்ந்த 16 பேரை தேடி வருகின்றனர்.

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன.
    பெரம்பலூர்:

    வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு மரணமடைந்ததையடுத்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்கள் உடைக்கப்பட்டன.

    இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டத்திற்குட்பட்ட வேப்பூர், லப்பைகுடிக்காடு உள்ளிட்ட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக முக்கிய பஜார்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இதனிடையே நேற்றிரவு அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் கடை ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.

    பெரம்பலூரில் இருந்து அரியலூர் மாவட்டத்திற்கு இயக்கப்படும் பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. #Tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
    அரியலூர்:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள்சார் பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். அதன்படி  தமிழகம்  முழுவதும் பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், திருமானூர், செந்துறை, ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், உடையார்பாளையம், மீன் சுருட்டி ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 4500-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் 80 சதவீதத்திற்கு மேல் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. டீக்கடைகள், மெடிக்கல் கடைகள், பெட்டிக்கடைகள், பால் பூத்துகள் ஆகியவை மட்டும் திறந்து இருந்தன. ஆட்டோக்கள், பஸ்கள், வாடகை கார்கள் வழக்கம் போல் ஓடின.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, திருமயம், ஆலங்குடி, அறந்தாங்கி, கறம்பக்குடி,  கந்தர்வக்கோட்டை, விராலிமலை ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    புதுக்கோட்டையில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ்  நிலையம், அண்ணா சிலை, பிருந்தாவனம், மேல ராஜ வீதி, கீழராஜ வீதி, டி.வி.எஸ்., திலகர் திடல் ஆகிய பகுதிகளில்  உள்ள பெரிய கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. சில சிறிய கடைகள்  மட்டும்  திறந்து உள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், நான்கு ரோடு பகுதி, வடக்கு மாதவி சாலை, பெரம்பலூர் மதர்ஷா சாலை, எளம்பலூர் சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் பல கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் ஓடியது. 

    கரூர் மாவட்டத்தில் கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை, அரவக்குறிச்சி ஆகிய ஊர்களில் குறைந்த அளவிலான  கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித பாதிப்பும் இல்லை. கரூரில் ஜவகர் பஜார், கோவை சாலை, மேற்கு பிரதட்சணம் சாலை, காமாட்சியம்மன் கோவில் தெரு, செங்குந்தபுரம், பழைய திண்டுக்கல் சாலை ஆகிய இடங்களில்  செயல்பட்டு வரும் வணிக நிறுவனங்கள், டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள் இன்று வழக்கம்போல் திறந்திருந்தன. அனைத்து பஸ்கள், ஆட்டோக்கள் இயக்கப்பட்டன. 

    இந்த  முழுஅடைப்பு போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், திராவிடர் கழகம், ம.தி.மு.க., மார்க்ஸ்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்திய  யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றன.
    சுங்க சாவடி ஊழியரை தாக்கிய அதிகாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் நள்ளிரவில் மங்களமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் ஏற்பட்டது.

    பெரம்பலூர்:

    சென்னை அரசு கேபிள் டி.வி. மேலாண் இயக்குகுநர் குமரகுருபாரன். இவர் நேற்று இரவு திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் காரில் பயணித்த போது பெரம்பலூர் அருகேயுள்ள திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்களுடன் பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது. இதில் இரு தரப்புக்கும் இடையே வாக்கு வாதம் தொடர்ந்துள்ளது.

    இந்த நிலையில் தகவல் அறிந்து பெரம்பலூர் மாவட்ட கேபிள் டி.வி. வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வரு வாய்த்துறை ஊழியர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்று, அப்போது வருவாய் துறையினருக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது.

    அப்போது காசிநாதன் என்ற சுங்க சாவடி ஊழியரை பெரம்பலூர் வட்டாட்சியர் சரவணன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட காசிநாதன் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனிடையே சுங்க சாவடி ஊழியரை தாக்கிய வருவாய் அதிகாரியை கைது செய்து நடவடிக்கை எடுக்க கோரி சுங்கச்சாவடி ஊழியர்கள் நள்ளிரவில் மங்களமேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் திருமாந்துறை சுங்கச்சாவடியில் அதிகாலை வரை சுங்க கட்டணம் இன்றி வாகனங்கள் இயக்கப்பட்டன. இன்று உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறியதையடுத்து சுங்கச்சாவடி ஊழியர்கள் இன்று அதிகாலை பணிக்கு திரும்பினர்.

    பெரம்பலூர் அருகே சாலையை கடக்க முயன்ற வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த அடிப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
    குன்னம்:

    பெரம்பலூர் அருகே உள்ள எரையசமுத்திரத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் ரங்கநாதன் (வயது 34). இவர் நேற்று பெரம்பலூருக்கு வேலைக்காக சென்றார். பின்னர் இரவு வீடு திரும்பினார். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே கல்பாடிபிரிவு ரோட்டில் சாலையை நடந்து கடக்க முயன்றார். அப்போது அங்கு வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ரங்கநாதன் மீது மோதியது. 

    இதில் தலையில் பலத்த அடிபட்டு ரங்கநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.

    இது குறித்து தகவல் அறிந்தும் பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று ரங்கநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசுமருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகிறார்கள். 
    பெரம்பலூர் நான்கு ரோடு அருகே சுற்றுலா பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்தனர்.
    பெரம்பலூர்:

    புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் 56 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்றுலா பஸ் கொடைக்கானலுக்கு புறப்பட்டது. அந்த பஸ் நள்ளிரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது பெரம்பலூர் நான்கு ரோடு அருகே வந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் தாறு மாறாக ஓடியது. தொடர்ந்து பஸ் சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நிற்காமல் ஓடி தடுப்புகம்பியில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளுக் கிடையே சிக்கி தவித்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். படுகாயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் வேளாண்மை சம்பந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளாண்மை இடுபொருட்கள், வேளாண்மை எந்திரங்கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்கள் பற்றிய முறையீடுகள் பற்றி விவாதிக்கப்பட உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
    பெரம்பலூர் வழியாக ரெயில் போக்குவரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் விபத்துகளை தவிர்க்க இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மூலம் ரூ.13 கோடியில் தரைவழி மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். மருதராஜா எம்.பி. முன்னிலை வகித்தார். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குனர் சங்கரசுப்ரமணியன் வரவேற்றார். விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    உலகிலேயே அதிக அளவிலான சாலை வசதி இந்தியாவில் உள்ளது. இந்தியாவில் போக்குவரத்திற்காக 53 லட்சம் கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில் ஒரு லட்சம் கிலோ மீட்டர் நீள சாலைகள் உள்ளன. இது மொத்த நீளத்தில் 2 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால் இந்த சாலைமூலம் சுமார் 80 சதவீதம் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து நடைபெற்று வருகின்றன.

    பாரத பிரதமர் நரேந்திரமோடி பிரதமராக பதவி ஏற்றவுடன், உலக தரத்தில் இந்தியாவில் சாலைகள் அமைக்க வேண்டும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளின் நீளத்தையும், தரத்தையும் 2 மடங்காக உயர்த்த வேண்டும். அதே நேரத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும் உத்தரவிட்டார்.

    முந்தைய ஆட்சியில் நாள் ஒன்றுக்கு ஒற்றை இலக்கு கி.மீ. தூரத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டன. தற்போது நாள் ஒன்றுக்கு 28 கி.மீ. நீளத்திற்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த இலக்கு நாள் ஒன்றுக்கு 40 கி.மீ. அளவை எட்டுவதற்காக பாடுபட்டு வருகிறோம். இந்தியாவிலேயே அதிகம் விபத்துகள் தமிழகத்தில் நடக்கின்றன. நாடு முழுவதும் ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். உடல் உறுப்புகள் செயல் இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சங்களை எட்டும்.

    தமிழ்நாட்டில் சென்னை-கன்னியாகுமரி வரை கிழக்கு கடற்கரை சாலையை மேம்படுத்தி தேசிய நெடுஞ்சாலையாக உயர்த்திட தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. 70 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத சாலைப்பணிகள் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் 78 பகுதிகளில் அதிக சாலை விபத்துகள் நடப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் 11 இடங்களில் ஒன்றாக சிறுவாச்சூர் பகுதி கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் காயம் அடைந்துள்ளனர். வழக்குப்பதிவு செய்யாமல் இன்னும் பலர் உயிரிழந்திருக்க கூடும்.

    உயிரிழப்புகளை தவிர்க்க இங்கு தரைவழி மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இப்பணிகள் பிப்ரவரி 2019-ல் நிறைவடையும். பிரதமர் நரேந்திரமோடி தமிழ்நாட்டிற்கு முன்னுரிமை அளித்து தமிழக வளர்ச்சிக்காக, தமிழக மக்களின் நலனுக்காக எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார். ஒவ்வொரு எம்.பி.க்கும் குறைந்தபட்சம் ஒரு திட்டம் சென்றடைய வேண்டும் என்பதை குறிக்கோளாக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

    பெரம்பலூர் வழியாக நாமக்கல்லுக்கு ரெயில் போக்குவரத்து தொடங்க பெரம்பலூர் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து மத்திய ரெயில்வே அமைச்சகத்திற்கும், மத்திய மந்திரியிடமும் பெரம்பலூர் வழியாக ரெயில் போக்கு வரத்து தொடங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார். இதனைத்தொடர்ந்து பொன்.ராதாகிருஷ்ணன் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, ஸ்ரீராமகிருஷ்ணா கல்விக்குழுமத்தின் தலைவர் சிவசுப்ரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தேசிய நெடுஞ்சாலை ஆணைய முதுநிலை மேலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.  
    பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது செவிலியர்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.
    பெரம்பலூர்:

    மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய செவிலியர் சேவை புரிந்து வரும் செவிலியர்களின் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கது. இங்கிலாந்து நாட்டில் செல்வ செழிப்புமிக்க குடும்பத்தில் 12-5-1820-ம் ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தார். அவர் செவிலியர் சேவையில் தன் பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக முழுமையாக தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். அவர் பிறந்த மே 12-ம் நாள் உலக செவிலியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி, நேற்று பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் செவிலியர்களால் கொண்டாடப்பட்டது. அப்போது பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படத்திற்கு செவிலியர்கள் பூக்களை தூவியும், மெழுகுவர்த்திகளை கையில் ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.

    பின்னர் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர் களுக்கு செவிலியர்கள் இனிப்பு கொடுத்தனர். மேலும் செவிலியர்கள் ஒருவருக் கொருவர் கை கொடுத்தும், கட்டி அரவணைத்தும் செவிலியர் தின வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். சில செவிலியர்கள் ஒன்று சேர்ந்து தங்களது செல்போனில் செல்பி எடுத்து கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதை காணமுடிந்தது. பின்னர் செவிலியர்கள் கட்டை விரலை உயர்த்தி தங்கள் இலக்கினை அடைவோம் என்று உறுதி எடுத்து கொண்டனர். உலக செவிலியர் தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில் சிறப்பாக மருத்துவ சேவை புரிந்ததற்காக 251 செவிலியர்களுக்கு சிறந்த செவிலியர் விருதினை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வழங்கினார்.

    அந்த சிறந்த செவிலியர் விருதினை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மும்தாஜ் (வயது 52) என்ற செவிலியர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு, சக செவிலியர்கள், மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அரசு செவிலியர்கள், பயிற்சி செவிலியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் காலை, மதியம், இரவு ஆகிய 3 வேளைகளில் சுழற்சி முறையில் பணிபுரிந்து நோயாளிகளுக்கு சேவையாற்றி வருகின்றனர். மனம் கோணாது சேவையில் சிறந்து விளங்கும் செவிலியரை இன்னொரு தாய் என்று சொல்வது அர்த்தம் உள்ளதாகவே இருக்கும். 
    பெரம்பலூர் மாவட்டத்தில் நான்கு ரோடு பகுதியில் இரு கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் குழந்தை உள்பட 9 பேர் உயிரிழந்தனர். #Accident
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் இன்று அதிகாலை சென்னையை நோக்கி கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.

    அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்புக் கட்டையை மீறி எதிரே வந்த கார் மீது வேகமாக மோதியது. இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை, பெண்கள் உள்பட 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விபத்தால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரிசெய்தனர். #Accident
    இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வரும் பெரம்பலூர் புதிய பஸ்நிலையம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருச்சி, கரூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு வெளியூர்களுக்கு பஸ்கள் அதிகளவில் இயக்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் எப்போதும் பயணிகள் கூட்டம் நிறைந்து பரபரப்பாக காணப்படும். தற்போது பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால் சென்னை, விழுப்புரம், கடலூர், திட்டக்குடி, லெப்பைக் குடிக்காடு, தொழுதூர், திருச்சி, கடலூர், சேலம், நாமக்கல், கரூர், அரியலூர் ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள், அதற்குரிய நிறுத்தும் இடத்தில் நிறுத்த முடியாமல் உள்ளே பஸ் நிலையத்தில் உள்ள நடுரோட்டில் டிரைவர்கள் நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். இதனால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    பஸ் நிலையத்தில் பஸ்கள் நிறுத்துமிடத்தில் அதிகளவில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதால் பயணிகளும், பஸ் டிரைவர்களும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆனால் பஸ் நிலைய வளாகத்தில் இரு சக்கர வாகனங்கள் நிறுத்த கட்டண பாதுகாப்பு நிலையம் உள்ளது. ஆனால் சிலர் அதில் நிறுத்தாமல் பஸ்கள் நிற்குமிடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு வெளியூர்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் பஸ் நிலையம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.

    பஸ் நிலைய வளாகத்தில் இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தினால் பறிமுதல் செய்து, உரிமை யாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெரம்பலூர் நகராட்சி சார்பில் பொது அறிவிப்பு பலகை பஸ் நிலையம் முன்பு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை அது அறிவிப்பு பலகையாக தான் இருக்கே தவிர, அதன்படி நகராட்சி எந்தவித மான நடவடிக்கையும் எடுத்த பாடில்லை. மேலும் பஸ் நிலையத்தில் கடை நடத்துபவர்கள் பயணிகள் நடந்து செல்லும் பாதையையும் விட்டு வைக்காமல், அதனை ஆக்கிரமித்து பொருட்களை வைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பயணிகள் கோடை வெயிலில் நிழலுக்கு கூட ஒதுங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர். பஸ் நிலைய வளாகத்தில் குப்பைகள் நிறைந்தும், பயணிகளின் கழிவறைகள் சுகாதாரமற்ற நிலையிலும் காணப்படு கின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் இரு சக்கர வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நடபாதை கடைகளின் ஆக்கிரமிப்பை அகற்றவும், பஸ் நிலையத்தை தூய்மையாக வைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    ×