search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீரர்கள்"

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து அளிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். #RahulGandhi #Martyrs #Soldier
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் பலியான சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து டுவிட்டர் செய்தி வெளியிட்டார். அதில், 40 வீரர்கள் தங்கள் இன்னுயிரை இழந்து உள்ளனர். ஆனால் அவர்களுக்கு தியாகி அந்தஸ்து அளிக்கப்படவில்லை என ஆதங்கம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் டெல்லியில் மாணவர்களிடையே ராகுல் காந்தி நேற்று கலந்துரையாடிய போது இது குறித்து ஒரு மாணவர் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்து ராகுல் காந்தி கூறுகையில், ராணுவ வீரர்கள், துணை ராணுவ படை வீரர்கள் உள்ளிட்டோர் பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங் களில் தங்கள் உயிரை இழக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு உரிய ஆதரவு கிடைப்பதில்லை. இது வேதனை அளிக்கிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு தியாகி அந்தஸ்து அளிக்கப்படும் என தெரிவித்தார்.
    தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட புல்வாமா மாவட்டத்தில் இன்று நடந்த துப்பாக்கி சண்டையில் 4 வீரர்கள் உயிரிழந்தனர். #PulwamaEncounter
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த வாரம் வியாழக்கிழமை ஜெஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு நடத்திய, தற்கொலைத் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கூறி வருகின்றனர்.

    எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலை முறியடிக்க ராணுவம் பதிலடி கொடுக்கும் என அரசும் கூறியுள்ளது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத சக்திகளை வேட்டையாடும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.



    இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தின் பிங்லன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று காலை அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த சண்டையில் ராணுவ மேஜர் உள்ளிட்ட 4 வீரர்கள் உயிரிழந்தனர். ஒருவர் காயமடைந்துள்ளார். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. #PulwamaEncounter
    புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மவுன ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது. #PulwamaAttack #Peoplepaytribute
    ஜம்மு:

    காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் மீது ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி நேற்று முன்தினம் நடத்திய கொடூர தாக்குதலில் 40 வீரர்கள் பலியாகினர். பலியான வீரர்களின் உடல்கள் நேற்று இரவு விமானம் மூலம் டெல்லி கொண்டு வரப்பட்டன.

    பாலம் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாரமன், உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முப்படை தளபதிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். அதன்பின்னர் வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வீரர்களின் உடல்களுக்கு அந்தந்த மாநில தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.



    இந்த தாக்குதல் சம்பவம் மக்களிடையே கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உயிர்நீத்த வீரர்களுக்கு நாடு முழுவதும் இரங்கல் மற்றும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலமும் நடத்தி வருகின்றனர்.

    உயிர்நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஜம்மு காஷ்மீரின் லே பகுதியில் லடாக் புத்த சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

    வீரர்களின் யாத்திரையில் பா.ஜ.க. ஆளும் மாநிலங்களை சேர்ந்த மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அதன்படி அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், வீரர்களின் இறுதி யாத்திரைக்காக சென்றுள்ளனர். #PulwamaAttack #Peoplepaytribute

    கடைசி 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் நாளை (சனிக்கிழமை) சென்னை வந்து சேருகிறார்கள். #IndianCricketTeam #INDvWI
    சென்னை:

    இந்தியா-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் கடந்த 6-ந் தேதி நடந்த 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 71 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த போட்டி முடிந்ததும் தீபாவளி கொண்டாட்டத்துக்காக இந்திய அணி வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். 

    வெஸ்ட்இண்டீஸ் அணியினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்து சேர்ந்தனர். நேற்று ஓய்வு எடுத்த வெஸ்ட்இண்டீஸ் அணி வீரர்கள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். கடைசி 20 ஓவர் போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் நாளை (சனிக்கிழமை) சென்னை வந்து சேருகிறார்கள். வீரர்கள் தனித்தனியாக வந்து இணைவார்கள் என்று தெரிகிறது.  #IndianCricketTeam #INDvWI

    ஆசிய விளையாட்டில் சாதித்த தமிழகத்தை சேர்ந்த வீரர்கள், பயிற்சியாளருக்கு ரூ.1¼ கோடி ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். #AsianGame #EdappadiPalaniswami
    சென்னை:

    இந்தோனேஷியாவில் சமீபத்தில் நடந்த 18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீரர், வீராங்கனைகளுக்கு ஏற்கனவே முதற்கட்டமாக ஊக்கத்தொகை வழங்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2-வது கட்டமாக மேலும் சில வீரர்களுக்கும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    ஆசிய விளையாட்டில் கலப்பு தொடர் ஓட்டம் மற்றும் ஆண்கள் தொடர் ஓட்டம் ஆகியவற்றில் வெள்ளிப்பதக்கங்கள் கைப்பற்றிய ஆரோக்ய ராஜீவுக்கு ரூ.60 லட்சம், பெண்களுக்கான ஸ்குவாஷ் அணிகள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற சுனைனா குருவில்லாவுக்கு ரூ.30 லட்சம், டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற பிரஜ்னேஷ் குணேஸ்வரனுக்கு ரூ.20 லட்சம், மேலும் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளின் பயிற்சியாளர்களான அஞ்சன் சின்னப்பா, டிம்பிள் மதிவாணன் மற்றும் அமிஷ்வேத் ஆகியோருக்கு ரூ.18 லட்சம் என்று மொத்தம் ரூ.1 கோடியே 28 லட்சத்திற்கான காசோலைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட மருந்து மற்றும் ஊசிகளை பயன்படுத்தக்கூடாது என இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. #IndianAsianGames #NoNeedlePolicy #OlympicCouncil
    புதுடெல்லி:

    ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18-ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி இந்திய ஒலிம்பிக் சங்கம் சார்பில், நமது நாட்டில் உள்ள அனைத்து தேசிய விளையாட்டு சம்மேளனங்களும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.



    அதில், ‘வீரர்கள் தனிப்பட்ட முறையில் ஊசிகளை வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது என்ற ஒலிம்பிக் கமிட்டியின் விதிமுறையை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’ என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ‘ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தடை செய்யப்பட்ட பட்டியலில் இடம் பெற்றுள்ள மருந்துகளை எக்காரணத்தை கொண்டும் வீரர்கள் யாரும் எடுத்து கொள்ளக்கூடாது. இந்த விஷயத்தில் தேசிய விளையாட்டு சம்மேளனங்களின் நிர்வாகிகள் கவனம் செலுத்தி நாட்டுக்கு தர்மசங்கடம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    உடல் நலக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு டாக்டர்களால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து மற்றும் ஊசி தேவையெனில், விளையாட்டு கிராமத்தில் உள்ள இந்திய ஒலிம்பிக் சங்க அலுவலகத்தில் வைத்துக்கொள்ளலாம். அதனை உரிய முன் அனுமதி பெற்று பயன்படுத்தலாம்’ என்றும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊசி மூலம் ஊக்க மருந்து பயன்படுத்த வாய்ப்பு இருப்பதால், அதனை யாரும் விதிமுறைக்கு புறம்பாக பயன்படுத்துவதை தடுக்க ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தீவிரமாக கண்காணிக்க முடிவு செய்துள்ளது.  #IndianAsianGames #NoNeedlePolicy #OlympicCouncil
    பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் துணை ராணுவ படையைச் சேர்ந்த 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். #ISattack #pakistanisoldierskilled
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் அதிகப்படியான வளங்களை ஒதுக்கக்கோரி சமீபகாலமாக கிளர்ச்சியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று மஸ்தூங் நகரின் எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த துணை ராணுவ வீரர்கள் மீது பயங்கர ஆயுதங்களுடன் வந்த ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படை வீரர்களுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஐஎஸ் அமைப்பின் தொடர்புடைய இணையதளத்தில் முகமது அல் குரசானி, ரித்வான் அல் குரசானி ஆகிய 2 பயங்கரவாதிகளே இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #ISattack #pakistanisoldierskilled
    ×