search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட்"

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி புழல் ஜெயிலில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். #Thoothukudifiring #bansterlite #SterliteProtest

    சென்னை:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும் சுங்கச்சாவடிகளை நிரந்தரமாக அகற்றக் கோரியும் கடந்த மாதம் 1-ந் தேதி உளுந்தூர்பேட்டையை அடுத்த செங்குறிச்சியில் உள்ள சுங்கச் சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

    அப்போது சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக வேல்முருகன் உள்பட 13 பேர் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக வேல்முருகன் தனது ஆதரவாளர்களுடன் தூத்துக்குடி சென்றார்.


    அப்போது சுங்கச் சாவடியை சேதப்படுத்திய வழக்கில் வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஜெயிலில் இன்று காலை வேல்முருகன் சாப்பிட மறுத்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார்.

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிசூடு நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் சிறைத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். #Thoothukudifiring #bansterlite #SterliteProtest

    ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவத்தில் இருந்து நடிகர் விவேக் மீள முடியாமல் இருக்கிறார். #Vivek
    தூத்துக்குடியில் ‘ஸ்டெர்லைட்’ ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந்தேதி நடைபெற்ற போராட்டத்தின் போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.

    இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும் பல அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் போராட்டம் செய்து வருகிறார்கள். இந்நிலையில், நடிகர் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,

    ‘ஏன் tweet செய்வதில்லை என்று கேட்கிறார்கள். மனம் மிக சோர்ந்து போய் இருக்கிறது. தூத்துக்குடி சம்பவத்தில் இருந்து மீள, நாட்கள் ஆகலாம். சிறு பையனின் உடலில் இருந்த தடியடி காயங்கள் என் பழைய ரணங்களைக் கீறி விட்டு விட்டனவே’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது. #SterliteProtest #BanSterlite

    சென்னை:

    தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை அமைந்துள்ளது.

    இந்த ஆலையால் சுற்றுச் சூழல் மாசுப்படுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப் படுவதாகவும் கூறி இதை நிரந்தரமாக மூடக்கோரி கிராமமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    100-வது நாள் போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். துப்பாக்கி சூடு நடத்தியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு மதுரை ஐகோர்ட்டு கிளை தடை விதித்து உத்தரவிட்டது.


    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையின் மின் இணைப்பை துண்டிக்கவும், அந்த ஆலையை மூடவும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது.

    அந்த ஆலையில் அடுத்த கட்ட உற்பத்திக்கு தயாராக இருந்தது தெரிந்த பிறகே மாசுகட்டுப்பாட்டு வாரியம் மூடும் உத்தரவை பிறப்பித்தாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்ல இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவித்து உள்ளது.

    இது குறித்து வேதாந்தா - ஸ்டெர்லைட் ஆலையின் தலைமை நிர்வாக அதிகாரி ராம்நாத் கூறியதாவது:-

    நாங்கள் சட்ட ரீதியிலான உதவியை நாட உள்ளோம். எங்களுக்கு இதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு எங்களுக்கு வியாழக்கிழமை கிடைத்தது. எனவே நாங்கள் எங்கள் குழுவினருடன் ஆலோசித்து வருகிறோம். மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவை எதிர்த்து கோர்ட்டுக்கு செல்வோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #SterliteProtest #BanSterlite

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். #SterliteProtest #BanSterlite

    கீழ்வேளூர்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. அப்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். போலீசாரின் இந்த நடவடிக்கையை கண்டித்து நாகை மீனவர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    நாகை அக்கரைப்பேட்டை, நம்பியார் நகர், சமந்தான் பேட்டை, கீச்சாங்குப்பம், செருதூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் 10 ஆயிரம் பைபர் படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

    மேலும் மீனவர்கள் நாகை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட பொது மக்களை விடுதலை செய்ய வேண்டும். துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை கைது செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினர். #SterliteProtest #BanSterlite

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் தான் தன் உயிர் அடங்கும் என்று நெல்லையில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #SterliteProtest #BanSterlite #Vaiko
    நெல்லை:

    தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து நெல்லையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார். முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு திட்டமிட்ட சதி. போராட்டத்தில் ஒரு போலீசாருக்கு கூட உயிர் சேதம் ஏற்படவில்லை என்பதில் இருந்தே திட்டமிட்ட சதி என்பது தெரிகிறது. சீருடை இல்லாமல் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

    துப்பாக்கி சூட்டிற்கு நியாயம் கூறவே வாகனங்களை போலீசாரே தீ வைத்துள்ளனர். கலெக்டர் அலுவலகத்தில் தீ வைத்ததும் போலீசாரும் அதிகாரிகளும் தான். ஆஸ்பத்திரியில் காயம் அடைந்தவர்களை பார்க்கவிடாமல் அவர்கள் உறவினர்கள் மீதும் துப்பாக்கி சூடு நடத்தியுள்னர்.

    நான் ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து 1996-ம் ஆண்டு முதல் போராடி வருகிறேன். இதற்காக 6 முறை கைது செய்யப்பட்டுள்ளேன். 7 முறை உண்ணாவிரதம் போராட்டம் நடத்தியுள்ளேன். 3 முறை மறியல் செய்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து அதை மூடும் உத்தரவை பெற்றேன். அதை சுப்ரீம் கோர்ட் திறக்க உத்தரவிட்டது. இப்போது இந்த அரசு ஆலையை மூடுவதாக அறிவித்துள்ளது கண்துடைப்பு நாடகம். 15 நாட்கள் மட்டும் மூடிவிட்டு மீண்டும் திறந்து விடுவார்கள். துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு காரணமான கலெக்டர், எஸ்.பி.யை பணியிட மாற்றம் செய்தால் போதாது. அவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். சுதந்திர போராட்டத்தில் வ.உ.சி.கைது செய்யப்பட்ட போது ஏற்பட்ட புரட்சி தற்போது ஏற்பட்டுள்ளது.


    ஆலையை மீண்டும் திறந்தால் ஸ்டெர்லைட் ஆலை முன்பு சென்று போராடுவோம். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடியவர்கள் மீது தமிழக அரசு வழக்குப்பதிவு கைது செய்துள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால் தான் என் உயிர் அடங்கும். நிரந்தரமாக மூடும்வரை இளைஞர்கள் போராடவேண்டும்.

    முதல்வர் சென்னையில் இருந்து பேசுவதைவிட தூத்துக்குடி வந்து மக்களை பார்க்க வேண்டும். தமிழ் மண்ணை காக்க கட்சி பாகுபாடு இல்லாமல் வீரமாக போராடுகிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து போராடுவேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #SterliteProtest #BanSterlite #Vaiko
    திண்டுக்கல்லில் தி.மு.க. சார்பில் நடந்த மறியல் போராட்டத்தையடுத்து ஐ.பெரியசாமி உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    திண்டுக்கல்:

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனை கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டத்துக்கு இன்று அழைப்பு விடுத்திருந்தன.

    மேலும் பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. திண்டுக்கல் பஸ்நிலையத்தில் தி.மு.க. மாநில துணைப் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. அவைத் தலைவர் பஷீர்அகமது, பட்டிமன்ற நடுவர் லியோனி, துணைச் செயலாளர்கள் நாகராஜன், தண்டபாணி, நகர செயலாளர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோ‌ஷங்களை எழுப்பினர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்பட 200-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இந்த மறியல் போராட்டத்தில் ம.திமு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh 

    எதிர்கட்சிகள் அறிவித்த போராட்டத்தால் திண்டுக்கல்லில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    திண்டுக்கல்:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என எதிர்கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. திண்டுக்கல்லில் இன்று காலை குறைந்த அளவு கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின.

    நேரம் செல்ல செல்ல அடைக்கப்பட்டு இருந்த ஒரு சில கடைகளும் மீண்டும் திறக்க ஆரம்பித்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பஸ்நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். பழனியில் இன்று அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு இருந்தன. பஸ்களும் வழக்கம் போல் இயங்கின.

    இன்று முகூர்த்த நாள் என்பதால் திருமண மண்டபங்கள் அனைத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் மலைக் கோவிலிலும் திருமண குழுவினர் அதிக அளவில் காணப்பட்டனர். இதனால் முழு அடைப்பு போராட்டம் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

    சுற்றுலா நகரமான கொடைக்கானலில் பெரும்பாலான கடைகள் மற்றும் ஓட்டல்கள் திறந்திருந்தன. சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகமாக இருந்ததால் பாதிப்பு இல்லை.

    ஒட்டன்சத்திரத்தில் காய்கறி மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டது. இதனால் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகளும், கேரள வியாபாரிகளும் வந்திருந்தனர்.

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் 16 அரசு பணிமனைகள் உள்ளன. இங்கிருந்து தினசரி 922 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல் இந்த பஸ்கள் இன்றும் இயங்கியது. போராட்டம் காரணமாக அனைத்து போக்குவரத்து கழக பணிமனை முன்பு போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இதே போல் ரெயில் நிலையம், முக்கிய சந்திப்புகள் என மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    ராமேசுவரம்:

    தூத்துக்குடி போலீசாரின் அத்துமீறல், தமிழக அரசை கண்டித்து தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இன்று மாநிலம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்து இருந்தன.

    அதன்படி இன்று ராமேசுவரத்தில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையம், ரெயில் நிலையம், கோவில் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் ராமேசுவரத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சில அமைப்பினர் ஆர்ப்பாட்டமும் நடத்தினர். இதேபோல் பாம்பன், தங்கச்சிமடம் பகுதியிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. #ThoothukudiFiring #SterliteProtest #DMKBandh

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் பொதுமக்கள் 13 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது. #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,



    ‘‘தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் 13 அப்பாவி மக்கள் உயிர்களை இழந்ததற்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு துப்பாக்கி சூட்டிற்கு காரணமான காவல்துறையின் அராஜக செயலை வன்மையாக கண்டிக்கிறோம். தூத்துக்குடி நகர மக்கள் 20 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிடுங்கள் என்று போராடுகிறார்கள். இதுவரை அதற்கு சரியான தீர்வு இல்லை.

    பேரிடர்களும், உயிரிழப்புகளும் நடக்க கூடாது என்றுதான் ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தபோது ஆலையை மூடுவதற்கும், அந்த ஆலைக்கு வழங்கப்படும் மின் இணைப்பை துண்டிக்கவும் உத்தரவிட்டார். ஆனால் ஆலை நிர்வாகம் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றது. ஆலையை நடத்த நிரந்தரமாக தடை போட்டு இருந்தால் இன்று 13 உயிர்களை இழந்து இருக்க மாட்டோம்.

    இந்த பிரச்சினைக்கு உடனே தீர்வு காண ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட வேண்டும். அதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசை இயக்குனர்கள் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.’’

    இவ்வாறு கூறப்பட்டுள்ளது. #BanSterlite #SaveThoothukudi

    ஸ்டெர்லைட் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு அந்நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள எழுத்துப்பூர்வ அறிக்கையில், மார்ச் 27-ம் தேதியில் இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.#bansterlite #sterliteprotest
    புதுடெல்லி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் நிறுவனம் கடந்த 1993-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு பின் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்துக்கு அப்போது இருந்தே அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிறுவனத்திலிருந்து வெளிவந்த கழிவுகள் காரணமாக அப்பகுதியில் விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் பாதிகப்பட்டனர்.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் நிறுவனம் ஆலை விரிவாக்கப் பணிகளுக்காக ஒப்புதல் வேண்டி விண்ணப்பித்திருந்தது. இதனை எதிர்த்து கடந்த 100 நாட்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்தில் மக்களின் போராட்டம் கலவரமாக வெடித்ததில் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர்.

    இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், மத்திய அரசும், உள்துறை அமைச்சகமும் துப்பாக்கிச்சூடு குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டுள்ளனர்.

    இந்நிலையில், பங்கு முதலீட்டாளர்கள் வேதாந்தா குழுமத்தின் பங்குகளை வாங்குவதில் தயக்கம் காட்ட துவங்கியுள்ளனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய மற்றும் மும்பை பங்கு சந்தைகளுக்கு எழுத்துப்பூர்வமான விளக்கம் ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், கடந்த மார்ச் 27-ம் தேதி இருந்து முதல் உலை இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு முதல் உலை மூடப்பட்டதாகவும், மூடப்பட்ட உலையின் தற்போதைய மதிப்பு ரூ.2100 கோடி எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், தீர்ப்பு வெளியான பின்பே முடிவு தெரியவரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #bansterlite #sterliteprotest
    தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து தெரிவித்ததாக நடிகை கார்த்திகா, காயத்ரி ரகுராமுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. #BanSterlite #SaveThoothukudi
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி நடைபெற்ற பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பலியாகினர். மேலும் பலரும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    பொதுமக்கள் கொல்லப்பட்டது தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், தூத்துக்குடியில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் செல்போன் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி கலவரத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.



    இந்த நிலையில் போலீஸ்காரர் ஒருவர் ரத்த காயத்தோடு இருக்கும் வீடியோ ஒன்றை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நடிகை காயத்ரி ரகுராம், போலீசாருக்கு ஆதரவான கருத்தை பகிர்ந்துள்ளார். அதில், போலீசார் மக்களை தாக்கியதையும், சுட்டதையும்தான் நாம் பார்த்தோம். ஆனால் போலீசாருக்கு என்ன நடந்தது என்பதை யாரும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன். நான் யாருடைய பக்கமும் இல்லை. பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதுபோல் போலீசாருக்கும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நாம் எல்லோருமே தமிழர்கள். நமக்கு குடும்பம் இருக்கிறது. துப்பாக்கி சூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார் என்பதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும். அமைதிப் போராட்டம் கலவரமானது எப்படி என்பது குறித்து தமிழக மக்களுக்கு பதில் தெரிய வேண்டும்” என்று பதிவிட்டு உள்ளார். அவர் வெளியிட்ட வீடியோ சர்ச்சையை கிளப்பியது. 



    தூத்துக்குடியில் போலீசார் யாரும் சாகவில்லை. பொதுமக்கள்தான் பலியாகி உள்ளனர். உங்களிடம் பேசி பயனில்லை” என்றெல்லாம் காயத்ரி ரகுராமை கண்டித்து பலர் கருத்து பதிவிடுகிறார்கள்.

    இதேபோல் நடிகை கார்த்திகா, “தூத்துக்குடியில் சில கலகக்கார குழுக்களால்தான் அமைதி போராட்டம் வன்முறையாக மாறியது” என்று டுவிட்டரில் கருத்து வெளியிட்டார்.

    நீங்கள் உளவு துறையில் பணியாற்றுகிறீர்களா? துப்பாக்கி சூட்டில் பலியான மாணவரும், மாணவியும் கலகக்காரர்களா? தமிழக மக்கள் போராட்டம் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவருக்கு பலர் பதிலடி கொடுத்து கண்டித்து வருகிறார்கள். #BanSterlite #SaveThoothukudi

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூட்டிற்கு நடிகர் சிம்பு எங்க கிட்ட மோதாதே என்று ஆவேசமாக பேசி வீடியோ வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். #STR #Sterlite
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஜினி, கமல் மற்றும் சினிமா பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தற்போது நடிகர் சிம்புவும் வீடியோ வடிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில், ‘தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவியான பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். என்ன நடக்கிறது இந்த மாநிலத்தில். தலைவர்களும், பிரபங்களும் இரங்கல் மட்டும் தெரிவித்து வருகிறார்கள். அதனால், ஒரு புரோஜனமும் இல்லை. இதனால், இறந்தவர்கள் திரும்பி வரவா போகிறார்கள். இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மனசு வலிக்கிறது. மொழி தான் பிரச்சனையா.. நான் ஆங்கிலத்தில் பேசுகிறேன். பிரச்சனைக்கு தீர்வு என்னிடம் உள்ளது. என் கிட்ட.. தமிழர்கள் கிட்ட மோதாதே’ என அவேசமாக பேசியுள்ளார்.


    ×