search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆஜர்"

    ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை ஆணையத்தில் ஆஜரான அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.#JayadeathProbe #ApolloHospital
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 100 சாட்சிகள் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகளில் இன்னும் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், நர்சுகள், டிரைவர் உள்பட 15 பேரிடம் இன்று குறுக்கு விசாரணை நடந்தது.

    டாக்டர்கள் புவனேஸ்வரி சங்கர், பாபு மனோகர், சாய் சதீஷ், மற்றும் நர்சுகள் அனிஷ், சாமூண்டீஸ்வரி, ராஜேஸ்வரி ஆகியோர்களிடம் சசிகலா வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

    நாளை அப்பல்லோ சட்டப்பிரிவு மேலாளர் மோகன்குமார், ரேடியா லஜிஸ்ட் டாக்டர் மீரா, தீவிர சிகிச்சை பிரிவு டாக்டர் தவபழனி ஆகியோரிடம் விசாரணை நடக்கிறது. #JayadeathProbe #ApolloHospital

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர்கள் மற்றும் அதிமுக முன்னாள் எம்பி மனோஜ் பாண்டியன் ஆஜரானார்கள். #JayadeathProbe
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை ஆணையத்தில் பலர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர்.

    அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள் வெங்கட் ராமன், பத்மாவதி, புவனேஸ்வரி சங்கர் ஆகியோர் நேரில் ஆஜராகி தங்கள் தரப்பில் விளக்கங்களை அளித்தனர்.


    மேலும் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. மனோஜ் பாண்டியன், அப்பல்லோ மருத்துவமனை முதன்மை செயல் அதிகாரி சுப்பையா விஸ்வநாதன் ஆகியோர் இன்று குறுக்கு விசாரணைக்காக ஆஜரானார்கள். அவர்களிடம் சசிகலா தரப்பில் வக்கீல் செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். #JayadeathProbe
    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் முன்னாளர் கவர்னர் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா இன்று ஆஜரானார். #JayaDeathProbe
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரித்து வருகிறது.

    சசிகலா உறவினர்கள், போலீஸ் அதிகாரிகள், அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள் உள்ளிட்டோர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. அவர்களிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து வருகிறார்.

    ஜெயலலிதா அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டபோது கவர்னராக வித்யாசாகர் ராவ் இருந்தார். அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றியும் சிகிச்சை குறித்தும் டாக்டரிடம் கேட்டார்.

    இந்த நிலையில் வித்யாசாகர் ராவின் செயலாளர் ரமேஷ்சந்த் மீனாவுக்கு விசாரணை ஆணையத்தில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இதையேற்று ரமேஷ்சந்த் மீனா இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர்ஆனார்.

    அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தினார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது வித்யாசாகர் ராவ் நேரில் பார்த்தாரா, என்பது போன்ற கேள்விகளை கேட்டார். இதேபோல் அப்பல்லோ டாக்டர் ராஜ்பிரசன்னா ஆஜரானார். #JayaDeathProbe #Jayalalithaa #JusticeArumugaswamy
    மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை மயிலாடுதுறை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #ThirumuruganGandhi
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சின்னபெருந்தோட்டத்தில் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி அம்பேத்கரின் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

    இந்த கூட்டத்தில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் ஒரு தரப்பினரை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

    இவரது பேச்சு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக கூறி திருவெண்காடு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சீர்காழி கோர்ட்டில் நடந்து வந்த இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து ஏற்கனவே வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் இருந்த திருமுருகன் காந்தி ,சீர்காழி கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.

    அங்கு நீதிபதி விடுப்பில் இருந்ததால் உடனடியாக மயிலாடுதுறை கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செப்டம்பர் 6-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

    இதையடுத்து திருமுருகன் காந்தி மீண்டும் வேலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். #ThirumuruganGandhi
    ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் 23-ந் தேதி ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    சென்னை:

    மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் செயல்பட்டு வருகிறது.

    இதில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், நர்சுகள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், சசிகலாவின் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரணை கமி‌ஷன் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

    வாக்குமூலம் கொடுத்தவர்களிடம் சசிகலாவின் வக்கீல்கள் குறுக்கு விசாரணையும் நடத்தி உள்ளனர்.

    தற்போது ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் டாக்டர்கள் கில்நானி, நிதிஷ் நாயக், அஞ்சன் டிரிக்கா ஆகிய 3 பேருக்கும் விசாரணை ஆணையத்தில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.



    அதில், வருகிற 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் எய்ம்ஸ் டாக்டர்கள் சென்னை வந்து விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. #Jayalalithaa #JayalalithaaDeath #InquiryCommission
    நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நாமக்கல் கோர்ட்டில் யுவராஜ் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் தனபால் இந்த வழக்கை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார். #Yuvaraj
    நாமக்கல்:

    சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்தவர் என்ஜினீயர் கோகுல்ராஜ் (வயது 23). இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக நாமக்கல் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உள்ளிட்ட 17 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணைக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 19-ந் தேதி யுவராஜை போலீசார் நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது கோர்ட்டில் நீதிபதிக்கு எதிராக ஆவேசமாக பேசியதாக யுவராஜ் மீது கோர்ட்டு தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு நேற்று நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள யுவராஜை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் தனபால் வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் யுவராஜ் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். யுவராஜ் வருகையை முன்னிட்டு நாமக்கல் கோர்ட்டு வளாகத்திலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 
    கோவை அருகே சீல் வைக்கப்பட்ட குட்கா ஆலை அதிபர் அமித் ஜெயின் இன்று சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார்.
    சூலூர்:

    கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம் பாளையத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட குட்கா ஆலையில் கடந்த ஏப்ரல் 27-ந் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

    அங்கிருந்து ரூ. 80 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதனை தொடர்ந்து குட்கா ஆலைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த ஆலை மேலாளர் ரகுராமன், அங்கு வேலை பார்த்து வந்த வட மாநில ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.ஆலை உரிமையாளரான டெல்லியை சேர்ந்த அமித் ஜெயின் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படையினர் டெல்லி சென்றனர். ஆனால் அவர் போலீஸ் பிடியில் சிக்கவில்லை. வெளி நாட்டில் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் அமித் ஜெயின் தனக்கு முன் ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.மனுவை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு நீதிபதி சென்னை அடையாறு புற்று நோய் மையத்திற்கு ரூ. 1 லட்சத்துக்கான டி.டி. எடுத்து கொடுக்க வேண்டும். சூலூர் போலீசில் கையெழுத்திட வேண்டும். இது தொடர்பாக சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆகி முன் ஜாமீன் பெற்றுக் கொள்ளும் படி உத்தரவிட்டார்.இதனை தொடர்ந்து அமித் ஜெயின் இன்று சூலூர் கோர்ட்டில் ஆஜர் ஆனார். #tamilnews
    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ டாக்டர் மற்றும் நர்சு ஆகியோர் ஆஜரானார்கள்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரித்து வருகிறது.

    இதில் இதுவரை 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    முக்கிய தகவல் தெரிவிப்போரிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தி வருகிறார்.

    ஒவ்வொருவர் அளிக்கும் வாக்குமூலம் முழுமையாக பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கடந்த 4 நாட்களாக அப்பல்லோ டாக்டர்களை அழைத்து விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று மருத்துவர் ஷில்பா, செவிலியர் ஹெலனா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

    இன்று அப்பல்லோ டாக்டர் பத்மா, நர்சு மகேஸ்வரி ஆகிய 2 பேரும் விசாரணை ஆணையத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தனர்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்த நிலையில் இப்போது மீண்டும் ஆஜர் ஆகி உள்ளனர். #Jayalalithaa #ApolloHospital
    ஜெயலலிதா மரணம் தொடர்பான ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவனை நர்ஸ் விஜயலட்சுமி ஆஜரானார்.
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை நடத்தி வருகிறார். இந்த ஆணையத்தில் போலீஸ் அதிகாரிகள், சசிகலா குடும்பத்தினர் மற்றும் போயஸ் கார்டனில் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

    அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற போது ஜெயலலிதாவுக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றி அங்கு பணியாற்றும் டாக்டர்கள், நர்சுகள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் அப்பல்லோ ஆஸ்பத்திரி நர்ஸ் விஜயலட்சுமி இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. #Jayalalithaa #Apollohospital
    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் திவாகரன் மகன் இன்று ஆஜரானார்.#Jayalailthaa
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. நேற்று ஜெயலலிதாவின் உதவியாளர்கள் பூங்குன்றன், கார்த்திகேயன் ஆகியோர் விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்து இருந்தனர்.

    இதற்கிடையே ஆஸ்பத்திரியில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான ஆதாரம் இருப்பதாக திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் கூறி இருந்தார். இதையடுத்து அவரை விசாரணை ஆணையத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.

    அதன்படி இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஜெய் ஆனந்த் ஆஜரானார். அப்போது அவர் தனது விளக்கத்தை அளித்தார். #Jayalailthaa
    வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம் மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். #NaliniChidambaram #KartiChidambaram
    சென்னை:

    அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாட்டில் வாங்கிய சொத்துக்களை மறைத்ததாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் குடும்பத்தினர் மீது வருமான வரித்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    இதுதொடர்பாக கடந்த வாரம் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்திக் சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி கார்த்திக் ஆகியோர் ஜன் 25-ம் தேதி ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி, இன்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நளினி சிதம்பரம், கார்த்திக் சிதம்பரம், மற்றும் அவரது மனைவி ஸ்ரீநிதி ஆகியோர் ஆஜராகினர்.

    இதைத்தொடர்ந்து நடைபெற்ற விசாரணையை அடுத்து, ஜூலை 23-ம் தேதி கார்த்திக் சிதம்பரத்தை மீண்டும் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கை ஒத்திவைத்தது. #NaliniChidambaram #KartiChidambaram
    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஆணையத்தில் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம் அளிக்க ஆணையம் உத்தரவிட்டுள்ளது. #JayalalithaaDeath #ArumugasamyCommission
    சென்னை:

    மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஜார்ஜ் பணியில் இருந்தார். இதனால், அப்பல்லோ மருத்துவமனையில் நடந்தது குறித்து அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்ற அடிப்படையில் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், நேற்று ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஜார்ஜுக்கு சம்மன் அனுப்பியது. அதனை ஏற்று நேற்று பிற்பகல் 2.10 மணிக்கு ஆணையத்துக்கு ஜார்ஜ் வருகை தந்தார்.

    பிற்பகல் 2.30 மணி அளவில் தொடங்கிய விசாரணையின் போது, ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஜார்ஜ் ஆஜரானார். அவரிடம் வக்கீல்கள் மதுரை எஸ்.பார்த்தசாரதி மற்றும் நிரஞ்சன் ஆகியோர் குறுக்கு விசாரணை நடத்தினார்கள். மாலை 4.30 மணி வரை அதாவது 2 மணி நேரம் விசாரணை நடந்தது.

    பின்னர் விசாரணை முடிந்து ஜார்ஜ் ஆணையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது நிருபர்கள் ஆணையம் முன்பு தங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டன? அதற்கு நீங்கள் என்ன பதிலளித்தீர்கள்? என்பது குறித்து பல கேள்விகளை கேட்டனர். ஆனால் அவர் எதற்கும் பதிலளிக்காமல் மவுனமாக காரில் ஏறி புறப்பட்டு சென்றார்.

    ஜார்ஜிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து ஆணைய வட்டாரங்கள் கூறியதாவது:-

    ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ஜார்ஜுக்கு ஜெயலலிதா மரணம் தொடர்பாக தகவல்கள் தெரிந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணைக்கு அழைத்திருந்தோம். அதன்படி அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2011-ம் ஆண்டு போயஸ் கார்டனில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட போது, போலீஸ் சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சசிகலா வெளியேற்றப்பட்டார் என்று அப்போது தெரிந்துகொண்டேன். அதேபோல் கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னையில் கால்பந்தாட்ட போட்டி நடந்தது. இதில் அம்பானி குடும்பத்தைச் சேர்ந்த முகேஷ் அம்பானி, நடிகர்கள் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன் ஆகியோர் பார்வையாளர்களாக பங்கேற்றனர். இந்த தகவலை அப்போது முதல்-அமைச்சரிடம் தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால், நான் மாநகர போலீஸ் கமிஷனர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டேன் என்று தெரிந்துகொண்டேன்.

    அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் தினமும் மருத்துவமனைக்கு சென்று வருவேன். ஆனால் ஜெயலலிதாவை ஒரு நாளும் நேரில் பார்க்கவில்லை. கண்ணாடி வழியாக வி.ஐ.பி.க்கள் பார்த்ததாக நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டு இருக்கிறேன். 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந் தேதி மாலை 6 மணியளவில் ஜெயலலிதா உடல்நிலை முடியாததை போலீஸ் வட்டாரங்கள் மூலமாக தெரிந்துகொண்டேன். உடனடியாக அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றேன். இருப்பினும் அப்பல்லோ மருத்துவர்களிடம் நேரடியாக ஜெயலலிதா உடல்நிலை குறித்து விசாரிக்கவில்லை.

    ஜெயலலிதா சிகிச்சை பெற்ற நாட்களில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் அது தொடர்பான விசாரணை செய்யவில்லை. மேலும் தீபா, ஜெயலலிதாவின் ரத்த சொந்தம் என்று அப்போது எனக்கு தெரியாது. அப்போதைய தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ் அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தபோது, அவரை அழைத்து சென்றேன்.



    இவ்வாறு வாக்குமூலத்தில் ஜார்ஜ் கூறி உள்ளார்.

    தொடர்ந்து அவரிடம், சசிகலாவை சந்தித்து பேசினீர்களா? என்று வக்கீல்கள் கேள்வி எழுப்பியபோது, சசிகலாவை பார்க்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவரை சந்திக்க வேண்டும் என்று ஜார்ஜ் பதிலளித்தார்.

    தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு யார், யார் வந்து சிகிச்சை அளித்தார்கள்?, அவரை அமைச்சர்கள் சந்தித்தார்களா?, ஜெயலலிதா மரணம் குறித்து வேறு ஏதாவது தகவல்கள் தெரியுமா? என்பது குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.

    மேலும் ஜார்ஜிடம் வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் நாளை (இன்று) பிற்பகல் 2.30 மணிக்கு மீண்டும் ஆஜராக விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அதேபோன்று சசிகலாவின் உறவினர் டாக்டர் சிவகுமாரிடம் இதற்கு முன்பு நடத்திய விசாரணையின் போது, அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தபோது, அங்கு டாக்டராக பணியாற்றி வரும் திவாகரனின் மகள் டாக்டர் ராஜமாதங்கி (பொதுமருத்துவம்), ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த மருத்துவ குறிப்புகளை எடுத்திருந்தார் என்று கூறினார்.

    அதன்படி டாக்டர் ராஜமாதங்கி, திவாகரனின் மருமகன் டாக்டர் விக்ரம் ஆகியோர் நாளை (இன்று) ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன், ஐ.ஏ.எஸ். அதிகாரி ராமலிங்கம் ஆகியோரிடம் மறு விசாரணை நடத்துவதற்காக வரும் 16-ந் தேதி ஆஜராகவும் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    மேலும், ஆணையம் ஏற்கனவே விசாரணை நடத்திய ஜெயலலிதாவின் வங்கி கணக்கு இருந்து வந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஸ்டெல்லா மேரீஸ் கிளை முன்னாள் மேலாளர் மகாலட்சுமி, அப்பல்லோ மருத்துவர்கள் ஜெயஸ்ரீகோபால், சாந்தாராம், சர்க்கரை நோய் தடுப்பு மருத்துவர் ராமச்சந்திரன் ஆகியோரிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்வதற்காக 16-ந் தேதி அவர்கள் அனைவரும் ஆஜராக ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    இவ்வாறு ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. #JayalalithaaDeath ##ArumugasamyCommission
    ×