search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 123633"

    • 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.
    • முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் வழங்கப்படும் அடையாள அட்டை பெற்றவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

    இதுநாள் வரை மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை பெறாதவர்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் 3 இடங்களில் இந்த முகாம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சை கோட்டத்தில் தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) முகாம் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணம் கே.எம்.எஸ்.எஸ். வளாகத்தில் வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), பட்டுக்கோட்டை கோட்டத்தில் வருகிற 25-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகம் எதிரில் உள்ள கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெறுகிறது.

    இம்முகாமில் எலும்பு முறிவு டாக்டர், காது மூக்கு தொண்டை பிரிவு டாக்டர், மன நல மருத்துவர் மற்றும் கண் டாக்டர் ஆகிய அரசு டாக்டர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச் சான்று வழங்க உள்ளார்கள்.

    மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தில் இதுநாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதுநாள் வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி கட்டாயம் பின்பற்றவேண்டும்.

    தஞ்சை மாவட்டத்தில் மேற்படி தேதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமில் உரிய ஆவணங்களுடன் இதுநாள் மாற்றுத்திறனாளி களுக்கான அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் நேரில் வந்து கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை பெற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வெள்ளரிபட்டியில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு முகாம் நடந்தது.
    • 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.

    மேலூர்

    மேலூர் அருகே உள்ள வெள்ளரிபட்டியில் வருவாய் கோட்டாட்சி யர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. பிர்தவுஸ் பாத்திமா தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் மாற்று திறனாளிகளுக்கான பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள் மற்றும் 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி போன்ற உபகரணங்கள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை, இலவச வீட்டு மனைபட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்ககைள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கல்யாணசுந்தரம், மேலூர் வட்டாட்சியர் சரவண பெருமாள், மதுரை தெற்கு வட்டாட்சியர் முத்துப்பாண்டி, சமூக பாதுகாப்பு திட்டம் தாசில்தார்கள் அனீஸ் சர்தார் (மேலூர்), நாகபூசணம் (கிழக்கு), விக்னேஷ்குமார் (தெற்கு), தலைமையிடத்து துணை வட்டாட்சியர் முரளிதரன், மாவட்ட மாற்றுதிறனாளி நல அலுவலக செயல்திறன் உதவியாளர் ராகவன் மற்றும் அரசு சார்ந்த துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
    • மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு செல்ல லிப்ட் வசதி அமைத்து தரப்படும்.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஆய்வு மேற்கொண்டார்.

    தமிழக இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுற்றுலாத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன், தமிழகம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் நேற்று அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலுக்கு வருகை தந்தார்.

    முன்னதாக கோவில் செயல் அலுவலர் உமாதேவி வரவேற்றார்.

    கோவிலில் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மலைக்கோவிலுக்கு சென்று மூலவரை தரிசனம் செய்ய லிப்ட் வசதி அமைப்பதற்கான சாத்திய கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கோவில் பிரசாத ஸ்டாலுக்கு சென்று அங்கு விநியோகம் செய்யப்படும் உணவு வகைகளை ஆய்வு செய்து மேலும் உயர்தரத்துடன் வழங்க அறிவுரை வழங்கினார்.

    கோவிலில் சுற்றுப்புறங்களில் உள்ள தேவையற்ற செங்கல் கட்டுமானங்களை அகற்ற உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது இணை ஆணையர் மோகனசுந்தரம், கும்பகோணம் உதவி ஆணையர் சாந்தா, மற்றும் கோவில் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • மதுரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    மதுரை வருவாய் கோட்டாட்சியரின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை
    (6-ந்தேதி) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.

    இதில் மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி, போன்ற உதவி உபகரணங்கள், மாதாந்திர உதவித்தொகை மற்றும் இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு உதவிகள் பெறும் வகையில் விண்ணப்பங்கள் வழங்கலாம்.

    இந்த மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மதுரை வருவாய் கோட்டத்திற்குட்பட்ட மதுரை மேற்கு வட்டம், வடக்கு வட்டம் மற்றும் வாடிப்பட்டி வருவாய் வட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களுடன் மாற்றுத் திறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவ அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போட் புகைப்படம்-1 ஆகியவற்றுடன் மதுரை வருவாய் கோட்டாட்சியரிடம் நேரில் வழங்கி பயனடையலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

    • உசிலம்பட்டியில் நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

    மதுரை

    உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தலைமையில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம், நாளை (5-ந்தேதி) காலை 11 மணிக்கு நடக்கிறது. இதில் பல்வேறு துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலி கருவி மற்றும் மாதாந்திர உதவித் தொகை ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. எனவே அந்தப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு போட்டோ ஆகியவற்றுடன் வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து பயன்பெறலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கலெக்டர் அனீஸ்சேகர் தெரிவித்துள்ளார்.

    • மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது.
    • தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில், அவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் வருவாய் கோட்ட அளவில் நடைபெறவுள்ளது. வருகிற 6-ந் தேதி காலை 10 மணிக்கு கோட்டாட்சியர் தலைமையில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலும், 19-ந் தேதி கமுதி வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 10 மணியளவில் பரமக்குடி உதவி ஆட்சியர் தலைமையிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.

    ஒற்றைச்சாளர முறையில் நடைபெறும் இந்த முகாமில் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள விருப்பதால், இதுவரை மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிராத நபர்கள் மருத்துவக்குழு மூலம் அடையாள அட்டை பெற்றுக்கொள்ளவும், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு (UDID அட்டை) விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கவும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளவும், ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கவும், மற்றும் இதர அனைத்து விதமான உதவிகளுக்கான தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டார்.
    • முகாமிற்கு சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் வட்டத்தில் 721 மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு சார்பில் உதவித்தொகை பெற்று வருகின்றனர். அதில் 103 பேருக்கு வீட்டுமனை பட்டா இல்லாததால் அவர்களை கண்டறிந்து இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவிட்டிருந்தார். அதன்படி பெரியதாழை, படுக்கப்பத்து கிராமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கிட மனுக்கள் பெறும் முகாம் பெரியதாழையில் நடைபெற்றது. சாத்தான்குளம் தாசில்தார் தங்கையா தலைமை தாங்கி மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்கள் பெற்றார். வட்ட துணை ஆய்வாளர் மகராசி முன்னிலை வகித்தார். முகாமில் பெறப்பட்டமனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி மாற்றுதிறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    முகாமில் வருவாய் ஆய்வாளர் வெயிலுகந்தமாள், பள்ளக்குறிச்சி சார் ஆய்வாளர் தேவிதா, கிராம நிர்வாக அலுவலர் கந்தவள்ளிக்குமார், வருவாய் உதவியாளர் மாரியம்மாள், பெரியதாழை ஊராட்சித் தலைவர் பிரதீபா, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்ட தலைவர் பேர்சில், சங்க நிர்வாகி ஐசக் ஜோசப், பெரியதாழை மாற்றுத்திறனாளிகள் சங்கத் தலைவர் பிரான்சிஸ், மாநில காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ், மீனவ கூட்டுறவு சங்கத் தலைவர் சந்தியா,மாவட்ட மீனவரணி செயலர் ரமேஷ், சாஸ்தாவிநல்லூர் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் லூர்துமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    • தஞ்சையில் நாளை மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடை பெறுகிறது.
    • மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச் போன்ற உபகரணங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப தேர்வு செய்து வழங்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தேசிய பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனம் இணைந்து நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்க பயனாளிகள் தேர்வு செய்வதற்கான மதிப்பீட்டு முகாம் 4 இடங்களில் நடைபெற உள்ளது.

    அதன்படி தஞ்சாவூர் மேம்பாலம் அரசு செவித்திறன் குறையுடையோருக்கான மேல்நிலைப்பள்ளியில் நாளை (சனிக்கிழமை) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

    26 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) திருவிடைமருதூர் வட்டம் ஆடுதுறை வீரசோழன் கோசி மணி மண்டப வளாகத்திலும், 27ஆம் தேதி (திங்கள் கிழமை) கும்பகோணம் சாக்கோட்டை இலங்கா நகர் சங்கமம் மகாலிலும், 28ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பட்டுக்கோட்டை வடசேரி ரோடு த்ரீ ஸ்டார் திருமண மஹாலிலும் நடைபெற உள்ளது.

    சென்னை முட்டுக்காடு தேசிய பல்வகை மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுவனத்தில் இருந்து உபகரணங்கள் தேர்வு செய்வதற்கான குழுக்கள் முகாமில் கலந்து கொண்டு பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர்.

    இம்முகாம்களில் முடநீக்கு சாதனம், செயற்கைக்கால், மடக்கு சக்கர நாற்காலி, மூன்று சக்கர சைக்கிள், ஊன்றுகோல், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சக்கர நாற்காலி, ரோலேட்டர், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான பயிற்சி சாதனம், பார்வையற்றோருக்கு பிரெய்லி வாட்ச், பிரெய்லி சிலேட், டெய்சி பிளேயர் மற்றும் காதொலிக்கருவி போன்ற உபகரணங்கள் அவர்களின் தகுதிக்கேற்ப தேர்வு செய்து வழங்கப்பட உள்ளது.

    உதவி உபகரணங்கள் தேவைப்படும் மாற்று திறனாளிகள் ஆதார் அட்டை நகல், மாற்றுத் திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை நகல், கைபேசி எண், வருமானச் சான்று மற்றும் இரண்டு புகைப்படம் ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

    மேலும், முகாம் பற்றிய தகவல்களை என்ற 04362-236791 தொலைபேசி எண்ணிலும் பெறலாம்.

    எனவே, தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த உதவி உபகரணங்கள் தேவைப்படும் மனவளர்ச்சி குன்றிய, பார்வை திறன் பாதிக்கப்பட்ட, கால் பாதிக்கப்பட்ட, செவித்திறன் பாதிக்கப்பட்ட அனைத்து மாற்றுத் திறனாளிகளும் மதிப்பீட்டு முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு தேவைப்படும் உதவி உபகரணங்கள் குறித்து பதிவு செய்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பஸ் பயண சலுகை வழங்கும் சிறப்பு முகாம் நடந்தது.
    • சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பயண சலுகை வழங்கும் திட்டத்தின் கீழ் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்டம் முழுமைக்கும், உடல் இயக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் மற்றும் மன வளாச்சி குன்றியோர்களுக்கு கல்விக்காக, பணிபுரிவ தற்காக, பயிற்சிபுரிவதற்காக மற்றும் பயனுள்ள கார ணத்திற்காக அவர்கள் வசிக்கும் இடத்திலிருந்து சம்பந்தப்பட்ட நிறுவ னத்திற்கு சென்று வர இலவச பஸ் பயண சலுகை பெற்று பயனடையும் வித மாக சிறப்பு முகாம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் சார்பில் நடத்தப்பட உள்ளது.

    பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு 20-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையும், உடலியக்க குறைபாடுடையோர், காது கேளாதோர் மற்றும் மன வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகளுக்கு 23, 24-ந்தேதியும் இலவச பயண அட்டையை புதுப்பித்து வழங்கும் முகாம் நடைபெற உள்ளது.

    ஏற்கனவே இலவச பயண அட்டை பெற்றுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், 6 பாஸ்போட் சைஸ் போட்டோ, பழைய பஸ் பயண சலுகை அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன் மேற்கண்ட தேதிகளில் மதுரை எல்லீஸ் நகர், அன்சாரி நகர் 7-வது தெருவில் அமைந்திருக்கும் ஒய்.எம்.சி.ஏ. மனவளர்ச்சி குன்றியோர்க்கான சிறப்பு பள்ளியில் நடைபெறவுள்ள இலவச பஸ் பயண சலுகை அட்டை வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
    • கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்பட உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம், பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கீழ் செயல்படும் கிராமிய வேலைவாய்ப்பு நிறுவனம் மூலம் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கணினி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

    18 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

    கணிணி கணக்கியல் பயிற்சி 30 நாட்கள் அளிக்கப்பட உள்ளது.

    பயிற்சிக்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்து பயிற்சி நிறுவனம் வரை பயிற்சி காலத்திற்கு இலவச பேருந்து பயண சலுகை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் பெற்று தரப்படும். மேற்படி பயிற்சி கும்பகோணம் மற்றும் பட்டுகோட்டையில் நடத்தப்பட உள்ளது.

    மேற்படி பயிற்சி பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் மாற்றுத்திறனாளிக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் புகைப்படம் போன்ற ஆவணங்களுடன் பட்டுக்கோட்டை அல்லது கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகத்தில் நேரில் வந்து 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

    மேலும் விவரங்கள் பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பட்டுகோட்டை மற்றும் கும்பகோணம் வருவாய் கோட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் மேற்கூறிய ஆவணங்களுடன் கணினி பயிற்சிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும்.
    • அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறை தீர்ப்பு சிறப்பு முகாம் வட்டார வளர்ச்சி அலுவலர் சடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

    முகாமில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு 150 நாட்கள் வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் மேனகா உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    • மார்ச் 1 ந்தேதி முதல் மார்ச் 10 ந்தேதி வரை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
    • ஊராட்சி செயலர் எ.மணிகண்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சே.என். சாந்தமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    அவினாசி:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சிகளிலும் மார்ச் 1 ந்தேதி முதல் மார்ச் 10 ந்தேதி வரை மாற்றுத்திறனாளிக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் அவினாசி ஒன்றியம், நடுவச்சேரி ஊராட்சி மன்ற அலு வலகத்தில் நடைபெற்ற முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் கே.சி வரதராஜன் தலைமையில் மூன்று மாற்றுதிறனாளிகள் பயன்பெறும் வகையில் அடையாள அட்டை வழங்க ப்பட்டது. உடன் ஊராட்சி செயலர் எ.மணிகண்டன் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சே.என். சாந்தமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×