search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொகுதிகள்"

    அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார்? என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParliamentElection #BJP #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. தே.மு.தி.க. உள்ளிட்ட சில கட்சிகள் இன்னும் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுவதால், கூட்டணி பேச்சுவார்த்தை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    ஆனால், அதே நேரத்தில் மற்றொரு புறம் யார் யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என்ற பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகளில், 6 தொகுதிகள் எவை என்பது கண்டறியப்பட்டுவிட்டன. அதற்கு பா.ம.க.வும் சம்மதம் தெரிவித்துவிட்டது. ஒரு தொகுதி மட்டும் தான் எது என்பது பேச்சுவார்த்தையில் உள்ளது.

    அதேபோல், அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ஜ.க.வுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, கோவை, வடசென்னை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆனால், இதில் வடசென்னை தொகுதியை பா.ஜ.க. விரும்பவில்லை. அதற்கு மாற்றாக திருப்பூர் அல்லது தஞ்சாவூர் தொகுதியை அந்த கட்சி கேட்டு வருகிறது.



    அதே நேரத்தில், 4 தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் யார் என்பதும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. கன்னியாகுமரி தொகுதியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும், தூத்துக்குடியில் மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனும், சிவகங்கையில் தேசிய செயலாளர் எச்.ராஜாவும், கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணனும் போட்டியிட இருப்பதாக தெரிகிறது.

    மேலும், பா.ஜ.க.வுக்கு திருப்பூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனும், தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டால் பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தமும் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது. எனவே, அ.தி.மு.க - பா.ஜ.க. இடையே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடக்கிறது. #ParliamentElection #BJP #ADMK
    பாராளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டதையடுத்து, தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாமக கொடுத்துள்ளது. #LSPolls #ADMK #PMKConstituencies
    சென்னை:

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு மொத்தம் 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது 7 மக்களவைத்  எம்.பி. தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான இடத்தையும் அதிமுக ஒதுக்கி கொடுத்துள்ளது.

    முன்னதாக பா.ம.க. கேட்ட சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க அ.தி.மு.க. தரப்பில் தயக்கம் காட்டப்பட்டது. இதையடுத்து பா.ம.க. தலைவர்களில் சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி சேருவதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார்கள். ஆனால், தொகுதிகள் விஷயத்திலும், திமுக விதித்த நிபந்தனைகளாலும் பேச்சுவார்த்தையை தொடங்குவதில் பாமக தயக்கம் காட்டிவந்தது.

    இதை அறிந்த அ.தி.மு.க-பா.ஜனதா தலைவர்கள் உடனே பா.ம.க.வை கூட்டணிக்குள் இழுக்கும் பணிகளை தொடங்கினர்.

    “நீங்கள் கேட்கும் தொகுதிகளை தருகிறோம். செலவையும் பார்த்துக் கொள்கிறோம்” என்று அ.தி.மு.க.-பா.ஜனதா தரப்பில் இருந்து பா.ம.க.வுக்கு உறுதி அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணியில் இன்று பா.ம.க. ஐக்கியமாகி உள்ளது.



    அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 1 மாநிலங்களவை எம்.பி. இடம் மற்றும் 7 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து தங்களுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் பட்டியலையும் அ.தி.மு.க.விடம் பா.ம.க. தலைவர்கள் கொடுத்தனர். அதில் பா.ம.க. மொத்தம் 8 தொகுதிகளை குறிப்பிட்டுள்ளது. அந்த 8 தொகுதிகள் விவரம் வருமாறு:-

    1. ஸ்ரீபெரும்புதூர்

    2. மத்திய சென்னை

    3. கடலூர்

    4. அரக்கோணம்

    5. கள்ளக்குறிச்சி

    6. விழுப்புரம்

    7. திருவள்ளூர்

    8. காஞ்சீபுரம்

    இந்த 8 தொகுதிகளில் இருந்து 7 தொகுதிகளை ஒதுக்கி தர பா.ம.க. தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளை விட்டுக்கொடுக்க முன்வந்துள்ள அ.தி.மு.க. அந்த 7 தொகுதிகளில் ஒரு தனி தொகுதியையும் ஒதுக்க முடிவு செய்துள்ளது. அதை பா.ம.க. ஏற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இன்னும் ஓரிரு தினங்களில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்படும் 7 தொகுதிகள் என்னென்ன என்பது தெரிந்து விடும். #LSPolls #ADMK #PMKConstituencies
    பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்காக மாயாவதி கட்சியுடன் கூட்டணியைத் தொடரவும், சில தொகுதிகளை விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது. #Akhilesh #UPAlliance
    ஆக்ரா:

    உத்தர பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளன. பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு மூன்றாவது அணி அமைக்கும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இது புதிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. உ.பி. இடைத்தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகள் கூட்டு சேர்ந்து பா.ஜ.க.வை வீழ்த்தியது.

    இதேபோல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலிலும் பா.ஜ.க.வை வீழ்த்துவதற்கு சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகி உள்ளன. இதற்காக சில தொகுதிகளை பகுஜன் சமாஜ் கட்சிக்கு விட்டுக்கொடுக்கவும் சமாஜ்வாடி கட்சி முன்வந்துள்ளது.

    இதுபற்றி சமாஜ்வாடி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

    பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி தொடரும். பா.ஜ.க.வின் தோல்வியை உறுதி செய்வதற்காக நாங்கள் 2 முதல் 4 தொகுதிகள் வரை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தால், அதனையும் செய்வோம். இந்த முடிவில் இருந்து பின்வாங்க மாட்டோம்.

    சமீபத்தில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்த எங்கள் மெகா கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரச்சாரம் செய்த தொகுதியில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது. கடைசியாக நடந்த 4 இடைத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்துள்ளது. முக்கிய தொகுதியான கைரானா மக்களவை தொகுதி, நூபூர் சட்டமன்றத் தொகுதியை சமீபத்தில் இழந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.



    கூடுதல் இடங்கள் கொடுத்தால் மட்டுமே பிற கட்சிகளுடன் கூட்டணி வைப்போம் என்று மாயாவதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. #Akhilesh #UPAlliance
    ×