search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாருஹாசன்"

    விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் சாருஹாசன் - சரோஜா நடிப்பில் உருவாகி இருக்கும் `தாதா 87' படத்தின் முன்னோட்டம். #DhaDha87 #CharuHaasan #SarojaRajagopal
    கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன், வேணு ரவிச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தாதா 87’.

    நடிகர் சாருஹாசன், நீண்ட நாட்களுக்குப் பின் பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷின் பாட்டியான சரோஜா நடித்துள்ளார். ஜனகராஜ், ஜெனி பல்லவி, அனு லாவண்யா, மனோஜ் குமார், ஆனந்த் பாண்டி, கதிர் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    ஒளிப்பதிவு - ராஜபாண்டி, இசை - லியாண்டர் லீ மார்ட்டி, படத்தொகுப்பு - ஸ்ரீ வட்சன், கலை - நந்தா, சண்டைப்பயிற்சி - விஜய் ஜாகுவார், தயாரிப்பு மேலாளர் - சரவணன், இணை தயாரிப்பு - ஜி மீடியா, தயாரிப்பு - ம.கலைச்செல்வன், எழுத்து, இயக்கம் - விஜய் ஸ்ரீ ஜி.



    இந்த படத்தின் மூலம் சாருஹாசனுக்கு `ஏஜிங் சூப்பர் ஸ்டார்' எனப் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கேங்க்ஸ்டர் வகைப் படமாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்டர்கள், டீசர், டிரைலர் ஆகியவை நல்ல கவனத்தைப் பெற்றிருக்கின்றன. 

    படம் தொடங்கும்போது திரையில் காண்பிக்கப்படும் டிஸ்க்ளைமர்களில் மது அருந்துவது மற்றும் புகை பிடிப்பது ஆகியவற்றுக்கு எதிரான வாசகங்களே பொதுவாக இடம்பெறும். ஆனால் இந்த படத்தில் ‘பெண்களை அனுமதியின்றித் தொடுவது சட்டப்படி குற்றமாகும்‘ எனும் வாசகம் இடம்பெறவுள்ளது. இதற்கு தணிக்கைத் துறையும் அனுமதியளித்துள்ளது. இந்தப் பட டைட்டில் கார்டில் இந்த வாசகம் இடம்பெறஇருப்பதால் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது உலக சினிமாவிலேயே இப்படி ஒரு டிஸ்க்ளைமர் காட்டப்படுவது இதுதான் முதன்முறையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

    படம் வருகிற மார்ச் 1-ஆம் தேதி திரைக்கு வருகிறது. #DhaDha87 #CharuHaasan #SarojaRajagopal

    தாதா 87 டிரைலர்:

    ‘தாதா 87’ படத்தில் கமல் பாடலுக்கு அவரது அண்ணன் சாருஹாசன் ரொமன்ஸ் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. #DhaDha87 #CharuHaasan #Kamal
    கலை சினிமாஸ் சார்பில் ம.கலைச்செல்வன் தயாரிக்கும் படம் ‘தாதா 87’. இதில் சாருஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவருடன் கீர்த்திசுரேசின் பாட்டி சரோஜா, ஜனகராஜ், மனோஜ்குமார், ஆனந்த்பாண்டி, ஜெனி பல்லவி, அனுலாவண்யா உள்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

    விஜய் ஸ்ரீஜி இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் மார்ச் 1ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் 2 நிமிட காட்சி வெளியாகியுள்ளது.



    அதில் கமல் நடித்த ‘தேவர் மகன்’ படத்தில் இடம் பெறும் ‘இஞ்சி இடுப்பழகி...’ என்ற பாடலுக்கு சாருஹாசனும், சரோஜாவும் ரொமன்ஸ் செய்திருக்கிறார்கள். தற்போது இந்த காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


    நடிகர் கமல்ஹாசன் 16 வயதில் இருந்தே பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர் என அவரது சகோதரர் சாருஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Charuhasan
    திருவனந்தபுரம்:

    மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசனின் சகோதரர் சாருஹாசன்.

    80 வயதுடைய சாருஹாசன் நடிகராகவும் உள்ளார். இவர், கேரள மாநிலம் கொச்சியில் நடந்த சர்வதேச புத்தக திருவிழாவில் கலந்து கொண்டார். அங்கு நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

    நிகழ்ச்சியில், அவர் கமல்ஹாசன் பற்றியும், கேரளாவின் முன்னணி நடிகர் பிரேம் நசீர் குறித்தும் தமிழக-கேரள மக்களின் சினிமா மோகம் பற்றியும் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

    கேரள மக்கள் கல்வியில் சிறந்தவர்கள். பள்ளிகளில் சென்று படித்தவர்கள். கல்வியில் சிறந்து விளங்கியதால் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழ்ந்த பிரேம் நசீர் கேரளாவின் முதல்-மந்திரியாக ஆக முடியவில்லை.

    கேரள மக்களுக்கு இருந்த கல்வி அறிவே இதற்கு காரணமாகும். கேரள மக்கள் பள்ளிகளுக்கு சென்றபோதும், பெரும்பாலான தமிழர்கள் சினிமா என்னும் பள்ளிக்குதான் சென்றார்கள். அரசியல் கலாச்சாரத்தில் தமிழகத்திற்கும், கேரளாவிற்கும் இடையேயான வித்தியாசத்திற்கு இதுவே காரணமாகும்.

    நான், சினிமா உலகில் நுழைந்தபோது இந்தியா முழுவதும் சுமார் 10 ஆயிரம் தியேட்டர்கள் இருந்தன. இதில் 3 ஆயிரம் தியேட்டர்கள் தமிழ்நாட்டில் இருந்தது. மொத்த இந்தியாவையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தென் மாநிலங்களில்தான் சினிமா தியேட்டர்கள் அதிகமாக இருந்தது.

    கர்நாடகாவில் 1,400 தியேட்டர்களும், கேரளாவில் 1,200 தியேட்டர்களும் இருந்தன. கேரளாவில் 1,200 தியேட்டர்கள் இருந்தாலும் இங்கு அதற்கேற்ப பள்ளிக் கூடங்களும் இருந்தது.

    கல்வி கற்பதன் மூலமே வேற்றுமைகளை களைய முடியும். இதுவே கேரளாவின் முன்னேற்றத்திற்கு காரணமாகும். தமிழ் நடிகர்களை காட்டிலும் மலையாளத்தில் மோகன்லாலும் மம்முட்டியும் முன்னணி நடிகர்களாக திகழ்கிறார்கள்.

    எனது சகோதரரும், நடிகருமான கமல்ஹாசன் ஒரு நாத்திகர். பெரியாரின் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டவர். அவரது 16 வயதில் இருந்து பெரியாரின் ரசிகராக மாறியவர்.

    கடவுள் மிகப்பெரியவர் என்பதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லை. அதே நேரம் என்னுடைய எண்ணங்களை வெளிப்படுத்த நான் விரும்புவதில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #Charuhasan
    ரஜினி, கமல் ஆகிய இருவருக்கு ஓட்டு போடுவதை விட ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்று சாருஹாசன் தெரிவித்துள்ளார். #Charuhasan #Rajinikanth #KamalHaasan
    சென்னை:

    ஹலோ எப்.எம்.மில் இன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ஒலிபரப்பாகும் ‘ஸ்பாட் லைட்’ நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் அண்ணனும், நடிகருமான சாருஹாசனின் பேட்டி ஒலிபரப்பாகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரையில் ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட கருணாநிதி, கேரளாவை சேர்ந்த எம்.ஜி.ஆர்., கர்நாடகாவில் இருந்து வந்த ஜெயலலிதா ஆகியோர் ஆட்சியை பிடித்து சாதனை செய்துள்ளதால் புலம் பெயர்ந்து வந்தவர்களுக்கு தமிழக மக்களிடம் செல்வாக்கு உள்ளது என்பதை புரிந்து கொள்ளலாம்.

    நடிகர்கள் ரஜினி, கமல்ஹாசன் அரசியல் பிரவேசம் குறித்து பேசியபோது, ‘இவர்கள் இருவரும் தங்களது சுயநலத்துக்காக வாழ்ந்தவர்கள். இருவருமே மக்களுக்கு என்ன செய்தார்கள்? என கேள்வி எழுப்பிய அவர் அதேவேளையில் கமலை விட ரஜினிக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் உள்ளதாகவும், தமிழர்கள் அவரை கடவுளாக பார்ப்பதாகவும் தெரிவித்தார்.


    ரஜினி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்கலாம் என்றும், கமல் தமிழர் கட்சிகள் மற்றும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று கூறிய சாருஹாசன் ஆனால் இருவருக்கும் ஓட்டு போடுவதை விட ஆட்சி செய்து வரும் தமிழரான எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பதில் தவறில்லை என்றும் தெரிவித்தார்.

    மேலும், கடந்த கால நினைவுகள், அவரது வாரிசுகளில் அரசியலுக்கு வரப்போவது யார்? என்ற கேள்விக்கான பதில் உள்பட பல்வேறு தகவல்களை தொகுப்பாளர் ராஜசேகருடன் அவர் பகிர்ந்துள்ளார்.  #Charuhasan #Rajinikanth #KamalHaasan #EdappadiPalaniswami
    ×