search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயங்கரவாதம்"

    ராஜஸ்தானில் இன்று உரையாற்றிய பிரதமர் மோடி, எல்லைப்பகுதியில் உள்ள வீரர்கள் மீதும் மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். உரிய நேரத்தில் எல்லா கணக்கையும் தீர்த்து விடலாம் என குறிப்பிட்டார். #Peacenotpossible #Modi
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார்.

    சமீபத்தில் புல்வாமா தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்ததை குறிப்பிட்டு பேசிய மோடி, பயங்கரவாதம் தொடரும்வரை உலகில் அமைதி நிலவும் சாத்தியம் இல்லை என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து அவர் பேசியதாவது:-

    பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் பலத்துடன் நாம் முன்னேறி வருகிறோம். இன்று பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்ட மனநிலை உருவாகியுள்ளது.

    ஜம்மு-காஷ்மீரில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தியா மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகமும் உங்களுடன் உள்ளது என்று புல்வாமா தாக்குதலில் தங்களது உறவினரை இழந்து தவிக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த வீரர்களின் குடும்பத்தாருக்கு நான் உறுதி அளிக்கிறேன்.



    நமது எல்லையில் காவல் இருக்கும் வீரர்கள் மீது நம்பிக்கை வையுங்கள். பவானி மாதா மீது நம்பிக்கை வையுங்கள். மோடி அரசின் மீதும் நம்பிக்கை வையுங்கள். இந்த முறை எல்லா கணக்கையும் உரிய நேரத்தில் தீர்த்து விடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார். #Peacenotpossible #ifterrorismcontinues #Peaceintheworld  #Modi
    பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது. பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் என சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree
    புதுடெல்லி:

    சவுதி அரேபியா நாட்டின் பட்டத்து இளவரசர் முஹம்மது பில் சல்மான் இருநாள் அரசுமுறை பயணமாக நேற்றிரவு டெல்லி வந்தார். இன்று காலை ஜனாதிபதி மாளிகையில் முப்படையினரின் அணிவகுப்புடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.



    பின்னர், வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருடன் சவுதி இளவரசர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதனைதொடர்ந்து, இருநாடுகளின் பிரதிநிதிகள் இந்தியா-சவுதி அரேபியா இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்போது சுற்றுலா, ஒளிபரப்பு உள்ளிட்ட 5 துறைகள் சார்ந்த முக்கிய ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.

    இந்த ஒப்பந்தத்தையடுத்து, சவுதி இளவரசரும் பிரதமர் மோடியும் செய்தியாளர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர்.

    புல்வாமா தாக்குதலை சுட்டிக்காட்டி பேசிய மோடி, பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்கு சவுதி அரேபியா ஆதரவு தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டார்.

    சர்வதேச சூரிய ஆற்றல் கூட்டமைப்பில் இணைய சம்மதம் தெரிவித்துள்ள சவுதி அரசை வரவேற்பதாகவும் இந்தியா-சவுதி இடையிலான ராணுவ கூட்டுறவை பலப்படுத்துவது தொடர்பாக இன்று நடந்த பேச்சுவார்த்தை பயனுள்ள வகையில் அமைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    பின்னர் பேசிய இளவரசர் முஹம்மது பின் சல்மான், ‘தீவிரவாதமும் பயங்கரவாதமும் நமது பொதுவான பிரச்சனைகளாக இருந்து வருகின்றன. பயங்கரவாதத்தை வேரறுக்க உளவுத்தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்து வகையிலும் எங்களது நட்புநாடான இந்தியாவுக்கு சவுதி அரேபியா உறுதுணையாக இருக்கும். வருங்கால தலைமுறையினரின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய உங்களுடன் ஒன்றிணைந்து நாங்கள் செயலாற்றுவோம்’ என்று உறுதியளித்தார்.

    பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதும், தண்டிப்பதும் முக்கியமானது என்னும் இந்தியாவின் நிலைப்பாட்டை சவுதி அரேபியா ஆதரிக்கின்றது. இந்தியாவில் பயங்கரவாதத்தை வேரறுக்க துணையாக இருப்போம் எனவும் சவுதி இளவரசர் தெரிவித்தார். #Modi #SaudiPrince #IndiaSaudiagree 
    காஷ்மீரில் பேஸ்புக் மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டிய பெண்ணை உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். #KashmiriWoman #Militancy #Facebook
    ஸ்ரீநகர்:

    காஷ்மீர் மாநிலம் பண்டிபோரா மாவட்டத்தை சேர்ந்த, 2 குழந்தைகளுக்கு தாயான சாஷியா என்கிற பெண் ‘பேஸ்புக்’ மூலம் இளைஞர்களை பயங்கரவாதத்துக்கு தூண்டுவதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சாஷியாவின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணித்து வந்த உளவுத்துறை அதிகாரிகள் அவருடைய ‘பேஸ்புக்’ கணக்கை முடக்கி அவரை கைது செய்தனர்.

    அவருடைய வீட்டில் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த வழக்கு தொடர்பாக சாஷியாவின் சகோதரர்கள் 2 பேரையும் உளவுத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், சாஷியா தனது ‘பேஸ்புக்’ மூலம் ஜெய்ஷ்-இ-முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளில் சேரவும், ஆயுதங்களை வாங்கவும் இளைஞர்களுக்கு அழைப்புவிடுத்து வந்தது தெரியவந்தது.

    மேலும் அவரிடம் இருந்து அனந்த்நாக் மாவட்டத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் சமீபத்தில் ஆயுதங்கள் வாங்கி சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

    சாஷியாவுக்கு பயங்கரவாத இயக்கத்தின் தளபதிகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றி உளவுத்துறை அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  #KashmiriWoman #Militancy #Facebook 
    காஷ்மீரில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரித்தால் வேறு விதமான பதிலடி தரப்படும் என்று பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி பிபின் ராவத் கடும் எச்சரிக்கை விடுத்தார். #ArmyChief #BipinRawat
    புதுடெல்லி:

    காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தரும் விதமாக பாதுகாப்பு படையினர் மீது இளைஞர்கள் தினமும் கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் அனந்த்நாக் மாவட்டத்தில் நடந்த கல்வீச்சில் 22 வயது ராஜேந்திர சிங் என்னும் படை வீரர் பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இதையடுத்து ராணுவ தளபதி பிபின் ராவத் டெல்லியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்து வருகின்றன. இப்படி கல்வீசி தாக்குதல் நடத்துவதால் எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை. இதுபோல் தாக்குதல் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்வீச்சில் ஈடுபடுவோர் மீது ராணுவம் வழக்கும் பதிவு செய்யும்.

    அதேபோல் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஆதரிப்பதை இஸ்லாமாபாத் (பாகிஸ்தான்) நிறுத்திக்கொள்ளவேண்டும். 1971-ம் ஆண்டு நம்மிடம் போரில் தோற்றதன் காரணமாக நமது அண்டை நாடு தொடர்ந்து பனிப்போரில் ஈடுபட்டு வருகிறது.


    சட்ட ரீதியாக காஷ்மீர் இந்தியாவின் ஒரு அங்கம். அதை யாரும் எடுத்துக்கொள்ள அனுமதிக்க மாட்டோம்.

    காஷ்மீரில் பயங்கரவாதிகள் ஊடுருவலை பாகிஸ்தான் ஆதரிக்கிறது. அதை நாமும் முறியடிக்கிறோம். அதேநேரம் பாகிஸ்தான் தொடர்ந்து இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வந்தால் வேறு விதமான பதிலடி தரவேண்டியது வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆனால் அது எந்த மாதிரியான நடவடிக்கையாக அமையும் என்பது பற்றி ராணுவ தளபதி நேரடியாக குறிப்பிடவில்லை.

    எனினும் 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து நடத்திய துல்லிய தாக்குதல் நடத்தியது போன்ற நடவடிக்கையாக அது இருக்கலாம் என்று கருதப்படுகிறது. #ArmyChief #BipinRawat

    அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என ஐநா பொதுசபை கூட்டத்தில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் கேட்டுக்கொண்டார். #SushmaSwaraj #UNGA
    நியூயார்க்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐ.நா. சபையின் பொதுக்கூட்டம் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் ஐ.நா. பொதுச்சபையின் 73-வது கூட்டம் இன்று தொடங்கியது.

    இதில் இந்திய வெளியுறவு துறை மந்திரி சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றுள்ளார். அங்கு நெல்சன் மண்டேலா அமைதி உச்சிமாநாட்டில் பேசிய அவர், இந்தியாவுக்கும், தென் ஆப்பிரிக்காவுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக கூறினார். இந்திய அரசாங்கம் மண்டேலாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்கி கெளரவித்ததை அவர் சுட்டிக்காட்டினார். மேலும் காந்தியடிகளும், மண்டேலாவும் அமைதி வழியில் பொதுமக்கள் விடுதலைக்காக  போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.



    பயங்கரவாதத்தால் ஏற்படும் பாதிப்புகளை விவரித்த அமைச்சர் சுஷ்மா, எந்த வகையிலும்  பயங்கரவாதத்தை ஆதரிக்கக் கூடாது, அனைவரும் ஒன்றிணைந்து பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்று அவர்  கேட்டுக்கொண்டார். பயங்கரவாதம் மற்றும் வெறுப்புணர்வுக்கு எதிராக சர்வதேச தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு, நமது சந்ததியினருக்கு சிறந்த உலகை உருவாக்குவோம் என்றும் அவர் பேசினார்.

    இந்த கூட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி வரை நடைபெறுகிறது. #SushmaSwaraj #UNGA
    இந்தியாவுக்கு எதிரான எவ்வித பயங்கரவாத செயலுக்கும் வங்காளதேசம் மண்ணில் அனுமதி இல்லை என அந்நாட்டின் உள்துறை மந்திரி இன்று தெரிவித்துள்ளார். #terroristactivities #againstIndia
    டாக்கா:

    3 நாள் அரசு முறை பயணமாக வங்காளதேசம் நாட்டுக்கு வந்துள்ள உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருநாடுகள் இடையிலான பல்வேறுகட்ட உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இருநாடுகளுக்கு இடையில் புதிய ஒப்பந்தங்களும் கையொப்பமானது.

    வங்காளதேசம் உள்துறை மந்திரி அசாதுஸ்ஸமான் கான் மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்ற இந்தியா - வங்காளதேசம் உள்துறை மந்திரிகள் இடையிலான ஆறாவது உயர்மட்ட ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. 

    பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை, எல்லை பாதுகாப்பு மற்றும் எல்லை பராமரிப்பு, கள்ளநோட்டு நடமாட்டம், போதைப்பொருள் கடத்தல், ஆள்கடத்தல், ரோஹிங்கியா அகதிகள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டது.

    பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அசாதுஸ்ஸமான் கான், நமது நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிக்கும் வகையில் பல்வேறு உளவு தகவல்களை இந்தியா பரிமாறி வருவதாக குறிப்பிட்டார்.

    பயங்கரவாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்ற நமது கொள்கையின் அடிப்படையில்  இந்தியாவுக்கு எதிரான எவ்வித பயங்கரவாத நடவடிக்கைக்கு நமது நாட்டு மண்ணை யாரும் பயன்படுத்த அனுமதி அளிக்க மாட்டோம் எனவும் அவர் தெரிவித்தார். #terroristactivities #againstIndia 
    பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் விஷயத்தில் பா.ஜ.க. அரசு எந்தவித சமரசமும் செய்துகொள்ளாது என மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் கூறினார். #KashmirCeasefire #JitendraSingh
    ஜம்மு:

    மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் ஜம்முவில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பயங்கரவாதம் மற்றும் காஷ்மீர் பிரச்சனைகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து மத்திய மந்திரி பேசியதாவது:-

    காஷ்மீர் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மென்மையான போக்கை கடைப்பிடிப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. இது துரதிர்ஷ்டவசமானது. வரவிருக்கும் நாட்களில் அது தவறு என உணர்ந்துகொள்வீர்கள். பயங்கரவாதமும், நாட்டின் இறையாண்மை மீதான தாக்குதலும் கவலைக்குரியது. காஷ்மீர் விஷயத்திலும், பயங்கரவாத விஷயத்திலும் அரசு எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ளாது.

    எல்லையில் நிரந்தரமாக சண்டை நிறுத்தம் அறிவிக்கப்படவில்லை. ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு ராணுவ நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனை நீட்டிப்பு செய்வது குறித்து பாதுகாப்பு நிறுவனங்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர் உள்துறை அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KashmirIssue #KashmirCeasefire #JitendraSingh
    தமிழ்நாட்டில் நக்சலைட்கள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #MinisterPandiyarajan
    சென்னை:

    தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழகத்தில் பயங்கரவாதம் இல்லை. தமிழகத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பயங்கரவாதிகள் இல்லை. ஜெயலலிதா இருந்தபோது எப்படி பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டதோ, அதேபோல் தற்போதும் ஒடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், காவிரி உள்பட அ.தி.மு.க. அரசின் சாதனைகளை தி.மு.க.வால் எதிர்கொள்ள முடியவில்லை. 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில் எந்தவிதமான தீர்ப்பு வந்தாலும் அதை தமிழக அரசு எதிர்கொள்ளும் என தெரிவித்துள்ளார். #MinisterPandiyarajan
    தமிழகத்தில் வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் பயங்கரவாதம் தலைதூக்க விடமாட்டோம் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். #ThoothukudiFiring #RajiniInThoothukudi #Jayakumar
    சென்னை:

    தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின்போது கலவரம் வெடித்ததற்கு சமூக விரோதிகள் ஊடுருவியதே காரணம் எனவும், அரசு அமைத்துள்ள விசாரணை ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார்.

    இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமாரிடம், ரஜினியின் கருத்து பற்றி கேட்டனர். இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:-

    அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் இந்த அரசு சென்றுகொண்டிருக்கிறது. வன்முறையாளர்களை இரும்புக்கரம் கொண்டு அரசு ஒடுக்குவதில் அரசு உறுதியாக உள்ளது. தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்க விடமாட்டோம்.

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உண்மையை கண்டறியவே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கமிஷன் அறிக்கை வரும்போதுதான் யார் மீது தவறு என்பது தெரியவரும்.



    ரஜினிக்கும் முதல்வருக்கும் ஒரே இடத்தில் இருந்து உத்தரவுகள் வருவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு. நாங்கள் யாரையும் சார்ந்து இல்லை. எங்களுக்கு என்று ஒரு தனித்தன்மை உள்ளது. மாற்றான் பேச்சைக் கேட்டு அவர்களுக்கு எடுபிடியாக என்றைக்கும் இருந்தது கிடையாது. தி.மு.க. வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ThoothukudiFiring #RajiniInThoothukudi #Jayakumar
    ×