search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 124470"

    • இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார்.
    • அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது.

    மேட்டுப்பாளையம்

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிக்காரம்பாளையம் ஊராட்சி உள்ளது. ஊராட்சி தலைவராக ஞானசேகரன் செயல்பட்டு வருகிறார்.

    இவர் ஊராட்சியிலுள்ள இளைஞர்களின் கல்வி திறனை ஊக்குவிக்கவும், விளையாட்டு திறனை அதிகரிக்கவும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறார். இதன் ஒருகட்டமாக அரசு பள்ளியில் படித்து வரும் மாணவர்கள் விமானத்தில் பயணம் செய்வது என்பது கனவாக மட்டுமே இருந்துள்ளது. இதனை நிறைவேற்றும் விதமாக சிக்காரம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கண்ணார்பாளையம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் உள்பட மொத்தம் 110 பேரை கொரோனா பேரிடர் காலத்திற்கு முன்பு கோவையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.

    இதனை தொடர்ந்து மீண்டும் கடந்த வாரம் அவர் அதே பள்ளி மாணவர்களுடன், பெற்றோரையும் கோவை முதல் சென்னை வரை 110 பேரை விமானத்தில் அழைத்து சென்று வந்தார்.

    சென்னையில் மெட்ரோ ரெயில், எலக்ட்ரிக் ரெயில் உள்ளிட்டவற்றிலும் அவர்களை அழைத்து மகிழ்ச்சிப்படுத்தினார். விமானத்தில் மாணவர்களுடன் சென்ற ஆசிரியர்கள் செல்பி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதனை பார்த்த அனைத்து தரப்பு மக்களும் பாராட்டி வருகின்றனர்.

    இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் அரசு பள்ளிகளில் படிக்கும் எங்களுக்கு எவ்வளவோ கனவுகள் உண்டு. இதில் எங்கள் பள்ளிகளுக்கு வரும் சில தன்னார்வலர்கள் எங்களுக்கு புத்தாடை நோட்டு, புத்தகம் மற்றும் கல்வி உதவித்தொகைகளை வழங்கி வந்தனர். ஆனால் சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் எங்களுக்கு அனுபவ ரீதியாக எது தேவையோ அதை செய்து வருகிறார். இதில் நாங்கள் விமானத்தில் சென்று வந்தது புது அனுபவமாக இருந்ததாக கூறினர்.

    இதுகுறித்து சிக்காரம்பாளையம் ஊராட்சி தலைவர் ஞானசேகரன் கூறுகையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் இன்று அரசியல் தலைவர்களாகவும், பெரிய பதவிகளிலும் உள்ளனர். இன்றைய சூழலில் பெற்றோர்களிடையே தனியார் கல்வி பள்ளிகளில் படிக்க வைப்பதையே பெருமையாக உள்ளனர். ஆனால் அரசு பள்ளிகளில் தனியார் பள்ளிகளை காட்டிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களை சிறிதளவு ஊக்குவித்தால் இப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் திறமைகள் இன்னும் அதிகரிக்கும் என்றார்.

    அடுத்த கட்டமாக வரும் செப்டம்பர் மாதம் முதல் சனிக்கிழமை மீண்டும் வெள்ளியங்காடு, காரமடை அரசு பள்ளிகளில் சிறந்து முறையில் படித்து வரும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் கோவையில் இருந்து சென்னை வரை விமானத்தில் அழைத்து செல்ல உள்ளதாக அவர் தெரிவித்தார். 

    • திருச்சி விமான நிலையத்தில் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்
    • குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வருபவர்களை

    திருச்சி:

    தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க திருச்சி, சென்னை, கோவை, மதுரை ஆகிய சர்வதேச விமான நிலையங்களில் மக்கள் நல்வாழ்வுதுறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் பதவியதாக கண்டறியப்பட்ட 23 நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடம் மாதிரி எடுத்து தீவிர சோதனைக்குபட்படுத்த உத்தவிடப்பட்டுள்ளது.

    அதன்படி, துபை, சிங்கப்பூர், அபுதாபி, கத்தார், இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம் ஐசிஎம்ஆர் அறிவுத்தல்படி மத்திய,  மாநில அரசு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முன்னேற்பாடாக குரங்கு அம்மை நோயாளிக்கு சிகிச்சை அளிக்க திருச்சி அரசு மருத்துவமனையில் 8 படுக்கைகளுடன் தனி வார்டு தயார் நிலையில் உள்ளது.

    இது குறித்து மாநில மருத்துவ குழுவின் ஒருங்கிணைப்பாளராக உள்ள மருத்துவர் கூறுகையில், வெ ளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு தினமும் 700 பேருக்கு மேல் வருகின்றனர். அதிகளவில் அரபு நாடுகளில் இருந்து திருச்சிக்கு வருவதால் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதில் மத்திய, மாநில அரசு உத்தரவுப்படி 2 சதவீதம் பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக் குட்படுத்தப்படுகிறது என்றார்.

    தற்கொலைபடை தாக்குதல் நடத்தும் மிகச்சிறிய அளவிலான ஆளில்லா விமானங்களை ரஷிய நிறுவனம் தயாரித்துள்ளது. #suicidesquads

    மாஸ்கோ:

    ரஷியாவை சேர்ந்த கலாஸ்னி கோவ் நிறுவனம் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை கண்டுபிடித்து சாதனை படைத்தது. அதைத் தொடர்ந்து தற்போது தற்கொலைபடை தாக்குதல் நடத்தும் மிகச்சிறிய அளவிலான ஆளில்லா விமானங்களை தயாரித்துள்ளது.

    இதற்கு ‘கே.யூ.மி-யூ.ஏ.வி.’ என பெயரிடப்பட்டுள்ளது. 4 அடி அகலம் கொண்ட இந்த ஆளில்லா விமானம் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் 30 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும் திறன் கொண்டது.

    இது 40 மைல் தூரத்துக்கு சுமார் 2½ கிலோ எடையுள்ள குண்டுகளை சுமந்து சென்று வீசும் சக்தி படைத்தது. தற்கொலை படை ஆளில்லா விமானங்கள் அபுதாபியில் நடந்த ராணுவ கண்காட்சியில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

    இந்த வகை விமானத்துக்கு பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பயங்கரவாதிகள் மற்றும் அரசுக்கு எதிராக போராடுபவர்கள் இவற்றை வைத்து வெடி குண்டு தாக்குதல் போன்ற நாச வேலைகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படும். எனவே இதை புழக்கத்தில் விடக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது. #suicidesquads

    செயல்பாட்டு காரணங்கள், மோசமான வானிலை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. #FlightsDelayed
    மும்பை:

    மும்பை உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிர் வாட்டி வதைக்கிறது. கடந்த சில தினங்களாக பனிப்பொழிவு மற்றும் பனிமூட்டமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. விடிந்து வெகுநேரம் ஆகியும் பனி விலகாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சாலையில் வாகனங்களை இயக்குகின்றனர். 

    இந்நிலையில் மோசமான வானிலை, செயல்பாட்டு காரணங்கள், விமானிகள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புறப்படும் 8 விமானங்கள், ஐதராபாத்தில் இருந்து புறப்படும் 6  விமானங்கள் , ஜெய்பூரில்  இருந்து புறப்படும் 3 விமானங்கள் கடந்த சனிக்கிழமை அன்று ரத்து செய்யப்பட்டன. 

    இதேபோல் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இண்டிகோ நிறுவனத்தின் 30 விமானங்கள் இன்று ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது. 

    மேலும் ஒரு வருடத்திற்கு 1,000 மணி நேரத்திற்குமேல் ஒரு விமானி செயல்பட இயலாது என்பதால், விமானிகளுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இது இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவையில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    விமான சேவையை மீண்டும் தொடர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடந்த வெள்ளி அன்று கடுமையான ஆலங்கட்டி மழை பெய்ததால் 11 விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. #FlightsDelayed
    இலங்கை அரசு விமானத்தில் தனக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரியை நாய் கூட சாப்பிடாது என இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். #SriLankaAirlines
    கொழும்பு:

    சமீபத்தில் நேபாளத்தில் நடந்த பிம்ஸ்டெக் மாநாட்டை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பிய இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனாவுக்கு வழங்கப்பட்ட உணவில் இருந்த முந்திரி தரம் குறைந்ததாக இருந்துள்ளது. இதனை குறிப்பிட்டு, ‘விமானத்தில் வழங்கப்பட்ட முந்திரியை நாய் கூட சாப்பிடாது’ என அவர் கூறியிருந்தார்.

    மேலும், விமான நிறுவனத்திற்கு முந்திரிகள் சப்ளை செய்தது யார்? என்ற விசாரணைக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார். இதனை அடுத்து, இலங்கை விமானங்களில் முந்திரி கொடுக்கப்படுவது நிறுத்தப்பட்டது. துபாயை சேர்ந்த சப்ளையருக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.
    அமெரிக்காவில் குரோயிஸ் நகருக்கு சென்ற உள்நாட்டு விமானத்தில் பயணி ஒருவர் பீர் கேட்டு தர மறுத்த ஆத்திரத்தில் பிளேடால் உடலை கிழித்து கொண்ட சம்பவம் மற்ற பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    நியூயார்க்:

    அமெரிக்காவில் உள்நாட்டு பயணிகள் விமானம் செயின்ட் குரோயிஸ் நகருக்கு புறப்பட்டு சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர்.

    அதில் பயணம் செய்த ஜேசன் பெலிஸ் என்ற பயணி பணிப்பெண்ணிடம் குடிக்க ‘பீர்’ கேட்டார். அவரும் கொடுத்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் மற்றொரு ‘பீர்’ கேட்டார்.

    போதை அதிகமானதால் தர அவர் மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் கூச்சலிட்டார். பின்னர் பாத்ரூம் சென்ற அவர் வெளியே வராமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து இருக்கையில் அமர வைத்தனர். ஆனால் அவர் தனது அருகில் அமர்ந்து இருந்தவரின் மடியில் உட்கார்ந்து கொண்டு தகராறு செய்தார்.

    அவரை விமான ஊழியர்களும், சக பயணிகளும் கட்டுப்படுத்த முயன்றனர். ஒரு கட்டத்தில் அவர் பிளேடால் தனது உடலை கிழித்து கொண்டார். இதனால் ரத்தம் கொட்டியது.

    இதற்கிடையே விமானம் செயின்ட் குரோயிஸ் நகரை வந்தடைந்தது. இது குறித்த தகவல் ஏற்கனவே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து விமான நிலையத்துக்குள் வந்த போலீசார் அவரை கைது செய்தனர்.
    ×