search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்.எஸ்.பாஸ்கர்"

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா - விதார்த் நடிப்பில் உருவாகி வரும் `காற்றின் மொழி' படத்தில் `ஜிமிக்கி கம்மல்' பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். #KaatrinMozhi #Jyothika
    கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற `ஜிமிக்கி கம்மல்' என்ற மலையாள பாடல் தமிழ்நாட்டிலும் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்த இந்த பாடல் ஜோதிகா நடிக்கும் `காற்றின் மொழி' படத்திலும் இடம்பெற இருக்கிறது. 

    சமீபத்தில் நடன இயக்குனர் விஜியின் நடன வடிவமைப்பில் ஜோதிகா, லட்சுமி மஞ்சு, சிந்து ஷியாம், குமரவேல் மற்றும் ஆர்.ஜெ சான்ட்ரா இப்பாடலுக்கு நடனமாடினர்.

    இயக்குனர் ராதாமோகன் இயக்கத்தில் ஒரே ஷெட்யூலில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் நிறுவனம் சார்பில் ஜி. தனஞ்ஜெயன், லலிதா தனஞ்ஜெயன், விக்ரம்குமார் ஆகியோர் இந்த படத்தை தயாரித்துள்ளனர். நாயகி ஜோதிகா மற்றும் படக்குழுவினர் இப்படத்தை வேகமாகவும், சிறப்பாகவும் முடித்து தந்துள்ளனர்.



    விதார்த், லட்சுமி மஞ்சு என்று முன்னணி நட்சத்திரங்களோடு, நடிகர் சிம்பு இப்படத்தில் கெளரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

    இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு பற்றிய தகவல் செப்டம்பர் மாதத்தில் வெளியாக இரு்பபதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். ஜோதிகா பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி படம் ரிலீசாகிறது. #KaatrinMozhi #Jyothika #JimikkiKammal

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். #KaatrinMozhi #Jyothika
    `தும்ஹரி சூளு' படத்தின் ரீமேக்காக உருவாகி இருக்கிறது `காற்றின் மொழி'. ஜோதிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தை ராதா மோகன் இயக்க்கியுள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்துவிட்டதாக படக்குழு அறிவித்திருந்தது. 

    இந்த நிலையில், படத்தை ஜோதிகாவின் பிறந்தநாளான அக்டோபர் 18-ஆம் தேதி ரிலீஸ் செய்ய தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு அனுமதி அளித்துள்ளது.

    இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. #KaatrinMozhi #Jyothika 

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஜோதிகா அவரது காட்சிகளை நடித்து முடித்துவிட்டாராம். #KaatrinMozhi #Jyothika
    `நாச்சியார்' படத்தை தொடர்ந்து ஜோதிகா மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' மற்றும் ராதா மோகன் இயக்கத்தில் `காற்றின் மொழி' உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்திருக்கிறார். 

    சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கிய நிலையில், முதற்கட்ட படப்பிடிப்பிலேயே தனது அனைத்து காட்சிகளையும் ஜோதிகா முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடித்து வருகிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். படத்தை ஆயுதபூஜை விடுமுறையில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #KaatrinMozhi #Jyothika 

    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் விமர்சனம். #SemmaBothaAagathey #Atharvaa #Mishti
    நாயகன் அதர்வாவும், நாயகி மிஷ்டியும் பிரிந்துவிடுகின்றனர். மிஷ்டியை பிரிந்த துக்கத்தில் இருந்து மீளமுடியாமல் தவிக்கும் அதர்வாவை தேற்ற முயற்சி செய்யும் அவரது நண்பன் கருணாகரன், மிஷ்டியை மறப்பதற்காக அதர்வாவை மற்றொரு பெண்ணுடன் கோர்த்து விடுகிறார். முதலில் அதற்கு ஆர்வம் காட்டாத அதர்வா பின்னர் சம்மதம் தெரிவிக்கிறார். 

    இதையடுத்து விலைமாதுவான அனைகா சோதியை, அதர்வா வீட்டிற்கு அனுப்பி வைக்கிறார் கருணாகரன். இந்த நிலையில், அதர்வாவுக்கு மிஷ்டி போன் செய்து தான் அடுத்த நாள் காலை வீட்டிற்கு வருவதாகவும், இருவரும் சேர்வது குறித்து பேச தனது மாமாவும் தன்னுடன் வருவார் என்றும் கூறுகிறாள். மிஷ்டி வருவதற்குள் அனைகாவை வெளியே அனுப்பி விட அதர்வா முடிவு செய்கிறார். 



    இந்த நிலையில், அவரது குடியிருப்பில் இருக்கும் தேவதர்ஷினி தனது மாமாவுக்கு உடம்பு சரியில்லை என்று அதர்வாவின் உதவியை கேட்கிறார். இதையடுத்து அனைகாவை தனது வீட்டிலேயே வைத்து பூட்டிவிட்டு அதர்வா மருத்துவமனைக்கு செல்கிறார். பின்னர் மீண்டும் வீடு திரும்பிய போது, அனைகா வாயில் இரத்தத்துடன் செத்துக் கிடக்க அதிர்ச்சியடையும் அதர்வா கருணாகரனுக்கு போன் செய்கிறார்.

    இந்த நிலையில், அனைகாவுக்கு போன் வர அதை எடுத்து பேசும் போது, அனைகா கேரளாவை சேர்ந்தவள் என்பது தெரிய வருகிறது. இதையடுத்து மிஷ்டிக்கு போன் செய்து அவளை இன்னொரு நாள் வரும்படியும், அனைகாவின் உடலுக்கு துணையாக கருணாகரனையும் வைத்து விட்டு, அனைகாவின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க அதர்வா கேரளா செல்கிறார். 



    அங்கு அவருக்கு நிறைய இடைஞ்சல்கள் வருகிறது. அதையெல்லாம் முறியடித்து அனைகா மரணத்தில் இருக்கும் மர்மத்தை அதர்வா கண்டுபிடித்தாரா? மிஷ்டியுடன் மீண்டும் இணைந்தாரா? அனைகா உடலுக்கு காவலுக்கு இருந்த கருணாகரன் என்ன ஆனார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பானா காத்தாடி படத்திற்கு பிறகு மீண்டும் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் நடித்துள்ள அதர்வா, இந்த படத்தில் முற்றுலும் மாறுபட்டு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு துணையாக கருணாகரனும் காமெடியில் கலக்கியிருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் கருணாகரனின் காமெடிக்கு சிரிப்பொலி கேட்கிறது. 



    மிஷ்டிக்கு தமிழில் இது தான் முதல் படம் என்றாலும், மாடர்ன் பெண் கதாபாத்திரத்தில் வந்து ரசிக்க வைத்திருப்பதுடன், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அனைகா சோதியின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், படத்தில் முக்கிய திருப்பமாக அவரது கதாபாத்திரம் பார்க்கப்படுகிறது. ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, யோகி பாபு, அஸ்வின் ராஜா கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். 

    பானா காத்தாடி படத்திற்கு பிறகு காமெடி கலந்த த்ரில்லர் பாணியில் படத்தை இயக்கியிருக்கிறார் பத்ரி வெங்கடேஷ். காதல், காமெடி, கிளுகிளுப்பு, கவர்ச்சி, த்ரில்லர் என அனைத்தும் கலந்து கொடுத்திருக்கிறார். எனினும் திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருக்கலாம்.



    யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ரசிக்கும்படியாக வந்திருக்கிறது. பின்னணி இசையில் தனது பழைய ஃபார்முடன் மிரட்டியிருக்கிறார். கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. 

    மொத்தத்தில் `செம போத ஆகாதே' மயக்கம். #SemmaBothaAagathey #Atharvaa #Mishti

    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் முன்னோட்டம். #SemmaBothaAagathey #Atharvaa
    கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் அதர்வா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் `செம போத ஆகாதே'.

    அதர்வா நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் மிஷ்டி, அனைகா சோதி நாயகிகளாக நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக், ஆடுகளம் நரேன், யோகி பாபு, கும்கி அஸ்வின் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    இசை - யுவன் ஷங்கர் ராஜா, எடிட்டிங் - பிரவீன் கே.எல், பாடல்கள் - பத்ரி வெங்கடேஷ், ஜி.ரோகேஷ், கே.ஜி.ரஞ்சித், நிரஞ்சன் பாரதி, கலை இயக்குநர் - எஸ்.எஸ்.மூர்த்தி, உடை வடிவமைப்பாளர் - ஷோபா முரளி, சண்டை பயிற்சியாளர் - திலீப் சுப்பராயன், தயாரிப்பு - கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட், ஒளிப்பதிவு - கோபி அமர்நாத், வசனம் - ஜி.ராமகிருஷ்ணன், கதை, திரைக்கதை, இயக்கம் - பத்ரி வெங்கடேஷ்.



    பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் அதர்வா பேசும் போது, 

    “ படவிழாக்களில் பல தயாரிப்பாளர்கள் தங்கள் கஷ்டங்களை சொல்வதை கேட்டு இருக்கிறேன். அப்போதெல்லாம் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று நான் நினைத்தது உண்டு. ஆனால் படம் எடுப்பது எவ்வளவு கஷ்டம் என்பதை இப்போது அனுபவ பூர்வமாக உணர்கிறேன்.

    படத்தை எடுத்து திரைக்கு கொண்டு வருவது பெரிய போராட்டமாக இருக்கிறது. நீண்ட நாட்களாக சீரியஸ் படங்களில் நடித்தேன். இப்போது பொழுதுபோக்கு அம்சம் உள்ள படத்தில் நடித்துள்ளேன். நல்ல படத்தில் நடித்த திருப்தி இருக்கிறது. இந்த படம் மதுபழக்கத்தை ஊக்குவிக்கவில்லை. போதையில் ஒருவன் முட்டாள் தனமான வேலை செய்கிறான். அதனால் வரும் பிரச்சினைகள் என்ன என்பதே கதை.”

    படம் ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #SemmaBothaAagathey #Atharvaa 
    பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக `கோடிட்ட இடங்களை நிரப்புக' படத்திற்கு பிறகு பார்த்திபன் அடுத்ததாக இயக்கவிருக்கும் ‘உள்ளே வெளியே-2’ படத்தில் 10 பலமான நடிகர்களுடன் களமிறங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். #UlleVeliye2
    பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1993-ஆம் ஆண்டு வெளியான ‘உள்ளே வெளியே’ படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ‘உள்ளே வெளியே’  படத்தின் இரண்டாவது பாகத்தை இயக்க பார்த்திபன் முடிவு செய்திருக்கிறார். 

    இந்த படத்தின் கதை தயாராகி இருக்கும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடிக்க இருக்கிறார். பிரபுதேவாவும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மம்தா மோகன்தாஸ், கிஷோர், எம்.எஸ்.பாஸ்கர், ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்  வெளியாகி இருக்கிறது. 



    இந்த நிலையில், பார்த்திபனுடன் நடந்த உரையாடலின் போது அவர் தெரிவித்ததாவது, 

    நான் தயாராக இருக்கிறேன். சரியான தயாரிப்பாளர் அமைவதற்காக பேச்சுவார்த்தை சென்று கொண்டிருக்கிறது. உள்ளே வெளியே 2, நான், சமுத்திரகனி, கிஷோர் என்று 10 பலமான நடிகர்களுடன் களம் இறங்குகிறேன். எதையும் நகைச்சுவையுடன் சொல்வதுதான் என் பாணி. அது இந்த படத்தில் இருக்கும். என்னுடைய வழக்கமான படத்தை பார்க்கலாம். ஆனால் அதிர்ச்சியான ஒரு வி‌ஷயமும் படத்தில் உண்டு. #UlleVeliye2 #Parthiban

    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #SemmaBothaAagathey #Atharvaa
    அதர்வா நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின்னர், தள்ளிப்போய் வந்த நிலையில், படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

    அதன்படி படம் வருகிற ஜூன் 29-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 



    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. 

    `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa 

    ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் உருவாகும் `காற்றின் மொழி' படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று துவங்கியிருக்கிறது. #KaatrinMozhi #Jyothika
    ஜோதிகா நடிப்பில் கடைசியாக வெளியான `நாச்சியார்' படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். 

    இந்த நிலையில், ஜோதிகாவின் அடுத்த படமான காற்றின் மொழி படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியிருக்கிறது. பூஜையில் நடிகர் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா, ராதாமோகன், எம்.எஸ்.பாஸ்கர், தனஞ்ஜெயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். நடிகர் சிவக்குமார் கிளாப்போர்டை அடித்து படப்பிடிப்பை துவக்கி வைத்தார்.

    ராதா மோகன் இயக்கும் இந்த படத்தில் ஜோதிகாவின் கணவராக நடிகர் விதார்த் நடிக்கிறார். இந்தியில் நேகா நடித்த வேடத்தில், லட்சுமி மஞ்சு நடிக்கிறார். எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, குமாரவேல், மோகன் ராமன், உமா பத்மநாபன், சீமா தனேஜா, சிந்து உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 



    போப்டா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், விக்ரம் குமார், லலிதா தனஞ்ஜெயன் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.எச்.காஷிப் இசையமைக்கிறார். படப்பிடிப்பை ஒரு மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது, படம் வருகிற அக்டோபரில் ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற `தும்ஹரி சூளு' படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகிறது. #KaatrinMozhi #Jyothika 

    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது. #SemmaBothaAagathey #Atharvaa
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 

    இந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்படுவதாக படக்குழுவினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். முன்னதாக தயாரான படங்களுக்கு வழிவிடும் வகையில், செம போத ஆகாதே படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி படம் வருகிற மே 25-ஆம் தேதி ரிலீசாக இருக்க்கிறது. 



    பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

    யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa 

    பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் அதர்வா - மிஷ்டி, அனைகா சோதி நடிப்பில் உருவாகி இருக்கும் `செம போத ஆகாதே' படம் விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் நாளை ரிலீசாக இருக்கிறது. #SemmaBothaAagathey #Atharvaa
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் அதர்வா. அவரது நடிப்பில் `செம போத ஆகாதே' மற்றும் `இமைக்கா நொடிகள்' உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. இதில் `செம போத ஆகாதே' படம் வருகிற மே 18-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், படத்தின் புதிய டிரைலர் ஒன்று நாளை மாலை 6 மணிக்கு ரிலீசாக இருப்பதாக நடிகர் அதர்வா அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

    பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வா ஜோடியாக மிஷ்டி, அனைகா சோதி நடித்துள்ளனர். அர்ஜய், ஜான் விஜய், கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர், மனோபாலா, பிரின்ஸ் நிதிக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 



    யுவன் ஷங்கர் ராஜா இசையில், கோபி அமர்நாத் ஒளிப்பதிவில் உருவாகி இருக்கும் இந்த படத்தை கிக்கஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. `பானா காத்தாடி' படத்திற்கு பிறகு பத்ரி வெங்கடேஷ் - அதர்வா மீண்டும் இணைந்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டூடியோ லிமிடெட் இந்த படத்தை வெளியிடுகிறது. #SemmaBothaAagathey #Atharvaa 

    ×