search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அபுதாபி"

    அபுதாபியில் மார்ச் 1,2 தேதிகளில் நடைபெறும் இஸ்லாமிய கூட்டுறவு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க வருமாறு அனுப்பப்பட்ட அழைப்பையேற்று சுஷ்மா சுவராஜ் இதில் கலந்து கொள்கிறார். #Indiainviteds #GuestofHonour #OICmeet #SushmatoattendOICmeet
    புதுடெல்லி:

    உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களின் நலனை பாதுகாக்க 1969-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட  இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (Organisationof Islamic Cooperation (OIC)  அமைப்பில் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, தென் அமெரிக்கா ஆகிய கண்டங்களை சேர்ந்த 57 நாடுகள் இடம்பெற்றுள்ளன.

    கடந்த 2008-ம் ஆண்டு நிலவரப்படி இந்நாடுகளில் வாழும் சுமார் 160 கோடி இஸ்லாமியர்களின் நலன்களை பாதுகாப்பதற்காகவும், சர்வதேச அமைதி மற்றும் ஒருமைப்பாட்டுக்காகவும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது.

    இந்த அமைப்பின் 46-வது மாநாடு மார்ச் 1 மற்றும் 2 தேதிகளில் அபுதாபியில் நடைபெறுகிறது. இதில் இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த வெளியுறவுத்துறை மந்திரிகள் கூடி சில முக்கிய ஆலோனைகளை நடத்தவுள்ளனர். இந்த மாநாட்டில் ’கவுரவ பார்வையாளராக’ பங்கேற்க வருமாறு முதன்முதலாக இந்தியாவுக்கு  அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.



    காஷ்மீர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கடைபிடித்துவரும் இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பு முதன்முறையாக இந்தியாவுக்கு தற்போது அழைப்பு அனுப்பியுள்ளது இந்திய அரசின் ராஜதந்திர அணுகுமுறைகளுக்கு கிடைத்துள்ள வெற்றியாக கருதப்படும் நிலையில், இந்தியாவின் சார்பில் இந்த மாநாட்டில் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ’சுமார் 1.85 கோடி முஸ்லிம்கள் வாழும் இந்தியாவுக்கும், இஸ்லாமிய உலகத்துக்கு இந்தியா அளித்துவரும் பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அனுப்பப்பட்டுள்ள இந்த அழைப்பு மகிழ்ச்சியான செய்தியாகும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. #Indiainviteds #GuestofHonour  #OICmeet #SushmatoattendOICmeet
    துபாயில் நடந்த உலக அரசு உச்சி மாநாட்டில், அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. #WorldBank #AbuDhabiGlobalMarket
    துபாய்:

    துபாய் மதினத் ஜுமைராவில் உலக அரசு உச்சி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகம் திறக்க இந்த மாநாட்டில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

    இந்நிலையில் அமீரக நிதித்துறை துணை மந்திரி ஒபைத் ஹுமைத் அல் தயார் மற்றும் உலக வங்கி குழும மத்திய கிழக்கு பகுதிக்கான துணைத்தலைவர் பரித் பெல்கஜ் ஆகியோர் முன்னிலையில் அபுதாபி குளோபல் மார்க்கெட்டின் தலைமை செயல் அலுவலர் காலித் அல் சுவைதி மற்றும் உலக வங்கி வளைகுடா நாடுகளுக்கான இயக்குனர் இசாம் அபுசுலைமான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    இதன் மூலம் உலக வங்கியின் கிளை அலுவலகம் அபுதாபி குளோபல் மார்க்கெட்டில் விரைவில் திறக்கப்படும். இந்த அலுவலகம் கொள்கை முடிவுகள் தொடர்பான ஆய்வுகள், அரசுத்துறைகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும்.

    அமீரக துணை மந்திரியும், அபுதாபி குளோபல் மார்க்கெட்டின் தலைவருமான அகமது அலி அல் சயீக் கூறும்போது, “உலக வங்கியின் புதிய கிளை அலுவலகம் அமீரக பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும். மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், சுகாதாரப் பணிகளை மேற்கொள்ளவும் உதவும்” என்றார். #WorldBank  #AbuDhabiGlobalMarket

    பிரதமர் மோடியின் பிரசார வியூகங்களை பின்பற்றத் தொடங்கியுள்ள ராகுல் காந்தி ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். #RahulGandhi #Congress
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின்போது, இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் சென்று ஆதரவு திரட்டினார்.

    அவரது வெளிநாட்டுப் பயணங்கள் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தின மோடி அலை உருவாகவும், சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பு ஏற்படுத்தவும் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் மிகவும் உதவின.

    மோடியின் பிரசார வியூகங்களை அப்படியே பின்பற்றத் தொடங்கி உள்ள ராகுல், வெளிநாடு வாழ் இந்தியர்களிடமும் ஆதரவு திரட்ட தொடங்கியுள்ளார். இதற்காக சாம் பிட்ரோடா தலைமையில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான காங்கிரஸ் கிளை அமைப்புத் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த அமைப்பு ஏற்பாடு செய்த திட்டத்தின்படி கடந்த ஆகஸ்டு மாதம் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு ராகுல் பயணம் மேற்கொண்டார். அங்குள்ள இந்தியர்களை சந்தித்துப் பேசினார்.

    5 மாநில தேர்தல் வந்ததால் தனது வெளிநாட்டு கட்சிப் பயணங்களை ஒத்திவைத்து இருந்த ராகுல் மீண்டும் அடுத்த மாதம் (ஜனவரி) முதல் அதைத் தொடங்க திட்டமிட்டுள்ளார். முதல் கட்டமாக துபாய், அபுதாபிக்கு ராகுல் செல்ல இருக்கிறார்.

    ஜனவரி 11-ந்தேதி துபாயில் நடக்கும் கூட்டத்தில் இந்தியர்களை சந்தித்துப் பேசுகிறார். மறுநாள் ஜனவரி 12-ந்தேதி அபுதாபிக்கு சென்று பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதற்கான ஏற்பாடுகளை சாம் பிட்ரோடா செய்து வருகிறார்.

    மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான இந்தியர்கள் உள்ளனர். குறிப்பாக தென் இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் அனைத்துத் துறைகளிலும் பணிபுரிந்து வருகிறார்கள்.

    அவர்களிடம் கலந்துரையாடல் நடத்துவதன் மூலம் தென் இந்தியாவில் அதிக தொகுதிகளை கைப்பற்ற முடியும் என்று ராகுல் கருதுகிறார். எனவே துபாய், அபுதாபி கூட்டங்களுக்கு ராகுல் முக்கியத்துவம் அளித்துள்ளார்.

    துபாய் அல்லது அபுதாபியில் மிகப்பெரிய விளையாட்டு ஸ்டேடியத்தில் அதிக இந்தியர்களை சந்தித்து பேச ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இதற்காக ஆன்லைன் முன்பதிவை கொண்டு வர காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ராகுல் இதுவரை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, பக்ரைன், சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு சென்று வந்துள்ளார். அடுத்த மாதம் அவர் செல்வது 5-வதுகட்ட வெளிநாட்டு பயணமாகும். துபாய், அபுதாபி பயணத்தை முடித்த பிறகு கனடா நாட்டுக்கு செல்ல ராகுல் திட்டமிட்டுள்ளார். #RahulGandhi #Congress

    நியூசிலாந்துடனான மூன்றாவது டெஸ்டில் அசார் அலி, ஆசாத் ஷபிக் ஆகியோரின் சதத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தொடரில் வெற்றியாளரை நிர்மாணிக்கும் மூன்றாவது டெஸ்ட் துபாயில் தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் கேன் வில்லியம்சன் 89 ரன்களும், வாட்லிங் 77 ரன்களும் சேர்க்க முதல் இன்னிங்சில் 274 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    பாகிஸ்தான் அணி சார்பில் பிலால் ஆசிப் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 

    இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    அடுத்து இறங்கிய அசார் அலி அபாரமாக விளையாடி சதமடித்து அசத்தினார். அவர் 134 ரன்னில் அவுட்டானார். அவருக்கு ஆசாத் ஷபிக் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 201 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஆசாத் ஷபிக்கும் சதமடித்தார்.  அவர் 104 ரன்னில் வெளியேறினார். இவர்களை தவிர மற்றவர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.



    இதனால் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 135 ஓவர்களில் 348  ரன்னுக்கு ஆல் அவுட்டானது.

    நியூசிலாந்து தரப்பில் வில்லியம் சாமர்வில்லி 4 விக்கெட்டுகளும், டிரெண்ட் போல்ட், அஜாஸ் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதைத்தொடர்ந்து,  74 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் அந்த அணி 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. கேன் வில்லியம்சன் 14 ரன்னுடனும், வில்லியம் சாமர்வில்லி ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர். #PAKvNZ
    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் கேன் வில்லியம்சனின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. #PAKvNZ #CaneWilliamson
    அபுதாபி:

    பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்துள்ள இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

    இந்நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி அபுதாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜித் ராவலும், டாம் லத்தாமும் களமிறங்கினர்.

    டாம் லத்தாம் 4 ரன்னிலும், ஜித் ராவல் 45 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் பொறுப்புடன் ஆடினார்.

    மற்றவர்கள் அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை. இதனால் கேன் வில்லியம்சன் 89 ரன்களில் வெளியேறினார்.



    ராஸ் டெய்லர் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். அவரை தொடர்ந்து, ஹென்ரி நிகோல்ஸ் 1 ரன்னிலும், கிராண்ட்ஹோம் 20 ரன்னிலும், டிம் சவுத்தி 2 ரன்னிலும் வெளியேறினர்.

    இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில்  நியூசிலாந்து அணி 90 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் கீப்பர் வாட்லிங் 42 ரன்னும், வில்லியம் சாமர்வில்லி 12 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    பாகிஸ்தான் தரப்பில் யாசிர் ஷா 3 விக்கெட்டும், பிலால் ஆசிப் 2 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். #PAKvNZ #CaneWilliamson
    அபுதாபி செல்ல வேண்டிய பயணியின் லக்கேஜில் விஷப்பாம்பு இருந்ததால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #CochinAirport
    கொச்சி:

    கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அபுதாபி செல்ல வேண்டிய பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

    அப்போது, ஒரு லக்கேஜை ஸ்கேன் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அதற்குள் ஏதோ ஒன்று ஊர்வதைக் கண்டனர்.

    அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்த லக்கேஜ் பாலக்காடைச் சேர்ந்த சுனில் என்பவருடையது என தெரியவந்தது.  லக்கேஜை எடுக்க வந்த சுனிலிடம் பாதுகாப்பு படையினர் பிரித்து சோதனை செய்ய வேண்டும் என்றனர்.


    சரி என்ற சுனில் லக்கேஜில் இருந்து ஒவ்வொன்றாக வெளியே எடுத்தார். அப்போது ஒரு பிளாஸ்டிக் பையில் இருந்து கருப்பு நிறத்தில் குட்டி பாம்பு ஒன்று வெளியே எட்டிப்பார்த்தது.  இதைக் கண்டு பயணி சுனில் உட்பட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் விவசாயி ஒருவர் உருளைக்கிழங்கை பிளாஸ்டிக் கவரில் போட்டு கட்டித் தந்ததாக தெரிவித்தார். மற்றபடி பாம்புக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சுனில் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவரை விடுவித்தனர்.   #CochinAirport
    அபுதாபியில் நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்தை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றது. #PAKvNZ
    அபுதாபி:

    பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடர் அபுதாபியில் நடைபெறுகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது டி-20 போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதின.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் மொகமது ஹபீஸ் 45 ரன்னும், சர்ப்ராஸ் அகமது 34 ரன்னும் அடித்து அவுட்டாகினர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 148 ரன்கள் எடுத்தது.



    இதைத்தொடர்ந்து, 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. காலின் மன்ரோ பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். அவருக்கு ராஸ் டெய்லர் ஓரளவு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 42 ரன்னில் அவுட்டாகாமல் இருந்தார்.

    கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஒருபுறம் ராஸ் டெய்லர் நின்றாலும், அந்த ஓவரில் 2 பவுண்டரி உள்பட 14 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 

    இதையடுத்து, 2 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான். இந்த வெற்றியை தொடர்ந்து, பாகிஸ்தான் 1-0 என முன்னிலை வகிக்கிறது. #PAKvNZ
    ஆஸ்திரேலியாவுடனான முதல் டி 20 போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமாக வெற்றி பெற்றது பாகிஸ்தான். #PAKvAUS
    அபு தாபி:

    ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டி 20 போட்டி அபு தாபியில் நேற்று நடைபெற்றது.

    டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பாபர் அசாம் சிறப்பாக ஆடி அரை சதமடித்து 68 ரன்களில் அவுட்டானார். அவருக்கு அடுத்தபடியாக மொகமது ஹபீஸ் 39 ரன்கள் எடுத்து வெளியேறினார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை

    இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.

    ஆஸ்திரேலியா சார்பில் பில்லி ஸ்டான்லேக், ஆண்ட்ரூ டை ஆகியோர் 3 விக்கெட் எடுத்தனர்.



    இதையடுத்து, 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. ஆனால் அவர்களுக்கு பாகிஸ்தான் பந்து வீச்சாளர்கள் அதிர்ச்சி வைத்தியம் அளித்தனர்.

    இதனால் ஆஸ்திரேலிய அணி 22 ரன்களை எடுப்பதற்குள் முன்னணியில் உள்ள 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
    அதன்பின் வந்த வீரர்கள் ஓரளவு தாக்குப் பிடித்தனர். நாதன் கால்டர் நீல் மடடும் அதிகமாக 34 ரன்கள் எடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 16.5 ஓவரில் 89 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாபமாக தோற்றது.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. #PAKvAUS
    அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஒரே ஒரு டி-20 போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. #UAEvAUS
    அபுதாபி:

    ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக ஒரே ஒரு டி-20 அபுதாபியில் நேற்று நடைபெற்றது. 

    இதில் டாஸ் வென்ற ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா அணியினரின் சிறப்பான பந்துவீச்சில் அந்த அணி சிக்கியது.  

    இதனால் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 117 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகமாக ஷைமான் அன்வர் 41 ரன்கள் எடுத்தார்.

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் கால்டர் நைல் மற்றும் பில்லி ஸ்டான்லேக் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 118 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க வீரரான ஷார்ட் பொறுப்புடன் விளையாடி அரை சதமடித்து அசத்தினார். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 16.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. #UAEvAUS
    அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணியை 373 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது பாகிஸ்தான் அணி. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.  

    137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள்,  சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.



    தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டம் நேற்று தொடங்கியது. பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினர்.
    ஆஸ்திரேலியா அணியின் மார்னஸ் லபுஷங்கே 41 ரன்களும், டிராவிஸ் ஹெட் 36 ரன்களும், ஆரோன் பிஞ்ச் 31 ரன்களும் எடுத்தனர்.

    மற்றவர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகினர். இறுதியில், ஆஸ்திரேலியா அணி 49.4 ஓவரில் 164 ரன்களில் ஆல் அவுட்டானது. இதையடுத்து, 373 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி.

    பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், யாசிர் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை மொகமது அப்பாஸ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #PAKvAUS
    அபுதாபியில் நடைபெற்று வரும் இரண்டவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற 537 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபுதாபியில் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டு வீழ்த்தினார்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில்145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டு வீழ்த்தினார்.  



    137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்தது. பாபர் அசாம் 99 ரன்கள்,  சர்ப்ராஸ் அகமது 81 ரன்கள் என பொறுப்பாக ஆடியதால் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 400 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

    தொடர்ந்து, 537 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.
    மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட்டுக்கு 47 ரன்கள் எடுத்துள்ளது.

    இன்னும் இரண்டு நாள் மீதமிருக்க, ஆஸ்திரேலியா வெற்றி பெற இன்னும் 491 ரன்கள் தேவை என்பதால் ஆட்டத்தில் சுவாரசியம் கூடியுள்ளது. #PAKvAUS
    பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் மொகமது அப்பாசின் பந்துவீச்சில் சிக்கிய ஆஸ்திரேலியா அணி 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் பகர் சமான், சர்ப்ராஸ் அகமதின் பொறுப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 81 ஓவரில் 282 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  

    ஆஸ்திரேலியா சார்பில் நாதன் லயன் 4 விக்கெட்டும், மார்னஸ் லபுஷங்கே 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    இதையடுத்து, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சை ஆடியது. அந்த அணியில் ஆரோன் பிஞ்ச் 39 ரன்னும், மிட்செல் ஸ்டார்க் 34 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் ஆஸ்திரேலியா அணி 50.4 ஓவரில் 145 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.



    பாகிஸ்தான் சார்பில் மொகமது அப்பாஸ் 5 விக்கெட்டும், பிலால் ஆசிப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.  

    இதையடுத்து, 137 ரன்கள் முன்னிலை பெற்ற பாகிஸ்தான் அணி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்து ஆடியது. இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்துள்ளது. பகர் சமான் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். அசார் அலி 54 ரன்னுடன் அவுட்டாகாமல் இருந்தார். #PAKvAUS
    ×