என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 124289
நீங்கள் தேடியது "ரோமா"
ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் வரலாற்றிலேயே முதன்முறையாக இந்த ஆண்டு சிறந்த வெளிநாட்டு படமாக மெக்சிகோ நாட்டின் ரோமா திரைப்படம் பெற்றுள்ளது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #Roma #BestForgienFilm
லாஸ் ஏஞ்சல்ஸ்:
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 91-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.
இத்திரைப்படத்தில் கிளியோ எனும் கதாபாத்திரம், கியூரோனின் வீட்டில் பணிபுரிந்த லிபோரியாவின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த கதாப்பாத்திரத்தில் யலிட்சா அபராசியோ எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேலும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது வென்ற முதல் திரைப்படம் ஆகும்.
இவ்விருதினை பெற்ற கியூரோன் பேசுகையில், ‘வெளிநாட்டுப் படங்களை அதிகம் விரும்பி பார்ப்பதோடு, இவற்றை கற்றுக் கொண்டே வளர்ந்தேன். சிட்டிசன் கேன், ஜாஸ், ராஷ்மோன், தி காட்பாதர் மற்றும் ப்ரீத்லேஸ் போன்ற திரைப்படங்கள் எனக்கு உத்வேகமாக இருந்தன. இந்த விருதினை லிபோரியாவிற்கு சமர்ப்பிகிறேன்’ என்றார்.
மேலும் இந்த திரைப்படம் சிறந்த கோல்டன் குளோப், கிரிடிக்ஸ் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான பஃப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #Roma #BestForgienFilm

இந்த ஆண்டிற்கான சிறந்த வெளிநாட்டு மொழி படமாக மெக்சிகோ நாட்டின் ‘ரோமா’ திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் 1970களில், நடுத்தர பணிப்பெண்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இதுவே ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 8வது மெக்சிகன் திரைப்படம் ஆகும்.
இத்திரைப்படத்தில் கிளியோ எனும் கதாபாத்திரம், கியூரோனின் வீட்டில் பணிபுரிந்த லிபோரியாவின் உண்மைக் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும். இந்த கதாப்பாத்திரத்தில் யலிட்சா அபராசியோ எனும் அறிமுக நடிகை நடித்திருந்தார். இவர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். மேலும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியிடப்பட்ட திரைப்படங்களில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு விருது வென்ற முதல் திரைப்படம் ஆகும்.
இவ்விருதினை பெற்ற கியூரோன் பேசுகையில், ‘வெளிநாட்டுப் படங்களை அதிகம் விரும்பி பார்ப்பதோடு, இவற்றை கற்றுக் கொண்டே வளர்ந்தேன். சிட்டிசன் கேன், ஜாஸ், ராஷ்மோன், தி காட்பாதர் மற்றும் ப்ரீத்லேஸ் போன்ற திரைப்படங்கள் எனக்கு உத்வேகமாக இருந்தன. இந்த விருதினை லிபோரியாவிற்கு சமர்ப்பிகிறேன்’ என்றார்.
மேலும் இந்த திரைப்படம் சிறந்த கோல்டன் குளோப், கிரிடிக்ஸ் சாய்ஸ் திரைப்பட விருது மற்றும் சிறந்த வெளிநாட்டு மொழி படத்திற்கான பஃப்டா விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. #Oscars #Oscars2019 #OscarsAllAccess #Roma #BestForgienFilm
அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில் அகாடமி விருதை வென்ற திரைப்படங்கள், பிரபலங்கள் குறித்த முழு விவரத்தை இங்கே காணலாம். #Oscars #Oscars2019 #OscarsAllAccess
லாஸ் ஏஞ்சல்ஸ்:
ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. உலகமே உற்று நோக்கும் 91-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது. காலை சுமார் 7 மணியளவில் நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி விழா துவங்கியது.
இதில் போகிமியான் ராஃப்சோடி படம் அதிகபட்சமாக சிறந்த நடிகர் உட்பட நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. பிளாக் பேந்தர், ரோமா படங்கள் தலா 3 ஆஸ்கர் விருதுகளை வென்றன. கிரீன் புக் உள்ளிட்ட படங்கள் தலா 2 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளன.
போகிமியான் ராஃப்சோடி திரைப்படம் (4 விருதுகள்)
ஆஸ்கார் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:
சிறந்த படம் - கிரீன் புக்
சிறந்த இயக்குநர் - அல்போன்சோ குவாரோன் (ரோமா)
சிறந்த நடிகர் - ரமி மாலக் (போகிமியான் ராஃப்சோடி)
சிறந்த நடிகை - ஒலிவியா கோல்மேன் (த ஃபேவரைட்)
சிறந்த ஆவணப்படம் - எலிசபெத் சாய் வசர்ஹெலி, ஜிம்மி சின், இவான் ஹேஸ் மற்றும் ஷானன் டில் (ப்ரீ சோலோ)
சிறந்த வெளிநாட்டு படம் - ரோமா (மெக்ஸிகோ)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஸ்பைடர் மேன் - இன்டூ த ஸ்பைடர் வெர்ஸ்
சிறந்த திரைப்படத்திற்கான விருது வென்ற `கிரீன் புக்'
சிறந்த அனிமேஷன் குறும்படம் - பாவ்
சிறந்த ஆவண குறும்படம் - பீரியட். எண்ட் ஆப் சென்டன்ஸ்
சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் - ஸ்கின்
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - ஃபர்ஸ்ட் மேன்
சிறந்த ஒளிப்பதிவாளர் - அல்போன்சோ குவாரோன் (ரோமா)
சிறந்த படத்தொகுப்பாளர் - ஜான் ஓட்மேன் (போகிமியான் ராஃப்சோடி)
சிறந்த திரைக்கதை - நிக் வல்லலோங்கா, பிரெயன் கியூரி, பீட்டர் ஃபேரலி (கிரீன் புக்)
தழுவல் திரைக்கதை - சார்லி வச்டெல், டேவிட் ரேபினோவிட்ஸ், கெவின் வில்மோட் மற்றும் ஸ்பைக் லீ (பிளாக்கிளான்ஸ்மேன்)
சிறந்த வெளிநாட்டு படமாக விருது வென்ற `ரோமா'
சிறந்த பின்னணி இசை - லட்விக் கோரன்சான் (பிளாக் பேந்தர்)
சிறந்த பாடல் - ஷாலோ (எ ஸ்டார் இஸ் பார்ன்)
சிறந்த துணை நடிகர் - மஹர்ஷலா அலி (கிரீன் புக்)
சிறந்த துணை நடிகை - ரெஜினா கிங் (இஃப் ப்பீல் ஸ்ட்ரீட் குட் டாக்)
சிறந்த ஒப்பனை - கிரேக் கேனம், கேட் பிஸ்கோ மற்றும் பேட்ரிசியா டெஹானி (வைஸ்)
ஆடை வடிவமைப்பு - ரூத் கார்டர் (பிளாக் பேந்தர்)
தயாரிப்பு வடிவமைப்பு - ஹன்னா பீச்லெர் (பிளாக் பேந்தர்)
சிறந்த ஒலி படத்தொகுப்பு - ஜான் வார்ஹஸ்ட் மற்றும் நினா ஹார்ட்ஸ்டோன் (போகிமியான் ராஃப்சோடி)
ஒலி கோர்ப்பு - பால் மேஸ்சி, டிம் கேவஜின், ஜான் கேசலி (போகிமியான் ராஃப்சோடி)
#Oscars #Oscars2019 #OscarsAllAccess
இத்தாலி லீக் டைட்டிலான செரி ஏ-வை 7-வது முறையாக யுவான்டஸ் கைப்பற்றி சாதனைப் படைத்துள்ளது. #SerieA #Juventus
இத்தாலியில் நடைபெறும் முன்னணி கால்பந்து லீக் ‘செரி ஏ’. 2017-18 ‘செரி ஏ’ சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டைட்டிலை தட்டிச் செல்வதில் யுவான்டஸ், நபோலி அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
நேற்று நடைபெற்ற 37-வது லீக்கில் யுவான்டஸ் பலமான ரோமா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டி டிராவில் முடிந்தது. அதேவேளையில் நபோலி 2-0 என சாம்ப்டோரியாவை வீழ்த்தியது. என்றாலும் யுவான்டஸ் 92 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், நபோலி 88 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளது. கடைசி லீக்கில் தோற்றாலும் யுவான்டஸ் அணிக்கு பிரச்சனை இல்லை என்பதால், ‘செரி ஏ’ டைட்டிலை வெல்வது உறுதியாகிவிட்டது.
இதன்மூலம் யுவான்டஸ் தொடர்ச்சியாக 7-வது முறை ‘செரி ஏ’ டைட்டிலை வென்று சாதனைப் படைத்துள்ளது. அத்துடன் இத்தாலியில் நடைபெறும் கால்பந்து கிளப்பிற்கு இடையிலான கோப்பையையும் வென்றது. இதன்மூலம் தொடர்ச்சியாக இரண்டு கோப்பையையும் நான்கு முறை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் யுவான்டஸ் பெற்றுள்ளது.

×

X