search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி.எஸ்.டி"

    ரூ.110 கோடி ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை வலைவீசி தேடிவருகின்றனர். #GST #GSTFraud #Mumbai
    மும்பை:

    தனியார் நிறுவனங்கள் போலி ரசீதுகளை தாக்கல் செய்து ஜி.எஸ்.டி. மோசடியில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக வாங்காத பொருட்களை வாங்கியது போல ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில் மராட்டிய மாநிலம் ராய்காட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் ஜி.எஸ்.டி.யில் ரூ.650 கோடி செலவுக்கான ரசீதுகளை தாக்கல் செய்து, கட்டிய வரியில் ரூ.110 கோடியை திரும்ப பெற்று இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த ஜி.எஸ்.டி. அதிகாரிகள் இதுபற்றி விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த நிறுவனத்தை சேர்ந்த ரகேஷ் அனுமன் பிரசாத் (வயது38), அவரது உறவினர் ஆனந்த் (40) ஆகியோர் போலி ஆவணங்களை தாக்கல் செய்து ரூ.110 கோடி மோசடியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    அவர்கள் பல்வேறு நிறுவனங்களின் பெயரில் வாங்காத பொருட்களுக்கு போலி ரசீது தாக்கல் செய்து மோசடியில் ஈடுபட்டு இருந்தனர்.

    இதையடுத்து ஜி.எஸ்.டி. அதிகாரிகள் மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ரகேஷ் அனுமன் பிரசாத்தை வலைவீசி தேடிவருகின்றனர்.

    ஹஜ் பயணத்துக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஹஜ் பயண விமான கட்டணம் கணிசமாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GST #HajjYatra
    புதுடெல்லி:

    மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி, டெல்லியில் புதிய ஹஜ் அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    ஹஜ் பயணத்துக்கான ஜி.எஸ்.டி., 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு ஹஜ் பயண விமான கட்டணம் கணிசமாக குறையும். கட்டணத்தில் சுமார் ரூ.113 கோடி மிச்சமாகும் என்று கருதுகிறோம். ஆண் துணை இன்றி ஹஜ் பயணம் செல்ல இந்த ஆண்டு 2 ஆயிரத்து 340 பெண்கள் விண்ணப்பித்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார். #GST #HajjYatra 
    ஜி.எஸ்.டி.ஆர்-9, ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ, ஜி.எஸ்.டி.ஆர்-9சி ஆகியவற்றுக்கான கணக்குகளை அடுத்தாண்டு மார்ச் 31-ந்தேதி வரை தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #GST #AnnualReturn #Extended
    சென்னை:

    ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறை கமிஷனர் ஜி.ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஜி.எஸ்.டி.ஆர்-9, ஜி.எஸ்.டி.ஆர்-9ஏ, ஜி.எஸ்.டி.ஆர்-9சி ஆகியவற்றுக்கான கணக்குகளை அடுத்தாண்டு மார்ச் 31-ந்தேதி வரை தாக்கல் செய்யலாம். வரிசெலுத்துவோர் இந்தத் தேதிக்கு முன்னதாக கணக்குகளை தாக்கல் செய்யவேண்டும்.

    வரிசெலுத்துவோர் வருடாந்திர கணக்குகளை தாக்கல் செய்வதற்கு உதவிட சென்னையில் உள்ள ஜி.எஸ்.டி. மற்றும் மத்திய கலால் வரித்துறை முன்வந்துள்ளது. ஜி.எஸ்.டி. இணைய பக்கத்தில் படிவம் கிடைக்கப்பெற்றவுடன் வருடாந்தர கணக்கு தாக்கல் செய்வது குறித்து நேரடி செயல்விளக்கம் தர திட்டமிட்டுள்ளது. சென்னை அண்ணாநகர் தலைமையக அலுவலகத்தில் நேராகவோ, அல்லது 044-26142850/51/52 அல்லது 044-26142853 ஆகிய தொலைபேசி எண்களிலோ அல்லது sevakendraoutertn@gov.in என்ற இணையதளம் மூலமாகவோ சந்தேகங்களை தெளிவுபடுத்தி கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #GST #AnnualReturn #Extended 
    புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. #GST #AndhraPradesh #TamilNadu #GajaCyclone
    புதுடெல்லி:

    புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா ஆகிய மாநிலங்களின் வணிகர்கள் ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்ய மத்திய அரசு கால அவகாசத்தை நீட்டித்து உள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், திருவாரூர், புதுக்கோட்டை, திண்டுக்கல், நாகை, தேனி, தஞ்சை, சிவகங்கை, திருச்சி, கரூர், ராமநாதபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் வணிகம் செய்பவர்கள், அக்டோபர் மாதத்துக்குரிய ஜி.எஸ்.டி. கணக்கு தாக்கல் செய்வதற்கான தேதி, டிசம்பர் 20-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அதுபோல், ‘தித்லி’ புயலால் பாதிக்கப்பட்ட ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் வியாபாரம் செய்பவர்கள், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி. கணக்கை தாக்கல் செய்ய நாளை வரை (வெள்ளிக்கிழமை) அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.  #GST #AndhraPradesh #TamilNadu #GajaCyclone 
    பெட்ரோல், டீசல் போன்றவை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டு வருவது தொடர்பாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி நேற்று விளக்கம் அளித்தார். #ArunJaitley #GST
    புதுடெல்லி:

    இந்தியா சுதந்திரம் பெற்ற பின் மிகப்பெரும் வரி சீர்திருத்த நடவடிக்கையாக, சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி.யை மத்திய பா.ஜனதா அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி அமல்படுத்தியது. இதன் மூலம் உற்பத்தி வரி, விற்பனை வரி உள்ளிட்ட சுமார் 17 மறைமுக வரிகளும், மேலும் சில வரிகளும் ஜி.எஸ்.டி. என்னும் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்டன.

    நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்பை அமல்படுத்தும் நோக்கில் கொண்டு வரப்பட்ட இந்த வரி முறையில், 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 அடுக்கு வரிகள் விதிக்கப்பட்டன. மக்களின் அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் என அனைத்தும் இந்த வரி அடுக்குகளின் கீழ் கொண்டு வரப்பட்டன.

    பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசின் மைல்கல் திட்டங்களில் ஒன்றான இந்த ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டு நேற்றுடன் ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி டெல்லியில் நேற்று சிறப்பு விழா கொண்டாடப்பட்டது. நிதி இலாகாவை கூடுதலாக கவனித்து வரும் ரெயில்வே மந்திரி பியூஷல் கோயல் தலைமையில் நடந்த விழாவில், நிதி மந்திரி அருண் ஜெட்லி காணொலி காட்சி மூலம் பேசினார்.

    சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வு எடுத்து வரும் அருண் ஜெட்லி, முதல் முறையாக கலந்து கொண்ட பொது நிகழ்ச்சி இதுவாகும். விழாவில் உரையாற்றும்போது அவர் கூறியதாவது:-

    பல நாடுகளில் ஜி.எஸ்.டி. அமல்படுத்திய போது மிகப்பெரும் சீர்குலைவை சந்தித்ததை காண முடிந்தது. அதன்படி இந்திய பொருளாதாரத்திலும் ஜி.எஸ்.டி.யால் சீர்குலைவு ஏற்படும் என்று நான்கூட எண்ணினேன். ஆனால் இந்த ஓராண்டு அனுபவத்துக்குப்பின், சீர்குலைவு என்ற வார்த்தையை கூட ஜி.எஸ்.டி. சீர்திருத்தத்தில் பயன்படுத்த முடியுமா? என்று தெரியவில்லை.

    ஜி.எஸ்.டி.யால் இந்த ஓராண்டில் நாம் பெற்றிருக்கும் பயன்கள் வெறும் குறுகிய கால அல்லது சிறப்பான நடுத்தர கால விளைவுகள்தான். ஏனெனில் ஜி.எஸ்.டி.யின் சிறந்த பலன்கள் இன்னும் வரவில்லை. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, எளிமையான வியாபாரம், தொழில் மற்றும் வர்த்தக துறை விரிவாக்கம், இந்தியாவில் தயாரிப்போம் திட்டங்கள் மற்றும் நேர்மையான வர்த்தக நடைமுறைகளில் ஜி.எஸ்.டி. நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.

    கடந்த நிதியாண்டில் ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்பட்டதற்கு பிந்தைய 9 மாதங்களில் ரூ.8.2 லட்சம் கோடி வரிவசூல் செய்யப்பட்டு உள்ளது. இது ஓராண்டுக்கு என்றால் ரூ.11 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது மறைமுக வரிவசூலில் 11.9 சதவீதம் அதிகமாகும்.

    தற்போதைய ஜி.எஸ்.டி. அடுக்குகளை குறைப்பது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் தொடர்ந்து உழைத்து வருகிறது. ஜி.எஸ்.டி. செயலாக்கம் சீராகி, வரி ஏய்ப்புகளை குறைப்பதன் மூலம் வரி வசூல் அதிகமானதும் விரும்புகிற குறைப்பு நடைமுறைக்கு வரும்.

    எனது கணிப்புப்படி, எண்ணெய் சாரா துறையில் மறைமுக வரிவசூலில் 1.5 சதவீதம் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே வரி அடுக்குகளை உடனடியாக குறைக்கும். எனவே வரி வசூல் நிலவரம் சீரானவுடன் ஜி.எஸ்.டி.யின் வரி அடுக்கு களை இன்னும் குறைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

    நேரடி வரி வசூல் அதிகரிப்புக்கு ஜி.எஸ்.டி. பெரிதும் உதவி இருக்கிறது. குறிப்பாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இது பெருமளவு அதிகரித்து இருக்கிறது. ஏராளமான மக்களை வருமான வரி வரம்புக்குள் கொண்டு வந்திருக்கிறோம். மக்கள் வேகமாக தங்கள் வருவாயை வெளியிடுகின்றனர். இதன் மூலம் வரி வருவாயும் கணிசமாக அதிகரிக்கும்.

    பல்வேறு நாடுகளில் இருப்பது போல இந்தியாவிலும் அனைத்து பொருட்களுக்கும் ஒரே அடுக்கு ஜி.எஸ்.டி. வரியே விதிக்க வேண்டும் என ராகுல் காந்தி கூறுவது, தவறான யோசனை. ஒட்டுமொத்த மக்களும் ஒரே சீரான மற்றும் அதிக வரி செலுத்தும் திறன் கொண்டவர்களாக இருக்கும் நாடுகளில் மட்டுமே இது சாத்தியமானது. ஆனால் இந்தியா போன்ற பலதரப்பட்ட மக்கள் வாழும் நாடுகளுக்கு இந்த யோசனை பலனளிக்காது. எனவே இதை ஏற்க முடியாது.

    பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும் என ராகுல் காந்தியும், முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரமும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதற்கு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் நிதி மந்திரிகளே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    எனவே இது தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சிலில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டால், பெட்ரோலிய பொருட்களும் ஜி.எஸ்.டி.க்கு கீழே கொண்டுவரப்படும். இதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து நான் மேற்கொள்வேன். மாநிலங்கள் தங்கள் வருவாய் நிலையில் வலுவான நிலையை எட்டியதும், பெட்ரோலிய பொருட்களையும் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவருவது குறித்து ஒருமித்த கருத்து எட்டப்படும் என நம்புகிறேன்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

    இந்த நிகழ்ச்சிக்குப்பின் மத்திய மந்திரி பியூஷ் கோயல் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘ஜி.எஸ்.டி.யால் நிதி பற்றாக்குறை ஏற்படும் என்ற பதற்றம் தணிந்து விட்டது. ஜி.எஸ்.டி. மூலம் நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதைவிட மேலாக அதாவது ரூ.13 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஜி.எஸ்.டி. மிகப்பெரும் வெற்றியடைந்து இருப்பதுடன், பொருளாதாரத்துக்கும் மிகப்பெரிய வழியில் உதவி புரியும்’ என்றார்.

    வருமான வரி போன்ற நேரடி வரி வசூலை அதிகரிக்க ஜி.எஸ்.டி. உதவுவதாக கூறிய பியூஷ் கோயல், கடந்த சில மாதங்களில் இது 44 சதவீதம் அளவுக்கு உயர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார். வரி நடைமுறை எளிமையாக்கப்பட்டு இருப்பதாகவும், ஏராளமான மக்கள் இந்த வரித்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.  #ArunJaitley #GST #Tamilnews 
    சரக்கு சேவை வரியின் கீழ், எல்லா பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். #NarendraModi #GST
    புதுடெல்லி:

    சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, ‘சுயராஜ்யா’ என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் மறைமுக வரிகளையும், மாநில அரசுகளின் ‘வாட்’ போன்ற வரிகளையும் ஒருங்கிணைத்து சரக்கு சேவை வரி கொண்டுவரப்பட்டுள்ளது. மறைமுக வரிகளை எளிமைப்படுத்துவதும், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் இன்ஸ்பெக்டர் ராஜ்யத்தை ஒழிப்பதும் இதன் நோக்கம் ஆகும். கணக்கு தாக்கல் முதல் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி தொகையை திருப்பி கொடுப்பது வரை எல்லாமே ஆன்லைனில் நடக்கிறது.

    முன்பெல்லாம் நிறைய வரிகள், மறைவாக காணப்பட்டன. ஆனால், இப்போது நீங்கள் வெளிப்படையாக வரி செலுத்துகிறீர்கள்.

    17 வரிகளையும், 23 உப வரிகளையும் ஒரே வரியாக இது ஒருங்கிணைத்துள்ளது. இதை அமல்படுத்தியபோது, இதை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருந்தது. இவ்வளவு பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது, சில பிரச்சினைகள் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவை அடையாளம் காணப்பட்டதுடன், உரிய நேரத்தில் தீர்க்கப்பட்டுள்ளது.

    சரக்கு சேவை வரி, ஒத்துழைப்பான கூட்டாட்சி முறைக்கு சிறந்த உதாரணம். மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்தை உருவாக்கி உள்ளோம். முந்தைய அரசுகள், இதில் தோல்வி அடைந்து விட்டன.

    சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே மொத்தம் 66 லட்சம் மறைமுக வரி செலுத்துபவர்கள்தான் இருந்தனர். ஆனால், சரக்கு சேவை வரி அமலுக்கு பிறகு, புதிதாக 48 லட்சம் நிறுவனங்கள் வரி செலுத்த பதிவு செய்துள்ளன. அதாவது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

    சுமார் 350 கோடி விலை விவர பட்டியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சரக்கு சேவை வரி சிக்கலானதாக இருந்தால், இவ்வளவு எண்ணிக்கையை கண்டிருக்க முடியுமா?

    நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் வாகனங்களின் வரிசை இல்லை. இதனால், சரக்கு வாகன டிரைவர்களின் நேரம் மிச்சமாவதுடன், தளவாட பொருட்கள் துறை ஊக்கம் அடைந்து உற்பத்தி பெருகி வருகிறது. சரக்கு சேவை வரி சிக்கலானதாக இருந்தால், இவையெல்லாம் நடக்குமா?

    எல்லா பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதித்தால், எளிமையானதாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், உணவு பொருட்களுக்கு தற்போது உள்ளதுபோல், பூஜ்யம் முதல் 5 சதவீதம் வரையிலான வரி விகிதம் இல்லாமல் போய்விடும். மெர்சிடஸ் காருக்கும், உணவு பொருட்களுக்கும் ஒரே வரி விகிதம் விதிக்க முடியுமா?

    காங்கிரசில் உள்ள நண்பர்கள், ஒரே வரி விகிதம் நிர்ணயிப்போம் என்று கூறுகிறார்கள். அதன்மூலம், உணவு பொருட்களுக்கு பூஜ்யம் முதல் 5 சதவீதம் வரையிலான வரிவிகிதத்துக்கு பதிலாக, 18 சதவீத வரி விதிப்போம் என்று அவர்கள் கூறுவதாகவே அர்த்தம்.

    சுமார் 400 வகையான பொருட்களுக்கு சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது. 150 வகையான பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, மளிகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு வரி விலக்கோ அல்லது 5 சதவீத வரியோதான் விதிக்கப்படுகிறது. 85 சதவீத பொருட்களுக்கு, 18 சதவீத வரியோ அல்லது அதற்கு கீழோதான் விதிக்கப்படுகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    பிரதமர் மோடி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

    சரக்கு சேவை வரி, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நன்மை விளைவித்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. ஒளிவுமறைவற்ற தன்மையையும், உற்பத்தியையும், வர்த்தகம் செய்ய எளிதான நிலைமையையும் அதிகரித்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #NarendraModi #GST #Tamilnews 
    ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை அமலுக்கு வந்து ஓராண்டு நிறைவடைவதையொட்டி, டெல்லியில் இன்று விழா நடைபெறுகிறது. #GST #Celebrate
    புதுடெல்லி:

    உற்பத்தி வரி, விற்பனை வரி போன்ற பல்வேறு வரிகளுக்கு மாற்றாக ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு (சரக்கு மற்றும் சேவை வரி) முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்தது. நாடு முழுவதும் ஒரே மாதிரியான, சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில் ஜி.எஸ்டி. வரிவிதிப்பு முறை கொண்டு வரப்பட்டது. இது இந்திய வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தமாக கருதப்படுகிறது. இது தொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.

    கடந்த ஆண்டு ஜூன் மாதம் 30-ந் தேதி பாராளுமன்றத்தின் மைய மண்டபத்தில் நள்ளிரவில் கூட்டம் நடத்தப்பட்டு, அதைத்தொடர்ந்து மறுநாள் ஜூலை 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நடைமுறைக்கு வந்தது.

    ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை அமலுக்கு வந்து இன்றுடன் (ஜூலை 1-ந் தேதி) ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு ஜி.எஸ்.டி. நாள் விழா கொண்டாடப்படுகிறது.

    விழாவுக்கு நிதி மற்றும் ரெயில்வே இலாகா மந்திரி பியூஷ் கோயல் தலைமை தாங்குகிறார். நிதி இலாகா ராஜாங்க மந்திரி சிவபிரதாப் சுக்லா மற்றும் பலர் விழாவில் கலந்து கொள்கிறார்கள். #GST #Celebrate #tamilnews  
    ஜி.எஸ்.டி. பாதிப்பையும் மீறி இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் கோடீசுவரர்கள் (டாலர் மில்லியனர்) எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. #GST #DollarMillionaries
    மும்பை:

    இந்தியாவில் கடந்த ஆண்டு பெரும் கோடீசுவரர்கள் (டாலர் மில்லியனர்) எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ‘கேப்கெமினி’ என்ற தொழில்நுட்ப நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவர்களின் சொத்து மதிப்பும் 21 சதவீதம் உயர்ந்துள்ளது. அவர்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.65 லட்சம் கோடியாகும். இதே காலகட்டத்தில் உலக அளவில் உயர்ந்த கோடீசுவரர்கள் எண்ணிக்கையின் சராசரி 11.2 சதவீதம் மட்டுமே.



    ஜி.எஸ்.டி. தாக்கத்தை மீறி, இந்த உயர்வு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், ஜி.எஸ்.டி. தாக்கம் தற்காலிகமானதுதான் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ‘இந்தியா, உலகஅளவில் வேகமாக வளரும் சந்தை’ என்றும் அது கூறுகிறது. கடந்த ஆண்டு சந்தை மூலதனத்தில் 50 சதவீதத்துக்கு மேல் உயர்வு ஏற்பட்டதே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். நிலங்களின் மதிப்பு உயர்வு, மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரிப்பு ஆகியவை இதர காரணங்கள் ஆகும். 
    காரைக்குடியில் நடந்த கூட்டத்தில் பேசிய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம், அடுத்த ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. முறையை திருத்தி அமைப்போம் என தெரிவித்தார். #Congress #PChidambaram #GST
    காரைக்குடி:

    காரைக்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

    கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. ஆனால், இந்தியாவில் மத சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர்.

    இந்தி திணிப்புக்கும், இந்துத்துவாவுக்கும் தமிழகத்தில் இடமில்லை. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுமேயானால், ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். #Congress #PChidambaram #GST
    சரக்கு மற்றும் சேவை வரி மூலமாக மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரத்து 16 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. #GST
    புதுடெல்லி:

    மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்தியது. அன்று முதல் மார்ச் 2018-ம் ஆண்டு வரை அரசுக்கு ஜி.எஸ்.டி. மூலமாக ரூ.7.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்து உள்ளது.

    இந்நிலையில் மே மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.94 ஆயிரத்து 16 கோடி கிடைத்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது. இதில் மத்திய அரசின் வரி வருவாய் ரூ.15 ஆயிரத்து 866 கோடியும், மாநில அரசின் வரி வருவாய் ரூ.21 ஆயிரத்து 691 கோடியும், மாநிலங்களுக்கு இடையேயான வரி வருவாய் ரூ.49 ஆயிரத்து 120 கோடியும், செஸ் வருவாய் ரூ.7 ஆயிரத்து 339 கோடியும் அடங்கும்.

    இது கடந்த மாதத்தை விட அதிகம். ஏப்ரல் மாத ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.89 ஆயிரத்து 885 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  #GST  #Tamilnews 
    ×