search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிஸ்சார்ஜ்"

    உடல்நலக் குறைவால் கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார். #ManoharParrikar
    பனாஜி:

    கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

    இதற்கிடையே, மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இந்நிலையில், கோவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் இன்று மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.

    அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது. தொடர்ந்து அவரது வீட்டில் தேவையான சிகிச்சைகள் அளிக்கப்படும் என கோவா முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #ManoharParrikar
    இங்கிலாந்தில் பிறந்த குழந்தைக்கு இதயம் உடலுக்கு வெளியே இருந்ததையடுத்து, அறுவை சிகிச்சை மற்றும் தொடர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளது. #Babywithoutsideheart #Discharged
    நாட்டிங்காம்:

    இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் பகுதியைச் சேர்ந்த டீன் வில்கின்ஸ்-நவோமி ஃபிண்ட்லே தம்பதியருக்கு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் தேதி பெண் குழந்தை ஒன்று பிறந்தது. லெய்செஸ்டரில் உள்ள கிளென்ஃபீல்ட் மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு வனெலோப் ஹோப் வில்கின்ஸ் என பெயரிட்டனர். இக்குழந்தை பிறக்கும்போதே நெஞ்செலும்பு இல்லாமலும், இதயம் உடலுக்கு வெளியே இருந்து துடித்தபடியும் காணப்பட்டது.

    இதையடுத்து குழந்தைக்கு 3 அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டது. பின்னர் வீட்டிற்கு அருகில் உள்ள குயின்ஸ் மருத்துவ மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வாறு 14 மாத தொடர் பராமரிப்புக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை தேறியதையடுத்து, குழந்தை நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. குழந்தை குணமடைந்ததால் பெற்றோர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது மிகவும் அற்புதமான தினம் என்றும் குழந்தையை வீட்டிற்கு அழைத்து வந்தது அளவுகடந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும்  குழந்தையின் தாய் நவோமி ஃபிண்ட்லே நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டாலும், குழந்தை சிரமம் இன்றி மூச்சுவிடுவதற்காக 24 மணி நேரம் வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும் என மருத்துவமனை கூறியுள்ளது. அதன்படி வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டு குழந்தையின் சுவாசம் கண்காணிக்கப்படுகிறது.

    இதயம் வெளியில் இருந்தபடி பிறந்த குழந்தை, அறுவைச் சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைத்தது இதுவே முதல் முறையாக இருக்கும் என கிளென்ஃபீல்ட் மருத்துவமனை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. #Babywithoutsideheart #Discharged 
    உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார். #NawazSharif
    இஸ்லாமாபாத்:

    அல்-அஜீதா இரும்பாலை முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவர் லாகூரில் உள்ள கோட்லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அங்கு அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனவே டாக்டர்கள் குழு அவரை பரிசோதனை நடத்தியது. அப்போது அவருக்கு இருதயநோய், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து சிறையில் வைத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் குணமாகாமல் தொடர்ந்து அவர் அவதிப்பட்டு வருகிறார். எனவே அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து உயர்தர சிகிச்சை அளிக்க டாக்டர்கள் குழு பரிந்துரை செய்தது.

    நவாஸ் செரீப் சார்பில் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, நவாஸ் செரீப்பின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறையில் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இந்நிலையில், உடல்நலம் தேறியதால் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மருத்துவமனையில் இருந்து லாகூர் சிறைக்கு இன்று மாற்றப்பட்டார் என அவரது மகள் மரியம் நவாஸ் தெரிவித்துள்ளார். #NawazSharif
    உடல்நலக் குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய மந்திரி ரவி சங்கர் பிரசாத், இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #Ravishankarprasad #AIIMS
    புதுடெல்லி:

    மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், சுவாசப் பிரச்சினை காரணமாக  நுரையீரல் சிகிச்சைக்காக கடந்த திங்கட்கிழமை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிறப்பு பரிசோதனைகள் மேற்கொண்டு, சிகிச்சை அளித்து வந்தனர். இதையடுத்து நேற்று அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை சார்பில் கூறப்பட்டிருந்தது.

    இந்நிலையில், ரவி சங்கர் பிரசாத்தின் உடல்நிலை தேறியதையடுத்து, இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.



    இதேபோல் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, பாஜக தலைவர் அமித் ஷா, ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார் என மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் பாஜக தலைவர் அனில் பலூனி கூறியுள்ளார்.

    முன்னதாக இன்று காலை பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் ராம் லால், காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறின் காரணமாக நொய்டாவில் உள்ள கைலாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #Ravishankarprasad #AIIMS

    விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் காயமடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #JaganmohanReddy
    நகரி:

    ஆந்திர மாநில எதிர்க்கட்சி தலைவரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 25-ந்தேதி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு சென்றபோது அவரை வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தினார்.

    இதில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு கையில் காயம் ஏற்பட்டது. கத்தியால் குத்திய வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் விமான நிலையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்க்கும் சீனிவாஸ் என்பது தெரிந்தது.

    காயம் அடைந்த ஜெகன்மோகன் ரெட்டியை ஐதராபாத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நேற்று மதியம் ஜெகன்மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆஸ்பத்திரியில் இருந்து வெளியே வந்து காரில் ஏறியபோது தொண்டர்களை பார்த்து தனக்கு ஒன்றுமில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன் என்று சிரித்தபடியே கூறி விட்டு புறப்பட்டு சென்றார்.

    இதற்கிடையே கத்தியால் குத்திய சீனிவாஸ் பணிபுரியும் ஓட்டலின் உரிமையாளர் அர்‌ஷவர்தன் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் என்றும் ஜெகன்மோகன் ரெட்டியை கொல்ல அரசு சதி செய்கிறது என்றும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    ஆனால் முதல்வர் சந்திர பாபு நாயுடு கூறும்போது, ஜெகன்மோகன் ரெட்டி மீது நடந்த கத்திகுத்து சம்பவம் ஒரு நாடகம் என்று தெரிவித்தார்.

    இதற்கிடையே ஜெகன் மோகன் ரெட்டி மீது நடந்த கொலை முயற்சி குறித்து ஆந்திர மாநில அரசு நடத்தும் விசாரணை மீது தங்களுக்கு நம்பிக்கையில்லை என்றும் மூன்றாவது நபர் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ரிட் மனுதாக்கல் செய்தனர்.

    மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு எம்.பி. பதவியை ராஜினாமா செய்த ஜெகன்மோகன் ரெட்டியின் சித்தப்பா ஒய். வி.சுப்பாரெட்டி சார்பில் வழக்கறிஞர்கள் அனில் குமார், அமர்நாத் ரெட்டி மனுவை தாக்கல் செய்தனர். #JaganmohanReddy
    கல்லீரல் நோய் பாதிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒருமாதம் தங்கி சிகிச்சை பெற்றுவந்த கோவா முதல் மந்திரி மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் ஆனார். #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
    புதுடெல்லி:

    முன்னாள் ராணுவ மந்திரியும் கோவா முதல்-மந்திரியுமான மனோகர் பரிக்கர் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் கோவா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
     
    அதன் பிறகு அமெரிக்காவில் 3 மாதங்கள் வரை அவர் சிகிச்சை பெற்று கோவா திரும்பினார். இங்கு வந்த சில நாட்களிலேயே மீண்டும் கோவா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

    நோயின் தன்மை தீவிரம் அடைந்ததால் 15-9-2018 அன்று  மனோகர் பரிக்கர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்குள்ள தனி வார்டில் டாக்டர் பிரமோத் கார்க் தலைமையில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.

    மனோகர் பரிக்கர் தொடர்ந்து சிகிச்சைக்கு சென்று விடுவதால் கடந்த 8 மாதங்களாக அரசு நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கோவாவில் ஆளும் பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள மராட்டிய கோமந்தவாடி கட்சி தலைவர் தடீபக் தவாபிகர் குறிப்பிட்டிருந்தார்.

    எனவே மாநிலத்தின் நிர்வாக பொறுப்புகளை மூத்த மந்திரி ஒருவரிடம் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதே கோரிக்கையை காங்கிரஸ் கட்சியும் வலியுறுத்தி வருகிறது.

    இதற்கு பதிலளித்த கோவா பா.ஜ.க. தலைவர் வினய் தெண்டுல்கர், கோவா முதல் மந்திரி பதவியில் மாற்றம் என்ற பேச்சுக்கு இடமில்லை. மனோகர் பரிக்கர் முதல் மந்திரியாக தொடர்ந்து நீடிப்பார் என அறிவித்தார்.

    இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமார் ஒருமாத காலம் சிகிச்சை பெற்றுவந்த மனோகர் பரிக்கர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவர் உடனடியாக கோவா திரும்புவாரா? அல்லது, சில நாட்கள் டெல்லியில் தங்கி இருப்பாரா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.  #ManoharParrikar #Parrikardischarged #dischargedfromAIIMS
    சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்குப் பிறகு இன்று மதியம் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டார். #DMK #MKStalin #ApolloHospital
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு நேற்று இரவு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் இரவு 11.30 மணிக்கு ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக சிகிச்சை அளித்தனர்.

    சிறுநீரக தொற்று பாதிப்பு காரணமாக மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.



    இந்த நிலையில் இன்று காலை மு.க.ஸ்டாலினுக்கு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது வலது கால் தொடையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, தொடையில் இருந்த நீர்க்கட்டி அகற்றப்பட்டதாகவும், பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டது. அதன்படி இன்று பிற்பகல் ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    ஓரிரு நாட்கள் ஓய்வு எடுக்கும்படி ஸ்டாலினுக்கு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதன்பின்னர் வழக்கமான கட்சிப் பணிகளில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  #DMK #MKStalin #ApolloHospital
    மும்பை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், சிகிச்சை முடிந்து இன்று பாட்னா திரும்பினார். #LaluPrasadYadav
    பாட்னா:

    பீகார் முன்னாள் முதல் மந்திரியும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவருமான லாலு பிரசாத் யாதவ் தனது ஆட்சி காலத்தில் பீகாரில் மாட்டுத் தீவனம் வாங்கியதில் பல கோடி ஊழல் செய்துள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. விசாரணை நடத்தி அவர் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தது. ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டு அவருக்கு 5 வழக்குகளில் ஜெயில் தண்டனை விதித்துள்ளது. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    இதற்கிடையே லாலு பிரசாத் யாதவுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் மகன் திருமணத்துக்காக 3 மாத இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. மகனது திருமணம் முடிந்ததும் கடந்த திங்கட்கிழமை அவர் மும்பை மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

    அப்போது இந்த ஜாமீனை மருத்துவ காரணங்களுக்காக மேலும் 3 மாதங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று லாலு சார்பில் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு லாலு பிரசாத்துக்கு ஜாமீன் நீடிப்பு வழங்க முடியாது என்று மறுத்ததுடன், வரும் 30-ம் தேதி அவர் கோர்ட்டில் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இந்நிலையில், மும்பை ஏசியன் ஹார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பீகார் முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ், இன்று சிகிச்சை முடிந்து விமானம் மூலம் பாட்னாவுக்கு திரும்பினார். #LaluPrasadYadav
    ×