search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோனி"

    சோனி நிறுவனம் உலகின் அதிக ரெசல்யூஷன் கொண்ட ஸ்மார்ட்போன் கேமரா சென்சாரை (IMX586) அறிமுகம் செய்துள்ளது. #Sony #camera



    சோனி நிறுவனம் IMX586 என்ற பெயரில் புதிய CMOS இமேஜ் சென்சாரை அறிமுகம் செய்துள்ளது. இந்த சென்சாரை அதிக பிக்சல் கொண்ட ஸ்மார்ட்போன்களில் வழங்க முடியும் என்பதோடு 0.8μm அளவில் உலகின் முதல் அல்ட்ரா-காம்பேக்ட் பிக்சல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

    இதனால் இந்த சென்சாரை 1/2-வகை (8.0 மில்லிமீட்டர் டயகோனல்) சேர்ந்த யூனிட்டில் 48 மெகாபிக்சல்களை வழங்க முடியும். இதில் வழங்கப்பட்டுள்ள குவாட் பேயர் எனும் கலர் ஃபில்ட்டர் புகைப்படங்களை அதிக தரமுள்ளதாகவும், அதிக ரெசல்யூஷனில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சோனியின் எக்ஸ்போஷர் கன்ட்ரோல் தொழில்நுட்பம் மற்றும் சிக்னல் பிராசஸிங் அம்சம் இமேஜ் சென்சாரில் பொருத்தப்பட்டுள்ளதால், கன நேரத்தில் அவுட்புட் வழங்குவதோடு, தலைசிறந்த டைனமிக் ரேன்ஜ் வழங்குகிறது. இது வழக்கமான சென்சார்களை விட நான்கு மடங்கு அதிகம் ஆகும்.



    சோனி IMX586 சிறப்பம்சங்கள்

    பிக்சல் எண்ணிக்கை – 8000 (H) × 6000 (V) 48 மெகாபிக்சல்; படம் அளவு - டயகோணல் 8.000mm (டைப் 1/2)
    ஃபிரேம் ரேட் – ஃபுல் – 30fps; திரைப்படம் – 4K (4096×2160) – 90fps, 1080p – 240fps, 720p – 480fps(w/crop)
    சென்சிடிவிட்டி (வழக்கமான அளவு: f5.6) –  சரியாக. 133LSB
    சென்சார் சாட்யூரேஷன் சிக்னல் அளவு (குறைந்தபட்ச அளவு) – சரியாக. 4500e
    வோல்டேஜ் – அனலாக் 2.8V, 1.8V; டிஜிட்டல் 1.1V; இன்டர்ஃபேஸ் 1.8V
    முக்கிய அம்சங்கள் – இமேஜ் பிளேன் ஃபேஸ்-வித்தியாசம் AF, HDR இமேஜிங்
    வெளிப்பாடு – MIPI C-PHY1.0 (3 trio) / D-PHY 1.2 (4 lane)
    கலர் ஃபில்ட்டர் அரே – குவாட் பேயர் அரே
    படம் வெளிப்பாடு அமைப்பு – பேயர் RAW

    சோனி IMX586 சாம்பிள் விலை 3,000 JPY இந்திய மதிப்பில் ரூ.1,860 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன் தயாரிப்பாளர்களுக்கு இந்த சென்சார் செப்டம்பர் 2018 முதல் விநியோகம் செயய்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சோனி மொபைல் இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஃபிளாக்ஷிப் மாடல் உள்ளிட்ட சில ஸ்மார்ட்போன்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.



    சோனி மொபைல் நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZs, எக்ஸ்பீரியா L2 மற்றும் எக்ஸ்பீரியா R1 ஸ்மார்ட்போன் மாடல்களின் விலையை குறைப்பதாக அறிவித்துள்ளது.

    இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZs ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதவாக்கில் ரூ.49,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இந்த ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.10,000 குறைக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டாவது முறையாக ரூ.10,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.29,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

    சோனி எக்ஸ்பீரியா L2 ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு பிப்ரவரி மாத வாக்கில் ரூ.19,990 விலையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்சமயம் ரூ.5,000 குறைக்கப்பட்டு ரூ.14,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று கடந்த ஆண்டு அக்டோபர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா R1 தற்சமயம் ரூ.9,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது முந்தைய விலையை விட ரூ.3,000 வரை குறைவு ஆகும்.

    ஸ்மார்ட்போன்களின் விலை குறைப்பை தொடர்ந்து சோனி விற்பனை மையங்கள், அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற ஆன்லைன் வலைத்தளங்கள் மற்றும் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனையாளர்களிடம் புதிய விலையில் இந்தியா முழுக்க விற்பனை செய்யப்படுகிறது.

    முன்னதாக சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZ பிரீமியம், XA1 அல்ட்ரா மற்றும் XA1 பிளஸ் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டது. இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனி அறிமுகம் செய்த எக்ஸ்பீரியா XZ2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனினை வெளியிட இருக்கிறது. இந்நிலையில் பழைய ஸ்மார்ட்போன்களின் விலை குறைக்கப்பட்டிருப்பது அவற்றின் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    சோனி நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த X9000F 4K HDR ஆன்ட்ராய்டு டிவி சீரிஸ் 65 இன்ச் மற்றும் 85 இன்ச் மாடல்களின் இந்திய விற்பனை துவங்கியது.
    புதுடெல்லி:

    சோனி நிறுவனம் X9000F சீரிஸ் 4K ஹெச்டிஆர் டிவிக்கள் இம்மாத துவக்கத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்தது. முன்னதாக இந்த டிவி இந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற சர்வதேச நுகர்வோர் மின்சாதன விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    புதிய சோனி டிவி மாடல்களில் X1 எக்ஸ்ட்ரீம் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஸ்டிரைக்கிங் ஹைலைட்கள், டீப்பர் டார்க் மற்றும் வைப்ரன்ட் கலர்களை பிரதிபலிக்கிறது. இத்துடன் ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்டிஆர் ரீமாஸ்டர், சூப்பர்பிட் மேப்பிங் 4K ஹெச்டிஆர் மற்றும் டூயல் டேட்டாபேஸ் பிராசஸிங் வழங்கப்பட்டுள்ளது.

    ஆன்ட்ராய்டு டிவி வெர்ஷன் 7.0 மற்றும் சோனியின் பிரத்யேக யூசர் இன்டர்ஃபேஸ் (UI) மற்றும் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் வசதியை வழங்குகிறது. இதன் டிரைலூமினஸ் டிஸ்ப்ளே சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களை மிகவும் கச்சிதமாக பிரதிபலிக்கிறது. X டென்ட் செய்யப்பட்ட டைனமிக் ரேஞ்ச் PRO ஹெச்டிஆர் மற்றும் ஹெச்டிஆர் அல்லாத தரவுகளை தனியே வித்தியாசப்படுத்தி, பின்னணி நிறங்களை தானாக மாற்றியமைத்து XDR கான்ட்ராஸ்ட் தரத்தில் வீடியோக்களை வழங்குகிறது.

    சோனியின் டைரக்ட் எல்இடி லோக்கல் டிம்மிங் மற்றும் பேக்லைட் பூஸ்டிங் அல்காரிதம் கொண்டு X-மோஷன் கிளேரிட்டி அம்சம் வேகமான ஆக்ஷன் படங்களை மிகவும் நேர்த்தியாகவும், தெளிவாகவும் காட்சிப்படுத்துகிறது. இதனால் புகைப்படங்கள் அதிக தரம் பெறுவதோடு பிரைட்னஸ் அளவில் எவ்வித இழப்பும் ஏற்படாது.



    சோனி பிரேவியா X9000F சிறப்பம்சங்கள்:

    - 55/65/85-இன்ச் 3840x2160 பிக்சல் 4K HDR டிரைலூமினஸ் டிஸ்ப்ளே
    - X-மோஷன் கிளேரிட்டி
    - 4K ஹெச்டிஆர் பிராசஸர் X1 எக்ஸ்ட்ரீம்
    - டைனமிக் கான்ட்ராஸ்ட் என்ஹான்சர்
    - ஆப்ஜக்ட் சார்ந்த ஹெச்டிஆர் ரீமாஸ்டர்
    - X-டென்ட் செய்யப்பட்ட டைனமிக் ரேஞ்ச் ப்ரோ
    - 4K X-ரியாலிட்டி ப்ரோ
    - 16 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - ஆன்ட்ராய்டு டிவி 7.0
    - க்ரோகாஸ்ட் மற்றும் கூகுள் அசிஸ்டண்ட் பில்ட் இன் வசதி
    - வாய்ஸ் சர்ச் வசதி
    - வைபை, ப்ளூடூத், யுஎஸ்பிx3, 1xஈத்தர்நெட்
    - 10 W+10 W ஸ்பீக்கர், டால்பி டிஜிட்டல்
    - டால்பி டிஜிட்டல் பிளஸ், டால்பி பல்ஸ்
    - டிடிஎஸ் டிஜிட்டல் சரவுன்ட்

    சோனி KD-85X9000F மற்றும் KD-65X9000F மாடல்கள் இந்தியாவில் முறையே ரூ.1,29,900 மற்றும் ரூ.3,39,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை இந்தியா முழுக்க இயங்கி வரும் அனைத்து சோனி விற்பனை மையங்களிலும், மற்ற மின்சாதன விற்பனை மையங்களிலும் விற்பனை செய்யப்படுகிறது. 55 இன்ச் சோனி பிரேவியா X9000F விலை ரூ.2,39,900 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி தற்சமயம் நடைபெற்று வருகிறது.
    சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மாடல்களின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. விலை குறைக்கப்பட்ட மாடல்களை தொடர்ந்து பார்ப்போம்.
    புதுடெல்லி:

    சோனி நிறுவனத்தின் தேர்வு செய்யப்பட்ட எக்ஸ்பீரியா ஸ்மார்ட்போன் மாடல்கள் விலை இந்தியாவில் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் அறிமுகமான எக்ஸ்பீரியா XZ பிரீமியம் ஸ்மார்ட்போன் விலையில் ரூ.10,000 குறைக்கப்பட்டு தற்சமயம் ரூ.49,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சோனி எக்ஸ்பீரியா XZ பிரீமியம் மாடல் ரூ.59,990-க்கு அறிமுகம் செய்யப்பட்டது.

    இதேபோன்று எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.5000 குறைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ரூ.29,990-க்கு அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா XA1 அல்ட்ரா ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரூ.2000 குறைக்கப்பட்டு ரூ.27,990-ககு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.22,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்பீரியா XA1 பிளஸ் ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ.5000 குறைக்கப்பட்டு ரூ.19,990-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் எக்ஸ்பீரியா XA1 பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ.24,990 விலைக்கு அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

    சரியாக விற்பனையாகாத நிலையில், தயாரித்த ஸ்மார்ட்போன்களை விற்று தீர்க்க அதிரடி விலை குறைப்பை அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. சீன நிறுவனங்களை போன்று சோனியின் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் நிலையான இடத்தை பிடிக்காத நிலையில் புதிய விலை குறைப்பு விற்பனையை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சோனியின் எக்ஸ்பீரியா XZ2 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வரயிருக்கிறது. கடந்த மாதம் சோனி நிறுவனத்தின் எக்ஸ்பீரியா XZ2 பிரீமியம் ஸ்மார்ட்போன். இது டூயல் பிரைிமரி கேமரா கொண்ட சோனியின் முதல் ஸ்மார்ட்போன் ஆகும்.
    ×