search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியட்னாம்"

    வியட்நாம் வந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #TrumpKimSummit
    ஹனோய்:

    வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுத சோதனைகள் நடத்தி வந்தது. அதற்கு அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. வடகொரியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் ஏற்பட்டது.
     
    இதைத்தணிக்கும் விதமாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரில் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அணு ஆயுதங்களை அழிக்கவும், ஏவுகணை சோதனை நடத்துவதை நிறுத்தவும் வடகொரியா ஒப்புக் கொண்டது. இந்த சந்திப்பு வரலாற்று சிறப்புமிக்கதாக கருதப்பட்டது.

    இதையடுத்து, இருநாட்டு தலைவர்களும் மீண்டும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த முடிவுசெய்யப்பட்டது. பல கட்ட ஆலோசனைக்கு பிறகு வியட்நாம் தலைநகர் ஹனோயில் நாளை (27-ம் தேதி) மற்றும் நாளை மறுதினமும் (28-ம் தேதி) சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்கிடையே, பியாங் யாங்கில் இருந்து தனி ரெயில் மூலம் அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வியட்நாம் தலைநகர் ஹனோய் வந்தடைந்தார். வியட்நாம் வந்த வடகொரிய அதிபர் கிம்முக்கு அந்நாட்டு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. கிம் வருகையையொட்டி டாங் டாங் நகரில் இருந்து ஹனோய் வரை 170 கி.மீ. தூரத்துக்கு சாலைகள் மூடப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விமானப்படை விமானத்தின் மூலம் புறப்பட்டு இன்று இரவு ஹனோய் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சந்திப்பு குறித்து டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், கிம்முடன் ஆன 2-வது சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக அமையும் என எதிர்பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.

    டிரம்ப்-கிம் வருகையை முன்னிட்டு வியட்நாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய ராணுவமும், போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். #TrumpKimSummit
    வியட்நாமில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், எதிர்பாராத சந்திப்பாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். #SushmaSwaraj #RanilWickremesinghe #Vietnam
    ஹனாய்:

    ஆசியான் அமைப்பில் நேசநாடுகளில் ஒன்றாக வியட்நாம் உள்ளது. வியட்நாமின் வெளியுறவுத்துறை மந்திரி பாம் பின் மின் தலைமையிலான இந்தியா - வியட்நாம் வெளியுறவுத்துறை சார்ந்த 16-வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக சுஷ்மா சுவராஜ் வியட்நாம் சென்றுள்ளார்.

    இங்கு இரண்டு நாட்கள் இருந்து ஆலோசனை மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார். அதைத்தொடர்ந்து, 29-ம் தேதி கம்போடியாவுக்கு செல்ல உள்ளார்.



    இந்நிலையில், வியட்நாமில் இருக்கும் சுஷ்மா சுவராஜ் எதிர்பாராத விதமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்தார். இந்த திடீர் சந்திப்பை அடுத்து, இருவரும் இருநாடுகளின் உறவு, மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். #SushmaSwaraj #RanilWickremesinghe #Vietnam
    வியட்னாமில் பேருந்தும், சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் தனது திருமணத்துக்கு குடும்பத்துடன் சென்று கொண்டிருந்த மணமகன் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். #Vietnam #BusAccident
    ஹனோய்:

    வியட்னாம் நாட்டின் காங்க் ட்ரி மாகாணத்தில் இருந்து திருமணத்துக்காக மணமகன் உட்பட குடும்பத்தினர் 17 பேர் மினி பேருந்தில் பின்ஹ் டின்ஹ் மாகாணத்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த சரக்கு லாரியும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி மோசமான விபத்து ஏற்பட்டது.

    இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் சம்பவ இடத்திலேயெ பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மணமகன் உட்பட மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இந்நிலையில், படுகாயங்களுடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிறுகாயங்களுடன் தப்பிய லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனது திருமண விழாவுக்கு செல்லும் வழியில் மணமகனும் அவரது குடும்பத்தாரும் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Vietnam #BusAccident
    ×